கவர்ச்சி்க்கு மாறிய சோனியா.. கைமேல் கிடைத்த பலன்!

Tags:


விவாகரத்தான புதிதில் அழுதுவடியும் முகத்துடன் காட்சி தந்த சோனியா அகர்வாலா இது! என்று ஒருவருக்கொருவர் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டனர், நேற்றைய பட பூஜையொன்றில் அவரைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள்.

கையில்லாத, 'லோ நெக்' கவுனில் உடலின் அத்தனை அழகுகளும் பளிச்சிட வந்திருந்தார் சோனியா அகர்வால். முகத்தில் அந� ��யாயத்துக்கு இளமை கூடியிருந்தது. ஹீரோயினாகவே இன்னொரு ரவுண்ட் வர அவர் ஆயத்தமாவது தெரிந்தது.

தமிழில் இப்போது இரண்டு படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார் சோனியா. இந்த இரண்டிலுமே அவர்தான நாயகி. குறிப்பாக மாதா பிதா குரு என்ற படத்தில் கதாநாயகனை விட முக்கியத்துவம் வாய்ந்த வேடம் அவருக்கு.

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நாயகியாக நடிக்கிறார்.

திருமணமான பின் ஹீரோயினாக நடித்து ஜெயித்தவர் ரேவதிதான். அவருக்குப் பின் இப்போது சோனியா அகர்வால்தான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளனவாம்.

இந்த இரண்டாவது சுற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் சோனியா. அதன் விளைவுதான் அதிரடியாக கவர்ச்சிக்கு தாவியுள்ளாராம். பிகினி உள்பட, சென்சார் அனுமதிக்கும் அதிகபட்ச க வர்ச்சிக்கு தான் தயார் என்பதுதான் சோனியா தனது தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வரும் தகவல். அதற்கு கைமேல் பலன் கிடைத்த வண்ணம் உள்ளதாம்!
 

புகழ் உச்சியில் லேடி காகா!

Tags:


உலகிலேயே மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் லேடி காகா அமெரிக்க கவர்ச்சி பாப் பாடகி லேடி காகா, உலகிலேயே மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வருடா வருடம் உலகிலேயே புகழ் மிக்க பிரபலமானவர்கள் 100 பேர் கொண்ட பட்� ��ியலை போர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் லேடி காகாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இந்த இடத்தில் இருந்து வந்தவர் ஓப்ரா வின்பிரே. தற்போது அந்த இடத்தை காகா பிடித்து விட்டார். வின்பிரே இரண்டாவது இடத்துக்குத் தள்ளபப்ட்டுள்ளார்.

லேடி காகாவுக்கு 90 மில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன. இது தவிர அவருக்கு பேஸ்புக்கில் 3.2 கோடி பாலோயர்களும் உள்ளனர். பேஸ்புக்கில் அதிக அளவிலான ஆதரவாளர்களைக் கொண்ட பிரபலம் இவர் மட்டுமே. ட்விட்டரிலும் இவருக்கு ஒரு கோடி ஆதரவாளர்கள் உள்ளனர்.

மேலும், அவரது பார்ன் திஸ் வே என்ற பாப் பாடலுக்கு ஐந்தே நாட்களில் பத்து லட்சம் ஆடியோ பிரதிகள் விற்று விற்பனை சாதனையும் கிடைத்தது. இதை வைத்துத்தான் தற்போது போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வ� �ட்டார் காகா.

முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள் விவரம்:

1. லேடி காகா.
2. ஓப்ரா வின்பிரே
3. ஜஸ்டின் பீபர்Justin Bieber
4.யு12
5. சர் எல்டன் ஜான்
6. டைகர் உட்ஸ்
7. டெய்லர் ஸ்விப்ட்
8. பான் ஜோவி
9. சிமோன் கோவல்
10.லெப்ரான் ஜேம்ஸ்
11. ஏஞ்செலீனா ஜூலி
12. கேதி பெர்ரி
13.ஜானி டெப்
14.கோப் பிரையன்ட்
15. லியனார்டோ டிகாப்ரேயி
16. பிளாக் ஐட் பீஸ்
17. டொனால்ட் டிரம்ப்
18. பில் ம� ��க்கிரா
19. டைலர் பெர்ரி
20. சர் பால் மெக்கார்டினி
 

தெரு நாய்கள்... த்ரிஷாவின் 'கருணை'!

Tags: peta


தெரு நாய்களைத் தத்தெடுத்த வளர்க்குமாறு நடிகை த்ரிஷா வேண்டுகோள் விடுக்கும் விளம்பரம் நாளை வெளியாகிறது.

ஒருமுறை ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கு சென்றபோது ரோட்டோரம் நாய்க்குட்டியொன்று அடிபட்டு கிடந்தது. காரை நிறுத்தி அந்த நாயை எடுத்த போய் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார் த்ரிஷா.

