கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக பாலிவுட் சண்டை இயக்குனர் டினு வர்மா தயாரித்து இயக்கியிருக்கும் படம், 'காட்டுப்புலி'. அர்ஜுன், பியங்கா தேசாய், ராஜ் நீஸ், சாயாலி பகத், அமீத், ஹனயா, ஜாஹன், ஜெனிபர் உட்பட பலர் நடித்துள்ளனர். புனிதமான துறையாகக் கருதப்படும் மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால் சமூகத்துக்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்பது இப்படத்தின் கதை. தனது மனைவி குழந்தையுடன் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் டாக்டர் அர்ஜுனுக்கு உதவி செய்ய வரும் மூன்று ஜோடிகள், அதைத் தொடர்ந்து ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள், கொலைகள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது படம். இதில் ஜாஹன், ஜெனிபர் நடித்துள்ள முத்தக்காட்சிக்கு சென்சார் 14 கட் கொடுத்துள்ளனர். வரும் 17ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் ரிலீஸ் ஆகிறது.
ஆராய்ச்சி மாணவராக விதார்த்
பாரதிராஜா உதவியாளர் மங்கள் இயக்கும் படம் 'காட்டுமல்லி'. ராதாகிருஷ்ணன், ரகு தயாரிக்கின்றனர். இசை, ஷியாம். ஹீரோவாக நடிக்கும் விதார்த் கூறியதாவது: இதில் கல்லூரி மாணவனாக நடிக்கிறேன். கெட்டப் மாற்றி, உடல் எடை குறைத்துள்ளேன். படிக்கும்போது, அடர்ந்த காடுகளுக்கு சென்று, தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடும் கேரக்டர். 24ம் தேதி முதல் பாபநாசம், பாணதீர்த்தம் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. அப்பகுதியில் வசிப்பவர்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
ஸ்ரீதேவியுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம்
தமிழில் 'வாமனன்', 'புகைப்படம்', '180' ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பிரியா ஆனந்த். தற்போது, இந்திப் பட இயக்குனர் பால்கி தயாரிப்பில், அவர் மனைவி கவுரி இயக்கும், 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி பிரியா ஆனந்த் கூறியதாவது: இது எனக்கு முதல் இந்திப் படம். ஷூட்டிங் முழுவதும் நியூயார்க்கில் நடந்தது. படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. இருந்தாலும் இதில் ஸ்ரீதேவியுடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. அவரது நடிப்பை பார்த்து வளர்ந்தவள் நான். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கியிருக்கிறேன். இப்போது கிடைத்தது என் அதிர்ஷ்டம். ஏனென்றால் இந்தப் படம் மூலம் தான் அவர் ரீஎன்ட்ரி ஆகிறார். இதில் அமிதாப்பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கிலும் இந்தப் படம் டப் ஆகும் என்று நினைக்கிறேன்.
தொடர்ந்து படம் தயாரிக்க சித்தார்த் முடிவு
காதலில் சொதப்புவது எப்படி?' மூலம் இணை தயாரிப்பாளரான சித்தார்த், தொடர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். 'காதலில் சொதப்புவது எப்படி?'க்கு பிறகு தொடர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. படம் இயக்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அது பெரிய பொறுப்பு. நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
5000 போட்டோக்களுடன் மதுபானக்கடை விளம்பர ஆல்பம்
மான்டேஜ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம், 'மதுபானக்கடை'. கார்த்திவேல், தியானா, அரவிந்த் அண்ணாமலை, 'பூ' ராமு உட்பட பலர் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம் ஐயப்பன். பாடல்கள், என்.டி.ராஜ்குமார். படத்தை இயக்கியுள்ள கமலக்கண்ணன் கூறியதாவது: மதுபானக்கடையில் நடக்கும் கதைதான் படம். முதல்நாள் இரவு பத்து மணிக்கு கடை அடைக்கப்படுவதிலிருந்து மறுநாள் இரவு அடைக்கப்படுவதுவரை டாஸ்மாக்கில் நடக்கும் விஷயங்களை சொல்லியிருக்கிறோம். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. ஹீரோ என்று பார்த்தால் மதுபானக்கடைதான். ஒரு லொகேஷனை மட்டும் மையப்படுத்தி படம் வருவது தமிழில் இதுதான் முதன்முறை. இதில் நவீன கவிஞர் என்.டி.ராஜ்குமார் பாடல் எழுதியிருப்பதோடு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்திருக்கிறார். படம் முடிந்துவிட்டது. இம்மாத இறுதியில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருக்கிறோம். படத்தின் புரமோஷனுக்காக புதுமையான வீடியோ ஆல்பம் உருவாக்கியுள்ளோம். அதாவது மதுபானக்கடை தொடர்பாக, 20 ஆயிரம் ஸ்டில்ஸ் எடுத்து, அதில் 4, 500 போட்டோவை பயன்படுத்தி ஆல்பம் உருவாக்கியிருக்கிறோம். இந்த கான்செப்ட் இந்திய சினிமாவில் முதல் முயற்சி. இவ்வாறு கமலக்கண்ணன் கூறினார்.
