திருநங்கை ரோஸ் நடிக்கும் 'கிரிக்கெட் ஸ்கேன்டல்'!

Transgender Rose S Debut Movie Cricket Scanal

திருநங்கை ரோஸ் நடிக்கும் படத்துக்கு கிரிக்கெட் ஸ்கேன்டல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் நடக்கும் சூதாட்டங்கள் மற்றும் உள் அரசியலை இந்தப் படத்தில் தோலுரித்துக் காட்டப் போகிறார்களாம்.

இப்படிக்கு ரோஸ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான திருநங்கை ரோஸ் நடிக்கும் படம் இது. ஒரு திருநங்கை ஹீரோயினாக நடிப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும் என பெருமையோடு கூறிக் கொண்டது கிரிக்கெட் ஸ்கேன்டல் குழு, சமீபத்திய பிரஸ் மீட்டில்.

இந்தரப் படத்தை இயக்குபவரும் ரோஸ்தான். ஏ செந்தில்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப் போகிறார்கள்.

படம் குறித்து ரோஸ் கூறுகையில், "இந்தப் படம் கிரிக்கெட் உலகின் இன்னொரு பக்கத்தை உலகுக்குக் காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. வெறும் சூதாட்டம் மட்டுமே இதில் இல்லை. அரவாணிகளின் வாழ்க்கை பற்றியும் சொல்லியிருக்கிறேன்," என்றார்.

கிரிக்கெட் வீரர்களாக நடிக்கும் அனைவருமே புதுமுகங்கள். தெரிந்த முகங்களை அந்த ரோலில் நடிக்க வைத்தால் பிரச்சினை வரும் என்பதால் இந்த முடிவு என்றார் ரோஸ்.

 

விஸ்வரூம் டிடிஎச்சிலும் இல்லை.. தியேட்டரிலும் இல்லை... ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளிப் போனது!!

No Dth Release Viswaroopam Postponed To Jan 25   

சென்னை: பெரும் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த விஸ்வரூபம் படம் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லை.

இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. வரும் ஜனவரி 25-ம் தேதி தியேட்டர்களில் நேரடியாக வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் இறுதியானதா என்பதை கமல் உறுதி செய்யவில்லை.

விஸ்வரூபம் படத்தை கமல் எழுதி இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம்தான் இந்தப் படத்தை முதலில் தயாரித்தது. ஆனால் ரூ 50 கோடி வரை செலவழித்தவர்கள், ஏறிக் கொண்டே போன பட்ஜெட்டைப் பார்த்து, பின்வாங்கிவிட்டனர். கமலே தயாரிப்பையும் ஏற்றார். தியேட்டர்களில் பிரத்தியேகமாகப் பார்க்கும் வகையில் ஆரோ 3 டி ஒலி நுட்பத்தைப் பயன்படுத்தினார்.

கடைசியில் ரூ 95 கோடி வரை இந்தப் படத்துக்கு பட்ஜெட் எகிறிவிட்டது என்றார் கமல். இந்தத் தொகையை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டதால் படத்தை டிடிஎச் மூலம் வீடுகளில் முதலில் வெளியிடுவது, அடுத்த நாள் தியேட்டர்களில் வெளியிடுவது என்ற முடிவுக்கு வந்தார் கமல்.

இதனை அவர் வெளியிட்ட உடன் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. கமல் முடிவை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கவில்லை. அவரது எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என அறிவித்துவிட்டனர்.

இன்னொரு பக்கம் கமல் மும்முரமாக டிடிஎச் முயற்சியில் இறங்கினார். ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ், சன், வீடியோகான், டிஷ் ஆகிய 6 டிடிஎச் நிறுவனங்கள் இதில் கமலுடன் கைகோர்த்தன.

ஒரு இணைப்புக்கு ரூ 1000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே கமலுக்கு பெரும் லாபம் கிட்டும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் நடந்ததே வேறு. கமல் எதிர்ப்பார்த்த மாதிரி டிடிஎச்சில் முன்பதிவு நடக்கவில்லை. சில ஆயிரம் பேர்தான் ஒவ்வொரு டிடிஎச்சிலும் கட்டணம் செலுத்தி பதிவு செய்தனர், கடைசி நாளான நேற்றுவரை.

