த்ரிஷாவுக்கும், வருணுக்கும் மார்ச் மாதம் திருமணமாமே?

சென்னை: த்ரிஷா தனக்கு நிச்சயதார்த்தமே நடக்கவில்லை என்கிறார். இந்நிலையில் அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

காதல் வாழ்க்கை கசந்து போன த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின. அப்படியா, த்ரிஷா சொல்லவே இல்லையே என்று அவரது தாயை தொடர்பு கொண்டு கேட்டால் அவரோ என் மகளுக்கு ஒரு நல்லது நடந்தால் உங்களுக்கு எல்லாம் சொல்லாமலா என்று தெரிவித்தார்.

த்ரிஷாவுக்கும், வருணுக்கும் மார்ச் மாதம் திருமணமாமே?

த்ரிஷாவோ தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும், அப்படி நடந்தால் அதை நான் தான் முதல் ஆளாக உங்களிடம் தெரிவிப்பேன் என்றும் ட்விட்டரில் தெரிவித்தார். த்ரிஷாவும் சரி, அவரது அம்மா உமாவும் சரி நிச்சயம் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள் நாம் அடுத்த வேலையை பார்ப்போம் என்று இருக்கையில் தான் இந்த புதிய விஷயம் தெரிய வந்தது.

த்ரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. த்ரிஷாவுக்கு திருமணமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையே நெருப்பில்லாமல் புகையாது பாஸ் என்று சிலர் பிட்டை போடுகிறார்கள்.

 

தெலுங்கு டப்பிங்... லிங்கா ரூ 40 கோடி... ஐ ரூ 34 கோடிக்கு விற்பனை?

எந்திரன் டப்பிங் உரிமை ரூ 18 கோடிக்கு விற்பனை விற்பனையானதுதான் முன்பு பெரிய சாதனையாக இருந்தது. ஒரு நேரடி தெலுங்குப் படத்துக்கு நிகராக ரூ 40 கோடி வரை அங்கு ரோபோ படம் வசூலைக் குவித்தது.

அடுத்து இந்த சாதனையை வேறு எந்தப் படமும் முறியடிக்க முடியாது என்ற நிலையில், இப்போது ஷங்கரின் ஐ படம் அதைவிட இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு டப்பிங்... லிங்கா ரூ 40 கோடி... ஐ ரூ 34 கோடிக்கு விற்பனை?

ஷங்கரின் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு என்பதால் இந்த செய்தி உண்மையாகவே இருக்கக் கூடும். ஐ ட்ரைலர் முதல் நாளிலேயே 23 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனைப் படைத்தது. இதில் லிங்கா கூட இரண்டாம் இடம்தான் பிடித்தது.

ஆனால் டப்பிங் ரைட்ஸ் விஷயத்தில் ஐ-க்கு இரண்டாம் இடம்தான். காரணம், ரஜினியின் புதிய படமான லிங்கா, அதையெல்லாம் முறியடித்து ரூ 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய விலை. தெலுங்கில் உருவாகும் நேரடி மெகா பட்ஜெட் படங்களுக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி, அமிதாப் பங்கேற்க, கோவாவில் தொடங்கியது சர்வதேச திரைப்பட விழா

இந்தியாவின் இரு பெரும் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் பங்கேற்க, கோவாவில் இன்று தொடங்கியது சர்வதேச திரைப்பட விழா.

பல ஆண்டுகள் இந்த விழாவில் பங்கேற்காமல் இருந்த அமிதாப் பச்சன் தலைமையில் மாலையில் விழா தொடங்கியது.

ரஜினி, அமிதாப் பங்கேற்க, கோவாவில் தொடங்கியது சர்வதேச திரைப்பட விழா

ரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகருக்கான விருது இந்த விழாவில் மத்திய அரசு வழங்குகிறது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இணைய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிகார் ஆகியோர் பங்கேற்றுள்ள இந்த விழாவை, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி முறைப்படி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினரான அமிதாப் பச்சன் சிறப்புரை ஆற்றியபிறகு ரஜினிக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட உள்ளது.

அடுத்த பத்து நாட்கள் இந்த திரைப்பட விழா தொடர்ந்து நடக்கிறது.

 

முருகதாஸின் உதவி இயக்குனர் இயக்கும் “ரங்கூன்” – கவுதம் கார்த்திக் ஹீரோ!

சென்னை: கோலிவுட்டில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஆர்.எம் புரொடக்சனும், பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்ற படம் " ரங்கூன்".

இதில் நாயகனாக கார்த்திக்கின் மகனும், "கடல்" கதாநாயகனுமான கவுதம் கார்த்திக் நடித்துள்ளார் மேலும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் ஏ.ஆர் முருகதாசிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

முருகதாஸின் உதவி இயக்குனர் இயக்கும் “ரங்கூன்” – கவுதம் கார்த்திக் ஹீரோ!

