அப்பாஸ் - அனுஜா ஐயர்- கார்த்திக் குமார் மோதும் தர்மயுத்தம்!

Abbas Debuts Tv Through Dharmayutha

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள தர்மயுத்தம் சீரியலில் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார் சினிமா நடிகர் அப்பாஸ். இந்த தொடரில் அப்பாஸ் உடன் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

சின்னத்திரைக்கு சினிமா நட்சத்திரங்கள் வருவது புதிய விசயமில்லை. அந்த வரிசையில் சினிமாவில் ஹீரோக்களாக நடித்த அப்பாஸ், கார்த்திக்குமார் ஆகியோர் தர்மயுத்தம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வருகின்றனர். வெவ்வேறு துருவங்களான இரண்டு வழக்கறிஞர்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வித்யாசமான கதைக்களம்தான் தர்மயுத்தம். பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, ஒரு திரைப்படத்திற்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளது

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களான அர்ஜூன் (கார்த்திக்குமார்) ராம்மோகன் (அப்பாஸ்) ஆகிய இரண்டு பிரபல வழக்கறிஞர்கள் தங்களது தொழிலில் போட்டியும், முரண்பாடான கருத்துக்களையும் உடையவர்கள். அவர்கள் சந்திக்கும் வழக்குகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதுதான் கதையின் பின்னணி. இத்தொடரில் அப்பாஸ், கார்த்திக் குமார் உடன் முதல்முதலாக பிரபல திரைப்பட நட்சத்திரங்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரவி ராகவேந்தர், அனுஜா ஐயர், லட்சுமி பிரியா ஆகியோர் சின்னத்திரையில் அறிமுகமாகிறார்கள்.

தர்மயுத்தம் மூலம் ஒரு மெகா தொடரின் ரசனையை புதியதொரு பரிமாணத்திற்கு விஜய் டிவி எடுத்துச்செல்கிறது என்று சொல்லலாம். இந்தத்தொடரை ஏ.எல்.அபினந்திரன் விறுவிறுப்பாகவும், வித்யாசமாகவும், நேர்த்தியாக இயக்கியுள்ளார். தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த பிரபல ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா இந்தத் தொடரின் மூலம் தொலைக்காட்சிக்கு வருகை தருகிறார். திரைப்படத்திற்கு இணையான தயாரிப்பு, சிறந்த திரைக்கதை இயக்கத்துடன் தர்மயுத்தம் தொடர் வரும் ஆக்ஸ்ட் 06 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

தீபிகாவுக்கு பதில் ஸ்ருதியைப் பிடித்த கலாஞ்சலி

Shruti Hassan Endorses Kalanjali   

பிரபல சேலை பிராண்டான கலாஞ்சலி கடந்த சில ஆண்டுகளாக தனது பிராண்ட் அம்பாசிடராக இருந்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை தூக்கிவிட்டு ஸ்ருதி ஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பிரபலமான சேலை பிராண்ட்களில் ஒன்று கலாஞ்சலி. கடந்த சில ஆண்டுகளாக அதன் பிராண்ட் அம்பாசிடராக இருந்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். கலாஞ்சலி புடவைகளில் தீபிகா கம்பீரமாக போஸ் கொடுத்த பிளெக்ஸ் போர்டுகள் பல்வேறு நகரங்களில் பார்த்திருக்கலாம். இனி அந்த விளம்பரத்தில் தீபிகாவை பார்க்க முடியாது.

தீபிகாவுக்கு பதில் ஸ்ருதி ஹாசனை பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்துள்ளது கலாஞ்சலி. ஏற்கனவே ஸ்ருதி ஐஸ்க்ரீம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விளம்பரத்தில் வருகிறார். தெலுங்கு படமான கப்பார் சிங்கின் வெற்றியால் ஸ்ருதிக்கு பட வாய்ப்புகள் மட்டும் அதிகரிக்கவில்லை விளம்பர வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

அவர் ரவி தேஜாவுடன் பல்பு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் பிரபுதேவாவின் இந்தி ரீமேக்கிலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

ஹீரோயின் டிரெய்லர்.. கடுப்பான துபாயில் வசிக்கும் இந்தியர்கள்

துபாய்: கரீனா கபூரின் புதிய படமான ஹீரோயினின் டீசரைப் பார்த்த துபாயில் வசிக்கும் இந்தியர்கள் கடுப்பாகியுள்ளனர். பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கரின் இயக்கத்தில் கரீனா கபூர் நடிக்கும் படம் ஹீரோயின். ஒரு கதாநாயகியின் வாழ்க்கையை பற்றி கூறும் படம். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் ஒரு காட்சியில் கரீனா கபூர் செய்தியாளர்களைப் பார்த்து, நீங்கள் திரைக்கதை எழுத வேண்டும். ஒரு ஹீரோயின் கார் வாங்கினால், அதை அவருக்கு ஒரு தொழில் அதிபர் கொடுத்தார் என்றும், அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்றும், துபாய் சென்றால் விலை மாதுவாகிவிட்டார் என்றும் கூறுகிறீர்கள் என்று டயலாக் பேசுகிறார்.

இதைப் பார்த்த துபாய்வாசிகள் அதெப்படி கரீனா அப்படி வசனம் பேசலாம் என்று கொதித்தெழுந்துள்ளனர்.

