நடைபயிற்சி நல்லது- குடும்பத்துடன் வாக்கிங் செல்லும் தல

சென்னை: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் அஜித் என்ன செய்தாலும் அது செய்தியாகிவிடுகிறது. சில வருடங்களாக எந்த பத்திரிகைகளுக்கும் பேட்டி அளிப்பதில்லை, சினிமா சம்பந்தமான எந்தவித விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அவ்வளவு ஏன் தான் நடிக்கின்ற படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை.

Ajith Spend Time  With  Family

எனது வேலை நடிப்பது மட்டுமே அதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். ஆனாலும் நாள்தோறும் அஜித்தைப் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வரத் தவறுவதில்லை. அஜித் பிரியாணி செய்து தந்தார், அஜித் இயல்பாக இருக்கிறார், இயல்பாக நடிக்கிறார் நடக்கிறார் போன்ற செய்திகளில் புதிதாக அஜித் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்கிறார் என்ற தகவல் இணைந்துள்ளது.

ஆமாம் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது குடும்பத்தினருடன் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடும் அஜித் தற்போது அதிகாலையில் போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகளில் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவுடன் தனது வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதிகளில் நடைபயிற்சி செய்கிறாராம்.

படப்பிடிப்பு முடிந்ததும் நேராக மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடும் அஜித் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க ஒருபோதும் தயங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

உப்புக் கருவாடு படத்தின் டீசரை வெளியிட்ட ஜோதிகா

சென்னை: இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ள உப்புக் கருவாடு படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப் பட்டது.

உப்புக் கருவாடு என்ற தலைப்பே படத்தின் மீது அனைவரின் கவனத்தையும் திருப்பிய நிலையில் மேலும் ஒரு நிகழ்வாக நடிகை ஜோதிகா படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

Uppu Karuvadu Teaser Released

அபியும் நானும், மொழி, பயணம் போன்ற சிறந்த படங்களை தமிழ்த் திரையுலகிற்கு அளித்த இயக்குநர் ராதாமோகனின் அடுத்தப் படமாக உப்புக் கருவாடு தயாராகியுள்ளது. இயக்குநர் ராதா மோகனின் மொழி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய ஜோதிகா, திருமணத்திற்குப் பின் மிக நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அதன் முதல் படியாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கும் ஜோதிகா, தன்னை நல்ல நடிகையாக உலகுக்கு அடையாளம் காட்டிய இயக்குனர் ராதா மோகனின் உப்புக் கருவாடு டீசரை வெளியிட்டுள்ளார். படத்தின் தலைப்பைப் போலவே டீசரும் மக்களைக் கவரும் என்று படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Uppu Karuvadu Teaser Released

வழக்கமாக ராதாமோகனின் படங்களில் நடிக்கும் பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அதற்குப் பதிலாக நந்திதா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் மயில்சாமி சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.

 

படம் எடுக்க கொடுத்த காசில் வீடு வாங்கினாரா கௌதம் மேனன்?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்துள்ளார் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர் எல்ரெட் குமார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கௌதம் மேனனுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஜீவா சமந்தா நடிப்பில் வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் படத்தை இயக்குவதற்கு கொடுத்த பணத்தில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி விட்டார் இயக்குனர் கௌதம் மேனன் என்பதுதான் அவர் மீதான புகாராகும்.

Rs Infotainment Case Against Director Gautham Menon

இதுகுறித்து எல்ரெட் குமார் மேலும் கூறியிருப்பதாவது:

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நீதானே என் பொன்வசந்தம் படத்தை தயாரித்தேன். அதற்காக எங்கள் நிறுவனத்திலிருந்து கெளதமின் போட்டான் கதாஸ் நிறுவனத்திற்கு 13 கோடியே 27 லட்சத்தை கொடுத்தது.

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி இளையராஜாவை இசையமைப்பாளராகவும், முழு படத்தையும் இந்தியாவிலேயே எடுத்தும் முடித்து விட்டார் கெளதம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் படத்தையும் முடிக்கவில்லை. படமும் வெளியாகி தோல்வியடைந்தது.

