ஸ்ரீதேவியை முகத்தில் துப்பச் சொன்ன ரஜினியை நினைச்சா உடல் சிலிர்க்குது!- பாக்யராஜ் ப்ளாஷ்பேக்

சென்னை: காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக தன் முகத்தில் நிஜமாகவே துப்பச் சொன்ன ரஜினியை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது, என்றார் இயக்குநர் கே பாக்யராஜ்.

16 வயதினிலே ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், "பல தடைகளை, விபத்துகளைக் கடந்து வந்து வெளியாகி வெற்றி பெற்ற படம் இது. முத முதல்ல என்பேரு டைட்டில்ல வந்த படமும் இதான்.

இந்தப் படத்தில் நடிச்ச சூப்பர் ஸ்டார் ரஜினி சார், கமல் சாரெல்லாம் பாத்தா, எனக்கு பழைய ஞாபகங்கள் வருது.

ஸ்ரீதேவியை முகத்தில் துப்பச் சொன்ன ரஜினியை நினைச்சா உடல் சிலிர்க்குது!- பாக்யராஜ் ப்ளாஷ்பேக்

16 வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா நாய் வளக்கல அதுக்கு பதிலா என்னை வளத்தா என்றொரு வசனம் வரும். அதை கமல் உணர்ச்சிகரமாக பேசி முடித்தார். அதை பார்த்த சுற்றி நின்ற படக்குழுவினர் கண்ணீர் விட்டனர்.

இன்னொரு காட்சி.. வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத காட்சி. ரஜினி முகத்தில் ஸ்ரீதேவி காறி துப்ப வேண்டும். சோப்பு நுரை, டூத் பேஸ்ட் என்று எதையெல்லாமோ வைத்து ரஜினி முகத்தில் அடித்தோம். அது சரியாக வரவில்லை. பாரதிராஜா, தவித்தார், நேரம் போய்க்கிட்டிருக்கு.

உடனே ரஜினி எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க... சும்மா ஸ்ரீதேவியை என் முகத்தில் துப்ப சொல்லுங்க சரியா வரும் என்றார். ஸ்ரீதேவி நிஜமாகவே அவர் முகத்தில் துப்பினார். அதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

ஆனா அந்த நிகழ்ச்சியை இப்போ நினைச்சாலும் என் உடல் சிலிர்க்குது. இவங்கள்லாம் வெறும் நடிகர்கள் இல்லை. சினிமாவுக்காக அன்னிக்கே தங்களை அர்ப்பணிச்சிக்கிட்டவங்க. அதனாலதான் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார்கள்," என்றார்.

 

தமிழ் சினிமாவில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் பிராவோ!

சென்னை: பிரபல கிரிக்கெட் வீரர் டாயன் பிராவோ தமிழில் உலா எனும் படத்தில் நடிக்கிறார்.

சேரன் நடித்த முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தமிழ் சினிமாவில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் பிராவோ!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் பிராவோ. இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடுகிறார். தமிழ் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான கிரிக்கெட் வீரர்களில் பிராவோவும் ஒருவர்.

மைதானத்தில் அவரது உடல் மொழியைக் கவனித்த இயக்குநர், தனது அடுத்த படத்தில் அவருக்கு சிறப்புத் தோற்றம் கொடுத்திருக்கிறார்.

தனது முதல் தமிழ்ப் படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளிக்கப் போகிறார் பிராவோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு உலா என்று பெயர் சூட்டியுள்ளனர். ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

 

ஹீரோவான ஜிவி பிரகாஷ் குமார்- படத் தலைப்பு பென்சில்!

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் ஒரு வழியாக ஹீரோவாகிவிட்டார். பென்சில் என்ற படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை மணி நாகராஜ் என்பவர் இயக்குகிறார்.

ஹீரோவான ஜிவி பிரகாஷ் குமார்- படத் தலைப்பு பென்சில்!

பள்ளிக்கூட மாணவராக இந்தப் படத்தில் வருகிறாராம் ஜிவி பிரகாஷ் (பொருத்தமான வேஷம்தான்).

இந்த மணி நாகராஜ், ஜிவியின் நெருங்கிய நண்பராம். ஒரு நாள் கைவசமிருந்த கதையை ஜிவிக்கு அவர் சொல்ல, உடனே பிடித்துவிட்டதால் ஹீரோவாக நடிக்கிறேன் என்று கூறி, இசையமைத்துத் தரவும் ஒப்புக் கொண்டாராம்.