டி.வி.யில் நடிக்கிறேனா?
எந்த தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்கவில்லை என்று அசின் கூறினார். இந்திப் படங்களில் நடித்துவரும் அசின், டி.வி.சீரியல்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி அசின் கூறியதாவது: முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். சின்னத்திரையில் நடிக்கும் எண்ணமில்லை. ஒரு டி.வி. நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டேன். அதை வைத்து தவறாகச் செய்தி பரப்பி இருக்கலாம். 'இந்தியில் ஆமிர்கான், சல்மான்கானுடன் நடித்துவிட்டீர்கள், மூன்றாவது கான் நடிகரான ஷாரூக்குடன் எப்போது நடிக்க இருக்கிறீர்கள்' என்று கேட்கிறார்கள். நல்ல கதை அமைந்தால் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர். இந்தி சினிமாவில் தனித்தனி குழுவாக ஹீரோ, ஹீரோயின்கள் இருக்கிறார்களே என்று கேட்கிறார்கள். நான் எந்த கேம்ப்பிலும் இல்லை.
சிக்ஸ்பேக் ஆசையில் மகேஷ்பாபு
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தனது அடுத்த படத்தில் சிக்ஸ்பேக் தோற்றத்தில் நடிக்கிறார். இதற்காக ஹாலிவுட் டிரைனர் ஒருவரை, ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தெலுங்கில் அல்லு அர்ஜுன், கோபிசந்த், பிரபாஸ் உட்பட பல ஹீரோக்கள் சிக்ஸ்பேக் உடற்கட்டில் நடித்துள்ளனர். இப்போது மகேஷ்பாபுவும் சிக்ஸ்பேக்கில் நடிக்கிறார். பெயரிடப்படாத அந்த படத்தை சுகுமார் இயக்குகிறார். இதில் கல்லூரி லெக்சரராக நடிக்கும் மகேஷ்பாபுவுக்கு தமன்னா ஜோடி. இதற்காக ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் பர்சனல் டிரைனர் கிரேக் ஜோஜோன் ரோச்சை அணுகியுள்ளனர். மகேஷ்பாபுவை நான்கு மாதத்தில் சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாற்ற அவர் சம்மதித்துள்ளார். இதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காதலன் யாரடி
டபுள் இன்ஜின் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள படம், 'காதலன் யாரடி'. புதுமுகங்கள் சிவஜித், சில்பா, ஸ்ரீதேவி, ராஜா சாஹிப் உட்பட பலர் நடித்துள்ளனர். இசை அஸ்வின் ஜான்சன். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு, இயக்கம், ராஜேஷ் க்ரவுன். 'பெண் கலெக்டர் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்படுகிறார். அவரை கொன்றது தீவிரவாதிகள் என்று போலீசும் பொதுமக்களும் நினைக்கின்றனர். ஆனால், லோக்கல் தொழிலதிபர்தான் கொன்றார் என்பது கலெக்டரின் மகளுக்கு தெரியவருகிறது. அவரை எப்படி பழிதீர்க்கிறார் என்பது கதை. ஷூட்டிங் முடிந்துவிட்டது' என்றார் இயக்குனர்.
பழம்பெரும் இசை அமைப்பாளர் மரணம்
பழம்பெரும் இசை அமைப்பாளர் சுசர்லா தட்சிணாமூர்த்தி என்ற எஸ். தட்சிணாமூர்த்தி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சென்னை வேளச்சேரியில் மகன் ஹரி சுசர்லாவுடன் வசித்து வந்தார். சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த அவர், நேற்று அதிகாலை காலமானர். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் கம்பெனி இசை அமைப்பாளராக இருந்தவர். அந் நிறுவனத்தின் பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிவாஜி, பத்மினி நடித்த, 'மங்கையர் திலகம்', எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்', ஜெமினிகணேசன் நடித்த 'யார் பையன்' மற்றும் 'இருமனம் கலந்தால் திருமணம்', 'சர்வாதிகாரி' உட்பட தென்னிந்திய மொழிகளில் 135 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர்தான், முதன்முதலாக லதா மங்கேஷ்கரை தென்னிந்திய மொழிகளுக்கு அறிமுகப்படுத்தியவர்.