நீண்ட காலம் தனக்கு கார் ஓட்டியவருக்கு காரைப் பரிசாகக் கொடுத்த அனுஷ்கா!

Anushka Gifts Car To Her Driver

சென்னை: உயர்ந்த நடிகை அனுஷ்கா அவரது செயலாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

நடிகை அனுஷ்காவுக்கு பெரிய மனசுங்க. தெலுங்கில் அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறார். தன்னுடன் இருக்கும் திருநங்கைக்கு தான் நடிக்கும் படங்களில் சிறு வேடங்கள் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார். ஷூட்டிங்கில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தருகிறார். இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.

தற்போது அனுஷ்காவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது அவர் தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளார். என்ன தான் நீண்ட காலமாக டிரைவராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா சற்றே வித்தியாசமானவராகத் தான் உள்ளார்.

அவர் தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

சோனியா என்னுடன் இணைந்து நடிக்க 'கிளைமேக்ஸ்'தான் காரணம்... விவேக்

All Heroines Won T Agree Pair Up With Comedians Vivek

சென்னை: காமெடி நடிகருடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களும் சம்மதிக்க மாட்டார்கள் என்று விவேக் தெரிவித்துள்ளார்.

விவேக்கை நாயகனாக வைத்து ஏபிசி ட்ரீம்ஸ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் பஷீர் குருவண்ணா தயாரிக்கும் படம் பாலக்காட்டு மாதவன். சாந்தி மோகன் எழுதி இயக்கும் இப்படத்தில் சோனியா அகர்வால், செம்மீன் ஷீலா, எம்.எஸ். பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். அஜ்மல் அஜிஸ் இசையமைக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடந்தது.

அந்த விழாவில் விவேக் பேசியதாவது,

என்னைப் போன்ற காமெடி நடிகர்களுடன் தே‌னி‌ குஞ்‌சா‌ரம்‌மா‌, பறவை‌ முனி‌யம்‌மா இல்லை என்றால் பல்லு போன பாட்டிகள் தான் ஜோடியாக நடிப்பார்கள். ஆனால் பாலக்காட்டு மாதவன் படத்தில் முதலில் செம்மீன் ஷீலா நடிக்கிறாங்க என்று சொன்னார்கள். சரி அவுங்க தான் நம்ம ஜோடி என்று நினைத்தேன். அடுத்து சோனியா அகர்வாலும் நடிப்பதாகக் கூறினார்கள். அவர் ஏதோ முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார் என்று நினைத்தேன். கடைசியில் பார்த்தால் அவர் தான் எனக்கு ஜோடி என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவுங்க எனக்கு ஜோடியாக நடிக்க ஒத்துக்கிட்டதற்கு கதை மற்றும் படத்தோட கிளைமாக்ஸ் தான் காரணம்.

பொதுவா காமெடி நடிகருடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களும் சம்மதிக்க மாட்டார்கள். இதை தப்பு என்று கூற முடியாது. திரையுலகின் டிரெண்ட் அப்படி. இவற்றையெல்லாம் தாண்டி சோனியா என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம் கதை தான் படத்தோட ஹீரோ. என்னுடன் நடிப்பதில் பெருமை என்று ஷீலா தெரிவித்தார்கள். ஆனால் அவருடன் நடிப்பதில் எனக்குத் தான் பெருமை. தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை செய்தவங்க.

இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்றால் அந்த பட்டியலில் முதலில் இருப்பவர் கே. பாக்யராஜ். அவர் நடித்த அந்த 7 நாட்கள் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் பாலக்காட்டு மாதவன். அந்த பெயரில் நடிப்பதில் எனக்கு பெருமை. அதிலும் அவரும் இப்படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மனதில் உறுதி வேண்டும் படத்தில் இருந்தே எனக்கு எம்.எஸ். பாஸ்கரை நன்கு தெரியும். அவரும், நானும் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். அவரும் இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

 

நீண்ட காலம் தனக்கு கார் ஓட்டியவருக்கு காரைப் பரிசாகக் கொடுத்த அனுஷ்கா!