இது குறித்து பிரபலமான துபாய் ரேடியோவான 'ரேடியோ ஸ்பைஸ்' நிகழ்ச்சி தொகுப்பாளர் கிரித்திகா ராவத் கூறுகையில், துபாயில் சட்டவிரோத மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் நடப்பதாகக் கூறி பாலிவுட் மீண்டும் துபாயின் இமேஜை கெடுத்துள்ளது. பல பாலிவுட் நட்சத்திரங்கள் இதே துபாயில் தான் வசிக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பெயர் போனது துபாய். அப்படி இருக்கையில் துபாயை தவறான கண்ணோட்டத்தில் காட்டியிருப்பது இயக்குனரின் அறியாமையையே காட்டுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

துபாயைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலம் உமா கோஷ் தேஷ்பாண்டே கூறுகையில், இது 2012ம் ஆண்டு. துபாயில் வேலைபார்க்க இந்தியர்கள் படகுகளில் வந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக துபாயில் வாழும் இந்திய சமுதாயம் தங்களுக்கென்று ஒரு மதிப்பை சம்பாதித்துள்ளது. தங்கள் தாய் நாட்டை பெருமைபடுத்தியுள்ளது.

தீவிரவாதம் மற்றும் விபச்சாரத்துடன் துபாயை இணைத்து பேசுவதை இந்திய படங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் தங்களின் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பாலிவுட்டின் முக்கிய சந்தைகளில் துபாயும் ஒன்று. அதனால் தான் இங்கு இந்திய படங்களின் பிரீமியர் ஷோக்கள் நடக்கின்றன.

பாலிவுட் படங்களை இந்தியர்கள் தவிரத்து அமீரகத்தைச் சேர்ந்தவர்களும் விரும்பிப் பார்க்கின்றனர். துபாயில் பெண்களுக்கு அதிக மரியாதை உண்டு. இது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்றார்.

இந்திய சினிமாவில் மதூர் பண்டார்கரின் சேவையை பாராட்டி கடந்த 2010ம் ஆண்டில் அவர் துபாயில் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் வரும் கதாநாயகி பொய் கதைகள் எழுதுவதை கண்டிக்கும் வகையில் அவ்வாறு கூறியதாக சினிமா ஆர்வலர் சமீர் ஹைதர் தெரிவித்துள்ளார்.

 

ரூ 15.6 லட்சத்துக்கு ஏலம் போன இசைமேதை கிஷோர் குமாரின் கடைசி பாடல்!

Kishore S Last Song Fetches Rs 15 6 Lakh At Auction

மும்பை: காலத்தை வென்ற இசை மேதை, தன் குரலால் இன்னும் இசை ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்கும் மறைந்த கிஷோர் குமாரின் கடைசி பாடல் விரைவில் வெளியாகிறது.

இந்தப் பாடலை சமீபத்தில் ஏலம் விட்டபோது, ரூ 15.6 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். கிஷோர் குமாரின் பிறந்த நாளன்று இந்தப் பாடலை பிரமாண்டமாக வெளியிசத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தி திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவக் கிஷோர்தா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட கிஷோர் குமார். இவரும் ஆர்டி பர்மனும் இணைந்து வழங்கிய பாடல்கள் இன்னும் கேட்கும்போதெல்லாம் மெய்சிலிர்க்க வைப்பவை.

பல ஆயிரம் பாடல்களைப் பாடி, முன்னணி ஹீரோக்களைவிட செல்வாக்காகத் திகழ்ந்தவர் கிஷோர். இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு காட்டியவர்.

புகழின் உச்சத்தில் இருந்தபோது, 1987-ம் ஆண்டில் திடீரென மரணத்தைத் தழுவினார் கிஷோர் குமார். இவர் கடைசியாக பாடிய பாடல், வெளியிடப்படவில்லை. இந்த பாடலுக்கான உரிமையை அரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 'கிங்டம் ஆப் ட்ரீம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றிருந்தது.

கிஷோர் குமாரின் பிறந்த நாள் விழா வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவர் பாடிய கடைசி சினிமா பாடல் நேற்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த பாடல் ரூ.15.6 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்தப் பாடலை விரைவில் வெளியாகும் ஜூம்ரோ படத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

 

யுகம் - சினிமா விமர்சனம்

Yugam Movie Review   

நடிப்பு: ராகுல் மாதவ், தீப்தி, சூப்பர் குட் லட்சுமணன், ரவி மரியா
இசை: பொன்ராஜ்
இயக்கம்: பவன் சேகர்
தயாரிப்பு ACE என்டர்டெயின்மெண்ட்

புதுமுகங்களின் நடிப்பில், ஆக்கத்தில் வந்துள்ள படம் த்ரில்லர் படம் யுகம்.

படத்தின் பட்ஜெட் போலவே கதையும் சின்னதுதான்...

பெற்றோரை எதிர்த்து, மனதுக்குப் பிடித்த ராகுல் மாதவை மணக்கிறார் தீப்தி. ரொமான்சும் சிரிப்புமாக சந்தோஷமாகச் செல்கிறது புதுமண வாழ்க்கை.

ஒரு நாள் தீப்திக்கு ஒரு பெண்ணிடமிருந்து போன்கால் வருகிறது. அவளைக் கொன்றுவிட்டு, தன்னை மணக்க மாதவ் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறது அந்தக் குரல். பலவித சம்பவங்களை யோசித்து யோசித்து, கடைசியில் அந்தக் குரலை நம்பி கணவனைச் சந்தேகிக்கிறார் தீப்தி.

அன்று இரவே அவள் கணவனுக்கும் ஒரு போன் கால் வர, அப்போதிலிருந்து அவன் முகமும் போக்கும் மாறிப் போகிறது.

ஏன் இப்படி... அந்த மர்மக் குரல்கள் யாருடையவை?

ஒரு நாள் இவர்கள் வீட்டுக்கு புதிய ஷோகேஸ் பொருத்த வருகிறார்கள் நான்கு பேர். அவர்களில் ஒருவன் விளையாட்டாக தீப்தியை இடிக்க, அவர் உடனே அவன் கன்னத்தில் பளார் விட, அந்த கோபத்தை இப்படி போன்காலில் காட்டிவிடுகிறான் அந்த பணியாளன்.