நாங்கள் கொடுத்த பணத்தில் அடையாறில் வீடு ஒன்றை வாங்கிவிட்டார். பட செலவிற்கு 4 கோடி மட்டுமே செலவு ஆகியிருக்கிறது. மீதமுள்ள 8 கோடிக்கு வட்டியுடன் சேர்த்து 10 கோடியே 67 லட்சத்து 11,225 ரூபாய் கெளதம் எங்களுக்கு தரவேண்டும்.

இந்நிலையில் அவர் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் "தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்" படத்தை எங்களுக்கான தொகையை தரும்வரை வெளியிட தடைவிதிக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, " கெளதம் வாசுதேவ் 4 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வமான பதிலை தரவேண்டும். அதன் பிறகு வழக்கை விரைவில் விசாரித்து முடிக்கும் பட்டியலில் சேர்க்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.

 

கடவுளோட கதை தெரியுமா?

ஹாரி... ஹரி... ஹரி... யார் உன் ஹரி? அவன் எப்படி இருப்பான்? எங்கு இருப்பான்? என்ற தந்தை இரண்யகசிபுவின் நக்கலான கேள்விக்கு என் ஹரி எங்கும் இருப்பார். இந்த தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பதில் தருவார் மகன் பிரகலாதன். உடனே கோபத்தோடு தூணை அடிக்க, நரசிம்ம ரூபாமாய் வந்து இரண்யனை வதம் செய்வார் மகாவிஷ்ணு. இதுதான் நம் ஊர் டிவி சீரியல்களிலும், சினிமாவிலும் பார்க்கும் கடவுளின் அவதார கதையாக உள்ளது.

Morgan Freeman Set To Host 'Story Of God' Series For National Geographic

கடவுளை கிருஷ்ணராகவும், ராமனாகவும், சிவனாகவும் பார்த்து வருகிறார்கள் இந்துக்கள்.இயேசுவாக கிருஸ்துவர்களும், அல்லாவாக முஸ்லீம்களும் வணங்கி வருகின்றனர். புத்தமதமும், சமணமதமும் இந்தியாவில் தோன்றி இங்கே இல்லாத அளவிற்கு மறைந்து வருகிறது. கடவுள் இருக்கிறார் என்று ஒரு குழுவும், கடவுள் இல்லை என்று ஒரு குழுவும் இங்கு இருக்கின்றனர். எது எப்படியோ கடவுளின் கதையைச் சொல்லப்போகின்றனர் நேசனல் ஜியாகிரபிக் சேனலில் ‘கடவுளின் கதை'யை சொல்லப்போகின்றனர்.

ஹாலிவுட் படங்களில் கடவுளாகவும், நெல்சன் மண்டேலா சுயசரிசை படத்தில் நடத்த மார்கன் ப்ரீமேன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். 78 வயதாகும் இவர், மதம் பற்றியும், கடவுள் பற்றியுத் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

சொர்க்கத்தின் தலைவர் கடவுள், என்றால் நரகத்தின் தலைவர் யார் என்ற கேள்வி எழாமல் இல்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா? உலகில் மதங்கள் எப்படி தோன்றியது. சில மதங்கள் உலகம் முழுவதும் பற்றி பரவுகின்றன. சில மதங்கள் தோன்றிய வேகத்தில் சில ஆண்டுகளில் மறைந்து விடுவது ஏன்? என்ற கேள்விகளுக்கு உலகம் முழுவதும் பயணிக்க இருக்கிறார் மார்கன் ப்ரீமேன்.

