இனி ரூ.1.5 கோடி கொடுத்தால் மட்டுமே ஸ்ருதி நடிப்பார்

இனி ரூ.1.5 கோடி கொடுத்தால் மட்டுமே ஸ்ருதி நடிப்பார்  

மும்பை: ஸ்ருதி ஹாஸன் தனது சம்பளத்தை ரூ.1 கோடியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன் நடித்த கப்பார் சிங் தெலுங்கு படம் ஹிட்டானது. இதையடுத்து அவர் நடித்த பலுபு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கினார். ஆந்திராவில் ஸ்ருதிக்கு மவுசு உள்ளது என்பதால் தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை தருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ருதி நடித்த டி டே மற்றும் ராமையா வஸ்தாவய்யா ஆகிய 2 இந்தி படங்கள் கடந்த மாதம் அதுவும் ஒரே தேதியில் ரிலீஸாகின. ஸ்ருதியின் முந்தைய இந்திய படங்கள் ஊத்திக் கொண்டதால் அவர் இந்த படங்களை பெரிதும் எதிர்பார்த்தார். அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. இரண்டு படங்களும் ஓடிவிட்டது, மேலும் ஸ்ருதியின் நடிப்பும் பாராட்டப்பட்டுள்ளது.

இதனால் ஸ்ருதி தனது சம்பளத்தை ரூ. 1.5 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.

 

'தலைவா' ரிலீஸ் செய்தால் 'தலை' இருக்காது: மிரட்டிய தமிழ் இளைஞர் மாணவர் படை!

'தலைவா' ரிலீஸ் செய்தால் 'தலை' இருக்காது: மிரட்டிய தமிழ் இளைஞர் மாணவர் படை!  

சென்னை: நடிகர் விஜய்யின் தலைவா திரைப்படத்தை திரையிட்டால் தலையை கொய்துவிடுவோம் என்று தமிழ் இளைஞர் மாணவர் படை என்கிற அமைப்பு திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக தெரிகிறது.

தலைவா படத்தில் அரசுக்கு எதிரான வசனங்கள் இருப்பதாகவும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியின் சில பில்டப் பேச்சுகளும்தான் படம் வெளியாகாமல் போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 'தமிழக இளைஞர் மாணவர் படை' என்ற பெயரில் வேறு ஒரு காரணத்தை முன்வைத்து தலைவா படத்தை ரிலீஸ் செய்தால் தலை இருக்காது என்று மிரட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த அமைப்பு அனுப்பிய மிரட்டல் கடிதத்தில், தலைவா திரைப்படத்தை எஸ்.ஆர்.ஆம். கல்வி நிறுவனங்களின் தலைவர் 'புதிய தலைமுறை' டிவி பச்சமுத்துவின் வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது.

மாணவர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் அவர் வாங்கி வெளியிடுவதால் அவரை எதிர்க்கும் வகையில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது. அப்படி ரிலீஸ் செய்தால் தலை கொய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்ததாம்.

எங்கிட்டு திரும்பினாலும் தலைவலியோ!

 

சிம்புவை கல்யாணம் பண்ணாதீங்க....ஹன்சிகாவின் ஃபேஸ்புக்கில் கதறும் ரசிகர்கள்!

சிம்புவை கல்யாணம் பண்ணாதீங்க....ஹன்சிகாவின் ஃபேஸ்புக்கில் கதறும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் சிம்பும் தாமும் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை ஹன்சிகா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டதும் போட்டார்...அப்படி ஒரு கொந்தளிப்பை எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர் ஹன்சிகாவின் ரசிகர்கள்..

ஹன்சிகாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் 'என்ன கொடுமை சரவணா இது' என்று ஒரு ரசிகர் பதிவிட அதற்கு ஹன்சிகாவும் 'ஆமா கொடுமைதான்.. என்ன செய்யுறது' என பதிலிட்டிருக்கிறார்.

அதேபோல் ஹன்சிகா சிம்புவை திருமணம் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தியே அதிக கமெண்டுகள் போடப்பட்டிருக்கின்றன.

'Hansika. please dont marry simbu.', Hansika ne avana marrg pannikatha, Onnu parthu tiruntanum, Illana.. Patthu tiruntanum... hansika vendam plz vanthudu, hansika vaazhkaiyum pocha?. இவையெல்லாம் ஹன்சிகாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளவைதான்..