ரங்கூன் படம் பற்றி அவர் கூறும்போது, "இது இளைஞர்களை பற்றிய இளைஞர்களுக்கான படம். கவுதம் கார்த்திக் இளைஞர்களின் அப்பட்டமான பிரதி நிதியாவார். அவரது உற்சாகமும் வேகமும் படத்துக்கு உயிர் கொடுக்கும். ரங்கூன் நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தும், ஒளிப்பதிவாளராக எம்.சுகுமாரும் பணியாற்றி வருகின்றனர்.

 

ரஜினிக்கு மத்திய அரசின் உயர்ந்த 'இந்திய சினிமா பிரபலம் 2014' விருது

கோவா: நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகர் 2014 என்ற உயர்ந்த விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கி கவுரவித்தது மத்திய அரசு.

கோவாவில் நடைபெறும் 45வது சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் சாதனை நடிகர் அமிதாப் பச்சன் இருவரும் இந்த விருதினை ரஜினிக்கு வழங்கினர்.

ரஜினிக்கு மத்திய அரசின் உயர்ந்த 'இந்திய சினிமா பிரபலம் 2014' விருது

விருது வழங்கும் முன் ரஜினி நடித்த படங்களின் தொகுப்பாக ஒரு காணொலி திரையிடப்பட்டது. அதில் ரஜினி தன் திரை வாழ்க்கையை ஆரம்பித்ததிலிருந்து, இப்போது நடிக்கும் லிங்கா வரையிலான படங்களின் காட்சிகள், ரஜினி பேசும் அதிரடி பஞ்ச் வசனங்கள் காட்டப்பட, அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.

ரஜினிக்கு மத்திய அரசின் உயர்ந்த 'இந்திய சினிமா பிரபலம் 2014' விருது

பின்னர் ரஜினி மேடைக்கு அழைக்கப்பட்டார். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அவருக்கு கைகொடுத்து வரவேற்றார். அமிதாப் பச்சன் மலர்ச் சென்று கொடுத்து கட்டித் தழுவினார். ரஜினி குனிந்து அவர் காலைத் தொட்டு வணங்கினார்.

பின்னர் அருண் ஜெட்லி சால்வை அணிவித்து விருதினை ரஜினிக்கு வழங்கினார். அமிதாப் பச்சன் விருது பற்றிய மடலை வழங்கினார்.

பின்னர் தனக்கு வழங்கப்பட்ட விருதுக்கு ரஜினி நன்றி கூறினார்.

 

இந்த விருதினை திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் - ரஜினி

கோவா: மத்திய அரசு தனக்கு வழங்கிய சினிமா பிரபலம் 2014 விருதினை திரைத் துறைக்கும் தனது ரசிகர்களுக்கும் சமர்ப்பிப்பதாக ரஜினிகாந்த் கூறினார்.

கோவாவில் நடைபெறும் 45வது சர்வதேச திரைப்பட விழாவில், மத்திய அரசு வழங்கிய நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகர் 2014 என்ற உயர்ந்த விருதினைப் பெற்றுக் கொண்ட ரஜினி, அதற்கு நன்றி தெரிவித்து சுருக்கமாக பேசியதாவது:

கோவா ஆளுநர் அவர்களே, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அருண் ஜெட்லி அவர்களே, என் அண்ணா அமிதாப்ஜி அவர்களே.. இந்த விருது எனக்கு பெருமையாகவும் கவுரவமாகவும் உள்ளது. விருதினை அளித்த மத்திய அரசுக்கும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கும் நன்றி.

இந்த விருதினை திரையுலகுக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் - ரஜினி

விருதுக்காகத்தான் மேடைக்கு வந்தேன். என்ன பேசுவது என்ற திட்டம் ஏதுமில்லை. அமிதாப் பச்சன் இத்தனை அருமையாகப் பேசிய பிறகு நான் என்ன பேசுவது?

இந்த விருதினை எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுதியவர்கள், சக கலைஞர்கள் மற்றும் என் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி," என்றார்.

 

சூப்பர் ஸ்டார், இளைய தளபதி: இதில் விஜய்க்கு பிடித்த பட்டம் என்ன?

சென்னை: விஜய்க்கு சூப்பர் ஸ்டார், இளைய தளபதி ஆகியவற்றில் எந்த பட்டம் பிடித்துள்ளது என்று தெரியுமா?

இளைய தளபதியாக வலம் வரும் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்க அவரது ரசிகர்கள் மதுரையில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். எங்கள் தலைவர் இருக்கையில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை அளிப்பதா என்று ரஜினி ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர். இந்த பட்டம் பற்றி ரஜினி கண்டுகொள்ளவில்லை. விஜய்யோ தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டமளிக்கும் விழாவுக்கு வருவமாறு கோலிவுட் பிரபலங்களுக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார்.