இந்த உண்மையைச் சொல்லி கணவன் மனைவியிடம் மன்னிப்பு கேட்க வருவதற்குள் ஏக விபரீதங்கள்...

யோசிக்கும் போது சுவாரஸ்ய முடிச்சாகத் தெரியும் இந்தக் கதையை, அதே சுவாரஸ்யத்துடன் சொல்லத் தவறியிருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ் கதை. ஆனால் கொஞ்சமும் லாஜிக் இல்லை. ஏதோ ஒரு போன்கால் வருகிறது என்றால், அது யாராக இருக்கும் என்று கூட யோசிக்காமல் கணவன் - மனைவி சந்தேகம் கொள்வது நம்பும்படி இல்லை.

புதுமுகங்கள் என்றாலும் ஹீரோ ராகுல் மாதவ் நன்றாக நடித்திருக்கிறார். நல்ல களையான முகம். சந்தேகப்படும்போது இயல்பான நடிப்பு.

தீப்தியும் நடிக்க முயன்றிருக்கிறார். அழும்போது ப்ளஸ் டூ பெண் போல தெரிகிறார்.

முதல் பாதியிலும் மறுபாதியிலும் வரும் சூப்பர் குட் லட்சுமணன் அண்ட் கோவின் காமெடியை இன்னும் நன்றாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.

பொன்ராஜின் இசையில் இரண்டு பாடல்கள். இரண்டையுமே கொடைக்கானலில் மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். ஒரு பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

-எஸ்எஸ்

 

பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்யும் ஆமீர் கான்

Aamir Khan Do Farming His Ancestral Land   

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது சொந்த ஊரான ஷாபாத்தில் 22 வீடுகளை வாங்கியுள்ளார். வரும் காலத்தில் அந்த இடத்தில் விவசாயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஆமீ்ர் கான் உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம் ஷாபாத்தைச் சேர்ந்தவர். ஆனால் தொழில் காரணமாக மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவரது பெரியப்பா நசீர் ஹுசைன் மற்றும் சில உறவினர்கள் தங்கள் வீடுகளை விற்க முயயற்சிக்கின்றனர் என்ற செய்தி ஆமீரின் காதுக்கு வந்தது. பூர்வீக சொத்துக்கள் வேறு யாருக்கோ செல்வதைவிட தானே வாங்கிவிடலாம் என்று அவர் முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் தனது உறவினர்களின் 22 வீடுகளை அண்மையில் வாங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இந்த வீடுகளை வாங்கியது சென்டிமென்ட்டானது. நான் எனது சொந்த ஊரான ஷாபாத்தில் மிகக் குறைவான நாட்களே இருந்துள்ளேன். எனது உறவினர்கள் தங்கள் வீடுகளை விற்க முடிவு செய்துள்ளது பற்றி கேள்விப்பட்டதுடன் அதை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று அவர்களிடம் தெரிவித்தேன். நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன், இப்பொழுதும் கூறுகிறேன் நான் வருங்காலத்தில் விவசாயம் செய்யவிருக்கிறேன். நான் தற்போது வாங்கியுள்ள நிலம் விவசாயத்திற்கு உகந்தது. நான் ஷாபாத்திற்கு சென்று விவசாயம் செய்வேன்.

எங்களின் பூர்வீக வீட்டில் எனது தாய் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒன்றாக வாழ ஆசை. ஆனால் இது எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை. எனது சகோதரர் மற்றும் சகோதரிகளின் பிள்ளைகளும் எங்களுடன் வந்து தங்கலாம் என்றார்.

 

இந்த வார ரிலீஸ்... மிரட்டல், மதுபானக் கடை, யுகம் & ஆசாமி!

03 08 2012 Friday New Releases

இந்த வாரம் நான்கு நேரடி தமிழ் படங்கள் வெளியாகின்றன. மிரட்டல், ஆசாமி, மதுபானக்கடை மற்றும் யுகம் ஆகியவைதான் அந்த நான்கு படங்கள்.

இவற்றில் மிரட்டல் மற்றும் மதுபானக்கடை இரண்டும் ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் என்ற பெயரில் நேற்றே வந்துவிட்டன.

மிரட்டல் படத்தை மாதேஷ் இயக்கியுள்ளார். வினய், பிரபு, சந்தானம், சர்மிளா நடித்துள்ள இந்தப் படம், ஒரு தெலுங்கு ரீமேக். மீடியா ஒன் குளோபல் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை ப்ரவீண் மணி.

நேற்று வெளியான இன்னொரு படம் மதுபானக் கடை. சின்ன பட்ஜெட் படம்தான். குடிகாரர்களுக்காக குடிகாரர்களால் உருவாக்கப்பட்ட படம் என்ற அறிவிப்புடன் வந்துள்ள மதுபானக் கடை படத்தின் இயக்குநர் கமலக் கண்ணன். பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

யுகம்...

இன்று வெளியாகும் இரு படங்களில் ஒன்று யுகம். யாரோ ஒருவன் போகிற போக்கில் பண்ணும் இரு போன்கால்கள் கணவன் - மனைவியைப் பாடாய் படுத்தும் கதை. புதுமுகங்கள் ராகுல் மாதவ், தீப்தி ஹீரோ ஹீரோயின்கள். பொன்ராஜ் இசையமைத்துள்ளார். மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் பவன்சேகர் இயக்கியுள்ளார்.