தனது காதலன் சிம்புவுக்கு எதிரான கமெண்ட்டுகளை ஹன்சிகாவும் அனுமதித்து அப்படியே விட்டு வைத்திருக்கிறார்.

 

சென்னை எக்ஸ்பிரஸ் - விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிப்பு: ஷாரூக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ்
இசை: விஷால் சேகர்
ஒளிப்பதிவு: டட்லீ
தயாரிப்பு: கவுரி கான், ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய்கபூர்
இயக்கம்: ரோஹித் ஷெட்டி

ஒரு பொழுதுபோக்குப் படத்தை எப்படி சுவாரஸ்யமாகத் தரவேண்டும் என்பதற்கு சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு நல்ல உதாரணம்.

கட்டாய திருமணம் செய்து வைக்கப் பார்க்கும் அப்பா, தப்பிக்க முயன்று மாட்டிக் கொள்ளும் நாயகி, காப்பாற்ற வரும் ஹீரோ, குறுக்கே வரும் வில்லன், அவனை ஜெயித்து காதலை வெல்லும் க்ளைமாக்ஸ்...

சென்னை எக்ஸ்பிரஸ் - விமர்சனம்

-இந்தக் கதையை எத்தனையோ தமிழ், இந்திப் படங்களில் பார்த்திருக்கிறோம். இதே கதைதான் சென்னை எக்ஸ்பிரஸிலும். ஆனால் சொன்ன விதம், காட்சிகளின் வர்ணஜாலம் பார்வையாளர்களை அனுபவித்துப் பார்க்க வைக்கிறது. அங்குதான் ஒரு இயக்குநர் தன்னை வெளிப்படுத்துகிறார்!

இத்தனைக்கும் கொஞ்சம் முத்து, கொஞ்சம் கில்லி, கொஞ்சம் அலெக்ஸ் பாண்டியன் என காட்சிகளில் 'காப்பி' தெரிந்தாலும், அவற்றை பிரயோகித்த விதத்தில் கிண்டலுக்கு ஆளாகாமல் தப்பிக்கிறது படம்.

சென்னை எக்ஸ்பிரஸ் - விமர்சனம்

தன் தாத்தா அஸ்தியைக் கரைக்க ராமேஸ்வரம் செல்கிறார் ஷாரூக்கான். வழியில் எதேச்சையாக தீபிகா படுகோனை ரயிலில் சந்திக்கிறார். அப்பா தனக்கு செய்து வைக்கவிருந்த கட்டாயக் கல்யாணத்தை எதிர்த்து ஓடிப்போய் மீண்டும் அப்பாவின் அடியாட்களிடம் சிக்கிக் கொண்ட நிலையில் இருக்கிறார் தீபிகா. ஷாரூக்கிடம் தனக்கு உதவக் கோருகிறார். ஆனால் ஒருகட்டத்தில் ஷாரூக்கையே தன் காதலனாக தந்தையிடம் காட்ட, அவரும் காதலுக்கு சம்மதம் சொல்ல, வில்லன் என்ட்ரியாகிறார்.

வில்லனை ஜெயித்து தீபிகாவை எப்படி கைப்பிடிக்கிறார் ஷாரூக் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஷாரூக்கான் - தீபிகா இருவரும் படத்துக்கு பெரும் பலம். ஒரு பொழுதுபோக்குப் படத்தில் கதாநாயகியைப் பயன்படுத்தும் வித்தையை பாலிவுட்காரர்களிடமிருந்து இங்குள்ள இயக்குநர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சும்மா டூயட்டுக்கும், க்ளைமாக்ஸுக்கும மட்டுமே ஹீரோயினை கறிவேப்பிலையாகப் பயன்படுத்தவில்லை.

ஷாரூக்கான் தான் ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்பே இல்லாமல், இந்தப் படத்தில் இயக்குநர் செய்யச் சொன்ன அத்தனை கோமாளித்தனங்களையும் பண்ணியிருக்கிறார். தீபிகாவைக் காப்பாற்ற அவர் செய்ய முயலும் சாகசங்கள் அனைத்தும் காமெடியாக முடிய, நமக்கு ஷாரூக் மீதான மரியாதை கூடுகிறது.