இந்தியாவில் போதிமரம், அயோத்தி, மாயன் கோவில், கைலாஷ், காசி, ஜெருசலேம், மெக்கா, எகிப்து, பிரமீடு, ஆகிய இடங்களுக்கு கடவுளைத் தேடி செல்கிறார். அகழ்வாராய்ச்சி நிபுணர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆகியோரும் அவருடன் செல்கிறார்கள். அங்கு சென்று தான் பார்த்தவற்றை, சேகரித்த தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு மனிதனுக்குள் கடவுள் எந்த அளவிற்கு ஆட்சி செய்கிறார் என்பதை மார்கன் ப்ரீமேனை சோதனைக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்யவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி 2016 ஆம் ஆண்டு நேசனல் ஜியாகிரபிக் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 171 நாடுகளில் 45 மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது. அதில் தமிழ் மொழியும் ஒன்று நிகழ்ச்சிக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

மாகாபா ஆனந்த் ஐ லவ் யூ!… குடியாத்தம் கிராமத்தினரின் அசத்தல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது எது நிகழ்ச்சியை குடியாத்தம் கிராமத்தில் நேரடியாக நடத்தச் சென்ற மாகாபா ஆனந்தைப் பார்த்து ஐலவ்யூ சொல்லி நெகிழவைத்துள்ளனர் கிராம குட்டீஸ்கள்.

ஸ்டுடியோவுக்குள் சின்னத்திரை பிரபலங்களை வரவழைத்து நிகழ்ச்சி நடத்திய அது இது எது குழுவினர் முதன் முறையாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நேரடியாக களம் இறங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு கிராமமக்கள் பெருந்திரளாக வந்திருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Ma Ka Pa Anand starts the fun game show Aadhu ithu yedhu at Gudiyatham

அது இது எது குழுவினர் வடிவேல் பாலாஜி உள்ளிட்டோர் மேடையில் ஏறிய உடன் கிராமத்தினரையே உற்சாகம் கரைபுரண்டது. மேடை ஏறிய மதுரை ராமர் தனது வழக்கமான டயலாக்கான, "என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்று ஆரம்பித்த உடன் பார்வையாளர்களிடையே எழுந்த கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது. போலீசை கூப்பிடுவேன்... போலீசை கூப்பிட்டு வந்திருவேன் என்று கூறி முடித்தார் மதுரை ராமர்.

சிரிச்சா போச்சு குழுவினரின் அறிமுகம் முடிந்த உடன், பார்வையாளர்கள் வரிசையில் இருந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா ஆனந்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. கூட்டத்தில் இருந்த ஒரு சுட்டிப்பெண், மைக்கில் மாகாபா அங்கிள் ஐலவ்யூ என்று கூறினார். கூடவே ஒரு குட்டிப்பெண் என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்று கூறி அசத்தி நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கினார்.

Ma Ka Pa Anand starts the fun game show Aadhu ithu yedhu at Gudiyatham

ஸ்டார் விஜய் டிவியில் சனிக்கிழமைதோறும் மாலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அது இது எது... இதுவரை 300 வாரங்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கிய சிவகார்த்திக்கேயன், தற்போது சினிமாவில் பிரபல நடிகராகிவிட்டார். அவருக்குப்பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாகாபா ஆனந்த், அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். குடியாத்தம் கிராமத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நேரடியாக நடத்தப்பட்ட அது இது எது நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

 

அபூர்வ மகான் படத்துக்காக ஆறடி உயர பாபா சிலை!

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டிஎன்எஸ் செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் அபூர்வ மகான்.

இந்த படத்தில் தலைவாசல் விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர்மனோகர், வடிவுக்கரசி, மீராகிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் என ஒரு பட்டாளமே படத்தில் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தி நடிக்கிறார்.

6 ft  height Sai Baba statue created for Aboorva Mahan'

சுரேஷ்அர்ஷ் எடிட்டிங் செய்ய, வி தஷி இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ஆர்.மணிமுத்து. படம் பற்றி இயக்குநர் கே.ஆர்.மணிமுத்துவிடம் பேசினோம்.

"இந்தப் படத்திற்காக ஆறடி உயரமுள்ள பாபா சிலை வடிவமைக்கப் பட்டு படப்பிடிப்பிற்கு பயன் படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது நிறைய தடங்கல்கள் ஏற்பட்டன. அந்த தடங்கல்கள் அனைத்தும் பாபா அருளால் நீங்கின.