ஆசாமி

போலிசாமியார்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் இந்த ஆசாமி. கடந்த வாரமே பத்திரிகையாளர்களுக்கு காட்டிவிட்டாலும், இந்த வாரம்தான் வெளியிடுகின்றனர். படத்தில் பீரடித்துவிட்டு குறிசொல்லும் போலிச்சாமியார்களில் ஒருவராக ஷகிலா நடித்துள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அம்மன் பாட்டுக்கு, பத்திரிகையாளர் காட்சியில் படம்பார்த்த படக்குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலருக்கே சாமி வந்து ஆடினர்!

இந்த நான்கு படங்கள் தவிர, இந்தியில் பெரும் பரபரப்பு கிளப்பியுள்ள ஜிஸ்ம் 2-ம் அதிக அரங்குகளில் வெளியாகிறது சென்னை நகரில்.

ஹாலிவுட்டின் பிரமாண்ட வெளியீடான டோடல் ரீகாலும் இன்றுதான் வெளியாகிறது.

 

ரஜினியின் பஞ்ச் வசனங்கள் - அத்வானி பாராட்டு மழை!

Advani Hails Rajini S Paunch Dialoges

சென்னை: ரஜினியின் 'பஞ்ச் வசனங்கள்' மிகவும் அர்த்தமுள்ளவை, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை என பாஜக தலைவர் எல்கே அத்வானி புகழ்ந்துள்ளார்.

ரஜினியின் 'பஞ்ச்' வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ஆரம்ப காலத்திலிருந்தே ஒவ்வொரு படத்திலும் 'பஞ்ச்' வசனங்கள் இடம் பெற்று வருகின்றன.

அவரது ஆரம்ப காலப் படம் 'அவர்களி'ல் கூட பல பஞ்ச் டயலாகுகள் டம்பெற்றிருக்கும்.

'பாட்ஷா' படத்தில் வரும் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி வசனமும், படையப்பா படத்தில் வரும் என் வழி தனி வழி வசனமும், அண்ணாமலை படத்தில் இடம் பெறும் நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன் வசனமும் ரசிகர்கள் மனதில் கல்வெட்டுகளாய் நிலைத்துவிட்டன.

முத்து படத்தில் அவர் பேசும் 'நான் எப்ப வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்' என்ற வசனம் அவரது அரசியல் பிரவேசத்தை பறைசாற்றுவது போல் இருப்பதாக பேசப்பட்டது. இன்றும் அவர் தொடர்பான பல நிகழ்வுகளுக்குப் பொருத்தமான வசனமாகப் பார்க்கப்படுகிறது.

இதுபோல் ரஜினி படங்களில் அவர் பேசும் பஞ்ச் வசனங்களை தொகுத்து ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அதற்கு ரஜினியின் 'பஞ்ச் தந்திரம்' என பெயரிட்டுள்ளனர். பஞ்ச் வசனங்ளை பிசினஸ் மற்றும் நிர்வாகவியல் பாடங்களுடன் இணைத்து இப்புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.

குறிப்பாக, 'பார்த்து வேலை செய்யுங்கள். பார்க்கும் போது வேலை செய்யாதீர்கள்' என்ற ரஜினியின் பஞ்ச் வசனத்தை குறிப்பிட்டு பணியாட்கள் சுய உந்துதலால் பணிகளை செய்ய வேண்டும், மற்றவர்கள் பார்க்கிறார்களே என்பதற்காக மட்டும் வேலை செய்யக் கூடாது போன்ற விளக்கங்களைத் தந்துள்ளனர்.

இந்த புத்தகத்தை பாரதீய ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி படித்து பாராட்டியுள்ளார். அவர் ப்ளாக்கில் இதுகுறித்து எழுதியுள்ளதாவது:

நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினியை மையமாக வைத்து எழுதப்பட்ட சுயமுன்னேற்றம் பற்றிய 124 பக்கங்கள் கொண்ட நூலை படித்தேன். இந்த நூலின் பெயர் 'ரஜினி பஞ்ச் தந்திரா'. நூலின் பெயரை படிக்கும் போது பஞ்ச் தந்திரா என்ற வார்த்தையில் யு-க்கு பதில் ஏ போட்டுள்ளனர். ஒருவேளை ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்து விட்டார்களோ என்று நினைக்க வேண்டாம். உண்மையில் அதை வேண்டுமென்று தான் செய்துள்ளனர். இது மிகவும் பொருத்தமாக உள்ளது.

ரஜினிகாந்த் தனது படங்களில் பேசிய முப்பது பஞ்ச் வசனங்கள் பற்றிய அலசல் இந்த நூல். அந்த பஞ்ச் வசனங்களில் இருந்து நாம் பெறக்கூடிய பிசினஸ் மற்றும் நிர்வாகவியல்களை அழகாக விளக்கியுள்ளனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நடிகர் எம்ஆர்கே மரணம்

Actor Mrk Passes Away

சென்னை: நடிகர் எம்ஆர்கே இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 500-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்தவர் எம்ஆர்கே. சீரியல்களிலும் நடித்துள்ளார். அவரது இயற்பெயர் எம்ஆர் கிருஷ்ணமூர்த்தி.

இவர் நடிப்பில் வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன், பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ரஜினியின் தர்மத்தின் தலைவன், அருணாச்சலம் போன்ற படங்கள் புகழ்பெற்றவை.

கமலுடன் மகராசன் படத்தில் நடித்துள்ளார். விக்ரமுடன் சாமி, தில் படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ரீதரின் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். வி கோபாலகிருஷ்ணன், செந்தாமரை ஆகியோரின் நாடகக் குழுக்களில் முக்கியப் பங்காற்றியவர் எம்ஆர்கே.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாகிவிட்ட எம்ஆர்கே, இன்று பிற்பகல் மரணமடைந்தார்.