Anushka Gifts Car Her Driver   

சென்னை: உயர்ந்த நடிகை அனுஷ்கா அவரது செயலாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

நடிகை அனுஷ்காவுக்கு பெரிய மனசுங்க. தெலுங்கில் அமலா பாலுக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறார். தன்னுடன் இருக்கும் திருநங்கைக்கு தான் நடிக்கும் படங்களில் சிறு வேடங்கள் கொடுக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்கிறார். ஷூட்டிங்கில் சக நடிகர், நடிகைகளுக்கு யோகா கற்றுத் தருகிறார். இதெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.

தற்போது அனுஷ்காவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது அவர் தனக்கு நீண்ட காலமாக கார் ஓட்டியவருக்கு ஒரு காரைப் பரிசளித்துள்ளார். என்ன தான் நீண்ட காலமாக டிரைவராக இருந்தாலும் யாரும் காரை பரிசளிப்பதில்லை. ஆனால் அனுஷ்கா சற்றே வித்தியாசமானவராகத் தான் உள்ளார்.

அவர் தற்போது இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

நெருக்கமான 'சீன்'களுக்கு தக்காளியே துணை...!

Richa Chadha Nikhil Dwivedi Hide Their Love Behind

மும்பை: அந்தக் காலத்தில் ஹீரோவும், ஹீரோயினும் காதல் டூயட் பாடும்போது படு சுவாரஸ்யமாக காட்சி வைப்பார்கள். அதாவது ஹீரோ, பஸ் கண்ணாடி போல ஒரு பெரிய கண்ணாடியை முகத்தில் தொங்க விட்டபடி, வரையப்பட்ட மீசையுடன், தனது 'முரட்டு' முகத்தை ஹீரோயினின் அழகான முகத்திற்கு அருகில் கொண்டு வருவார். கார்டன் போன்று போடப்பட்ட செட்டில்தான் இந்த காட்சியைப் படமாக்குவார்கள். அந்த செட்டில் வைக்கப்பட்டுள்ள பூச்செடிகளுக்கு அருகில் நின்றபடிதான் இந்த சீனைப் படமாக்குவார்கள். அப்போது ஹீரோ, ஹீரோயின் முகங்கள் நெருங்கும்போது இரண்டு பெரிய பூக்களைக் கொண்டு அவர்களது முகத்தை மறைப்பது போல செய்து பூவை 'கிளுகிளு'வென்று செட் அசிஸ்டெண்டுகள் ஆட்டுவார்கள்... இல்லையானால் ஹீரோ, ஹீரோயினே சுயமாகவும் ஆட்டிக் கொள்வார்கள்.!

இப்படி பூவை ஆட்டினால், ஹீரோவும், ஹீரோயினும் முத்தமிட்டுக் கொண்டார்கள் என்று அர்த்தமாம்....! இதே பாணியில் ஒரு நூதனமான காதல் சீனை லேட்டஸ்டாக பாலிவுட்டில் சுட்டுள்ளனர். ஆனால் இங்கு பூவுக்குப் பதில் தக்காளியை வைத்து காட்சியை கன கச்சிதமாக முடித்துள்ளனர்.

ரிச்சா சத்தா, நிகில் திவிவேதி நடித்து வரும் புதிய படத்தில்தான் இந்தக் காட்சி வருகிறது. மிகவும் நெருக்கமான காதல் காட்சி அது. ஹீரோயின், ஹீரோவுக்கு மிக நெருக்கமாக நின்று முத்தமிடுவது போன்ற காட்சி. ஆனால் ஹீரோயின் ரிச்சாவுக்கு வெட்கமாக இருந்ததாம். இதனால் தயங்கித் தயங்கி அவர் நடித்துள்ளார். இதனால் டைரக்டருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்த அவருக்கு அந்தக் காலத்தில் செய்வதைப் போல செய்தால் என்ன என்று யோசனை தோன்றியது. அதேசமயம், அந்தக் காலத்தில் உள்ளதைப் போல பூக்களை வைத்து ஆட்டாமல், வேறு விதமாக எடுக்க எண்ணிய அவர் கொஞ்சம் தக்காளியை வாங்கி வரச் சொன்னார். வந்தது தக்காளியும். பின்னர் அந்த தக்காளிகளுக்கு மத்தியில், ஹீரோவையும், ஹீரோயினையும் நெருக்கமாக வருவது போல செய்து, தக்காளியைக் கொண்டு அதை மறைத்து ஷூட் செய்தார் காட்சியை...

இந்த சீனுக்காக ஒரு மூ்டை தக்காளியை வாங்கி வந்தார்களாம் அசிஸ்டென்ட்டுகள்.