அப்படி என்றால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா என்று வியக்கையில் பட்டமளிக்கும் நிகழ்ச்சி மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. அது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

சூப்பர் ஸ்டார், இளைய தளபதி: இதில் விஜய்க்கு பிடித்த பட்டம் என்ன?

இந்நிலையில் இன்று காலை விஜய்யின் ட்விட்டர் கணக்கு பக்கம் சென்றபோது அவரிடம் அவரது ரசிகர்கள் கேட்ட இந்த கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் கவனத்தை ஈர்த்தது. சரி சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட அவர் மதிக்கும் விஷயத்தை மக்களுக்கு நினைவுபடுத்தலாமே என்று தான் இந்த செய்தி.

கேள்வி: சூப்பர் ஸ்டார், இளைய தளபதி ஆகியவற்றில் விஜய்க்கு எந்த பட்டம் பிடித்துள்ளது?

பதில்: மக்களின் அன்புக்கு முன்னால் இந்த பட்டம் எல்லாம் பெரியது இல்லை.

அப்படி என்றால் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுவதில் விருப்பம் இல்லையோ?...

 

'விஜய் 58' பட பட்ஜெட் ரூ.75+ கோடி, 'தல 56' பட்ஜெட் ரூ.80 கோடி?

சென்னை: அஜீத் சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ள படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி என்று கூறப்படுகிறது.

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜீத் தன்னை வைத்து வீரம் படத்தை இயக்கிய சிவாவின் படத்தில் நடிக்கிறார்.

'விஜய் 58' பட பட்ஜெட் ரூ.75+ கோடி, 'தல 56' பட்ஜெட் ரூ.80 கோடி?

அஜீத், சிவா மீண்டும் சேரும் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின் தயாரிப்பாளரும் ஏ.எம். ரத்னம் தான். தல 56 படத்தையும் நீங்களே தயாரித்துக் கொடுங்கள் என்று அஜீத் தான் ரத்னத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அஜீத் தற்போது நடித்து வருவது அவருடைய 55வது படம். அதனால் சிவா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்திற்கு தற்காலிகமாக தல 56 என்று பெயர் வைத்துக் கொள்வோம்.

தல 56 படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடியாம். விஜய் சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பட்ஜெட் ரூ.75+ கோடி என்று அதில் நடிக்கும் சுதீப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல 56 படத்தின் படப்பிடிப்பு பொங்கல் பண்டிகை முடிந்ததும் துவங்குகிறதாம். படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.

 

மதுவில் போதை மருந்து கலந்து பலாத்காரம் செய்துவிட்டதாக 77 வயது நடிகர் மீது மாடல் அழகி புகார்!

வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான 77 வயது பில் கோஸ்பி மீது பிரபல மாடல் அழகியும் நடிகையுமான ஜேன்ச் டிக்கின்சன் ( 59) போதை பொருள் வழங்கி கற்பழித்ததாக கூறி உள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் , 1982ம் ஆண்டு கோஸ்பி தனது, 'தி கோஸ்மி ஷோ' குறித்து பேச என்னை விருந்துக்கு அழைத்தார் கலிபோர்னியா, லேக் டாகு, பகுதியில் உள்ள பகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.

மதுவில் போதை மருந்து கலந்து பலாத்காரம் செய்துவிட்டதாக 77 வயது நடிகர் மீது மாடல் அழகி புகார்!

அப்போது அவர் எனக்கு அளித்த மது கோப்பையில் போதை மாத்திரையை கலந்து விட்டார். மறுநாள் காலை தான் எனக்கு நினைவு திரும்பியது.நான் எழுந்து பார்த்தால் நான் எனது பைஜாமாவை அணிந்து இருக்கவில்லை. கோஸ்பியால் நான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டு இருப்பது தெரியவந்தது. காலையில் எனக்கு அதிக வலி இருந்தது என கூறி உள்ளார்,

2002ம் ஆண்டு எனது சுய சரிதையில் என் மீது நடந்த பாலியல் துஷ்பிரயோகம் குறித்து எழுதினேன். ஆனால் கோஸ்பியும் அவரது வக்கீலும் தலையிட்டு அந்த தகவலை புத்தகத்தில் இருந்து எடுத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோஸ்பி மீது 2 அழகிகள் பலாத்கார புகார் கூறி இருந்தனர். கோஸ்பி இந்த குற்றசாட்டுகளை எல்லாம் மறுத்தார். இதற்குரிய சட்ட நடவடிக்கைகளை 2006ம் ஆண்டில்தான் முடித்தார். இது குறித்து கோஸ்பியின் வக்கீல் ஜான் பி ஸ்கிமிட் கூறும் போது திரும்ப திரும்ப இதே குற்றசாட்டுகள் தான் வருகிறது இவைகள் எல்லாம் உண்மையல்ல என கூறினார்.