அவரது மனைவி கடந்த 2008-ம் ஆண்டு இறந்துவிட்டார். மகன்- மகள், பேரன் பேத்திகள் உள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி பேயாழ்வார் தெருவில் உள்ள அவரது வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.

 

ராஜேஷை காதலிப்பது உண்மைதான்... ஆனால் கல்யாணம்? - இழுக்கும் மீராஜாஸ்மின்

Yes I M Love With Rajesh Meera Jasmine

சென்னை: மாண்டலின் ராஜேஷைக் காதலிப்பது உண்மைதான். ஆனால் திருமணம் பற்றி இருவரும் இன்னும் யோசிக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் கூறினார்.

மேலும், தனக்கும் ராஜேசுக்கும் திருப்பதி கோவிலில் ரகசிய திருமணம் நடந்ததாக வந்த செய்தி பற்றி பதில் கூற விரும்பவில்லை, என்றும் அவர் தெரிவித்தார்.

மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ், 'பாலோவிங் மை ஹார்ட்' என்ற பெயரில் உருவாக்கிய இசை-வீடியோ ஆல்பத்தை நேற்று கமல்ஹாஸன் வெளியிட்டார்.

இந்த ஆல்பத்தில் ராஜேஷும் அவருடைய காதலி மீராஜாஸ்மினும் நடித்துள்ளனர்.

இந்த விழாவுக்கு மாண்டலின் ராஜேசும், மீராஜாஸ்மினும் ஜோடியாக வந்திருந்தார்கள்.

விழாவில் ராஜேஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கால்களில் விழுந்து ஆசி பெற்றார் மீரா ஜாஸ்மின்.

விழா முடிந்ததும், மீராஜாஸ்மின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: படங்களில் நடித்துக் கொண்டிருந்த நீங்கள், இசை ஆல்பத்தில் நடித்து இருக்கிறீர்களே, ஏன்?

பதில்: இது, சவாலான ஆல்பம். எனக்கு தெரிந்து இதுபோன்று ஒரு ஆல்பம் உருவானதில்லை. அதனால்தான் நடித்தேன்.

கேள்வி: தமிழில் ஒரு படம் கூட உங்கள் கைவசம் இல்லை. மலையாளத்திலும் ஒரே ஒரு படம் மட்டும் நடிப்பதாக கேள்விப்பட்டோம். பட எண்ணிக்கையை குறைத்துக் கொண்டது ஏன்?

பதில்: நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை போய் விட்டது. ஒரு சில படங்கள் மட்டும் நடித்தால் போதும். நல்ல கதை, கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். தமிழில் எனக்கு ஒரு படம் கூட இல்லை என்பது உண்மைதான். மலையாளத்தில், 'லிசமயோட வீடு' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறேன். இது, அரசியல் கலந்த கதை. என் கதாபாத்திரத்தை சுற்றியே கதை நிகழ்கிறது.

கேள்வி: உங்களுக்கும், மாண்டலின் ராஜேசுக்கும் திருப்பதியில் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக பரபரப்பான தகவல் வெளியானதே?

பதில்: இப்போது அதுபற்றி பேச விரும்பவில்லை.

கேள்வி: உங்களுக்கும், ராஜேசுக்கும் உள்ள உறவு பற்றி சொல்லுங்கள்?

பதில்:- நானும், ராஜேசும் அளவுக்கு அதிகமாக, ரொம்பவும் காதலிக்கிறோம். திருமணம் பற்றி முடிவு எடுக்கவில்லை,'' என்றார்.

இவ்வாறு மீராஜாஸ்மின் கூறினார்.

 

மலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதி!

Actor Thilagan Hospitalised

திருச்சூர்: நுரையீரல் பாதிப்பு காரணமாக பிரபல மலையாள நடிகர் திலகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் திலகன், சில நாட்களுக்கு முன் பாலக்காடு அருகே நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் வாணியங்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, நடிகர் திலகன் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

'ஆஸ்கரைவிட உயர்ந்த ரஜினியின் பாராட்டு!' - நடிகர் சுதீப் பெருமிதம்

Rajini S Wish Is More Than Oscar Says Sudeep   

நான் ஈ படத்துக்காக ரஜினியிடமிருந்து எனக்குக் கிடைத்த பாராட்டு ஆஸ்கரை விட உயர்ந்தது என்று கூறியுள்ளார் முன்னணி கன்னட நடிகர் சுதீப்.

பதினைந்து ஆண்டுகளாக கன்னடத்தில் நடித்து வரும் சுதீப் நடித்துள்ள முதல் நேரடி தமிழ்ப் படம் நான் ஈ. தமிழை பிழையின்றி நன்றாகவே பேசுகிறார் சுதீப்.

சமீபத்தில் நான் ஈ படத்தின் வெற்றியைக் கொண்டாட நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்காக சென்னை வந்திருந்தார் சுதீப்.

தன் அறிமுக தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து, நெகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும் அடைந்துள்ள சுதீப், அதற்காக தன் மனதில் ஆழத்திலிருந்து நன்றி சொல்வதாக் கூறினார்.

கன்னடத்தின் மிகப் பெரிய நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்திலிருக்கும்போது, நான் ஈ படத்தின் எதிர்மறை நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டது எப்படி? என்ற கேட்டதற்கு, "நான் இந்தப் படத்தின் கதையைப் பார்க்கவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு நான்கு வரியில் இந்தப் படத்தின் கதையைச் சொல்லிவிட்டார் இயக்குநர் ராஜமௌலி. அந்தக் கதை என்னை ஈர்க்கவும் இல்லை. ஆனால், இவருடன் பணியாற்ற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை, இந்தப் படத்தை ஒப்புக் கொள்ளவைத்தது. இன்னொன்று, அவர் எந்தக் கதையை சொன்னாலும் அவர் அதை எடுக்கும் விதம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பினேன்," என்கிறார் சுதீப்.