பெங்களூர் தக்காளியா இல்லை நாட்டுத் தக்காளியா ஜீ...??

 

மணி போட்ட கன்டிஷன்: பிள்ளைகளை 'பொத்தி' வைத்துள்ள கார்த்திக், ராதா!

Maniratnam S Condition Karthik Radha

சென்னை: கடல் படம் ரிலீஸாகும் வரை கௌதம், துளசியின் போட்டோக்களை வெளியிடக் கூடாது என்று மணிரத்னம் கார்த்திக் மற்றும் ராதாவுக்கு கன்டிஷன் போட்டுள்ளார்.

மணிரத்னம் கார்த்திக் மகன் கௌதம் மற்றும் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடல் படத்தை எடுத்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. படம் துவங்கி இத்தனை நாட்களாகியும் அது குறித்த தகவல்கள் கசிந்துவிடாமல் மணி ரகசியமாக வைத்துள்ளார்.

மேலும் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் வெளியாட்கள் வருவதை தடுக்க தனியார் செக்யூரிட்டி நிறுவன ஆட்களை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளின் போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்ய விரும்பினர். ஆனால் அதற்கு மணிரத்னம் ஒத்துக்கொள்ளவில்லை.

படம் ரிலீஸாகும் வரை கௌதம், துளசியின் போட்டோக்களை எந்த பத்திரிக்கைகளிலும் வெளியிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளை பொது நிகழ்ச்சிகள் ஏன் நண்பர்கள் வீடுகளுக்கு கூட அனுப்பாமல் பொத்தி பொத்தி வைத்துள்ளனர்.

சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த துளசி தன்னை போட்டோ எடுக்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாகக் கூறிவிட்டார்.

 

வித்யா பாலனுக்கு 'மியாவ் மியாவ்' பிடிக்காதாம்...!

The Phobia That Vidya Balan Wont Even Talk About   

மும்பை: கவர்ச்சி காட்டவே பயப்படாதவர் வித்யா பாலன். அதேபோல எப்பவும் தைரியமாகவும், தில்லாகவும் இருப்பவர். ஆனால் அப்படியாப்பட்ட அவருக்கு ஒரே ஒரு 'மேட்டர்' மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம்.. அந்தப் பெயரைக் கேட்டாலே பயந்து போய் விடுவாராம்.. அவர்தான் பூணையார்.

பூணைகள் என்றால் வித்யாவுக்கு செம அலர்ஜியாம். பூணை என்ர பெயரைக் கேட்டாலே அவருக்கு டென்ஷனாகி விடுமாம். அதேபோல எங்காவது பூணையைப் பார்த்து விட்டால் போதும், ஓடி ஒளிந்து விடுவாராம். பூணையைப் பற்றியாராவது பேசினால் கூட ஸ்டாப் ஸ்டாப் என்று கத்தி விடுவாராம்.

ஒருமுறை இப்படித்தான், கமலிஸ்தான் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்புக்காக வந்திருந்தார் வித்யா. அப்போது கேரவன் வேனுக்குள் சாப்பாட்டுக்காக போயிருந்த வித்யா சாப்பாட்டை முடித்து விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு சில பூணைகள் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் அங்கிருந்த சேர் ஒன்றில் ஏறி நின்று விட்டாராம். பூணைகளை இங்கிருந்து விரட்டினால்தான் நான் இறங்குவேன் என்று பீதியுடன் அவர் கூறவே வேறு வழியில்லாமல், சிலர் சேர்ந்து பூணைகளைப் பிடித்து வேறு பக்கம் கொண்டு போய் விட்டனராம். அதன் பிறகுதான் சேரை விட்டு இறங்கினாராம் வித்யா. இருப்பினும் டென்ஷனில் வியர்த்துக் கொட்டியதால் மறுபடியும் கேரவனுக்குள் ஓடிப் போய் விட்டாராம்.

ஏன் இப்படி பூணையைக் கண்டால் எலி போல ஓடுகிறார் வித்யா... யாராச்சும் பிஎச்டி பண்ணி கண்டுபிடிங்கப்பா....!

 

ஆஸ்திரேலியாவில் உருவான முதல் தமிழ் சினிமா இனியவளே காத்திருப்பேன் - அக் 6-ல் ரிலீஸ்!