 

தற்போதைய ஹீரோக்கள் அழகாகவே இல்லை: மாஜி ஹீரோயின் கருத்தை ஏற்க மறுக்கும் லட்சுமி

சென்னை: தற்போது உள்ள ஹீரோக்கள் அழகாக இல்லை என்று முன்னாள் ஹீரோயின் கூறியது பற்றி நடிகை லட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சத்யம் சினிமாஸில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் ஊமை படம் எடுக்கும் இயக்குனரின் மனைவியும், முன்னாள் ஹீரோயினுமான அந்த நடிகை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், எங்க காலத்தில் எல்லாம் நடித்த ஹீரோக்கள் ஹேண்ட்சமாக அதாவது அழகாக இருந்தார்கள். ஆனால் தற்போது உள்ள ஹீரோக்கள் ஹேண்ட்சமாகவே இல்லை என்றார்.

அஜீத் இருக்காக, விஜய் இருக்காக, விக்ரம் இருக்காக இன்னும் பல ஹீரோக்கள் எல்லாம் இருக்காக அதுவும் ஹேண்ட்சமாக இருக்காக. இது அந்த நடிகைக்கு தெரியவில்லை போன்று.

தற்போதைய ஹீரோக்கள் அழகாகவே இல்லை: மாஜி ஹீரோயின் கருத்தை ஏற்க மறுக்கும் லட்சுமி

முன்னாள் ஹீரோயின் ஒருவர் இப்படி கூறியது பற்றி பழம்பெரும் நடிகை லட்சுமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,

ஹேண்ட்சமாக இருப்பதை எதை வைத்து கணக்கில் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. வட இந்தியாவில் இருக்கும் ஹீரோக்கள் போன்று வெள்ளையாக, மீசை இல்லாமல் இருந்தால் இங்குள்ள ரசிகர்களுக்கு பிடிக்காது. தற்போது பல ஹீரோக்கள் வெற்றி பெற காரணமே அவர்கள் சாதாரணமாக இருப்பது தான்.

ஒரு படத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்களோ அவரே ஹீரோ. அழகை மட்டும் வைத்துக் கொண்டு சினிமாவில் ஸ்கோர் செய்ய முடியாது என்றார்.

 

எனக்கும் இந்திய சினிமாவுக்கும் முக்கிய படம் தந்தவர் இயக்குநர் ருத்ரய்யா - ஸ்ரீப்ரியா

இயக்குநர் ருத்ரய்யா மறைவுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா.

ருத்ரய்யா இயக்கிய அவள் அப்படித்தான் படத்தின் முற்போக்குப் பெண்ணாக நடித்திருந்தவர் ஸ்ரீப்ரியா. இந்தப் படம் மூலம் ஸ்ரீப்ரியாவுக்கு மிகப் பெரிய புகழும் அங்கீகாரமும் கிடைத்தன.

ஸ்ரீப்ரியா வெளிநாட்டில் இருப்பதால் ருத்ரய்யா இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர் ருத்ரய்யாவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எனக்கும் இந்திய சினிமாவுக்கும் முக்கிய படம் தந்தவர் இயக்குநர் ருத்ரய்யா - ஸ்ரீப்ரியா

அந்த அறிக்கையில், "அவள் அப்படித்தான் எனும் மிகச் சிறந்த படத்தைத் தந்த ருத்ரய்யா மறைவு மிகவும் துரதிருஷ்டவசமானது. மிகப் பெரிய இழப்பு. அவள் அப்படித்தான் படம் எனக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் மிகச் சிறந்த படமாக அமைந்தது.

நான் வெளிநாட்டில் இருப்பதால், அவரது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சார்.. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கொஞ்சம் காந்தி... இன்று சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது!

கோவா: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் பங்கேற்கும் சர்வதேச திரைப்பட விழா இன்று கோவாவில் தொடங்குகிறது.

இந்த விழாவுக்கு அமிதாப் பச்சன் தலைமை தாங்குகிறார். ரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகருக்கான விருது இந்த விழாவில் மத்திய அரசு வழங்குகிறது.

45 வது சர்வதேசத் திரைப்பட விழா இது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் தருணத்தில் நடக்கும் விழா என்பதால் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கொஞ்சம் காந்தி... இன்று சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது!

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இணைய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர், மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிகார் உள்ளிட்டோர் இன்று நடக்கும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.

11 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் 75 நாடுகளைச் சேர்ந்த 179 படங்கள் பங்கேற்கின்றன. இவற்றில் இந்தியன் பனோரமா பிரிவில் 41 படங்கள் பங்கேற்கின்றன.

விழாவின் துவக்க நாளான இன்று மக்மல்பஃப் இயக்கிய தி பிரசிடென்ட் படம் திரையிடப்படுகிறது.