அடுத்தடுத்து தமிழ்ப் படங்கள் பண்ணுவீர்களா...?

"இல்லை என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். ஆனால் இப்போதைக்கு நான் ஈ படத்தின் வெற்றியை அனுபவிக்கும் மனநிலையில்தான் இருக்கிறேன். காரணம், நான் ஈ, ஈகா இரு படங்களுக்கும் நான் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாகப் பட்ட கஷ்டம் அப்படி. அத்தனை காட்சிகளையும் தமிழ் - தெலுங்கு என மாற்றி மாற்றி எடுத்தபோது, மனதளவில் பெரிய பாதிப்பை உணர்ந்தேன். அதிலிருந்து வெளியில் வர கொஞ்சம் அவகாசம் வேண்டும்," என்றவர், தன் வாழ்க்கையின் ஆஸ்கர் விருதினைப் பெற்றுவிட்டதாக அறிவித்தார்.

"சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்னைப் பாராட்டிவிட்டார். அது ஆஸ்கர் விருதை விட மேலானதாக நான் கருதுகிறேன்.

நான் ஈ வெற்றிக்குப் பிறகு, ஒரு நாள் நானும் கன்னட திரையுலகில் என் நண்பர் ரவிச்சந்திரனும் ஓய்வாக பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு போன்கால் வந்தது ரவிச்சந்திரனுக்கு. உடனே அவர், 'உன்னிடம் ஒருவர் பேச வேண்டும் என்கிறார்.. பேசு' என்றார்.

நான் உடனே யாராக இருக்கும் என்ற யோசனையுடன் போனை வாங்கி, காதில் வைத்தேன். எதிர்முனையில் அவர் குரல். கன்னடத்தில் மிக உற்சாகமாக, 'உன்னால என் தூக்கமே போச்சுப்பா..' என ஆரம்பித்தார். என்னால் நம்ப முடியவில்லை. அவராகத்தான் இருக்குமா? அல்லது யாராவது அவர் குரலில் பேசி நம்மை கலாட்டா செய்கிறார்களா...

'நீங்க ரஜினி சாரா' என்று கேட்க முடியுமா என்ன? கொஞ்சம் தயக்கத்துடன்தான் பேசினேன். ரஜினி சார்தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டேன். 'இதுவரைக்கும் வில்லனா நடிக்கிறதுல நான்தான் நம்பர் ஒன்னுன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். நீங்க என்னை மிஞ்சிட்டீங்க... வெல்டன்," என்று அவர் பாராட்டினப்போ, நான் இந்த உலகத்திலேயே இல்லை. என்னைப் பொருத்தவரை, அவர் பாராட்டு எனக்குக் கிடைச்ச ஆஸ்கர் விருது. ஏன் அதைவிட மேலானது. அவருடைய டைரில என் போன் நம்பரும் ஏறிடுச்சி என்பதே எத்தனை பெருமையானது...," என்றார் உணர்ச்சி ததும்ப.

 

நல்லவளாக நடிப்பது ரொம்ப ஈஸி: சினேகா நம்பியார்

Serial Actor Sneka Nambiyar

சன் தொலைக்காட்சியில் செல்லமே தொடரில் நடித்து வருபவர் சிநேகா நம்பியார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி தன்னுடைய அமைதியான அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சிநேகா நம்பியார். சிறுவயதில் இருந்து சினிமாத்துறையில் நடித்துவரும் சிநேகா தன்னுடைய சீரியல் பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

சொந்த ஊர் பெங்களுரூ. என் அப்பா, அம்மா பெங்களூருவில்தான் இருக்கிறார்கள். நான் பதினோராம் வகுப்பு படிக்கும் பொழுதே கன்னட சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். நிறைய கன்னட தொடர்களில் நடித்திருக்கிறேன். அதிலிருந்து தெலுங்கு இண்டஸ்ட்ரியில் வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் தொடர்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஸேன் மீடியாவின் "அகல்யா' தொடரில்தான் அறிமுகம் ஆனேன்.

தமிழில் நடிக்க வந்தவுடனேயே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் கணவர் குடும்பத்தினர் சென்னையை சேர்ந்தவர்கள். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் மாமியார், மாமனார், என் கணவர் என எல்லாருமே கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். கணவர் குடும்பத்தினர் அளிக்கும் சப்போர்டில்தான் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன்.

செல்லமே தொடரில் ராதிகா மேடம்கூட சேர்ந்து நடிப்பது இரட்டிப்பு சந்தோஷமா இருக்கிறது. படப்பிடிப்பில் பார்த்தால் ஒரு குடும்பமாக ஜாலியா இருக்கும். அதில் வருவது போன்று ஒரு பாந்தமான கேரக்டரில் நான் இதுவரை வேறு எந்த தொடரிலும் செய்யவில்லை. கடந்த சில நாட்களாக என் டிராக் அவ்வளவாக வரவில்லை. மற்றபடி இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப நல்ல அனுபவம்.