சென்னை த ிரும்பும் போது நாய்க்குட்டியையும் தன்னோடு கொண்டு வந்து விட்டார். அது தற்போது திரிஷா வீட்டில் வளர்கிறது. இதைத் தொடர்ந்து நாய்களை தத்து எடுக்கும்படி அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வந்தார்.

அவரது இந்த அக்கறையைப் பார்த்து பிராணிகள் நல அமைப்பின் (PETA) இந்திய அளவிலான விளம்பர தூதுவராக நியமித்தனர். இதனால் தெரு நாய்களைத் தத்தெடுக்க இன்னும் முனைப்புடன் வலியுறுத்தி வ� �்தார் த்ரிஷா.

இப்போது அந்த பிராணிகள் நல அமைப்பு விளம்பர படமொன்று தயாரித்துள்ளது. இதில் திரிஷா நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகிறது. நாயை கட்டிப் பிடித்தபடி இதில் போஸ் கொடுத்துள்ளார் த்ரிஷா.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "நிறைய வீடுகளில் நாய்கள் வளர்க்கின்றனர். பெரும்பாலானோர் நாய்களை காசு கொடுத்து வாங்கி வளர்க்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. தெரு ந� �ய்களும் நல்ல நாய்கள்தான். அவற்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும். நிறைய இடங்களில் தெரு நாய்கள் ஆதரவின்றி சுற்றித் திரிக்கின்றன. அவற்றை ஒவ்வொருவரும் வீட்டுக்கு எடுத்து போய் வளர்க்க வேண்டும்," என்றார்.

தெரு நாய்களை பள்ளி மாணவர்கள் கல்லால் அடித்து விரட்டக் கூடாது என்றும் அந்த விளம்பரத்தில் வலியுறுத்தியுள்ளார் த்ரிஷா.
 

ஹன்ஸிகதாவின் 'உதவும் கரங்கள்'

Tags:


சாலையில் அடிபட்டுக் கிடந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு போன ஹன்ஸிகா!

எப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருந்தாலும், கஷ்டப்படும் ஒருவரை பார்த்ததும் இரங்குவதுதான் மனிதப் பண்பு.

நடிகை ஹன்ஸிகா தன்னை ஒரு மனிதாபிமானியாகக் காட்டிக் கொண்டுள்ளார், சாலையில் அடிபட்டுக் கிடந்த ஒருவருக்கு உரிய நேரத்தில் உதவியதன் மூ� �ம்.

மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஹன்ஸிகா. அடிப்படையில் இவர் ஒரு இந்தி நடிகை.

இப்போது தமிழில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மதுரையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக, ஹன்சிகா மோத்வானி மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவருடன் த� ��யார் மோனாவும் வந்தார். மோனா, 'எம்.பி.பி.எஸ்.' படித்த டாக்டர்.

மதுரை விமான நிலையத்தில் இருவரும் இறங்கியபோது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, 'இன்று உங்களுக்கு படப்பிடிப்பு இல்லை. ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார். ஹன்சிகா மோத்வானியும், அவருடைய தாயார் மோனாவும் கார் மூலம் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.

ரத்த வெள்ளத்தில்...

அப்போது, ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார்த்த ஹன்சிகா மோத்வானி, காரை நிறுத்தும்படி கூறினார். ஆனால் 'நம்ம ஊர் நல்லவரான' டிரைவர், 'நமக்கு எதற்கு வம்பு?' என்று காரை நிறுத்தாமல் சென்றார்.

ஹன்சிகா மோத்வானி உரத்த குரலில் சத்தம்போட்டு காரை நிறுத்தும்படி கூறினார். டிரைவர் காரை நிறுத ்தியதும் ஹன்சிகா மோத்வானியும், அவருடைய தாயாரும் ரோட்டை கடந்து எதிர்புறம் சென்றார்கள். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஹன்சிகா மோத்வானியின் தாயார் பரிசோதித்தார். அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததால், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார்.

உதவிய மக்கள்

அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. ஹன்சிகா மோத்வானியை அடையாளம் கண்டுகொண்டார்க� ��். ஆம்புலன்ஸ் வந்ததும், அடிபட்டு கிடந்தவரை தூக்கி ஆம்புலன்சுக்குள் கிடத்தினார்கள். ஹன்சிகா மோத்வானியின் தாயார் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டார். அந்த ஆம்புலன்சை, ஹன்சிகா மோத்வானி காரில் பின் தொடர்ந்தார்.