சென்னை எக்ஸ்பிரஸ் - விமர்சனம்

வேட்டி கட்டிக் கொண்டு டூயட் பாடுவது, தமிழை உச்சரிக்க முயன்று தடுமாறுவது, சத்யராஜையே என்னமா கண்ணு என கலாய்ப்பது என கலக்கியிருக்கிறார் ஷாரூக். மனிதர் நேரடி தமிழ்ப் படத்தில் நடித்தால் இன்றைய முன்னணி நடிகர்கள் பலருக்கு வயிற்றில் புளி கரைக்கும். அப்படியொரு வரவேற்பு பார்வையாளர்களிடம்.

தீபிகா தனது அழகு, அசத்தல் நடிப்பால் அசரடிக்கிறார். தமிழ் வசனங்களுக்கு அவரே குரல் கொடுத்திருப்பது, கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மெச்சத் தக்க முயற்சி.

சத்யராஜ் உள்பட நிறைய தமிழ் நடிகர்கள் முரட்டு மீசை, வேட்டி சட்டையில் வருகிறார்கள். நிறைய இடங்களில் தமிழ் வசனங்கள். நிச்சயம் இது வட இந்திய ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். தமிழர்களுக்கு இந்திப் படம் பார்ப்பது போலவே இருக்காது.

சென்னை எக்ஸ்பிரஸ் - விமர்சனம்

ரஜினிக்கு மரியாதை என்ற பெயரில் கடைசியில் இடம்பெறும் அந்த லுங்கி டான்ஸ் முடியும் வரை கூட்டம் காத்திருக்கிறது. ஷாரூக்கானின் புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு சான்று இது.

டட்லீயின் ஒளிப்பதிவு, சேகர் விஷாலின் இசை படத்துக்கு பக்க பலங்கள்.

சென்னை எக்ஸ்பிரஸ்... இந்தி பேசும் கலர்ஃபுல் தமிழ் சினிமா... Just Enjoy the show!

 

சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ... ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஹன்சிகா!

சென்னை: தமிழ் திரை உலகின் புதிய காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இருவரும் தங்களது காதலை பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். தற்போது தாமும் சிம்புவும் கட்டிப்பிடித்தபடியான புகைப்படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார் ஹன்சிகா.

சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் பிறந்த நாள் வந்தது. அதற்கு முன்பாக ஹன்சிகாவுக்கு என்ன மாதிரி பரிசுப் பொருள் வழங்குவது என்பதில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சிம்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ... ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஹன்சிகா!

பின்னர் ஹன்சிகாவின் பிறந்த நாளன்றும் 'இளவரசி' என்றெல்லாம் வர்ணித்திருந்தார் சிம்பு.

இந்த நிலையில் பார்ட்டி ஒன்றில் சிம்புவும் தாமும் கட்டிப் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார் ஹன்சிகா.

சிம்புவை கட்டிப் பிடித்திருக்கும் போட்டோ... ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஹன்சிகா!

இதைத் தொடர்ந்து அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட வேறு சில படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

 

சிட்னியில் அடுத்த மாதம் இளையராஜா இசை நிகழ்ச்சி

சிட்னியில் அடுத்த மாதம் இளையராஜா இசை நிகழ்ச்சி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் செப்டம்பர் மாதம் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.

சிட்னி நகரில் உள்ள சிட்னி எண்டர்டெயின்மென்ட் சென்டரில் செப்டம்பர் 22-ந் தேதி மாலை 5 மணிக்கு இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

சிம்போனி என்டர்பிரைசஸ் அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆன்லைனில் www.ticketmaster.com மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனக்குப் பிறகு ஹன்சிகாவுக்குத்தான் அந்த இடம்! - சிம்ரன்

எனக்குப் பிறகு ஹன்சிகாவுக்குத்தான் அந்த இடம்! - சிம்ரன்

எனக்குப் பிறகு தமிழ் சினிமாவில் என்னுடைய இடத்தைப் பிடித்திருப்பவர் ஹன்சிகாதான் என்று புகழ்ந்துள்ளார் சிம்ரன்.

கவர்ச்சி, பெல்லி டான்ஸ் மட்டுமல்ல, கிசுகிசுக்களிலும் முதலிடத்தில் இருந்தவர் சிம்ரன்.