இன்னொரு பக்கம் 45 திரையரங்குகள் மட்டுமே இந்தப் படத்தைத் திரையிட முன்வந்தனர்.

இந்த நிலையில் கார்ப்பொரேட் தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாகியின் முயற்சியில், திரையரங்க உரிமையாளர்களுக்கும் கமலுக்கும் இடையில் சமரசப் பேச்சு நேற்று நடந்தது. விடிய விடிய நடந்த இந்த பேச்சில் விஸ்வரூபம் படம் எந்த அளவு சிக்கலில் உள்ளது என்பது குறித்து விவாதித்தனர்.

கடைசியில் இந்தப் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதிலிருந்து கமல் பின்வாங்கியதாகத் தெரிகிறது. அதே நேரம் படத்தை திட்டமிட்டபடி ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதிலும் சிக்கல் எழுந்தது. காரணம் அன்றைய தினம் வெளியாகும் அலெக்ஸ் பாண்டியனுக்கு அதிகபட்ச அரங்குகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் கமல் படத்துக்கு தரமான அரங்குகள் கிடைக்காது என்பதாலும், படத்தை யார் வெளியிடுவது என்பதில் எழுந்த சிக்கல் காரணமாகவும், இப்போதைக்கு படத்தை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

அபிராமி ராமநாதன் அல்லது ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடக் கூடும் என்று கடைசி நேர தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விஸ்வரூபம் படத்தைத் திரையிட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

Madras Hc Refutes Stay Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் படத்தைத் திரையிடுவதைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. எனவே படத்தைத் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் விஸ்வரூபம் படத்தைத் திரையிடுவதற்கு தடை ஏதும் இல்லை.

விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி ரீஜென்ட் சாய் மீரா என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அதில், கமல்ஹாசன் நடித்த மர்மயோகி திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தக்கு, கமல் 10.50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதுவரை விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்குக்குக் கமல்ஹாசன் சார்பி்ல தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவரது தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் படத்தைத் திரையிடுவதைத் தடை செய்தால் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், படத்துக்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

இதன் மூலம் விஸ்வரூபம் படத்தைத் திரையிட தடை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி உலகெங்கும் விஸ்வரூபம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

 

என் கதையை விற்கும் உரிமையை பாலச்சந்தர் மகளுக்கு யார் கொடுத்தது? - கே பாக்யராஜ்

Bagyaraj Alleged K Balachander Daughter

சென்னை: இன்று போய் நாளை வா என்னுடைய கதை, எனது படைப்பு என்பது தமிழ் சினிமாவில் தெரியாதவர்களே கிடையாது. அப்படி இருந்தும் என் கதையை தனக்கு சொந்தமானது என பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விற்றிருப்பதை என்னவென்பது, என்கிறார் வேதனையுடன் இயக்குநர் கே பாக்யராஜ்.

திரைக்கதை மன்னன் என்றும் இயக்குநர் திலகம் என்று புகழப்படும் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் இன்று போய் நாளை வா. இந்தப் படத்தின் கதையை பாக்யராஜுக்கே தெரியாமல் விற்று பெரும் பணம் சம்பாதித்துள்ளார் புஷ்பா கந்தசாமி. அந்தக் கதையை சத்தமில்லாமல் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று படமாக எடுத்து, பொங்கலுக்கு அவசர அவசரமாக வெளியிடத் தயாரானபோது, கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர் தயாரிப்பாளர்கள் ராம நாராயணனும் சந்தானமும்.

இந்தக் கதைத் திருட்டு குறித்து போலீசுக்கு 3 பக்க புகார் கடிதம் அனுப்பியுள்ள பாக்யராஜ், படத்தைத் தடை செய்ய வழக்குத் தொடரவும் தயாராகி வருகிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தன் வேதனையை கொட்டித் தீர்த்துவிட்டார்.

"தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவில் உள்ள அனைவருக்குமே தெரியும் எனது கதைகள் பற்றி. யாராக இருந்தாலும் என் கதையை உரிய முறையில் கேட்டு படம் பண்ணி ஜெயித்திருக்கிறார்கள். இந்தியில், தெலுங்கில் இன்று வரை அப்படித்தான் நடக்கிறது.

ஆனால் இங்கே தமிழ் சினிமாவில் நடந்திருக்கும் அநியாயம் சொல்ல முடியாதது. ஒரு படைப்பாளியை இப்படியா கேவலப்படுத்துவார்கள்?

கதைக்கு சொந்தக்காரன் நான். திரைக்கதை, வசனம் அனைத்தும் எனக்கே உரியது. இந்தக் கதையை படமாக எடுக்க புஷ்பா கந்தசாமி என்னிடம் கேட்டார். நான் தரமுடியாது என்று கூறிவிட்டேன். காரணம் என் மகனை வைத்து இந்தப் படத்தை எடுத்து அவனுக்கு ஒரு பிரேக் தர விரும்பினேன். அடுத்து ராமநாராயணன் கேட்டார். அவருக்கும் அதே பதில்தான்.

நான் கதையைத் தரவில்லை என்றவுடன், என் கதையின் உரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறி புஷ்பா கந்தசாமியும் அவரது குடும்பத்தினரும் ராமநாராயணனுக்கு விற்று பணம் பார்த்திருக்கிறார்கள்.

இது நியாயமா...?," என்றார்.

 

கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு - டிடிஎச்சில் வெளியிடும் திட்டம் ரத்து?

Kamal Drops His Dth Release Plan

சென்னை: கமலுடன் திரையரங்க உரிமையாளர்கள் நேற்றி இரவிலிருந்து விடிய விடிய நடத்திய பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் டிடிஎச்சில் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிடிஎச்சில் வெளியாவதால் வட இந்தியாவில் விஸ்வரூபத்துக்கு ஒரு தியேட்டர் கூட ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும் பிவிஆர் சினிமாஸ் குழுமம் கமலுக்கு வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் இரு வாரங்களுக்குப் பின்பே வெளியிட வேண்டிய சூழல். தமிழகத்திலும் சுமூக நிலை இல்லை. 45 திரையரங்குகள்தான் படத்தை வெளியிட முன்வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்களுடன் நேற்றிலிருந்து விடிய விடிய கமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்த பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. முடிவில் டிடிஎச்சில் படத்தை முதலில் வெளியிடும் தன் முடிவை கமல் கைவிட சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.

டிடிஎச் மூலம் ஒளிபரப்புவதில், கமல் எதிர்ப்பார்த்த அளவு முன்பதிவு ஆகவில்லை என்பதும் இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த விரிவான செய்தி இன்று பிற்பகலுக்குள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

அஜீத் படத்துக்கு 'கஷ்ஷ்ட்டப்பட்டு' தலைப்பு வச்சிட்டோம் - ஆனா இப்போ சொல்லமாட்டோம்! - விஷ்ணுவர்தன்

Ajith S Film Title Finalised

அஜீத் நடிக்கும் படத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டு பெயர் வைத்துவிட்டதாகவும், ஆனால் அதை இப்போது வெளிப்படுத்த முடியாது என்றும் படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா ஜோடியாக நடிக்க, ஆர்யா - டாப்ஸி உடன் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் படம் இது.

இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்கவில்லை. தலைப்பை முன்கூட்டியே அறிவித்தால், அந்தப் பெயரில் ரசிகர்கள் இணையதளம், ஆப்ஸ் என அனைத்தையும் உருவாக்கி இம்சை தருவதால் அமைதி காப்பதாக கூறினர்.

இன்னொரு பக்கம் இதை வைத்தே கொஞ்ச காலத்துக்கு பரபரப்பாக செய்தியை கிளப்பலாம் என்ற அவர்களின் திட்டமும் பக்காவாக நிறைவேறி வருகிறது. வாரத்துக்கு ஒரு முறை இந்தப் படத் தலைப்பு குறித்து எதையாவது சொல்லி வைப்பார்கள் (தலைப்பைத் தவிர!).