படப்பிடிப்பிற்கு உருவாக்கப் பட்ட அந்த ஆறடி உயர பாபா சிலையை ஆவுடையார் கோயில் என்ற ஊரில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பாபா அருள் விரைவில் கிடைக்கும்," என்றார்.

 

அஜீத் மச்சினிச்சிக்கு விஜய் படத்தில் வாய்ப்பு!

ஷாலினியின் தங்கையும் அஜீத்தின் மச்சினிச்சியுமான ஷாம்லியை நினைவிருக்கிறதா...

குழந்தை நட்சத்திரமாக கொடி கட்டிப் பறந்த அவர் வளர்ந்த பிறகு சில படங்களில் தலை காட்டினார். அஜீத் நடித்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனில் சின்ன வேடத்தில் வந்தார். சில தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்தார்.

2009-ல் ஒய் என்ற தெலுங்குப் படத்தில் நடித்ததோடு, காணாமல் போயிருந்த ஷாம்லி, தன் அக்காவின் கணவர் மூலம் பெரிய வாய்ப்புகளுக்கு முயற்சி செய்தார். ஆனால் அஜீத் இதனை ஊக்குவிக்கவில்லை.

Shamli plays key role in Vijay's Puli

சொந்த முயற்சியில் வாய்ப்புகளைப் பெறவும் என்று அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டார்.

இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஷாம்லி. விஜய் நடிக்கும் புலி படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கப் போகிறாராம்.

சிம்பு தேவன் இயக்கும் இந்தப் படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கிறார் என தகவல் கசிந்துள்ளது.

 

நம்பர் நடிகைக்கும், அம்மாவுக்கும் இடையே லடாயாமே!

சென்னை: திருமணத்தை நிறுத்திய நம்பர் நடிகை மீது அவரது தாய் கோபத்தில் உள்ளாராம்.

சின்ன நம்பர் நடிகையும், அவரது தாயும் அம்மா, மகள் உறவைத் தாண்டி தோழிகள் போன்று பழகி வருகிறார்கள். நடிகையின் கால்ஷீட் சொதப்பாமல் பார்த்துக் கொள்வது, அவருக்கு கதை கேட்பது உள்ளிட்ட வேலைகளை தாய்க்குலம் தான் செய்து வந்தார்.

All is not well between number actress and mom

மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அம்மா விரும்பினார். இந்நிலையில் தான் சின்ன நம்பர் நடிகைக்கும், சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்பாடா ஒரு வழியாக மகள் திருமதி ஆகப் போகிறாள் என்று தாய்க்குலம் மகிழ்ச்சியில் இருந்தார்.

நடிகையோ திருமணத்தை நிறுத்தி தாயின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டார். அந்த கோபத்தில் உள்ளாராம் தாய்க்குலம். இதனால் கால்ஷீட் பார்ப்பது, கதை கேட்பது ஆகிய வேலைகளை நிறுத்திவிட்டாராம். உன் வேலையை நீயே பார்த்துக் கொள் என்று மகளிடம் தெரிவித்துவிட்டாராம்.

செய்தியாளர்கள் தாய்க்குலத்தை அணுகி மகளை பற்றி கேட்டால் முன்பு எல்லாம் தகவல் அளிக்கும் அவர் தற்போதோ தேவை என்றால் அவரிடமே பேசுங்கள் என்று கூறிவிடுகிறாராம்.

 

காதலில் விழுந்தேன் நகுல் பிறந்த தினம் இன்று

சென்னை: 2003 ல் இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமான நகுல் இன்று தனது 30 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். தமிழின் இளம் ஹீரோக்களில் ஒருவரான நகுல் நடிகை தேவயானியின் தம்பி. மும்பை மண்ணில் 1984 ம் ஆண்டு பிறந்த நகுலின் முழுப் பெயர் நகுல் ஜெய்தேவ்.

