தமிழ் சினிமா உலகில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகளை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு முன்னாள் நடிகைகள் சிலர் படுத்தும் பாடு இருக்கிறதே... நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த கிழட்டு ஆன்ட்டிகள்.
திரைப்பட விழாக்கள், மராத்தான்கள், நடன நாட்டியங்கள் அல்லது நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகள்.. இப்படி எதிலும் நிறைந்து இருப்பவர்கள் இந்த ரிடர்யர்டு நடிகைகள்தான்.
தொழிலில் தங்களுக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து டாப் நடிகர் - நடிகைகளை நிகழ்ச்சிகளுக்கு வரவைத்துவிடும் இவர்கள், அதற்கும் கணிசமாக ஒரு அமவுன்ட் பாரத்துவிடுகிறார்கள்.
சரி அதோடு நிற்கிறார்களா என்றால்... ம்ஹும்... விழா அல்லது நிகழ்ச்சியில் நானும் பர்பார்ம் பண்ணுகிறேன் பேர்வழி என போடுகிற ஆட்டமும் பண்ணுகிற அலட்டலும், அப்படியே செவிட்டில் நாலு வைக்கலாமா என எண்ணுமளவுக்கு பார்வையாளர்களை கடுப்பேற்றும்.
குறிப்பாக, பெரிய டைரக்டர் என்ற பெருங்காய டப்பா வாசனையோடு வலம் வரும் ஒருவரின் முன்னாள் நடிகை மனைவியும் அவரது தோழிமார்களும் பண்ணும் அளப்பறை தாங்கவில்லை. பார்ட்டிகளில் கலந்து கொள்வதில், வெங்கட் பிரபுவையும் அவர் தம்பி பிரேம்ஜியையும் மிஞ்சிவிட்டார்கள் இவர்கள். சரக்குப் பார்ட்டி, குத்தாட்ட பார்ட்டி, திரைப்பட விழா என்ற பெயரில் ஆபாசப் படங்கள் பார்ப்பது என ஒன்றையும் விட்டுவைப்பதில்லை.
'யார் வீட்டுல விசேஷம்னாலும் இவளுங்க ரவுசு தாங்கலடா சாமி' என கவுண்டர் ஒரு படத்தில் சொல்வாரே.. அப்படித்தான் ஆகிவிட்டது, இவர்களின் போக்கு. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவர்களின் ஆட்டமும் ஓவராகிவிட்டது.
கோலிவுட் நிகழ்ச்சிகள்தான் இப்படி என்று சின்னத் திரையைப் பார்த்தால், அங்கும் இவங்க ராஜ்யம்தான். டாக் ஷோக்கள், காமெடி நிகழ்ச்சிகள், இளம் திறமையாளர்களை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என நடுவர் நாற்காலிகளில் உட்கார்ந்து பண்ணும் அழிச்சாட்டியங்கள்...
திரையில் பார்க்க சகிக்காமல்தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் ரசிகர்கள். இருந்தும், நான் ஆடித்தான் தீருவேன்.. பாடிக் கொல்வேன்.. நீங்கள் பார்த்தே தீர வேண்டும் என பிடிவாதமாக வரும் இந்த இம்சை அரசிகளின் பிடியிலிருந்து சினிமாவை மீட்பது யாரோ!