அருகில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அந்த முதியவரை அனுமதித்தார்கள். அவருடைய சட்டைப்பையில் இருந்த செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரி� ��ித்தார்கள். அடிபட்டு கிடந்தவரின் மனைவி அலறியடித்துக்கொண்டு வந்தார். ஹன்சிகா மோத்வானிக்கும், அவருடைய தாயாருக்கும் நன்றி தெரிவித்தார்.

அவருக்கு ஹன்சிகா மோத்வானி பண உதவியும் செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.
 

திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல்: பாரதிராஜா - அமீர் மோதல்!

Tags:


சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்� �ள் சங்க அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த சங்கத்தில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் என மொத்தம் 2,100 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த முறை தலைவராக பாரதிராஜா இருந்து வந்தார்.

மீண்டும் போட்டி

வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வ� ��ணி, பொருளாளர் பதவிக்கு எழில் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பாரதிராஜாவை எதிர்த்து தலைவர் பதவிக்கு அமீர் போட்டியிடுகிறார். இவருடைய அணியில் துணைத் தலைவர்கள் பதவிக்கு ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு சேரன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு ஜனநாதன் போட்டியிடுகிறார்.

செயற்குழு உறுப்பினர்கள்

இதே அணியில் வசந்தபாலன், சிம்புதேவன், பிரபு சாலமன், ஏ.வெங்கடேஷ், பாலசேகரன் உள்பட பலர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
 

தூள், சாமி போன்ற கதைக்காக காத்திருக்கிறேன், அதான் லேட்-விக்ரம்

Tags:


தூள், சாமி மாதிரி அதிரடி ஆக்ஷன் கதைகளில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்கிறார் நடிகர் விக்ரம்.

சமீபத்தில் தனது புதிய படம் ஒன்றிற்காக நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தில், தூள், சாமி போன்ற படங்களில், ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாமே சரியாக இருந்தது.

அந்த மாதிரி படங்களில் நடிக்கததான் நான் விரும்புகிறே ன். எனது அடுத்த படம் இந்த மாதிரி அமையும்.

கிளாஸிக், மசாலா என எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் நடிக்கவே நான் விரும்புகிறேன்.

எனது ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி விழுவதை இனி தவிர்க்க முயற்சித்து வருகிறேன். இந்த இடைவெளியை நானாக விரும்பி தேடிப்போவதில்லை. சில படங்களில் அப்படியாகிவிடுகிறது. இதற்காக யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை," என்றார் வி� ��்ரம்.

விக்ரமின் அடுத்த படத்தை இயக்குபவர் சுசீந்திரன். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடி, நாம் முன்பே அறிவித்த தீக்ஷா சேத். பிரபல தெலுங்கு நடிகை.

இந்தப் படத்திலும் சுசீந்திரன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொடர்கிறது.
 

ஜூன் 17-ல் 'அவன் இவன்'!

Tags:


பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள அவன் இவன் திரைப்படம் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாகிறது.

நகைச்சுவை, அதிரடி ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள பாலாவின் அவன் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. படம் முழுமையாக முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஆரம்பத்தில் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் வெளியீடாக வரவிருந்தது. ஆனால் மாறியுள ்ள அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இப்போது, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தன் ஏஜிஎஸ் மூவீஸ் பேனரிலேயே படத்தை வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி, அதன் தொழில்நுட்பக் கலைஞர்களுக்காக சமீபத்தில் திரையிடப்படது. படம் பார்த்த அனைவரும் வயிறுகுலுங்க சிரித்து மகிழ்ந்தனராம்.

விஷால், ஆர்யா, ஆர்கே, ஜிஎம் குமார், ஜனனி, அம்பிகா என ஏராளமான நட்சத்திர ங்கள் படத்தில் உள்ளனர்.

தெலுங்கில் இந்தப் படம் 'வாடு வீடு' என டப் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படமும் ஜூன் 17-ம் தேதியே வெளியாகிறது.
 

தேமுதிகவினரின் தாக்குதல் தொடர்ந்தால் திமுகவில் சேர வடிவேலு முடிவு!

Tags:


மதுரை: தேமுதிகவினர் தொடர்ந்து தனது வீடுகளுக்கு முன்பு நின்று கண்டபடி அசிங்கமாக பேசி வருவதால, இந்த நிலை தொடர்ந்தால் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக அவர்களை ஒரு கை பார்ப்பது என்ற முடிவுக்கு வைகைப் புயல் வடிவேலு வந்துள்ளதாக தெரிகிறது.

வாயால் கெடுவது என்பதற்கு வடிவேலுதான் சரியான உதாரணம். உலகெங்கும� � உள்ள தமிழ் மக்கள் தன் மீதும், தனது நடிப்பு மீதும் வைத்திருந்த, வைத்துள்ள நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளாமல், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சரமாரியாக வாய்க்கு வந்தபடி பேசி பிரசாரம் செய்து வீண் வம்பில் மாட்டிக் கொண்டு விட்டார்.