First Tamil Film From Australian Tamils

இனியவளே காத்திருப்பேன் என்ற முழு நீள புதிய படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு, ஆஸ்திரேலியத் தமிழரால் அங்கேயே உருவாக்கப்பட்ட முதல் தமிழ் சினிமா என்பதுதான்.

இந்தப் படத்தின் இயக்குநர் பெயர் ஈழன் இளங்கோ. ஈழப் போர்க்களத்தில் இலங்கை படையினரால் நேரடியாக பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே குடும்பத்துடன் இந்தியா வந்து பின் ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர்.

இளங்கோவுடன் ஒரு நேர்காணல்...

கேள்வி: சினிமா ஆர்வம் எப்படி?

ஈழப் போரில் எல்லா தமிழ்க் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பமும் சொல்லொணாத துயரங்களைச் சந்தித்தது. எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு கட்டிய துணியோடு தமிழகம் வந்தோம்.

டபுவந்தாரை, வந்தாரை மட்டும் வாழ வைக்கும் தமிழகம் எங்களையும் வாழ வைத்தது! அங்கு பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் மாநிலக்கல்லூரியில் புள்ளியியல் பட்டப்படிப்பு முடித்தேன். சென்னையில் பல திரைப்பிரபலங்களின் தொடர்பு இருந்தாலும்; எனக்கு திரைத்துறையில் அவ்வளவு நாட்டம் இருந்தது இல்லை.

பின் 1999 ல் நியூசிலாந்து சென்றடைந்தேன். வாழும் நாடு சொர்க்கமாகவே இருந்தாலும் தாய் மண்ணின் இழப்பு மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஈழம் தொடர்பான பல நிகழ்வுகளில் மேடையேறியது பல தமிழ் உள்ளங்களில் என்னை இடம் பிடிக்க வைத்தது. தாய் மண்ணுக்காக என்னால் போராட முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி வருத்திக் கொண்டே இருந்தது. என்னால் என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்ய வேண்டும்? என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

ஒவ்வொரு தனிமனிதனுடைய வெற்றியும் அந்த இனத்திற்கு கிடைக்கும் வெற்றி என்பதை புரிந்துகொண்டேன். ஈழத் தமிழனாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் தேர்ந்தெடுத்தது திரைப்படத்துறை. படிப்பில் ஒலிப்பதிவு, இயக்கம், தொகுப்பு சம்மந்தமான பாடங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சிப் பெற்றேன்.

பின் இந்தியா சென்று திரைப்பட தாயாரிப்பாளர் பாலுமகேந்திரா அவர்களை சந்தித்து அவருடைய அறிவுரை பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பின் ஒளிப்பதிவாளர் கைமல் அவர்கள் பல நுட்பங்களை அறிவுறுத்தினார். இவர்களுக்கு நான் மிகவும் கடமைபட்டுள்ளேன்.

2003 ம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்து சிகரம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிந்தேன். அச்சமயம் ஈழத்து மூத்த கலைஞர் யு ரகுநாதன் ஐயா அவர்களின் தொடர்பு நண்பர் கருணாகரன் மூலமாக கிடைத்தது. அதிலிருந்து உருவாகியது தான் "இனியவளே காத்திருப்பேன்". சென்னையில் இசையமைப்பாளர் கவி என்னுடைய நெருங்கிய நண்பா. அவர் இசையமைத்த "அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை" என்ற பாடல் நம் மனதை உருக்கும் பாடல்களில் ஒன்று என்பதை நாம் யாவரும் மறந்து விட முடியாது. கவி இசையமைத்த இரண்டு பாடல்கள் எமது படத்தில் அமைந்தது எமது சிறப்பு.

கேள்வி: இந்திய திரைப்படத்துறை அசுர வளர்ச்சி அடைந்து நிற்கும் இக்காலத்தில் ஈழத் தமிழராகிய நாம் அவர்களுக்கு இணையாக வளர்ச்சியடைய முடியுமா? முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

முதலில் இந்த கேள்வியை என்னிடம் கேட்டதற்கு நன்றி. எனது பதில் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, அவ்வாறு அமைந்தால் என்னை தயவுசெய்து மன்னிக்கவும். உதாரணமாக, 1980 முடிவுவரை உலகிலேயே இலங்கை வானொலி தலைசிறந்த வானொலியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்திய தமிழர்கள் கூட விரும்பிக் கேட்கும் வானொலியாக இலங்கை வானொலி இருந்தது என்பதை கவிஞர் வைரமுத்துக் கூட குறிப்பிட்டு இருந்ததை நான் இங்கு கூற விரும்புகிறேன். ஆனால் இன்று இந்திய வானொலிகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. நம் மண்ணில் எமக்கு எதிராக நடந்த இனக் கலவரம் எமது வளர்ச்சியை குன்றச்செய்தது.

