அஜீத் - கவுதம் மேனன் படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல்

அஜீத் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயரை நாளை அறிவிக்கப் போவதாக அஜீத்தின் பிஆர்ஓ அறிவித்துள்ளார்.

அஜீத், த்ரிஷா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் புதிய படத்தின் தலைப்பை எப்போதோ முடிவு செய்துவிட்டாலும், அதை அறிவிப்பேனா என்று இழுத்தடித்து வந்தனர்.

அஜீத் - கவுதம் மேனன் படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல்

தீபாவளிக்கு தலைப்பை அறிவிக்கப் போவதாகச் சொன்னவர்கள், அந்த நாளில் அமைதியாக இருந்துவிட்டனர்.

இப்போது படத்தின் தலைப்பை நாளை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சத்யா, ஆயிரம் தோட்டாக்கள் என பல தலைப்புகள் மீடியாவில் உலா வந்தன.

உண்மையான தலைப்பு என்னவென்பது நாளை தெரிந்துவிடும். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ஒரு தலைப்புக்காக இவ்வளவு பில்ட் அப் கொடுக்க ஆரம்பித்தது அஜீத் படங்களுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதாவை காப்பகத்தில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்வேதா பாசுவை விடுதலை செய்ய ஹைதராபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக கைதானவர் சுவேதா பாசு. தேசிய விருது பெற்ற 23 வயது நடிகையான சுவேதா பாசு, தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்திலும் நடித்தவர். எனவே தேசிய அளவில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதாவை காப்பகத்தில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில், ஸ்வேதா பாசுவை, மகளிர் காப்பகத்தில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தொடர்ந்து காப்பகத்தில் இருந்தார்.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணை ஹைதராபாத், நாம்பல்லே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு கருத்தை கேட்ட நீதிமன்றம், ஸ்வேதா பாசுவை உடனடியாக காப்பகத்தில் இருந்து ரிலீஸ் செய்ய உத்தரவிட்டுள்ளது. இன்று இரவே அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமந்தாவை நம்பி போகலாமா... தயக்கத்தில் தமன்னா!

ஒரே நேரத்தில் ஃபீல்டில் முன்னணியில் இருக்கும் இரு நடிகைகள் சேர்ந்து பணியாற்றுவதே வெகு அரிது.. அதிலும் ஒரு நடிகையை வைத்து இன்னொரு நடிகை படம் தயாரிக்க முன் வருகிறார் என்றால் சாதாரண விஷயமா...

அப்படி ஒரு விஷயம் தெலுங்கில் நடந்தது. இந்தியில் வென்ற குயீன் படத்தை ரீமேக் செய்ய விரும்பினார் சமந்தா. தயாரிப்பாளராக மட்டும் இருந்து கொண்டு, வேறு நடிகையை ஹீரோயினாக்கத் திட்டம்.

ஆனால் அந்தப் படத்தை தென்னிந்தியாவில் ரீமேக்கும் உரிமைகளை வாங்கிவிட்டார் பிரசாந்த் அப்பா தியாகராஜன்.

சமந்தாவை நம்பி போகலாமா... தயக்கத்தில் தமன்னா!

எனவே வேறு ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்ட சமந்தா, தமன்னாவை அதில் ஹீரோயினாக்க விரும்பினார்.

இதுகுறித்து தமன்னாவிடமும் பேசினாராம். அப்போதைக்கு ஒப்புக் கொண்ட தமன்னா, பின்னர் தனியாக தீவிரமாக யோசித்திருப்பார் போலிருக்கிறது.

சமந்தாவே முன்னணி நடிகைதானே.. நம்மைவிட ஏகத்துக்கும் கவர்ச்சியும் காட்டுகிறார். அப்புறம் எதுக்கு நம்மை அழைக்கிறார், என சந்தேகப்பட்ட தமன்னா, பட வாய்ப்பை ஏற்க தயங்குகிறாராம்!

 

எப்போ கல்யாணம்...? கேள்விகளுக்குப் பயந்து அயல்நாட்டுக்கு ஓடிவிட்ட நடிகை

சென்னை: கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் இவர். தமிழில் பிசியாக இருந்தபோதே "சன்" நடிகருடன் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ஒன்றின் மூலம் ஹிந்திக்கு தாவினார்.

துறுதுறு நடிப்பு, துள்ளலான அழகு என திறமைசாலியான நடிகையை இந்தி திரையுலகம் புன்னகையுடன் வரவேற்றது. ஆனால், முதல் படத்தைத் தவிர அங்கு சொல்லிக் கொள்வது போன்ற படங்கள் எதுவும் அமையவில்லை.

நடிகை இந்திப் பட வாய்ப்புக்காக காத்திருந்த காலத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்தது. இதனால் நடிகையின் இடத்தை மற்ற நடிகைகள் ஆக்கிரமித்தனர்.

வடக்கு கை விரித்ததால், மீண்டும் தமிழ்ப் பட வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார் நடிகை. ஆனால், அக்கா, அண்ணி வேடங்கள் வேண்டுமானால் தருகிறோம் என தயாரிப்பாளர்கள் கறாரா சொல்லி விட்டனர். தன்னை விட மூத்த நடிகைகள் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அக்கா, அண்ணி வேடங்களில் நடிப்பதா என மறுத்து விட்டார் நடிகை.