18 வயதில் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமான நகுல் இந்த 12 வருடங்களில் வெறும் 8 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். வருகின்ற எல்லா வாய்ப்புகளையும் ஏற்காமல் படங்களைத் தேர்ந்தெடுத்து மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

காதலில் விழுந்தேன் படத்தில் சிங்கிள் ஹீரோவாக அறிமுகமான நகுல் தொடர்ந்து மாசிலாமணி, வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த தமிழுக்கு எண் 1 அழுத்தவும் நடிக்கத் தெரிந்த நடிகர் என்ற பெயரை நகுலுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை செய்தது.

Nakul Turns 30

நடிகர் மட்டும் அல்லாது நகுல் ஒரு சிறந்த பின்னணிப் பாடகரும் கூட, ஹாரிஸ் ஜெயராஜ், தமன், விஜய் ஆண்டனி, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தீனா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாடியுள்ளார்.

தற்போது அமளி துமளி மற்றும் நாரதன் போன்ற படங்களில் நடித்து வரும் நகுல் தமிழில் அழுத்தமாக ஒரு இடத்தைப் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார், அவரின் போராட்டம் வெற்றியடைய இந்தப் பிறந்த நாளில் வாழ்த்துவோம்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நகுல்...

 

எதுக்கு வம்பு... பிறந்த நாளன்று சென்னையில் இருப்பதைத் தவிர்த்த விஜய்!

தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ரசிகர்களைச் சந்திப்பது, நல்லத்திட்ட உதவிகள் வழங்குவது, எழும்பூர் மருத்துவமனைக்குப் போய் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடுவது... இவைதான் விஜய்யின் வழக்கமான செயல்கள்.

ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் இவற்றைச் செய்யவில்லை. ஏன், பிறந்த நாளையே ஆடம்பரமின்றி எளிமையாகக் கொண்டாடினார். ரசிகர்களைச் சந்திப்பதை முற்றாகத் தவிர்த்தார். அதற்கு ஏகப்பட்ட அரசியல் காரணங்களும் சொல்லப்பட்டன.

Vijay decides to celebrate his birthday in overseas

இந்த நிலையில் தனது இந்த ஆண்டு பிறந்த நாளன்று சென்னையிலேயே இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது விஜய்.

இப்போது வெளிநாட்டில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் விஜய், வரும் ஜூன் 25-ம் தேதிதான் சென்னை திரும்பப் போகிறாராம். அதாவது பிறந்த நாளான 22-ம் தேதி குடும்பத்துடன் வெளிநாட்டிலேயே இருக்கப் போகிறாராம் விஜய்.

ஆனால் அவர் ஊரில் இல்லையே என ஏங்கும் அவரது ரசிகர்களுக்காக ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. அது... அடுத்த நியூசாச்சே!!

 

நடிகர் சங்க தேர்தலிலிருந்து விலக விஷால் புதிய நிபந்தனை

சத்யம் சினிமாஸுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்தால், நடிகர் சங்கத் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு கலகக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. குறிப்பாக நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவது தொடர்பாக பல சர்ச்சைகள், விவாதங்கள் நடக்கின்றன.

நடிகர்கள் விஷாலும் நாசரும் இதுகுறித்து வெளிப்படையாகக் குரல் எழுப்ப, அவர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

Vishal's new condition to withdraw Nadigar Sangam election

இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சரத்குமார் தலைமையில் இப்போதுள்ள அதே அணி வரும் தேர்தலிலும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து நாசரும் விஷாலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலைத் தவிர்க்க முடியுமா? என்று விஷாலிடம் கேட்டபோது, "எங்களுடைய ஒரு நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டால் நிச்சயம் போட்டியிட மாட்டோம். நடிகர் சங்கக் கட்டடம் கட்ட எஸ்பிஐ சினிமாவுடன் இணைந்து போட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய கட்டடம் கட்டும் பணிகளை உடனே ஆரம்பிக்க வேண்டும். இதைச் செய்தால் நாங்கள் போட்டியிட வேண்டிய அவசியமே இல்லையே!", என்றார்.

