உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்க முடியாது - விஷ்வ இந்து பரிஷத் மனு தள்ளுபடி!

சென்னை: கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் வழக்கை தள்ளுபடி செய்தது.

விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருப்பவர் எஸ்.ராஜா. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' என்ற திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

HC dismisses Petition against Uthama Villain

அதில், ‘என் உதிரத்தின் விதை' என்று தொடங்கும் பாடலில், ‘வெக்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்' என்ற வரி வருகிறது. இந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது.

இந்து மதத்தில் பசு, மீன், காக்கை, அணில், குரங்கு, மரம் என்று அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை செலுத்தி, அவற்றை வழிபடுவது வழக்கம். இந்து மத கடவுள், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளனர். இவற்றை எல்லாம் அவமதிக்கும் விதத்தில், இந்த பாடல்கள் உள்ளன.

எனவே, இந்த என் உதிரத்தின் விதை என்று தொடங்கும் பாடலில், வெக்கங்கெட்டு என்ற வார்த்தையை நீக்கவேண்டும் என்று திரைபட தணிக்கை வாரியத்தின் தலைவர், தமிழக உள்துறை செயலர் ஆகியோருக்கு கடந்த 6-ந் தேதி புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையில், வருகிற மே 1-ந் தேதி 'உத்தமவில்லன்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 'உத்தமவில்லன்' படத்தை செய்ய முடியாது என்று உத்தரவிட்டு, தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.

 

ரஜினி - ஷங்கர் புதுப்படம்.. மே 15-ல் அறிவிப்பு?

ரஜினி - ஷங்கர் படம் கிட்டத்தட்ட கன்பர்மாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. விசாரித்த வரையில் அத்தனை பேரும் இதை உறுதியாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும் ரஜினி தரப்பிலிருந்து சொல்லும் வரை எதுவும் நமக்கு உறுதியற்ற தகவல்தானே...

இருந்தாலும், கோடம்பாக்கத்தில் உலாவரும் செய்திகளின் தொகுப்பு இது.

Rajini - Shankar movie to announce on May 15?

படத்துக்கு பட்ஜெட் ரூ 250 கோடி என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் லைக்கா மற்றும் அதே அய்ங்கரன்.

தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கிலும் நேரடிப் படமாகவே தயாரித்து பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு முன் தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படம் எந்திரன் 2-ஆ வேறு படமா? என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லை.

காரணம் எந்திரன் 2 என்றால் அது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும். அதற்குள் முடிக்க வேண்டும் என்றால் வேறு கதைதான் என்கிறார்கள்.

இந்தப் படத்தில் நிச்சயம் கமல் ஹாஸன் இல்லை. ரஜினிக்கு இரட்டை வேடம் என்றும், அவருக்கு இணையான வேடத்தில் விக்ரம் நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். வெளிநாடு சென்றிருக்கும் விக்ரம் திரும்பக் காத்திருக்கிறாராம் ஷங்கர்.

இப்போது ரஜினி தீவிர கதை விவாதத்தில் இருப்பதாகவும், வரும் மே 15-ம் தேதி வாக்கில் பட அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.

 

சூர்யா - வெங்கட் பிரபுவின் மாஸ்... முதல் டீசர் வெளியானது!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் மாஸ் திரைபடத்தின் முதல் டீசர் நேற்று இரவு வெளியிடடபட்டது.

இந்த டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. இதில் சூர்யா பல்வேறு தோற்றங்களில் வந்து அசத்துகிறார்.

Surya's Mass Teaser released

மாஸ் படம் திகில் திரில்லர் பழிவாங்கும் கதையை அடிப்படையாக கொண்ட படம் என்பதை தெளிவாக உணர்த்துகிறது இந்த முன்னோட்டக் காட்சி. சூர்யாவுக்கான வசனங்கள் மிகவும் பவர்புல்லாக உள்ளன.

அதன் பின்னணியில் விசுவல் மற்றும் கிராபிக்ஸ் வேலைகளும் அபாரம்.

Surya's Mass Teaser released

வெங்கட் பிரபு அஜித்தை வைத்து எடுத்த படமான மங்காத்தாவில் பயன்படுத்திய 'It's my f***kng game' என்ற வசனத்தை இதிலும் பயன்படுத்தி உள்ளார்.