அந்த வகையில் இப்போதும் தலைப்பு குறித்து பேசியுள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்தன். "அஜீத் படத்துக்கு மிகக் கஷ்டப்பட்டு தலைப்பு வைத்துவிட்டோம். முன்னெப்போதும் எங்களுக்கு இப்படி நேர்ந்ததில்லை. ஆனால் இப்போது அதனை அறிவிக்கப் போவதில்லை," என்றார்.

இந்தத் தலைப்பை அறிவிக்க தனி விழா எடுக்கும் திட்டமுள்ளதாம்..!

எப்படியோ.. ரிலீசுக்கு முன்னேயாவது சொல்லிடுங்கப்பா!!

 

பெண்களை அடித்து துன்புறுத்துபவர் தான் சல்மான் கான்: பிக் பாஸ் ஷோ போட்டியாளர் சப்னா தாக்கு

Bigg Boss 6 Salman Khan Is Serial Woman Beater

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் பெண்களை அடித்து துன்புறுத்துபவர் என்று பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிகை அலங்கார நிபுணர் சப்னா பாவ்னானி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இருந்து சிகை அலங்கார நிபுணர் சப்னா பாவ்னானி(42) அண்மையில் வெளியேற்றப்பட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சல்மானை இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக நான் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் சாதாரண மனிதர் அதனால் அவர் ஏதாவது தவறாகக் கூறினால் அது குறித்து கருத்து தெரிவிக்க நான் பயப்படவில்லை. பின்விளைவுகளை நினைத்து நான் அஞ்சவில்லை. எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே செய்வேன்.

சல்மான் ஒரு ஆணாதிக்கவாதி. அவர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாகுபாடு பார்ப்பவர். பெண் போட்டியாளர்களைப் பார்த்து உங்களால் முடியாது என்பார். அவர் பெண்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார். அவர் பெண்களை அடித்து துன்புறுத்துபவர்.

பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. பிக் பாஸ் வீட்டில் தங்கியதில் மகிழ்ச்சியாக இருந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் அங்கு பழகிய அசீம் திரிவேதி, நிகேத்தன், தினேஷ், கரிஷ்மா மற்றும் ஊர்வசி ஆகியோருடன் தொடர்பில் இருப்பேன். அசீம் எனக்கு சகோதரர் மாதிரி. அதே சமயம் ராஜீவ் பால், சனா கானுடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை. அவர்கள் போலியாக பழகுகின்றனர் என்றார்.

சல்மானின் கானின் முன்னாள் காதலிகள் ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் ஆகியோர் அவரிடம் அடி வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ 1.5 கோடி... மீண்டும் குவியும் வாய்ப்புகள்!

Tamanna Gets Whopping Rs 1 5 Cr Ajith Movie   

அஜீத் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ரூ 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடிக்கிறாராம் தமன்னா.

2010-2011 ஆகிய இரு ஆண்டுகளிலும் கோடம்பாக்கத்தைக் கலக்கியவர் தமன்னா. ஆண்டு முழுவதும் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

ஆனால் ஒரு காதல் பிரச்சினை அவரை அப்படியே கவிழ்த்துவிட்டது. கோடம்பாக்கத்தை காலி செய்து கொண்டு ஹைதராபாதுக்கே போக வேண்டிய நிலைக்கு அவரைத் தள்ளியது.

தனக்குப் படங்கள் வராமல் போனதற்குக் காரணம் குறிப்பிட்ட ஒரு நடிகரும் அவரது குடும்பத்தினரும்தான் என்று தமன்னா பல முறை புகாராகக் கூறிவந்தார். நேரம் வரும்போது அவர்கள் பெயரை வெளியிடப் போவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், எந்த தவறான பிரச்சாரத்தையும் நம்பாத அஜீத், சிறுத்தை சிவா இயக்கும் தனது புதிய படத்தில் நாயகியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார். அதுவும் தமன்னா எந்த பேரமும் பேசும் முன்பே, அவருக்கு ரூ 1.5 கோடி தருவதாகக் கூறி வாயடைக்கச் செய்துவிட்டார்களாம்.