இப்போது தேர்தல் முடிவு பாதகமாக வந்து விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் தற்போ� �ு வீட்டோடு முடங்கியுள்ளார்.

மறுபக்கம் தேமுதிகவினரோ பிரச்சினையை இத்துடன் முடிக்காமல் வளர்த்துக் கொண்டே போகின்றனராம். வடிவேலு வீட்டுக்கு முன்பு திடீர் திடீரென கூடுவது, இருக்கிற கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசுவது, தாறுமாறாக திட்டுவது என்று பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

வடிவேலுதான் நொந்து நூடூல்ஸாகிப் போய் விட்டாரே என்று விடாமல் தொடர்ந்து அவர்கள் அநாகரீகமாக நடந்து வருவதால் வடிவேலு கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்நது புலம்பியபடி வருகிறாராம் வடிவேலு. என்னைத்தான் வீட்டோடு முடக்கி விட்டார்களே, பிறகு எதற்கு தொடர்ந்து அசிங்கமாக பேசி வருகிறார்கள். இப்படியே இவர்கள் தொடர்ந்து வந்தால் நானும் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக இவர்களை ஒரு கை பார்க்க வேண்ட ியதுதான், வேறென்னத்த செய்ய என்று கூறுகிறாராம் வடிவேலு.

இதற்கிடையே, உலகம் என்ற படத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறார். இதில் 25 வேடங்களில் அவர் வரவுள்ளாராம். இந்தப் படத்தை வெளியில் விட்டால் போதும் இழந்த செல்வாக்கை மீண்டும் பிடித்து விடலாம், அதற்குப் பிறகு பத்து விஜயகாந்த வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அந்தப் படம் தொடர்பான பணிகளில் படு தீவிரமாக � �ுதித்துள்ளாராம் வடிவேலு.
 

செப்டம்பரில் ராணா படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி!

Tags:


ரஜினியின் ராணா படப்பிடிப்பு மீண்டும் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது.

ராணா படப்பிடிப்பு ஆரம்பமான முதல்நாளிலேயே ரஜினிக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது. அன்று முதல் தொடர்ந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இப்போது சிங்கப்பூர் மவுன்ட் எல ிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் ரஜினி.

அவரது நோய்க்கான மூல காரணத்தை கண்டறிந்த சிங்கப்பூர் மருத்து நிபுணர்கள், தீவிர சிகிச்சை அளித்ததில், ரஜினி குணமடைந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது, அது தேவையில்லை என்றாகிவிட்டது. அவரது சிறுநீரகங்கள் முழுமையான செயல்பாட� ��டுக்கு திரும்பிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் ரஜினிக்கு சிகிச்சை முடிந்துவிடும் என்றும், அதன் பின்னர் அவர் சிங்கப்பூரிலேயே முழுமையாக ஓய்வு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்பும் ரஜினி, செப்டம்பர் மாதம் ராணா படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அதற்கு முன்பே படப்பிடிப்பை தொடங்கும் இய க்குநர் ரவிக்குமார், ரஜினி இல்லாத சில காட்சிகளை வில்லன் சோனு சூட் மற்றும் நாயகி தீபிகாவை வைத்து படமாக்குவார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் ரஜினி அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்க திட்டமிட்டு அதற்கேற்ப காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்த காட்சிகள் மாற்றப்பட்டு, ரஜினியின் ஒப்புதலுக்காக காத ்திருக்கின்றன.
 

ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி!

Tags:


இதுவரை இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நாயகனாகத் திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ளார்.

ராணா படத்துக்காக ரஜினிக்கு அளிக்கப்பட்ட சம்பள முன்பணம் ரூ 24 கோடி என ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனது சம்பள விவரங்களை ஒருபோதும் மறை க்காதவர் ரஜினி. காரணம் முறைப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, வருமான வரித் துறையிடம் நற்சான்றிதழும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெற்று வருபவர்.

அவரது மெகா ஹிட் படங்களான சிவாஜி, எந்திரன் போன்றவற்றின் சம்பளத்தை வருமான வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.

இப்போது ராணா படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் மற ்றும் முன்பண விவரங்களை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஈராஸ் என்பதால், இந்த விவரங்களை முறைப்படி அறிவித்துள்ளது ஈராஸ். இதன்படி, ராணாவுக்கு ரஜினிக்கு அளிக்கப்பட்டுள்ள முன்பணம் ரூ 24 கோடி.

படத்தின் விற்பனைக்குப் பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு மீதிச் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தயாரிப்பாள� ��்களில் ஒருவரான சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், இதுவரை இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்று கூறப்பட்டு வந்த ரஜினி, இப்போது ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளார்!