இந்த முன்னோட்டக் காட்சியில் பிரேம்ஜி அமரன், சந்தானம், நயன்தாரா, பிரனிதா ஆகியோரும் தோன்றுகின்றனர்.

 

இது சின்னத்திரை திரைமறைவுகள்… கம்முன்னு படிங்க

சின்னத்திரையில் தினந்தோறும் திருவிழாதான் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என ஏதாவது ஒன்றை ஒளிபரப்பிப்கொண்டுதான் இருப்பார்கள். எதுவுமே இல்லை என்றாலும் போட்ட நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்வார்கள்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குப் போனவர்கள் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்புவதும். பெரியதிரை நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவதும் வழக்கமான ஒன்றுதான்.

இந்தவார கிசுகிசு இருவரைப் பற்றியும் உள்ளது சும்மா கம்முன்னு படிங்க சரியா.

அடுத்த குடும்பத் தொடர்

இலை தொலைக்காட்சியில் செல்வம் இயக்குநரின் அடுத்த குடும்பத் தொடர் ஆரம்பமாகிவிட்டது. இதுவும் குடும்பத் தொடர்தான். சூரிய தொலைக்காட்சியில் சீரியல் பயணத்தை ஆரம்பித்து இலை தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பயணித்து வரும் செல்வம் இயக்குநருக்கு இன்னமும் சரியாக சினிமா பாதை செட் ஆகவில்லை என்கின்றனர்.

திருட்டுமுழி இயக்குநரின் சீரியல் ஹீரோ அவதாராம்

யுக தொலைக்காட்சியில் பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்திய திருட்டுமுழி இயக்குநர் கம் நடிகர் தற்போது சீரியலில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். காமெடியும் தங்கைகள் சென்டிமென்டும் கலந்த இந்த சீரியல் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

சின்னத்திரைக்கு முழுக்கு போடும் தொகுப்பாளினி

மலையாள தேசத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்த அவர் தமிழில் சூரிய டிவி தொகுப்பாளரை காதல் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். கொஞ்ச நாட்களிலேயே மறுபடியும் தொலைக்காட்சிக்கு வந்தார். ஆனால், தொலைக்காட்சி வாய்ப்புகளைவிட சினிமா வாய்ப்பு அதிகமாக வரவே பெரிய திரைபக்கம் போனார். கணவனும், மனைவியும் இணைந்து தேடியும் சின்னச் சின்ன வாய்ப்புகள்தான் கிடைத்தன. இதனால் மீண்டும் டிவி பக்கம் ஒதுங்கலாமா என்று யோசிக்கும் போது தற்போது தொகுப்பாளினி நாயகியாக நடித்த படத்திற்கு பாராட்டு கிடைத்துள்ளது. அதனால், இனி சின்னத்திரை வேண்டாம், பெரிய திரையே போதும் என்று முடிவெடுத்துள்ளார். ஆனால் தொகுப்பாளரான கணவர்தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வருகிறாராம்.

கடைசியில இவரும் வந்துட்டாரா

தீப்பிடிக்க தீப்பிடிக்க நடனமாடிய அந்த நாயகி தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் சொந்த மொழியான பஞ்சாபி படங்களிலும் நடித்தார். அங்கும் வாய்ப்பு குறையவே இந்திக்குப் போன அவர் பாலிவுட் சீரியல்களில் நடித்தார். அதுவும் அக்கா கதாபாத்திரம்தான் கிடைத்தது. 5 ஆண்டுகள் கழித்து இந்த பாலிவுட் தொடர்கள் டப்பிங் செய்யப்பட்டு மாம்பழ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. விரைவில் நேரடி தமிழ் சீரியலில் இந்த தீ நாயகி தலைகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

நிலநடுக்கம் ஏற்பட்டபோது நேபாளத்தில் சிக்கித் தவித்த நடிகை பூஜா

காத்மாண்டு: நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா நேபாளத்தில் இருந்துள்ளார்.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், பழமையான கட்டிடங்கள், சரித்திர பெருமைவாய்ந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கத்திற்கு இதுவரை 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தான் நேபாளத்தில் இருந்ததாக பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Pooja Mishra in Nepal as the earthquake happens!