ஹீரோயினாக ப்ரியா ஆனந்த்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் ஏற்கெனவே தயாரிப்பாளர் அவதாரமெடுத்து, மதயானைக் கூட்டம் என்ற படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

வேணு அரவிந்த் தொகுத்து வழங்கும் விழித்தெழு தமிழா!

வேணு அரவிந்த் தொகுத்து வழங்கும் விழித்தெழு தமிழா!

சீரியல் நடிகர் வேணு அரவிந்த் தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறியுள்ளார். மக்கள் டிவியில் விழித்தெழு தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

‘வாரம் ஒரு தலைப்பைக் கொண்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் பாமரனும் தெரிந்து கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது ‘விழித்தெழு தமிழா' நிகழ்ச்சி.

மின்சாரம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக் காட்டியும் அதற்கான தீர்வுகளையும் உங்கள் கண் முன்னே காட்சிப்படுத்துகிறார்கள்.

எதையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளாமல், பிரச்சினைகளுக்கான காரணிகளை அலசி ஆராய்வதோடு, துறை சார்ந்த வல்லுனர்களே இந்நிகழ்ச்சியின் வாயிலாக விளக்கமளிக்கின்றனர்.

மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 7.02 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

தெலுங்கானா ரணகளத்திலும் ஹைதராபாத் ரசிகர்களின் கிளுகிளுப்பு.. காஜலைப் பார்க்க ஒரே கூட்டம்

ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரம் ஒருபக்கம் பற்றி எரிந்தாலும் கூட நடிகை காஜல் அகர்வாலைப் பார்க்க ஹைதராபாத்தில் பெரும் கூட்டம் முண்டியடித்தது. கடைசியில் காஜலுக்கு சேதாரம் ஏற்பட்டு விடாமல் காக்கும் வகையில் போலீஸார் செல்லமாக தடியடி நடத்தி கிரவுடை கலைத்து விட்டனர்.

ஹைதராபாத்தில் நடந்த ஒரு வணிக வளாக திறப்பு விழாவில்தான் இந்த அக்கப்போர் நடந்துள்ளது.

தெலுங்கானா ரணகளத்திலும் ஹைதராபாத் ரசிகர்களின் கிளுகிளுப்பு.. காஜலைப் பார்க்க ஒரே கூட்டம்  

தமிழை விட தெலுங்கில்தான் தற்போது காஜல் அகர்வால் நிறைய நடித்து வருகிறார். அங்கு அவரது கவர்ச்சிக்கும், அழகுக்கும் நல்ல ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடந்த வணிக வளாக திறப்பு விழாவுக்கு காஜலை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். போஸ்டர்கள் மூலம் செம விளம்பரமும் செய்திருந்தனர். இதனால் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு விட்டனர்.

பிரமாண்ட வெற்றிப் படமான மகாதீரா படத்தின் நாயகி என்பதால் காஜலுக்கு அங்கு நல்ல கிரேஸ்... காஜலைப் பார்க்க கால் கடுக்க காத்திருந்தனர் ரசிகர்கள். காஜலும் வந்தார்.. அவ்வளவுதான் ரசிகர்கள் அவரைப் பார்க்கவும், கை குலுக்கவும், ஆட்டோகிராப் கேட்கவும் மொய்த்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்தக் கூட்டத்தைப் பார்த்து காஜலுக்கே சற்று பீதியாகி விட்டது. ஏதாவது ரசாபாசமாகி விடக் கூடாதே என்ற பயத்தில போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்து விரட்டினர். அப்படியும் பலர் போகவில்லை.. காஜலைப் பார்க்கத் துடித்தனர். அவர்களை சிரமப்பட்டு நகர்த்தி வெளியேற்றினர் போலீஸார். இந்த பரபரப்பால் அங்கு போக்குவரத்தே பாதிக்கப்பட்டுப் போனது.

தெலுங்கானா பிரச்சினை ஒருபக்கம் வெடித்துக் கிளம்பி பதட்டத்தை ஏற்படுத்தினாலும் கூட அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பை நாடி வந்துள்ளனர் காஜல் ரசிகர்கள்.. அல்ல, அல்ல.. சினிமா ரசிகர்கள்.