 

இனிமே இப்படித்தான் விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிகர்கள்: சந்தானம், ஆஸ்னா சவேரி, அகிலா கிஷோர், விடிவி கணேஷ், தம்பி ராமய்யா, நரேன்

ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்

இசை: சந்தோஷ் தயாநிதி

தயாரிப்பு: சந்தானம்

இயக்கம்: முருகானந்த்

பொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோக்களாகும்போது, ஒரு பட அதிசயம் மாதிரி, முதல் படம் ஓடும்.. அடுத்தடுத்த படங்கள் ஆளைக் காணாமலடித்துவிடும்.

ஆனால் சந்தானம் கொஞ்சம் விதிவிலக்கு போலிருக்கிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் ஓரளவு வெற்றியை ருசித்தவருக்கு, இனிமே இப்படித்தான் இன்னும் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

Inimey Ippadithaan Review

இனிமே நான் இப்படித்தான் என்று தைரியமாக காமெடி ஹீரோவாக அவர் தொடரலாம்.

கதை அப்படியொன்றும் புதியதல்ல. வேலையேதும் இல்லாமல் அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு, அம்மாவின் செல்லப் பிள்ளையாக ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் சந்தானத்துக்கு 3 மாதத்துக்குள் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என ஜோசியர் கூறிவிடுகிறார். பெண் பார்க்கும் படலம் தொடங்குகிறது. எந்தப் பெண்ணும் செட்டாகவில்லை. நண்பர்கள் ஆலோசனையின்படி, அழகான பெண்ணாகப் பார்த்து காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கிறார். ஊரெல்லாம் தேடி, ஆஸ்னா சவேரியைக் குறி வைக்கிறார். விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் ஆஸ்னா பக்கமிருந்து கிரீன் சிக்னல் இல்லை.

Inimey Ippadithaan Review

இன்னொரு பக்கம் பெற்றோர் அகிலா கிஷோரைப் பார்த்து நிச்சயித்து விடுகின்றனர். நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் ஆஸ்னா காதலுக்கு சம்மதிக்க, அங்கே ஆரம்பிக்கிறது சந்தானத்துக்கு சோதனை. நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் உண்மையைச் சொல்ல முயலும்போதெல்லாம் ஒரு தடங்கள்... கடைசியில் காதலியைக் கைப்பிடித்தாரா... நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்தாரா? என்பதை நிச்சயம் திரையில் பாருங்கள்.

[இனிமே இப்படித்தான் படங்கள்]

இரண்டரை மணி நேரம்... சிரித்துக் கொண்டே ஒரு படத்தைப் பார்க்க முடியும் என்றால், இனிமேல் இப்படித்தானை தைரியமாகப் பரிந்துரைக்கலாம்.

Inimey Ippadithaan Review

சந்தானம் தன்னை காமெடியன் இமேஜிலிருந்து முற்றாக வெளியேற்றிக் கொள்ள பெரும் முயற்சி எடுத்திருப்பது படத்தில் தெரிகிறது. உடல் மொழியில் ஒரு நாயகனாக அவர் ஜெயித்திருக்கிறார். நடனம், சண்டை, ரொமான்டிக் டூயட் என அனைத்திலுமே பக்கா. அதேநேரம், முன்னிலும் பலமடங்கு காமெடியை ரசிகனுக்கு விருந்தாகத் தரவும் அவர் தவறவில்லை.

Inimey Ippadithaan Review

உணவக கழிப்பறையில் லொள்ளு மனோகரும் சந்தானமும் பண்ணும் களேபரத்தில் அரங்கமே அதிர்கிறது என்றால் மிகையல்ல.

காதலியாக வரும் ஆஸ்னா சவேரி, நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக வரும் அகிலா கிஷோர் இருவருமே கவர்கிறார்கள். அகிலா கிஷோர் இன்னொரு நயன்தாரா மாதிரிதான் தெரிகிறார் இந்தப் படத்தில்.