அஜீத் பட வாய்ப்பு வந்த நேரம்.. மீண்டும் பெரிய தயாரிப்பாளர்கள் தமன்னாவுக்கு அட்வான்ஸ் தர நேரம் கேட்டுள்ளார்களாம்.

இப்போது தமன்னா மகா உற்சாகத்திலும், தன் வாய்ப்புகளை தடுத்தவர்கள் மீது கோபத்திலும் உள்ளார். அஜீத் படம் வெளியாகட்டும். அதன் பிறகு என் வளர்ச்சியைத் தடுத்தவர்கள் பற்றி புட்டுப் புட்டு வைக்கிறேன், என்கிறாராம்.

பார்த்துங்க அம்மணி... புட்டுக்கப் போகுது!

 

ஒரு நாள் முன்கூட்டியே வெளியாகிறது அலெக்ஸ் பாண்டியன்!

Alex Pandian Preponed   

இந்த பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படங்களில் அதிகபட்ச நம்பிக்கையுடன், எந்த சச்சரவுமில்லாமல் வெளியாகும் ஒரே க்ளீன் படம் என்றால் அது அநேகமாக கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன்தான்.

இந்தப் படத்துக்கு அதிகபட்ச திரையரங்குகளும் கிடைத்துள்ளன. பெரிய அளவில் டிக்கெட் முன்பதிவை எதிர்ப்பார்ப்பதால், வரும் ஜனவரி 11-ம் தேதியன்றே படத்தை வெளியிட ஸ்டுடியோ கிரீன் முடிவு செய்துள்ளது.

முன்னதாக வரும் ஜனவரி 12 சனிக்கிழமைதான் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள்.

கார்த்தி - அனுஷ்கா - சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கங்னம் ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ள பேட் பாய் பாடல்.

சுராஜ் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 400-க்கும் அதிகமான அரங்குகளில் தமிழகத்தில் வெளியாகிறது. ஆந்திராவிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

 

சட்டம் பற்றிக் கூறும் சத்தியத் தராசு

Sathiyam Tv On Sathiya Tharasu

"சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீல்களின் வாதம்தான் வெளிச்சம் தரும் விளக்கு" என்பார்கள். சட்டம் பற்றி சாமான்ய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சத்தியம் தொலைக்காட்சியில் ‘சத்தியத்தராசு' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சத்தியம் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, சத்தியத்தராசு.

வாழ்வில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள் வலிமையானவர்களால் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளான மக்கள் அனைவரும் சட்டத்தின் மூலமாக நிரந்தர தீர்வு காண விரும்புகிறார்கள்.

வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் சட்டத்தின் கதவு திறக்குமா? ஏழ்மையானவர்களும் சட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ள சத்தியம் டிவி சத்தியத்தராசு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இரண்டு வழக்கறிஞர்களை கொண்டு சட்டத்தை பற்றி விளக்கும் நிகழ்ச்சி இது.

எந்த பிரச்சினைக்கு, எந்த மாதிரியான சட்டங்களின் மூலம் தீர்வு காண முடியும்? சில பிரச்சினைகளுக்கு வழக்கு தொடர்வது, மற்றும் அதை எதிர்கொள்வது என்பது பற்றியும் இந்த நிகழ்ச்சியில் விரிவாக சொல்லப்படுகிறது. சனிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு சத்தியம் டிவியில் ஒளிபரப்பாகிறது சத்தியத்தராசு.

 

சேவை வரிக்கெதிரான உண்ணாவிரதம் - கடைசிவரை கமல் வரவே இல்லை!

Kamal Fails Attend Fasting Against Service Tax

சென்னை: சேவை வரிக்கெதிராக திரையுலகினர் இன்று மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் கடைசி வரை கமல்ஹாஸன் பங்கேற்கவில்லை.

காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. தொடங்கயி சில நிமிடங்களுக்குள் ரஜினி வந்துவிட்டார். மேடையில் சரத்குமார், ராதாரவியுடன் பகல் 12 மணி வரை அவர் அமர்ந்திருந்தார்.

