சுந்தர் சி இயக்கும் கலகலப்பு 2 - அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யா!

சுந்தர் சி இயக்கும் கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தில் அஞ்சலிக்கு பதில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் சிவா, அஞ்சலி, விமல் ஓவியா நடித்த படம் கலகலப்பு. கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வசூலைக் குவித்தது.

சுந்தர் சி இயக்கும் கலகலப்பு 2 - அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யா!

அடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் சுந்தர் சி. இப்போது இயக்கி வரும் அரண்மனை படம் முடிந்ததும் இந்த கலகலப்பு 2-வை இயக்குகிறார்.

முதல் பாகத்தில் நடித்த அதே சிவா, விமல், ஓவியா உள்ளிட்டோர்தான் இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். ஏற்கெனவே சிவா, விமல், ஓவியா ஆகியோரின் கால்ஷிட்டை சுந்தர் சி பெற்றுவிட்டாராம்.

ஆனால் அஞ்சலி வருவதுதான் சந்தேகமாக உள்ளதாம். இத்தனைக்கும் தமிழகத்திலிருந்தபடி இப்போது அஞ்சலிக்காக சில பஞ்சாயத்துகளை முன்னின்று பேசுபவர் சுந்தர் சிதானாம். இருந்தும் அஞ்சலியின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என்பதால், வேறு ஹீரோயினைப் பார்க்கத் தொடங்கியுள்ளார்.

அப்போதுதான் ஸ்ரீதிவ்யாவின் கால்ஷீட் கிடைத்திருக்கிறது. அஞ்சலிக்கு பதில் ஸ்ரீதிவ்யாவையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம் சுந்தர் சி.

 

வாடி வாசலில் ஆர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஸ்ருதிஹாஸன். இந்தப் படத்துக்கு வாடி வாசல் என தலைப்பிட்டுள்ளனர்.

'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. இவரும் ஆர்யாவும் இணைவதாக முதலில் செய்தி வெளியானபோது அதை மறுத்த மகிழ் திருமேனி, பின்னர் ஆர்யாவுடன் படம் செய்வது உண்மைதான் என அறிக்கை வெளியிட்டார்.

வாடி வாசலில் ஆர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன்!

ஹீரோயினாக முன்னணி நடிகையுடன் பேசி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இப்போது அந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஹீரோயின் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் முதல்முறையாக ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் இணைகிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என டைட்டில் வைத்திருக்கிறார்.

'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகும் வாடிவாசல் மதுரையை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இருக்கும் என்கிறார்கள்.

‘நான் அவன் இல்லை', ‘அஞ்சாதே', ‘மாப்பிள்ளை', ‘போடா போடி' ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது.

 

ஸ்ருதி ஹாஸனை தாக்கியவர் ஜாமீனில் விடுதலை: ஸ்ருதியை சந்திக்கத் தடை

ஸ்ருதி ஹாஸனை தாக்கியவர் ஜாமீனில் விடுதலை: ஸ்ருதியை சந்திக்கத் தடை

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸனை வீடு புகுந்து தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட ஸ்பாட் பாய் அசோக் த்ரிமுகே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 19ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள நடிகை ஸ்ருதி ஹாஸனின் வீடு புகுந்து அவரை ஒருவர் தாக்கியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அசோக் த்ரிமுகே என்ற ஸ்பாட் பாயை கைது செய்தனர்.

விசாரணையில் அசோக் கூறுகையில்,

நான் என் தம்பிக்கு ஸ்பாட் பாய் வேலை கேட்டுத் தான் ஸ்ருதி வீட்டுக்கு சென்றேன். அவரை பயமுறுத்த செல்லவில்லை. அவர் தான் என்னைப் பார்த்து பயந்து கதவை சாத்தினார் என்றார்.

இந்நிலையில் அசோக் ஜாமீன் கேட்டு பந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவர் வெளியே வந்த பிறகு ஸ்ருதியை சந்திக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

த்ரிஷாவின் திடீர் கழுதைப் பாசம்!!

நாய்கள், பூனைகள் என கைவிடப்பட்ட வீட்டு விலங்குகளைத் தேடிப் பிடித்து கரிசனமும் இரக்கமும் காட்டி வந்த நடிகை த்ரிஷாவின் திடீர் கழுதைப் பாசம்!!  

இதனால் கேட்பாரற்று தெருக்களிலும் சாலைகளிலும் திரியும் பல தெருநாய்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பூனைகளையும் ஆபத்திலிருந்து காக்க வலியுறுத்தி வருகிறார்.

நாய், பூனை மீது பாசம் காட்டிய திரிஷா தற்போது கழுதைகள் மீது பாசம் காட்ட தொடங்கியிருக்கிறார்.