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சமமான நாயகி என தமிழில் யாரையும் கூற முடியவில்லை.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தனக்கு சமமான நாயகி என அவர் ஹன்சிகாவைப் பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், "தமிழில் என்னுடைய இடத்தைப் பிடித்திருப்பவர் ஹன்சிகாதான். அவருடைய அழகும், துறுதுறு நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

எனக்குப் பிடித்த வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். தற்போது 'அரிஜெம் மூவிஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். முதன் முதலாக 'டான்ஸ் தமிழா டான்ஸ்' என்ற நடன நிகழ்ச்சியை ஜீ தமிழ் சேனலில் தொடங்கியுள்ளேன்.

சிறுவயதில் இருந்தே டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ஆடுவதைவிட, பிறரை ஆடவைத்துப் பார்ப்பது பிடிக்கும் என்பதால் புதிய மேடையை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்," என்றார்.

விரைவில் சினிமாவும் தயாரிக்கப் போகிறார் சிம்ரன்.

 

நான்கு நாட்களில் ரூ 100 கோடி... சென்னை எக்ஸ்பிரஸ் புதிய சாதனை!

மும்பை/சென்னை: ரம்ஜான் ஸ்பெஷலாக திரைக்கு வந்த நான்கே நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படம்.

ஷாருக் கான், தீபிகா படுகோன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்.' கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸானது. தமிழகம் உள்பட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை ரம்ஜான் ஸ்பெஷலாக வந்தது.

நான்கு நாட்களில் ரூ 100 கோடி... சென்னை எக்ஸ்பிரஸ் புதிய சாதனை!  

விஜய் - அமலா பால் நடிப்பில் உருவான 'தலைவா', சில பிரச்னைகளால் தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை. அதேபோல, பவன் கல்யாண் நடிப்பில் உருவான தெலுங்குப் படம் தெலுங்கானா பிரச்னையால் ரிலீஸாகவில்லை.

இந்த இரண்டு பெரிய படங்களுமே ரிலீஸாகாத நிலையில், அந்தப் படங்களுக்காக புக் செய்து வைத்திருந்த திரையரங்குகளில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் 30 அரங்குகளில் சென்னை எக்ஸ்பிரஸ் ஓடிக் கொண்டுள்ளது.

தமிழகத்தின் சின்னச் சின்ன நகரங்களிலும் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 3500 அரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது இந்தப் படம்.

முதல் நாளில் 33.12 கோடி வசூல், இரண்டாம் நாளில் 28.05 கோடி, மூன்றாம் நாளில் 32.50 கோடி வசூலித்துள்ளது இந்தப் படம்.

வியாழக்கிழமை திரையிடப்பட்ட சிறப்புக் காட்சிகள் மூலம் மட்டுமே ரூ 6.75 கோடிகளை வசூலித்து, மொத்தம் ரூ 100 கோடிகளைத் தொட்டுவிட்டது சென்னை எக்ஸ்பிரஸ்.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி இருக்கிறது சென்னை எக்ஸ்பிரசுக்கு.

இதன் மூலம் இந்திப் பட வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது சென்னை எக்ஸ்பிரஸ்.

சென்னை எக்ஸ்பிரஸ்- விமர்சனம்

 

'தலைவா' கதை டிவி சீரியல் கதையா?

சென்னை: ஏ.எல். விஜய்யின் தலைவா படக் கதை ஒரு டிவி சீரியலின் கதை என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள படம் தலைவா. படம் அறிவித்தபடி கடந்த 9ம் தேதி ரிலீஸாகவில்லை. தலைவா அரசியல் கதையே இல்லை என்று விஜய் கூறி வருகிறார். இருப்பினும் படத்தை வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் திருட்டு சிடிக்கள் வேறு வெளியாகியுள்ளது விஜய்யையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

'தலைவா' கதை டிவி சீரியல் கதையா?