அதற்கு முன் சர்வதேச திரையுலகப் பிரபலங்கள், இந்திய திரையுலக ஜாம்பவான்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கூடிய மேடையில், அமிதாப் பச்சன் தலைமையில் ரஜினிகாந்துக்கு இந்திய திரையுலகின் சிறந்த பிரமுகருக்கான விருது மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் காந்தி படத்தை இயக்கிய ரிச்சர்டு அட்டன்பரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. காந்தி திரைப்படத்தை இலவசமாக போட்டுக் காட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு விருது எனக்குக் கிடைத்த பெரிய கவுரவம்! - ரஜினி

கோவா: மத்திய அரசு தரும் விருது எனக்கு பெரிய கவுரவம். மகிழ்ச்சியாக உள்ளது என்று ரஜினிகாந்த் கூறினார்.

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய அரசின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகருக்கான விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது.

மத்திய அரசு விருது எனக்குக் கிடைத்த பெரிய கவுரவம்! - ரஜினி

இந்த விழாவில் பங்கேற்க தன் மனைவியுடன் கோவா வந்தார் ரஜினிகாந்த். அவர் தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "மத்திய அரசு அளிக்கும் இந்த விருது எனக்கு பெரிய கவுரவம், பெருமை," என்றார்.

மீண்டும் அமிதாப் பச்சனுடன் நடிக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, "அதை அமித்ஜியிடம்தான் கேட்க வேண்டும். அவருக்கு ஓகேயென்றால் நடிப்போம்," என்றார்.

லிங்கா வெளியீடு பற்றிக் கேட்டபோது, "டிசம்பர் 12-ம் தேதி படம் வெளியாகும்" என்றார் ரஜினி.

 

இந்தி படத்துக்காக பிகினியில் கார் கழுவிய சன்னி லியோன்

பட்டயா: மஸ்திசாதே என்னும் இந்தி படத்திற்காக சன்னி லியோன் பிகினி அணிந்து கார் கழுவும்போது எடுத்த போட்டோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.

சன்னி லியோன் தற்போது மஸ்திசாதே என்னும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் இரட்டை வேடங்களில் வருகிறாராம். மிலப் ஜாவேரி இயக்கி வரும் இந்த படத்தில் துஷார் கபூர், வீர் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்தி படத்துக்காக பிகினியில் கார் கழுவிய சன்னி லியோன்

படத்தில் வரும் ஒரு காட்சிக்காக தாய்லாந்தில் உள்ள பட்டயாவில் பிகினி அணிந்து சன்னி கார் கழுவினார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ இணையதளத்தில் தீயாக பரவி உள்ளது.

சும்மாவே சன்னி லியோன் படுகவர்ச்சியாக வருவார் அதிலும் இந்த படத்தில் இரட்டை வேடமாம். ரசிகர்கள் பாடு கொண்டாட்டம் தான். சன்னி கவர்ச்சியாட்டம் போடும் இந்த படத்தில் ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு ரிலீஸாக உள்ளது.

 

சல்மானும், ஷாருக்கும் என்னை இரவு முழுவதும் தூங்கவிடவில்லை: ஆமீர் கான்

மும்பை: சல்மான் கானும், ஷாருக்கானும் ஒரு இரவு முழுவதும் தன்னை தூங்கவிடவில்லை என்று நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

சல்மான் கானும், ஷாருக்கானும் எலியும், பூனையும் போன்றவர்கள் என்பவது அனைத்து உட்காரர்களுக்கும் தெரியும். அதே சமயம் சல்மானுக்கும் ஆமீர் கானுக்கும் ஒத்துப் போகும். ஆமீருக்கும், ஷாருக்கிற்கும் ஏழாம் பொருத்தம் தான்.

சல்மானும், ஷாருக்கும் என்னை இரவு முழுவதும் தூங்கவிடவில்லை: ஆமீர் கான்

இந்நிலையில் ஷாருக்கான் சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் திருமணத்திற்கு முந்தைய நாள் அவர்கள் இடத்திற்கு சென்றார். அவரும், சல்மானும் ஆளுக்கொரு பக்கம் அர்பிதாவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பார்த்த பலரின் கண்களில் இருந்து இன்னும் வியப்பு அகன்றபாடில்லை.

சல்லுவும், ஷாருக்கும் நண்பர்களாகிவிட்டதை அவர்கள் டெல்லியில் இருந்த ஆமீர் கானுக்கு ஃபேஸ்டைம் மூலம் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் ஆமீர் கானுடன் இரவு முழுவதும் பேசியுள்ளனர்.

இந்த ஷாருக்கும், சல்மானும் என்னை இரவு முழுவதும் தூங்கவிடாமல் பேசிக் கொண்டிருந்தனர் என்று ஆமீர் கானும் தெரிவித்துள்ளார்.

 

நடிகர் துனியா விஜய் மனம் மாறினார்: மனைவி நாகரத்னா சேர்ந்து வாழ முடிவு

பெங்களூர்: நடிகர் துனியா விஜய்-நாகரத்னா தம்பதி மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். இதையொட்டி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறப் போவதாக விஜய் தெரிவித்துள்ளார்.

கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் துனியா விஜய். இவர் ‘துனியா‘ என்ற கன்னட திரைப்படத்தில் நடித்ததால், அவர் துனியா விஜய் என்றே அழைக்கப்படுகிறார். இவர் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி நாகரத்னா. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் துனியா விஜய் மனம் மாறினார்: மனைவி நாகரத்னா சேர்ந்து வாழ முடிவு

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2 பேரும் பிரிந்தனர். நடிகர் துனியா விஜய் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். துனியா விஜயுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவரது மனைவி நாகரத்னா ஒரு மனு தாக்கல் செய்தார். இவற்றின் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது மனைவி நாகரத்னாவுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், தந்தையுடன் வசிக்க குழந்தைகள் விருப்பப்படுவதால் அவர்களது தாயார் மாதத்திற்கு 2 முறை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் துனியா விஜய்க்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று பெங்களூரு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது துனியா விஜய் மற்றும் நாகரத்னா ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது சேர்ந்து வாழ்வது குறித்து நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் மத்தியஸ்தர்கள் மூலம் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. அவர்களது குழந்தைகளும் உடன் இருந்தனர். அப்போது குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி 2 பேரும் மீண்டும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர்.

அதன்படி குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளும் வாபஸ் பெற முடிவு செய்தனர். இரு தரப்பினரும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நடிகர் துனியா விஜய்யின் இந்த முடிவை கர்நாடக திரை உலகினர் வரவேற்று உள்ளனர்.

 

'நோ.. பாலிடிக்ஸ் ப்ளீஸ்.. இப்போது பேச விரும்பவில்லை' - கோவாவில் ரஜினிகாந்த் பேட்டி

பனாஜி: நோ பாலிடிக்ஸ்... அரசியல் பத்தி பேச விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று பனாஜியில் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டின் சிறந்த திரைப் பிரபலம் என்ற சிறப்பு விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதையொட்டி உருவாக்கப்பட்டுள்ள விருது இது.

'நோ.. பாலிடிக்ஸ் ப்ளீஸ்.. இப்போது பேச விரும்பவில்லை' - கோவாவில் ரஜினிகாந்த் பேட்டி

இன்று கோவாவில் தொடங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதினை அமிதாப் பச்சன் முன்னிலையில் ரஜினிக்கு வழங்குகிறது மத்திய அரசு.

இதற்காக இன்று கோவாவில் உள்ள பனாஜி விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஜினி. அவரிடம் தனியார் தொலைக்காட்சி சேனலான என்டிடிவி அவரது அரசியல் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியது.

அதற்கு பதிலளித்த ரஜினி, 'இல்லை.. அரசியல் பற்றி இப்போது எதுவும் பேச விரும்பவில்லை," என்றார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் "அரசியலில் இறங்க எனக்கு பயமில்லை.. ஆனால் தயக்கமிருக்கிறது. அதனால்தான் ஆண்டவன் முடிவுக்குக் காத்திருக்கிறேன்," என்றார்.

இதைத் தொடர்ந்து தமிழக மீடியா மற்றும் கருத்து சொல்லிகள் பரபரப்பு கிளப்பி வந்தனர். பல்வேறு விவாதங்கள் அரங்கேறின.

இந்த நிலையில் அரசியல் பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம், அவரது இந்த சிறு பேட்டியை, எனக்கு அரசியலே வேண்டாம் என ரஜினி கூறியதாக அந்த தொலைக்காட்சியின் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்தப் பேட்டியின் வீடியோ:

 

ஹேப்பி நியூ இயர் 'பங்கு' தரல: ஷாருக்கானுக்கு குறி வைத்த தாதா ரவி பூஜாரி

மும்பை: மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரி நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது தோழியும் இயக்குனருமான ஃபரா கானுக்கு குறி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஃபரா கான் இயக்கிய ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்கையில் நடிகர்கள் ஷாருக்கான், போமன் இரானி மற்றும் சோனு சூத் ஆகியோருக்கு மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரி மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டை கொலை செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருந்த ரவி பூஜாரியின் ஆட்கள் 13 பேரை போலீசார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.

ஹேப்பி நியூ இயர் 'பங்கு' தரல: ஷாருக்கானுக்கு குறி வைத்த தாதா ரவி பூஜாரி

மகேஷ் பட்டை கொன்றால் விரைவில் பப்ளிசிட்டி பெற்று பாலிவுட்காரர்களை மிரட்டி பணம் பறிப்பது தான் ரவியின் திட்டம். ரவி ஷாருக்கான் மற்றும் அவரது தோழியான ஃபரா கானுக்கும் குறி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஷாருக் மற்றும் ஃபரா கருத்து தெரிவிக்கவில்லை. மிரட்டலை செயலாக்கும் முன்பு அதை முறியடிக்கும் அளவுக்கு மும்பை போலீஸ் திறமையானவர்கள் என்று மகேஷ் பட் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவிக்கு ஹேப்பி நியூ இயர் படத்தின் சர்வதேச உரிமையை தனக்கு அளிக்கவில்லை என்ற கோபமாம். மேலும் ஹேப்பி நியூ இயர் படத்தின் வருமானத்தில் ஒரு பங்கை தனக்கு கொடுக்கவில்லை என்று ரவி கோபத்தில் உள்ளாராம்.