சந்தானத்துக்கு லவ் ஐடியாக்கள் கொடுக்கும் 'துருப்பிடிச்ச தொண்டைக்காரன்' விடிவி கணேஷ், 'மூக்குக்குப் பாலீஷ் போடும்' தம்பி ராமைய்யா, ஒரே ஒரு காட்சியில் வந்து சாமியாடிவிட்டுப் போகும் சிங்கமுத்து, மிலிட்டெரிக்காரராக வரும் பெப்சி விஜயன், டென்சன் அப்பா ஆடுகளம் நரேன், 'டைல்ஸ் பதிச்ச தலையன்' கூல் சுரேஷ்.. என நடித்த அத்தனை பேருமே ரசிக்க வைக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதியின் இசை கவனிக்க வைக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு இன்னொரு ப்ளஸ்.

முருகன் - பிரேம் ஆனந்த் என்ற இரட்டையர் முருகானந்த் என்ற பெயரில் இயக்கியிருக்கிறார்கள். முதல் முயற்சியே வெற்றியில் முடிந்திருக்கிறது. இனிமே இப்படியே தொடருங்கள்!

 

சார்லி படத்தின் பர்ஸ்ட் லுக்... முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் துல்கர்

திருவனந்தபுரம்: மலையாள இளம் நடிகர் துல்கரின் நடிப்பில் உருவாக்கி வரும் சார்லி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

துல்கர்- பார்வதி மேனன் நடிப்பில் உருவாகி வரும் சார்லி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ள நிலையில் வெளியாகியுள்ள படத்தின் போஸ்டர் படத்தில் துல்கர் ஏற்றிருக்கும் கேரக்டரை அறிமுகப்படுத்துகிறது.

'Charlie' First Look : Dulquer Salmaan  New Look  For This Movie

ஓ காதல் கண்மணியில் அழகான பையனாக வந்த துல்கர், இந்தப் படத்தில் தாடி மற்றும் மீசையுடன் கூடிய ஒரு முரட்டுத் தோற்றத்துடன் கூடிய ஒரு இளைஞனாக நடிக்கிறார். பெங்களூர் டேஸ் படத்தில் இணைந்து நடித்திருந்த துல்கர் - பார்வதி மேனன் ஜோடி இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் மீண்டும் இணைகின்றனர்.

படத்தின் இயக்குநர் மார்ட்டின் பரக்கத், பேச்சுலர் பார்ட்டி மற்றும் 5 சுந்தரிகள் போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆர்.உன்னி இப்படத்திற்கு கதை மற்றும் வசனங்களை எழுதுகிறார்.

துல்கர் மற்றும் பார்வதி இவர்களுடன் நெடுமுடி வேணு, சீதா, செம்பன் வினோத் போன்றோர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பானது கொச்சி, மூணாறில் தொடங்கி குஜராத்திலும் எடுக்கப் படவிருக்கிறது.

 

விஷாலுக்கு முதல் சறுக்கல்... நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு

சென்னை : நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. நடிகர் சங்கத்துக்கு எதிராக கொடி பிடித்து வரும் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை அளித்துள்ளது.

ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமார் போட்டியிடுகிறார். இதேபோல், பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை போன்றோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

High court refuses to stay actor's association election

இதற்கிடையே, நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருவர் மீது ஒருவர் புகார்களை அடுக்கி வருகிறார்கள். ராதாரவியை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு களமிறங்கப் போவதாகவும் விஷால் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

அதில், ‘நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் ஜூலை 15ம் தேதி புதன் கிழமை. வேலை நாளான அன்று வெளியூரில் படப்பிடிப்புகளில் இருப்போரால் இத்தேர்தலில் கலந்து கொள்ள இயலாது. எனவே, இத்தேர்தல் தினத்தை இரண்டாம் ஞாயிறான விடுமுறை தினத்தில் நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் இத்தேர்தலை நடத்த வேண்டும்' என தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டார். மேலும், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இந்தி கஜினி படத்தை எடுத்தவர் கிறிஸ்டோபர் நோலன்.. கூகுளின் குப்பாச்சு குழப்பாச்சு!

லாஸ் ஏஞ்செல்ஸ்: கிறிஸ்டோபர் நோலன் உலகின் மிகச் சிறந்த படங்களை எடுத்த ஹாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர்.