நாய்களுக்கென்று நாய்கள் தினம் கொண்டாடும் திரிஷா, கழுதைகள் தினம் என்ற தலைப்பில் கழுதைகளுக்கு ரொட்டித் துண்டு போன்ற உணவுகளைத் தருவதுபோன்ற படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். அவருடன் வேறு சி்ல நடிகைகளும் கைகோர்த்துள்ளனர்.

விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீடாவின் விளம்பரத் தூதராக இருந்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. கையில் போதிய படங்கள் இல்லாத நிலையில், கிடைக்கிற பொழுதை இப்படி விலங்குகள் நலம் பேணுவதில் கழிக்க ஆரம்பித்துள்ளாராம் த்ரிஷா.

 

அஜீத், சிம்புவுடன் டூயட் பாடப் போகும் புது ஹீரோயின் பல்லவி ஷர்தா!!

சிம்பு மற்றும் அஜீத் படங்களில் ஹீரோயினாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா பட்டம் வென்ற பல்லவி ஷர்தா.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் கவுதம் மேனன்.

அஜீத், சிம்புவுடன் டூயட் பாடப் போகும் புது ஹீரோயின் பல்லவி ஷர்தா!!

இப்போது சிம்புவை வைத்து ஒரு படத்தையும் அந்தப் படம் முடிந்த கையோடு அஜீத்தை வைத்து ஒரு படமும் இயக்குகிறார்.

இந்தப் படங்களில் பாலிவுட் நடிகை பல்லவி ஷர்தாவை தனது இரண்டு படங்களிலும் நடிக்க வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கவிருக்கிறார்.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு பிறகு ஆஸ்திரேலியாவில் குடியேறிய தம்பதிகளுக்கு மகளாய் பிறந்தவர் பல்லவி ஷர்தா.

நடிப்பில் மட்டுமல்லாமல் பரத நாட்டியத்தையும் கற்றுக் கொண்ட பல்லவி ஷர்தா 2010-ல் ‘மிஸ் இந்தியா ஆஸ்திரேலிய'அழகியாக பட்டம் பெற்றவர். சமீபத்தில் வெளியான 'பேஷ்ராம்' திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்த பல்லவி ஷர்தாவின் நடிப்பைப் பார்த்து கௌதம் மேனன் அவரைத் தேர்ந்தெடுத்தாராம்.

பாலிவுட் நடிகையை தமிழில் அறிமுகப்படுத்துவதோடு, தனது அடுத்தடுத்த இரு படங்களுக்கும் 'சல்லிசாக' ஒப்பந்தம் செய்துவிட்ட கவுதம் மேனன் கில்லாடிதான் என்கிறது கோலிவுட்.

 

தல, தளபதி சேர்ந்து நடிச்சா நான் அந்த படத்தை தயாரிக்க ரெடி: ஜே. அன்பழகன் எம்.எல்.ஏ.

சென்னை: அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை தயாரிக்க தான் தயாராக இருப்பதாக அன்பு பிக்சர்ஸ் உரிமையாளரும், திமுக எம்.எல்.ஏ. வுமான ஜே. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து 1995ம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர். அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு ஒருவர் படத்தில் மற்றொருவரை கிண்டல் அடிப்பது, பஞ்ச் வசனம் பேசுவது என்று இருந்தனர்.

தல, தளபதி சேர்ந்து நடிச்சா நான் அந்த படத்தை தயாரிக்க ரெடி: ஜே. அன்பழகன் எம்.எல்.ஏ.

இந்நிலையில் அஜீத்தும், விஜய்யும் தற்போது நல்ல நண்பர்களாகிவிட்டனர். ஒரு காலத்தில் கோபத்தில் கொந்தளித்த அஜீத் தற்போது சாந்தமாகிவிட்டார். அஜீத்தின் குணத்தை விஜய் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ராஜாவின் பார்வையிலே படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் இதுவரை ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை.

இந்நிலையில் அஜீத் குமாரும், விஜய்யும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை எனது அன்பு பிக்சர்ஸ் மூலம் தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அஜீத் மற்றும் விஜய் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு அவர்கள் நடித்தால் அந்த படத்தை தயாரிக்க நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜய்யின் தலைவா பட ரிலீஸில் பிரச்சனை வந்தபோது அதை ரிலீஸ் செய்ய ஜே. அன்பழகன் முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை இருக்கும் ஆபாச சிடி?: பரபரக்கும் திரையுலகம்!

ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை இருக்கும் ஆபாச சிடி?: பரபரக்கும் திரையுலகம்!

சென்னை: ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார்.

ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகைன், கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் போன இடத்தில் அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம்.

அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.

இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேயுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம்.

இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.

 

ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகரின் புது ஆல்பம்!

ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகர் என்ற பெருமையைப் பெற்ற ஹிப் ஹாப் தமிழன் ஆதி, தனது இரண்டாவது இசை ஆல்பத்தை விரைவில் வெளியிடுகிறார்.

'க்ளப்புல மப்புல திரியிற பொம்பள என்னடி நடக்குது செந்தமிழ் நாட்டுல...' என்ற பாடல் மூலம் பிரபலமானவர் ஆதி.

ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகரின் புது ஆல்பம்!

கோவையைச் சேர்ந்த இளைஞர். எஞ்ஜினியரிங் முடித்துவிட்டு, வெளிநாட்டு வேலைக்கெல்லாம் போகாமல், இசைத் துறையைத் தேர்வு செய்தவர்.

சினிமா தவிர்த்து, தனி இசை ஆல்பங்கள் பெரும்பாலும் தமிழில் பெரிய அளவில் எடுபடுவதில்லை. அந்தப் போக்கை கடந்த ஆண்டு உடைத்தார் ஆதி. இவரது ஹிப் ஹாப் தமிழா சர்வதேச அளவில் ஹிட்டானதுடன், இந்தியாவின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையையும் பெற்றது.

இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களில் அனிருத் இசையில் எதிர் நீச்சலடி, சென்னை சிட்டி கேங்ஸ்டா பாடல்களைப் பாடினார்.

ஹாலிவுட் படமான ஸ்மர்ப் 2-ல் இடம்பெற்ற நா நா நா பாடலுக்கு இவர்தான் இசையமைத்தார். இதன் மூலம் ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகர் என்ற பெருமை ஆதிக்கு கிடைத்தது.

ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த முதல் தமிழ் ராப் பாடகரின் புது ஆல்பம்!

இப்போது ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப் அமைப்புடன் இணைந்து இரண்டாவது ஆல்பத்தை வெளியிடுகிறார் ஆதி. இந்த ஆல்பத்துக்கு சூட்டப்பட்டுள்ள தலைப்பு 'இன்டர்நேஷனல் தமிழன்'.

இந்த ஆல்பத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஆதி, 'இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை. காரணம், நான் இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளேன். எனக்கு எல்லாமே மீடியாதான். அந்த ஆதரவுதான் என்னை ஹாலிவுட் வரை அழைத்துப் போனது. இந்த இரண்டாவது ஆல்பத்தை ரெமி மார்ட்டின் ஹிப் ஹாப் மூலம் வெளியிடுவது பெருமையாக உள்ளது," என்றார்.

 

வீரம் படத்தின் சென்னை, என்எஸ்சி உரிமையைப் பெற்றார் ராம நாராயணன்!

சென்னை: அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் சென்னை விநியோக உரிமையைப் பெற்றுள்ளார் இயக்குநர் ராம நாராயணன்.

பொங்கலை முன்னிட்டு அஜீத்தின் ‘வீரம்', விஜய்யின் ‘ஜில்லா' ஆகிய படங்கள் மோதுகின்றன.

ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10-ம் தேதி ரிரீஸ் என்று சொல்லப்பட்டாலும் இன்னும் சந்தேக நிலை நிலவுகிறது.

வீரம் படத்தின் சென்னை, என்எஸ்சி உரிமையைப் பெற்றார் ராம நாராயணன்!

7 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத்தின் ஆழ்வார் படத்துடன் விஜய்யின் போக்கிரி மோதியது. அன்று ஆழ்வார் படுதோல்வியைச் சந்தித்தது. போக்கிரி வசூலில் வெளுத்து வாங்கியது.

இந்த முறையும் அஜீத்தின் வீரத்துடன் பலப்பரீட்சை செய்து பார்க்கவும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார் விஜய்.

இப்போதைக்கு இவ்விரு படங்கள் மட்டும் பொங்கலுக்கு உறுதியாகியுள்ளதால் அதன் வியாபாரங்கள் துவங்கிவிட்டன. இதில் கொஞ்சம் முன்பாகவே ‘ஜில்லா' படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டது. தியேட்டர் புக்கிங்கும் படுவேகமாக நடந்து வருகிறது.

வீரம் படத்தின் சென்னை, என்எஸ்சி உரிமையைப் பெற்றார் ராம நாராயணன்!

தற்போது அஜீத் படத்தின் விநியோக உரிமை விற்பனை சூடு பிடித்துள்ளது. 'வீரம்' படத்தின் சென்னை, என்.ஏ.சி.ஏரியாவின் விநியோக உரிமையை இயக்குனர் இராம நாராயணனின் ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, என்எஸ்சிதான் (வட, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு) பெரிய ஏரியாக்கள். அதிக தியேட்டர்கள் உள்ள ஏரியாக்கள் இவை.

மற்ற ஏரியாக்களுக்கான வீரம் பட வியாபாரம் நடந்து வருகிறது.