சீரியலில் நல்லவளாக ஈசியா நடித்து விடலாம்.ஆனால் வில்லியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. வில்லத்தனமான கேரக்டர் தான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும். அதே சமயம் பாஸிட்டீவ் ரோல் வழக்கமான கேரக்டராக இருந்தாலும் ரசிகர்களின் அனுதாபமும் ஆதரவும் நமக்கு நிறைய கிடைக்கும். அதனால ஒரே மாதிரியான கேரக்டராக இல்லாமல் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். ஒரு தொடரில் நெகட்டீவ் என்றால் அடுத்த தொடரில் பாஸிட்டீவாக நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. என் குடும்பத்தினரின் விருப்பமும் அதுதான் என்று கூறிவிட்டு ஷூட்டிங் செல்ல தயாரானார் சிநேகா.

 

பிபாஷாவை விட சன்னிதான் சூப்பர்ணா... புளகாங்கிதமடையும் டினோ மோரியா!

Dino Morea Says Sunny Leone Hottter Than Ex Flame Bips    | சன்னி லியோன்  

மும்பை: சன்னி லியோனின் படு பாதாள கவர்ச்சியால் தியேட்டர் திரைகள் எல்லாம் பற்றி எரியப் போகின்றன. அதேபோல பாலிவுட் நடிகைகளுக்கிடையே பெரும் புகைச்சலையும் ஏற்படுத்தப் போகிறார் சன்னி. சன்னியைப் பற்றியும், அவரது கவர்ச்சியைப் பற்றியும் டினோ மோரியா வாயாரப் பாராட்டித் தள்ளியுள்ளார். அத்தோடு நில்லாமல் தனது முன்னாள் காதலியான பிபாஷா பாசுவையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

கனடா நாட்டைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான சன்னி, பேசிக்கலி ஒரு ஆபாசப் பட நடிகை. ஆனால் அவரது நேரம் நன்றாக இருக்கப் போய் இப்போது பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக புரமோட் ஆகி விட்டார். அவரது நடிப்பில், அல்ல, அல்ல... கவர்ச்சி கதகளியில், ஜிஸ்ம் 2 என்ற பாலிவுட் படம் உருவாகியுள்ளது. படம் முழுக்க குண்டக்க மண்டக்க டிரஸ்ஸில்தான் வருகிறாராம் சன்னி.

இந்த நிலையில் ஜிஸ்ம் 2 படத்தில் சன்னி லியோனின் நடிப்பை அப்படத்தின் தயாரிப்பாளரான டினோ மோரியா வெகுவாகப் புகழ்ந்துள்ளார். நடிப்பை விட சன்னியின் கவர்ச்சிக்குத்தான் அவர் ஏகப்பட்ட ஓட்டுக்களைப் போடுகிறார்.

பிபாஷா பாசுவை விட சன்னிலியோன்தான் கவர்ச்சியில் நம்பர் ஒன் என்று கூறியுள்ளார் டினோ.

இது புதிய புயலைக் கிளப்பியுள்ளது. உண்மையில், ஜான் ஆப்ரகாமைப் பார்ப்பதற்கு முன்பு டினோவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் பிபாஷா. முதலாவது ஜிஸ்ம் படத்தின் போதுதான் டினோவுக்கும், பிபாஷாவுக்கும் காதல் தீ பற்றிக் கொண்டு கொழுந்து விட்டு எரிந்தது. அப்போதுதான் ஜான் உள்ளே புகுந்து தண்ணீர் ஊற்றி அணைத்து பிபாஷாவைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டார்.

இப்போது ஜானையும் பிரிந்து பிபாஷா தனிமையில் உழன்று கொண்டுள்ள நிலையில் ஜிஸ்ம் 2 பட நாயகி சன்னியப் புகழ்ந்து தள்ளி பிபாஷாவின் வெந்த புண்ணில் வெந்நீரை ஊற்றியுள்ளார் டினோ...

பிபாஷா நீங்க ஏதாவது சொல்லுங்க!

 

அழகான அம்மா வில்லி அம்மாவாக மாறியது ஏன்?

Young Mother Lakshmi Plays Negative Role On Serial

சினிமாவில் அழகான அம்மாக்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தை போக்கவந்தவர்கள் சரண்யா பொன்வண்ணனும், லஷ்மி ராமகிருஷ்ணனும்தான். குரலும், உருவமும் பாந்தமாய் பொருந்த சினிமாவில் அம்மாக்கள் வரிசையில் செட் ஆகிவிட்டார் லஷ்மி. சிறுவயதில் மிஸ். கோயம்புத்தூர் பட்டம் பெற்றிருந்தாலும் சினிமாவில் நடிப்பதை விட இயக்குநர் ஆகவேண்டும் என்பதை லட்சியமாகக்கொண்டு சினிமாத்துறைக்கு வந்தவர் இவர். குறைந்த பட்ஜெட்டில் ஆரோகணம் என்ற திரைப்படத்தையும் இயக்கிவிட்டார்.

சினிமாவில் நடித்தாலும் விளம்பரப்படங்கள், சீரியல் என அனைத்தையும் ஒரு கை பார்த்துவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘அவள்' சீரியலில் மகளுக்கும், அம்மாவிற்கும் இடையே நடைபெறம் போட்டிதான் கதை. அதில் வில்லத்தனம் செய்யும் அம்மாவாக நடித்துள்ளார் லஷ்மி. அவருடைய கேரக்டருக்கு நெகடிவ் ரோல் புதிது என்பதால் சிரமமாக உள்ளதாக கூறியுள்ளார் லஷ்மி.

 

தென்னிந்திய நாயகிகளை பாடாய்ப்படுத்தும் பாலிவுட் மோகம்

Fate South Indian Heroines Bollywood

மும்பை: வட இந்திய நடிகைகளின் ஆட்சி தென்னிந்திய திரையுலகில் நடக்கையில் இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்றவர்களின் நிலையை சற்று அலசிப் பார்ப்போம்.

கோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த அசின் சூர்யாவுடன் இணைந்து நடித்த கஜினி இந்திக்கு போனது. இந்தியில் சூர்யாவுக்கு பதில் ஆமீர் கானை நடிக்க வைத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நாயகியாக அசினையே மீண்டும் தேர்வு செய்தார். அந்த படம் சூப்பர்டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அசினுக்கு கோலிவுட் கசந்து பாலிவுட் இனித்தது.

இதையடுத்து சல்மான் கானுடன் சேர்ந்து அவர் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் ஓரளவுக்கு ஓடியது. மீண்டும் அவருடன் சேர்ந்து நடித்த ரெடி சூப்பர் ஹிட்டானது. அண்மையில் வெளிவந்த ஹவுஸ்புல் 2வும் ஹிட்டானது.

இத்தனை ஹிட் கொடுத்தாலும் அசினைக் கொண்டாட அங்கே ஆளில்லை. நான் ஹிட் நடிகை என்று பாவம் அவரே சொல்லிக் கொண்டு திரிகிறார். அவரைக் கண்டால் பாலிவுட் நடிகைகளுக்கு ஏதோ காமெடி பீஸைப் பார்ப்பது போன்று உள்ளது என்று முன்பு செய்தி வெளியாகி இருந்தது. இந்த விஷயம் அவருக்கு தெரியுமோ என்னமோ?

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து லக் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் அவர் நடிகையாக ஆனார். ஆனால் லக் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இதையடுத்து பொட்டியைக் கட்டிக் கொண்டு தமிழுக்கு வந்த அவர் சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு ஹிட்டானது. இதற்கிடையே தெலுங்குப் பக்கம் போன அவரின் படங்கள் ஓடாமல் இருந்தன. அப்போது தான் கப்பார் சிங் வெளியாகி கண்டமேனிக்கு ஓடியுது. இதையடுத்து ஸ்ருதிக்கு தெலுங்கிலும் கிராக்கி அதிகரித்தது.

தனுஷுடன் 3 படத்தில் நடித்து முடித்ததோடு மூட்டையைக் கட்டிக் கொண்டு மும்பைக்கு போய்விட்டார். அவரையும் பாலிவுட் மோகம் விடவில்லை. இந்தி படங்களில் வாய்ப்பு தேடுகிறார்.

காஜல் அகர்வால்

ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு நடிகர்களிடம் காஜல் பெயரைச் சொன்னால் சமத்துப் பொண்ணு என்பார்கள். ஹீரோ லேட்டா வந்தாலும் கூட எத்தனை மணிநேரமானாலும் காத்திருந்து நடித்துக் கொடுப்பவர்.

தெலுங்கில் பெரிய நடிகையான காஜல் தற்போது தமிழில் விஜய், சூர்யா, கார்த்தியுடன் நடிக்கிறார். இதற்கிடையே சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் நடித்தார். படம் என்னமோ ஹிட் தான். ஆனால் காஜலைத் தான் திரும்பிப் பார்ப்பார் யாருமில்லை.

வாய்ப்பு கொடுக்கவும் யாரும் வரவில்லை. இதையடுத்து அவர் மும்பையில் நடக்கும் பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொள்கிறார். அப்படியாவது யாராவது பாலிவுட் இயக்குனர் வாய்ப்பு தர மாட்டாரா என்ற நப்பாசை தான்.

இலியானா

இவர் கதை பெரும் கதை. ஆனால் அதை சுருக்கமாக சொல்கிறோம். தெலுங்கில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி கொடி கட்டிப் பறக்கும் இலியானாவையும் பாலிவுட் மோகம் வி்ட்டு வைக்கவில்லை.

அவரும் நல்ல நாள் நேரம் பார்த்து மும்பைக்கு போனார். பர்பி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தின் நாயகன் ரன்பிர் கபூர். ஆனால் படத்தில் பாலிவுட் ராணி பிரியங்கா சோப்ராவும் உள்ளார். அப்பொழுது யாருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். இநத படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. ஆனால் இந்த படம் இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போனது. இலியானாவின் முதல் இந்தி படத்தை சீக்கிரம் வெளிவர விடாமல் பிரியங்கா தான் இழுத்தடிக்கிறார் என்று பேச்சு அடிபட்டது.

இதற்கிடையே பிரியங்காவுக்கும், இலிக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட்டது. ஆனால் நாங்கள் எல்லாம் தோழிகளாக்கும் என்று ஒரு போட்டோவை எடுத்து வெளியிட்டார்கள். போட்டோவைப் பார்த்து மக்கள் ஏமாந்துவிடுவார்களா என்ன. இத்தனையும் தாண்டி ஒரு வகையாக பர்பி வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு தான் இலியானாவின் பாலிவுட் பயணம் தொடருமா, புஸ்ஸாகுமா என்று தெரியும்.

த்ரிஷா

பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் த்ரிஷாவுக்கும் பாலிவுட் பக்கம் போக வேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து பிரியதர்ஷனின் கட்டா மீட்டா என்ற படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்தார். அந்த படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.

அந்த படத்தைப் பார்த்த இந்தி ரசிகர்கள் த்ரிஷாவைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்று தெரியாது. ஆனால் தமிழ் ரசிகர்களோ இந்த உப்பு சப்பில்லாத கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் பாலிவுட் போனாருக்கம் என்றார்கள். அந்த படத்திற்குப் பிறகு வேறு ஏதாவது இந்திப் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே. அண்மையில் மூத்த நடிகரான சஞ்சய் தத்துடன் நடிக்க அழைத்தார்கள்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி அந்த வாய்ப்பை தட்டிக்கழித்தார். உண்மையிலேயே கால்ஷீட் பிரச்சனை தான் காரணமா?