அதேபோல் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டோமேயானால் நாம் இந்திய திரைப்படங்களை ரசித்து வந்த போதிலும் எமக்கென்று தளம் அமைப்பதற்காக கலைஞர்கள் யு ரகுநாதன், ஏ ளு துரைராஜா, காவலூர் ராஜதுரை போன்றவர்கள் 70 களில் சில படைப்புகளை படைத்தார்கள். அந்த முயற்சி இனக் கலவரத்தின் காரணமாக முயற்சியோடு முடக்கப்பட்டுவிட்டது.

ஈழத் தமிழ் கலைஞர்கள் இலங்கை அரசின் அடக்குமுறையால் அடக்கப்பட்டு விட்டார்கள். எமது கலை வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். அதன் பின் எமது உயிரை காப்பாற்றவேண்டும், எமது இனத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஈழத்தமிழர்களின் நெஞ்கங்களில் மேலோங்கியிருந்தது. அதன் பின் எமது இனத்தைக் காக்கும் போராட்டத்தில் மட்டுமே எமது பங்களிப்பு அமைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இத்தருணத்தில் நாம் முழுக்க முழுக்க இந்திய படைப்புகளுக்கே அடிமையாகி விட்டோம் என்றே கூறவேண்டும. இதனால்தான் இன்று எமது கலைப்பயணத்தை வளர்க்க முற்படும்போது நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற இடத்தில் இருந்து தொடர்வதற்கு நாம் சற்று பின்நோக்கியே சென்று துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த வளர்ச்சியின் இடைவெளியை நாம் நிரப்ப சில காலம் ஆகலாம். ஆனால் நிச்சயம் கூடிய விரைவில் எமக்கென்று ஒரு தளம் அமைத்து சிறந்த படைப்பாளிகளாக நாம் மாறுவோம் என்பதில் எமக்கு எந்த ஐயமும் இல்லை. தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் தான் வளர்ச்சி என்ற வார்த்தைக்கே இடமிருக்கும். இதற்காக அவுஸ்திரேலிய வாழ் தமிழர்களுடைய முதற் படைப்பு தான் "இனியவளே காத்திருப்பேன்".

வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடையே பல கனவுகள் இருந்தபோதிலும் எமது கவனம் எமது போராட்டத்தை மையமாக வைத்து மட்டுமே இருந்தது. திரைப்படத்துறையில் ஆர்வம் இருந்த சிலரும் கூட எமக்கு ஒரு தளம் அமைக்க வேண்டும் என்று கருதாது இந்திய படைப்புகளுக்கு தயாரிப்பாளர்களாக மட்டுமே ஆனார்கள். ஒரு படைப்பின் தரத்தை இரண்டாகப் பிரிக்கலாம், ஒன்று கலைநுட்பம், இதற்கு படைப்பாளியே முக்கிய பங்கு வகிக்கின்றான். இன்னொன்று தொழில்நுட்பம். இதற்கு பொருளாதாரமே முக்கிய பங்கை வகிக்கின்றது. அதிக பணம் செலவு செய்து தயாரித்து அதை மீட்கும் நிலையில் எமது தளம் இன்று இல்லை.

திரைப்படத்துறை தொழில்நுட்பக் கலைஞர்களும் எமது இனத்தில் மிக குறைந்தவர்கள் என்றே கூறலாம். ஆனால் இதை நினைத்து இப்படியே இருந்துவிட்டோமேயானால் எப்போதுமே இப்படியே இருந்துவிட வேண்டியதுதான். படைப்பாளிகள் உருவாகின்றார்கள். தொழில்நுட்பவாதிகள் தாமாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். மக்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு, மக்களின் ஆதரவை அடையும் கலைஞர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஒரு படைப்பின் வெற்றியையும் ஒரு கலைஞனின் வெற்றியையும் மக்களே நிர்ணயிக்கின்றார்கள் என்று கூட கூறலாம். ஒரு படைப்பாளியை. ஒரு கலைஞனை வாழும் போது அடையாளம் கண்டு ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வெற்றி இனத்தின் வெற்றியாகவே மாறுகின்றது. ஒரு மனிதனுடைய வளர்ச்சியின் பெருமை அந்த இனத்திற்கும் பெருமை தரும் என்ற எண்ணம் இன மக்களிடம் நிச்சயம் வேண்டும். ஆதரவும் அரவணைப்பும் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தாக அமையும்.