ஹேப்பி நியூ இயர் உலக அளவில் ரூ. 350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் படம் ரிலீஸாகும் முன்பே ரூ.200 கோடி சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதலில் ராதாரவியையும் காளையையும் நீக்குங்க.. அப்புறம் என்கிட்ட வாங்க - சரத்துக்கு விஷால் பதிலடி

சென்னை: நடிகர்களை கேவலமாகப் பேசிய நடிகர் சங்க செயலாளர் ராதாரவியையும், துணைத் தலைவர் காளையையும் நீக்கிவிட்டு என்னை சங்கத்திலிருந்து நீக்குங்கள் என சரத்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.

நடிகர் சங்கத்தைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பி வரும் விஷாலை சங்கத்திலிருந்து நீக்கவும் தயங்க மாட்டேன் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் நேற்று கூறியிருந்தார்.

முதலில் ராதாரவியையும் காளையையும் நீக்குங்க.. அப்புறம் என்கிட்ட வாங்க - சரத்துக்கு விஷால் பதிலடி

இதற்கு உடனடியாக பதில் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். தனது அறிக்கையில், "சங்கத் தலைவர் சரத்குமாரிடமிருந்து இப்படி ஒரு பேச்சைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நடிகர் சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் மதிக்கிறேன். அவர்கள் என்னை வெளியேற்றினால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

ஆனால், நீக்குவதற்கு முன் நான் சங்கத்துக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டேன் என்பதற்கான ஆதாரத்தை சரத்குமார் காட்ட வேண்டும்.

சங்கத்தின் செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் காளையும் சங்க உறுப்பினர்களை தரக்குறைவாக, அதிலும் ‘நாய்கள்' என்று பேசிய பேச்சுகள் என் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டன. சங்க விதி 13-ன்படி சங்க உறுப்பினர்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கலாம். அதன்படி முன்பு அப்படிப் பேசிய சீனியர் நடிகர் குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சங்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

இப்போது ராதாரவியும், காளையும் அப்படிப்பட நடவடிக்கைக்கு உரியவர்கள்தான். நீதி என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே. எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, ராதாரவியும், காளையும் விலக்குங்கள்," என்று கூறியுள்ளார்.

இப்போது நெருக்கடி சரத்குமாருக்குதான். என்ன செய்யப் போகிறார் நாட்டாமை.. கூடிப் பேசி சமாதான அறிக்கை விடுவார்களோ!

 

முன்னாள் காதலி பிபாஷாவுடன் சேர த்ரிஷாவை பிரிந்த ராணா?

சென்னை: நடிகர் ராணா தனது முன்னாள் காதலியான பிபாஷா பாசுவுடன் மீண்டும் சேரவே த்ரிஷாவை பிரிந்ததாக கூறப்படுகிறது.

த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலித்து வந்தார்கள். பல ஆண்டுகளாக அவர்கள் பிரிவதும், சேர்வதுமாக உள்ளனர். தற்போது அவர்கள் பிரிந்துள்ளனர். இந்த முறை கதம் கதம் போல. த்ரிஷாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் காதலி பிபாஷாவுடன் சேர த்ரிஷாவை பிரிந்த ராணா?

இந்நிலையில் ராணா த்ரிஷாவை பிரிந்ததே தனது முன்னாள் காதலியான நடிகை பிபாஷா பாசுவுடன் சேரத் தான் என்று கூறப்படுகிறது. நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்த பிபாஷா பாசு பின்னர் ராணாவை காதலித்தார். கடந்த சில நாட்கள் வரை நடிகர் ஹர்மன் பவேஜாவின் காதலியாக வலம் வந்தார் பிபாஷா. அவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது என்று கூட செய்திகள் வெளியாகின.

இப்பொழுது என்னவென்றால் பிபாஷா திரும்பி வந்த ராணாவை ஏற்றுக் கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது. ராணாவும், த்ரிஷாவும் ஒவ்வொரு முறை பிரியும்போதும் ராணாவின் வாழ்வில் வேறொரு நடிகை நுழைந்திருப்பார்.

ராணா, பிபாஷா மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. மறுபடியும் முதலில் இருந்தா ராணா?

 

ஆச்சி மனோரமாவை கவனிக்கவும் ஆளில்லையே- மன்சூர் அலிகான் ஆதங்கம்

ஆச்சி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மனோரமாவை கவனிக்கக் கூட ஆளில்லை. அவருக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருந்தும் முறையான சிகிச்சை இல்லாமல் தவிக்கிறாரே என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்த அபூர்வ தமிழ் நடிகை மனோரமா. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்றைய நடிகர்கள் காலம் வரை நடித்துள்ளார்.