இதற்கிடையே தலைவா படத்தின் கதை ஸ்டார் ஒன் இந்தி டிவி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான பேமிலி பிசினஸ் என்னும் தொடரின் கதையின் தழுவல் என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

முன்னதாக ஏ.எல். விஜய் இயக்கிய கிரீடம் மலையாளப் படமான 'கிரீடமின்' தழுவல். மேலும் தெய்வத் திருமகள், 'ஐ ஆம் சாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் செயல்பாடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! - விஜய்

முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் செயல்பாடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! - விஜய்

சென்னை: முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வெளிப்படையான செயல்பாடுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தலைவா படத்தின் திருட்டு விசிடி தயாரித்து விற்றவர்களை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

திருட்டு டிவிடி தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளனர் போலீசார். இதற்காக போலீசுக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

திருட்டு சிடி தயாரிப்பதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும். அன்பு ரசிகர்களே, தமிழ்நாட்டில் இன்னும் தலைவா படம் வெளியிடப்படவில்லை. அதற்குள் யாராவது திருட்டு சிடி விற்றாலோ, தயாரித்தாலோ அவர்களை பற்றி காவல் துறைக்கு தெரிவியுங்கள்.

சிறப்பான ஆட்சி

நமது முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்து வருகிறார்கள். என்.எல்.சி பிரச்சனை, காவேரி நீர் பிரச்சனை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, லேப்டாப் உதவி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள்.

எனக்கு ரொம்பப் பிடிக்கும்

இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவர்களது வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

தலைவா பிரச்சினையில் தலையிடுங்கள்

எல்லாருக்கும் நல்லது செய்யும் முதல்வர் அவர்கள் தலைவா பிரச்சனையிலும் தலையிட்டு விரைவில் தமிழகமெங்கும் தலைவா வெளிவர ஆவண செய்வார்கள். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் பொறுமையாக காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு விஜய் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

 

அய்யய்யோ, நான் அரசுக்கு எதிரா பேசவே இல்ல! - அலறும் தனுஷ்

அய்யய்யோ, நான் அரசுக்கு எதிரா பேசவே இல்ல! - அலறும் தனுஷ்

சென்னை: 'ஒரு படத்திற்கு (தலைவா) தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும்' என்று இரு தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்த தனுஷ், இப்போது நான் அரசுக்கு எதிராக பேசவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

தலைவா படம் தமிழகத்தில் வெளிவராத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர்கள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

சிம்பு, பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தன் பங்குக்கு கருத்துத் தெரிவித்த தனுஷ், " தலைவா படத்திற்கு நிகழ்ந்த பிரச்சனை நியாயமற்றது. ஒரு படத்திற்கு தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும்," என்று ட்வீட் செய்திருந்தார்.

அரசுக்கு எதிரான விமர்சனமாக இது பார்க்கப்பட்டதால், இந்த குறித்து பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்தனர்.

அலறிய தனுஷ்

இவற்றைக் கவனித்த தனுஷ் உடனடியாக தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்ததோடு, அதை எஸ்எம்எஸ் மூலமாகவும் அறிக்கை வடிவிலும் மீடியாவுக்கு அனுப்பியுள்ளார்.

நான் அப்படி சொல்லவே இல்ல

அதில், "ஊடக நண்பர்களுக்கு வணக்கம்... சுவிட்சர்லாந்திலிருந்து தனுஷ்... எனது ட்விட்டரில் தலைவா படம் பற்றிக் கூறியிருந்த கருத்தின் ஒரு பகுதி மட்டும் ஒரு சில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஒரு பகுதி மட்டுமே பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அது வேறு அர்த்தத்தைத் தருகிறது. தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை நான் தெரிவிக்கவில்லை. நான் அரசுக்கு எதிரானவன் அல்ல," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சேலத்தில் 3000 தலைவா பட டிவிடிக்கள் பறிமுதல் - மூவர் கைது!

சேலத்தில் 3000 தலைவா பட டிவிடிக்கள் பறிமுதல் - மூவர் கைது!

சேலம்: விஜய் நடித்து தமிழகத்தில் மட்டும் இன்னும் வெளியாகாத தலைவா படத்தின் 3000 டிவிடிக்களை சேலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் விஜய், நடிகை அமலபால், சத்யராஜ் நடித்து இயக்குநர் விஜய் இயக்கியுள்ள தலைவா படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீசாகவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இந்தப் படம் வெளியான இரண்டாவது நாளே டொரன்ட் உள்ளிட்ட தளங்களில் இந்தப் படம் வெளியாகி பார்வையாளர்களுக்கு இலவசமாகக் கிடைத்தது.