கேள்வி: "இனியவளே காத்திருப்பேன்" உருவாக்கிய அனுபவம்?

திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு மாயையாகவே, சாமான்ய மக்களின் எட்டாக் கனவாகவே இருந்து வந்திருக்கின்றது. நாமும் அப்படியே நினைத்திருந்தோம். திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆசை இருந்த எமக்கு தயாரிப்பாளருக்காக காத்திருந்ததில் இது ஒரு நிறைவேறாத கனவாகவே ஆகிவிடும் என்ற ஐயம் இருந்தது. ஆகவே எம்மிடம் கைவசம் இருந்த தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பவாதிகளையும் வைத்துக்கொண்டு கலைஞர்களை தேடும் முயற்சியில் இறங்கினோம். அதில் எதிர்பாராத நடைமுறை சிக்கல்களை சந்திக்கவேண்டியிருந்தது.

சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் திரைப்படத்துறையை கலை கண்ணோட்டத்தோடு அனுகுபவர்கள் எமது சமுதாயத்தில் மிகச் சிலரே என்று புரிந்தது. இருந்த போதிலும் நட்புக்காக நடிப்பதற்கு சிலர் முன் வந்தனர். இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு திரைத்துறை அனுபவம் இல்லை என்றே கூறலாம். இத்தருணத்தில் எனக்கு ஊக்குவிப்பை தந்து அனுபவத்தை பரிமாறிக்கொண்டு என்னை மனம் தளராமல் வழிநடத்திச்சென்றவர் ரகுநாதன் ஐயா அவர்கள். எழுபது வயதை தாண்டி ஐம்பது வருட திரையுலக அனுபவம் கொண்ட அவர் பிரான்சில் இருந்து "இனியவளே காத்திருப்பேனுக்காக" இங்கு வந்து அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து, பங்களிப்பை தந்தது மட்டுமல்லாது எமக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது எமக்கு கிடைத்த பெரும் பேறு.

இவரோடு நாச்சிமார் கோயிலடி வில்லுப்பாட்டுக் கலைஞர் ராஜன் தம்பையா அவர்கள் ஜெர்மனியில் இருந்து வந்து ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்தது எமக்குப் பெருமை. திரைப்பட தொகுப்பை முடித்துக்கொண்டு சென்னை சென்று திரைப்பட இசையமைப்பாளர் உதயன் அவர்களை பின்னணி இசைக்காக நாடினோம். அவருடைய பின்னணி இசை திரைப்படத்திற்கு மெருகூட்டியது. இறுதியில் நாம் பட்ட கஷ்டங்களின் பயன் "இனியவளே காத்திருப்பேன்" ஒரு தரமான படைப்பாக உருவாகி இன்று திரையில் வெளிவரும் தருணத்தை அடைந்திருக்கின்றது.

கேள்வி: உங்கள் திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள் ஏதாவது உள்ளதா?

முக்கியமாக துப்பாக்கி கத்தி ரத்தம் குத்து சண்டை இல்லாத ஈழத்தமிழர்களுடைய முதலாவது படம் என்று பார்த்தவர்கள் கூறினார்கள். இரட்டை வேட காட்சி மற்றும் ஒருவர் பலராக தோன்றும் காட்சிகள் அமைந்துள்ளது. மக்களுடைய ஆதரவு இத் திரைப்படத்தின் முழு வெற்றிக்கு காரணமாக மட்டும் இல்லாமல் இனி வரும் படைப்புகளுக்கு தூண்டுகோலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. "இனியவளே காத்திருப்பேன்" ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களின் கலையுலக சாதனையில் இன்னுமொரு மைல்கல்.

-இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றிக்கு வாழ்த்துகள் ஈழன் இளங்கோ!