பின்னர் சேவை வரியை திரும்பப் பெறுங்கள்.. மற்ற வரிகளை வசூலிக்கும் சட்டத்தைக் கடுமையாக்குங்கள். வரிகள் கட்டாதவர்களை கடுமையாக தண்டியுங்கள் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

மாலையில் கமல் வந்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என்று தெரிவித்தனர். எனவே மாலை 5 மணிவரை கமலுக்காகக் காத்திருந்தனர். ஆனால் கமல் கடைசி வரைவே இல்லை.

அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார் என்ற தகவலை கடைசியில்தான் சொன்னார்கள்.

இந்த உண்ணாவிரதத்துக்கு அனைவரும் வந்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று நடிகர் சங்கம் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது நினைவிருக்கலாம்.

 

திருமணத்தின் மீது நம்பிக்கையில்லா ராம் கோபால் வர்மா மகளுக்கு நிச்சயதார்த்தம்

Ram Gopal Varma S Daughter Gets Engaged

ஹைதராபாத்: திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறும் இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது மகள் ரேவதிக்கு கமுக்கமாக நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளார்.

சர்ச்சைக்கு பெயர்போன இயக்குனர் ராம் கோபால் வர்மா தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை என்று கூறுவார். அப்படி இருக்கையில் எம்.பி.பி.எஸ். படிக்கும் அவருடைய மகள் ரேவதிக்கும், அவருடைய டாக்டர் காதலன் பிரவனுக்கும் கடந்த 2ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராடிஸன் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நிச்சயதார்த்தத்திற்கு இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே வர்மா அழைத்திருந்தார். மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது பற்றி வாய் திற்ககாமல் இருக்கிறார் மனிதர்.

இந்நிலையில் இது குறித்து ராஜமவுலி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

ரேவதியின் நிச்சயதார்த்தத்தில் ராம்கோபால் வர்மா ஒரு பொறுப்பான தந்தையாக செயல்பட்டதைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. என்ன ஒரு காட்சி!!! ஹா ஹா ஹா என்று தெரிவித்துள்ளார்.

நிச்சயதார்த்தம் முடிந்தும் ராம் கோபால் வர்மா திருமணத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

 

''ஓ மை காட், கிம் பிரக்னென்டாமே''.. (மேஜர் சுந்தரராஜன் ஸ்டைலில் படிங்கோ)!

Kim Kardashian Is Pregnant

மியாமி: ஊரெல்லாம் உன் பாட்டுதான் என்பது போல உலகெல்லாம் பெரும் பிரபலமாக உள்ள கிம் கர்தஷியான் கர்ப்பமாகியுள்ளார். மேடிட்ட வயிற்றுடன் தனது பாணியில் கவர்ச்சிகரமான உடையில் உலா வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் கிம்.

மியாமியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த டின்னருக்கு அட்டகாசமான நீல நிற உடையில் வந்த கிம் அனைவரின் கண்களையும், உள்ளத்தையும் கவர்ந்து விட்டார்.

பீக்பூ கட்டுடன் அவர் போட்டிருந்த உடையில் அவரது மார்பழகு படு அழகாக பளிச்சிட்டது. மேலும் அவரது மேடிட்ட வயிற்றையம் காட்டுவதாக அது அமைந்திருந்தது.

டின்னரை முடித்த பின்னர் வெளியே வந்த கிம், அங்கு கூடியிருந்த ரசிகர்களையும் சந்தித்து ஜாலியாக சிறிது நேரம் பேசி விட்டு, போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து விட்டுக் கிளம்பிச் சென்றார்.

32 வயதான கிம்முக்குத் துணையாக இரண்டு பெண்கள் உடன் வந்திருந்தனர். கிம்மும், கென்யே வெஸ்ட்டும் ரொம்ப நாட்களாக காதலித்து வருகின்றனர். சேர்ந்து வாழ்ந்தும் வருகின்றனர். அவர்களுக்கு இதுதான் முதல் குழந்தையாகும்.