பேட்மேன் சீரிஸ் மற்றும் இண்டஸ்டெல்லெர் போன்ற புகழ் பெற்ற படங்களை எடுத்த கிறிஸ்டோபர் நோலன், ஹாலிவுட்டின் வசூல் மன்னன்களில் ஒருவரும் கூட.

இந்தத் தகவல்கள் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான் தெரியாத ஒரு விஷயமும் உள்ளது அது என்ன தெரியுமா? இணையதளத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் கூகுளில் கிறிஸ்டோபர் நோலன் படங்கள் என்று டைப் செய்தால் இந்தியில் அமீர்கான் நடித்து மெகா ஹிட்டான கஜினி படத்தையும் அவர் எடுத்த படமாக காட்டுகிறது.

Hindhi Gajini Movie Director- Christopher Nolan

தமிழில் சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் பிரமாண்ட வெற்றியால் அதே படத்தை இந்தியில் நடிகர் அமீர்கானை நடிக்க வைத்து ஹிட் கொடுத்தார். ஆனால் இந்த கூகுள் முருகதாசின் படத்தை கிறிஸ்டோபர் நோலன் படம் தான் என்று அழிச்சாட்டியம் செய்கிறது. முறைப்படி பார்த்தால் நோலனின் மொமண்டோ படத்தின் தழுவல்தான் கஜினி.

ஷ்ஷப்பா!

 

குலதெய்வத்தை கும்பிட வராத காரணம் தெரியுமா?

சூரிய தொலைக்காட்சியில் மங்களகரமான வாத்தியத்தின் பெயர் கொண்ட சீரியலை 5 ஆண்டுகள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் அந்த தெய்வானை நாயக இயக்குநர். அந்த சீரியல் முடிந்த பின்னர் தற்போது புதிய சீரியலை இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினும், அப்பாவும் தவிர பெரும்பாலோனோர் புதுமுகங்கள்தான்.

சீரியலில் இயக்குநரே ஹீரோவாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நடிக்கவில்லை. வேறொருவர் நடிக்கிறார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இயக்குநருக்கு பெரிய திரை வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ஏற்கனவே பெரியதிரையில் சில படங்களை இயக்கியவர்தான் இவர். அங்கு செட் ஆகவில்லை என்பதால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார்.

மங்களகரமான சீரியலுக்கு கிடைத்த வரவேற்பினால் பெரிய திரை வாய்ப்பு கிடைத்துள்ளதாம். எனவே குடும்பப்பாங்கான சினிமா எடுக்க ஸ்கிரிப்ட் தயார் செய்து வருகிறாராம். அதனால்தான் புதிய சீரியலில் நடிக்காமல் இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறாராம். தன்னுடைய படத்தில் நடிக்க புதுமுகங்களை தேர்வு செய்வதோடு பிரபலமாக உள்ள இளவட்ட நாயகர்களிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம்.

 

வாலு படத்துக்கு வரிவிலக்கு... ஜூலை 3-ல் ரிலீஸ்

சிம்பு- ஹன்சிகா நடித்த வாலு படத்துக்கு தமிழக அரசின் வரிச் சலுகை கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து படத்தை ஜூலை 3-ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்துள்ள வாலு படம் நான்காண்டுகளாக வெளிவராமல் உள்ளது. பல முறை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு ரத்தாகிவிட்டன.

Vaalu gets tax exemption... Releasing from July 3rd

இப்போது படத்தின் வெளியீட்டு உரிமையை சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் வாங்கியுள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் தமிழகமெங்கும் இந்தப் படத்தை அவர் வெளியிடுகிறார்.

படத்தை தமிழக அரசின் வரிவிலக்கு குழுவுக்கு திரையிட்டுக் காட்டினார் ராஜேந்தர். அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில், வாலு படத்துக்கு வரி விலக்கு கிடைத்துள்ளது.

மேலும் படத்தின் புதிய ட்ரைலரை இந்த வாரம் வெளியிடப் போவதாகவும், வரும் ஜூலை 3-ம் தேதி படத்தை வெளியிடுவதாகவும் டி ராஜேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.