இது குறித்து அவர் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,

நிலநடுக்கத்தால் நேபாளமே பீதியில் உள்ளது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து மக்கள் மீது விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

நிலநடுக்கத்தையடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஹோட்டல் நிர்வாகத்தினர் வாடிக்கையாளர்களை அறைகளை விட்டு காலி செய்யுமாறு தெரிவித்துள்ளனர். ஹோட்டல் கட்டிடம் இடிந்துவிடுமோ என்ற பயத்தில் அவ்வாறு தெரிவித்துள்ளனர். மக்கள் தெருக்களிலும், புல்வெளியிலும் தூங்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி பலியான தெலுங்கு நடிகர் கே. விஜய்!

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி தெலுங்கு நடிகர் கே.விஜய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவர் கே.விஜய் (25). இவர் தற்போது எட்டகாரம் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

elugu actor K. Vijay dies in Nepal earthquake

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எட்டகாரம் படக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். ஆனால், படத்தின் நடன இயக்கத்தையும் ஏற்றுக் கொண்ட விஜய், அதற்கான ரிகர்சலில் ஈடுபட்டிருந்தார். எனவே, ரிகர்சலை முடித்து விட்டு தனிக்காரில் சென்றுள்ளார் விஜய்.

அப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அவரது கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக பலியானார். மேலும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கே.விஜய் பலியானதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். உடனடியாக விஜயின் உடலை ஆந்திரா கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் படி அம்மாநில அரசுக்கு தெலுங்கு திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் கிஷன் ஹைதராபாத்தில் கூறுகையில், ‘விஜய் மரணமடைந்திருக்கும் தகவல் வந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது அவர்களின் கார் கவிழ்ந்து இறந்துள்ளார் விஜய். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். உடன் வந்த 3 பேர் காயமடைந்தனர்' என்றார்.

உயிரிழந்த விஜய் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பபட்லாவைச் சேர்ந்தவர்.

 

மே 22ஆம் தேதி வெளியாகிறது 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்'

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' படம் வரும் மே 22-ம் தேதி வெளியாகிறது.

ஜே சதீஷ்குமார், லியோ விஷன்ஸ் மற்றும் 7சி என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்'.

அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார்.

Naalu  Polisum Nalla Irundha Oorum to release on May 22nd

"நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' ஒரு சாதாரண போலீஸ் கதையல்ல, ஒரு பராக்கிரமம் பொருந்திய போலீஸ் பற்றிய கதையும் இல்லை. சோம்பேறித்தனத்தை தவிர வேறேதும் அறியாத நான்கு போலீஸ்காரர்களின் கதை. அரசும், மக்களும் இவர்களை என்ன செய்தனர், இவர்களின் எண்ணத்தில் இவர்கள் வென்றார்களா என்பதை கதை விவரிக்கிறது.

அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' மே 22ஆம்தேதி வெளியாகும்", என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

லிங்குசாமி தயாரிப்பில் சூர்யா நடிக்கும் புதிய படம்

அஞ்சான் படத்துக்குப் பிறகு லிங்குசாமியும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள். இந்த முறை லிங்குசாமி படத்தை தயாரிக்கிறார். இயக்கப் போகிறவர் ஏற்கெனவே நாம் கூறியிருந்த சதுரங்க வேட்டை வினோத்.

லிங்குசாமிக்கும் சரி, சூர்யாவுக்கும் சரி, மறக்க முடியாத படமாக அமைந்தது அஞ்சான் படம். இந்தப் படத்தை விமர்சனம் என்ற பெயரில் கண்டபடி எழுதி நாசப்படுத்தினர் சமூக வலைத் தளங்களில். படத்தை இயக்கிய லிங்குசாமிக்கும் இதில் பெரிய மனவருத்தம்.

Surya joins with Lingusamy again

ஆனாலும் அதிலிருந்து மீண்டு இப்போது லிங்குசாமி இரண்டு புதிய படங்களை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார். சூர்யா இரு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் லிங்குசாமியுடன் இணைகிறார் சூர்யா. இந்த முறை படத்தை லிங்குசாமி தயாரிக்க, இயக்கும் பொறுப்பை சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்குகிறார். இதனை இன்று உறுதிப்படுத்தியுள்ளனர் லிங்குசாமியும் சூர்யாவும்.