இதனை டவுன்லோடு செய்து சிடியாக்கி சென்னை - புதுவை நகரங்களின் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே தலைவா புதுப்பட டிவிடிக்கள் ரகசியமாக தயாரிக்கப்படுவதாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே விஜய் ரசிகர்கள் அந்த வீடியோ சி.டி.க்கள் தயாரித்த கட்டிடம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

3 பேர் கைது

அப்போது அந்த வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தலைவா டிவிடிகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பேர்லேண்ட்ஸ் போலீசாருக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் புதுப்பட சி.டி.க்கள் தயாரித்த கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, நடிகர் விஜய் நடித்து இன்னும் வெளியாகாமல் உள்ள தலைவா படத்தை திருட்டுத்தனமாக சி.டி.க்களில் தயாரித்து கொண்டிருந்த கடையின் ஊழியர்கள் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த அருள்பிரபு (36), தர்மபுரியை சேர்ந்த முரளி (28), குமார் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், சி.டி. தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் தலைவா, பட்டத்துயானை, மரியான் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட புதுப்பட சி.டி.க்கள் மற்றும் கவர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

ஆகஸ்ட் 23-ல் ராஜா ராணி இசை - ஜிவி பிரகாஷுக்கு கிடைக்குமா வெற்றி?

சென்னை: ஆர்யா - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ராஜா ராணி படத்தின் இசை வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக வெளியாகிறது.

ஆர்யா நடித்த படங்களிலேயே அதிகபட்ச விளம்பரம் - அதுவும் நயன்தாராவுடன் திருமணம் என்கிற ரேஞ்சுக்கு விளம்பரம் செய்யப்பட்ட படம் ராஜா ராணி.

ஆகஸ்ட் 23-ல் ராஜா ராணி இசை - ஜிவி பிரகாஷுக்கு கிடைக்குமா வெற்றி?

ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

ஏஆர் முருகதாஸின் ஏஆர்எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் இது.

புதுமாப்பிள்ளை ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 23-ல் ராஜா ராணி இசை - ஜிவி பிரகாஷுக்கு கிடைக்குமா வெற்றி?

இந்த ஆண்டு பெரிய பட்ஜெட், முக்கிய இயக்குநர்கள் நடித்த படங்களுக்கு ஜிவி பிரகாஷ்குமார்தான் இசையமைத்தார். இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா படங்களும் இதில் அடக்கம். விஜய் நடித்த தலைவாவுக்கும் ஜிவிதான் இசை.

இந்தப் படங்கள் மற்றும் அவற்றின் இசை பெரிதாக பேசப்படவில்லை. இந்த நிலையில் ராஜா ராணி படத்தின் இசை ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகிறது.

ஆகஸ்ட் 23-ல் ராஜா ராணி இசை - ஜிவி பிரகாஷுக்கு கிடைக்குமா வெற்றி?  

பாடல்கள் இந்தப் படத்தின் பலமாக அமைந்துள்ளதாக தயாரிப்பாளர் ஏஆர் முருகதாஸ் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சென்னை திரும்பியதும் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் முயற்சி

சென்னை திரும்பியதும் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் முயற்சி

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிய பிறகு அவரை சந்திக்க விஜய் தரப்பில் முயற்சி நடந்து வருகிறதாம்.

விஜய்யின் தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் கடந்த 8ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட காரணங்களால் படம் அறிவித்தபடி ரிலீஸாவது கேள்விக்குறியாக இருந்தது. இதையடுத்து விஜய் அவரது தந்தை சந்திரசேகருடன் சேர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கொடநாட்டுக்கு சென்றார். ஆனால் முதல்வரை சந்திக்க முடியாமல் திரும்பினார்.

இதையடுத்து படம் மறுநாள் அறிவித்தபடி ரிலீஸாகவில்லை. இதற்கிடையே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடியாது என கேளிக்கை வரி விலக்கு பரிந்துரை குழு தெரிவித்தது. படம் ரிலீஸாகாத நிலையில் அதன் திருட்டு சிடிக்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார்.

அவர் சென்னை வந்தவுடன் அவரை சந்திக்க விஜய் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு முயன்று வருகிறதாம்.