ஆச்சி மனோரமாவை கவனிக்கவும் ஆளில்லையே- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மனோரமாவுக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். முழங்காலில் அறுவைச் சிகிச்சை நடந்தது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.

தற்போது மனோரமாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரை மருத்துவமனையில் கூட சேர்க்காமல் வீட்டிலேயே போட்டு வைத்துள்ளனர் என்று சமீபத்தில் போய் பார்த்துவிட்டு வந்த மன்சூர்அலிகான் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "என் மகள் திருமணத்துக்காக மனோரமாவுக்கு அழைப்பிதழ் வைக்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

அங்கே அவர் இருந்த நிலைமையைப் பார்த்து கலங்கிப் போனேன். முகம், கை காலெல்லாம் வீங்கிப் போய், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார்.

அடிக்கடி ‘டயாலிசஸ்' செய்ய வேண்டும். அதை கூட செய்யவில்லை. சிறநீரக மாற்று ஆபரேஷன் செய்தால் அவர் இன்னும் நீண்ட நாள் உடல் நலத்தோடு இருப்பார். அதையும் செய்யவில்லை. மருத்துவமனையிலும் சேர்க்க வில்லை.

மனோரமா நடித்து கோடி கோடியாய் சம்பாதித்துள்ளார். சென்னையிலேயே பல கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. அப்படிப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வைத்திருப்பது வருத்தமாக உள்ளது.

ஒட்டு மொத்த திரையுலகினருக்கும் மனோரமா மேல் பாசம் இருக்கிறது. எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய முயற்சி எடுக்க வேண்டும்," என்றார்.

 

'பிளேயர் கில்லாடி'யாக பாலிவுட் செல்லும் அஜீத்

சென்னை: அஜீத் நடித்த ஆரம்பம் படம் இந்தியில் டப் செய்யப்பட்டு பிளேயர் கில்லாடி என்ற பெயரில் ரிலீஸாக உள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ராணா, நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடித்த படம் ஆரம்பம். கடந்த ஆண்டு ரிலீஸான இந்த படம் பாலிவுட் செல்கிறது. பாலிவுட்காரர்கள் தென்னிந்திய திரைப்படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

'பிளேயர் கில்லாடி'யாக பாலிவுட் செல்லும் அஜீத்

முதலில் ஆரம்பம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்களாம். இந்தியில் ஆரம்பம் படத்தை பிளேயர் கில்லாடி என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.

படத்தின் இந்தி டப்பிங் உரிமையை சினி கார்ன் பெற்றுள்ளதாம். தற்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. படம் அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அஜீத் தற்போது என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மலேசியாவில் பிறந்த நாள் கொண்டாடிய விவேக்!

சின்னக் கலைவாணர் என்று ரசிகர்களால் பாராட்டப்படும் விவேக் தன்னுடைய பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாடினார்.

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் காமெடி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் விவேக். பல ஆண்டுகளாக தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

மலேசியாவில் பிறந்த நாள் கொண்டாடிய விவேக்!

நகைச்சுவை மேதை கலைவாணருக்குப் பின் திரையில் வெறும் நகைச்சுவையோடு பகுத்தறிவுக் கருத்துக்களையும் சொல்வதில் வெற்றி கண்டவர் என்பதால் அவரை சின்னக் கலைவாணர் என்று பாராட்டுகின்றனர் ரசிகர்கள்.

நிஜத்திலும் தனது செயல்கள் மூலம் வேறுபட்ட மனிதராக நிலை நிறுத்தி வருகிறார். தனி மனிதராக அவர் ஆரம்பித்த புசுமைத் திட்டம் மூலம் பல லட்சம் மரங்களை நட்டு, சுற்றுச் சூழல் நண்பனாகத் திகழ்கிறார்.

விவேக்குக்கு இன்று பிறந்த நாள். ஆனால் இந்த நாளைக் கொண்டாட அவர் இந்தியாவில் இல்லை. மலேசியாவுக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றுள்ள அவர் அங்கேயே தன் பிறந்த நாளைக் கொண்டாடினார்.

 

மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்!

சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதில் கதாநாயகன் சண்முகப் பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இரு நூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக் கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார்.

அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டைக் காட்சியைப் படமாக்கினர்.

மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்!

இந்த சண்டைக் காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது. தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா இந்தக் காட்சியை அமைத்தார்.

இப்படத்தின் மூலம் சவ்ரவ் என்ற இந்தி வில்லன் நடிகர் தமிழில் அறிமுகமாகிறார். நாயகிகளாக நேகாவும், சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள்.

இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். சுரேந்திரன் இயக்குகிறார்.