இதற்கிடையே தொடர்ந்து படங்களில் நடிக்காததால் நடிகைக்கு திருமணம் என்ற பேச்சும் கிளம்பியது. இதனால் மனம் வெறுத்துப் போன நடிகை வெளிநாட்டில் சென்று ஓய்வெடுக்கிறாராம். தனது பிறந்தநாளைக் கூட அங்கேயே தான் கொண்டாடினாராம்.

பிறந்தநாளுக்காக இந்தியா வந்தால் எப்போ கல்யாணம் என்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற பயத்தால் தான் இந்த வெளிநாட்டுப் பயணம் எனக் கூறப்படுகிறது.

 

அருண்பாண்டியன் தயாரிக்கும் சவாலே சமாளி! - சுவிஸ்ஸில் படப்பிடிப்பு

அய்ங்கரன் நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு, அருண்பாண்டியன் தனியாக தொடங்கிய ஏபி குரூப்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படம் சவாலே சமாளி.

கவிதாபாண்டியன், எஸ் என் ராஜராஜன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'சவாலே சமாளி' என்று பெயரிட்டுள்ளனர்.

அருண்பாண்டியன் தயாரிக்கும் சவாலே சமாளி! - சுவிஸ்ஸில் படப்பிடிப்பு

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சவாலே சமாளி. அந்த தலைப்பு இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இப்பெயர் சூட்டியதாக தெரிவிக்கிறார் இயக்குனர் சத்யசிவா.

சூது கவ்வும், தெகிடி வெற்றிப் படங்களில் நடித்த அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்து மாதவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார்.

அருண்பாண்டியன் தயாரிக்கும் சவாலே சமாளி! - சுவிஸ்ஸில் படப்பிடிப்பு

எஸ்எஸ் தமன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சத்யசிவா. "கழுகு " வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கும் படம் இந்த சவாலே சமாளி.

படம் பற்றி கூறும் போது, "கழுகு, படத்திலிருந்து மாறுபட்டு இந்த படத்தை உருவாக்க நினைத்தேன். அதனால் முழுக்க முழுக்க காமெடி படமாக இதை உருவாக்கி உள்ளோம். படித்த இரண்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற சந்திக்கும் சவால்கள்தான் சவாலே சமாளி" என்றார்.

 

டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கானை என் படத்தில் நக்கலடித்தேனா?: ஃபரா கான் விளக்கம்

மும்பை: பிரபல டான்ஸ் மாஸ்டரான சரோஜ் கானை தனது ஹேப்பி நியூ இயர் படத்தில் கிண்டல் செய்யவில்லை என்று இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் தெரிவித்துள்ளார்.

ஃபரா கான் தான் இயக்கிய ஹேப்பி நியூ இயர் படத்தில் தன்னை கிண்டல் செய்துள்ளதாக பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் தெரிவித்தார். இதனால் அவர் ஃபரா மீது கோபத்தில் உள்ளார்.

சரோஜ் கானை என் படத்தில் நக்கலடித்தேனா?: ஃபரா கான் விளக்கம்

இந்நிலையில் இது குறித்து ஃபரா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சரோஜ் கான் ஒரு மேதை. அவரிடம் இருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். அவரை என் படத்தில் கிண்டல் செய்யவில்லை. அவரை மனதார நேசிக்கிறேன். படத்தில் அவரை கிண்டல் செய்திருப்பதாக அவர் நினைத்தால் அது உண்மை இல்லை அவரை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம் என்றார்.

ஷாருக்கான், தீபிகா, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹேப்பி நியூ இயர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்னும் 9 வெள்ளிக்கிழமைகள்... 90 படங்கள்.. தாங்குமா திரையரங்குகள்?

இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இன்னும் 9 வெள்ளிக்கிழமைகளே பாக்கியுள்ளன.

இந்த இரண்டு மாத காலகட்டத்துக்குள் வெளியாவதற்குக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை... கிட்டத்தட்ட 90!

இந்தப் படங்கள் அனைத்துமோ அல்லது பாதியோ வெளியானால் கூட அது புதிய சாதனையாகிவிடும். ஆமாம்.. இந்த ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை 200 படங்களைத் தாண்டிவிடும்!

இன்னும் 9 வெள்ளிக்கிழமைகள்... 90 படங்கள்.. தாங்குமா திரையரங்குகள்?

2014ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே, வாரா வாரம் வெளியாகும் படங்களின் சராசரி எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.

கடந்த தீபாவளி வாரம் வரை தமிழில் வெளியான நேரடிப் படங்கள் 167. கடந்த ஆண்டு மொத்தம் 160 படங்கள் வெளியாகின. அப்படிப் பார்த்தால் 10 மாதங்களில் கடந்த ஆண்டின் எண்ணிக்கையைக் கடந்து விட்டது தமிழ்த் திரையுலகம்.

இந்த ஆண்டு முடிய இன்னும் 9 வெள்ளிக் கிழமைகளே பாக்கியுள்ளன. இந்த இடைவெளிக்குள் இன்னும் 90 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. இவற்றில் முக்கால்வாசிப் படங்கள் சென்சாரும் செய்யப்பட்டுவிட்டன.

இந்த 90 படங்களில் ரஜினியின் லிங்கா, ஷங்கரின் ஐ, அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2, ராகவா லாரன்ஸின் முனி 3 உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்த 90 படங்களில் பாதி வெளியானால் கூட, தமிழ் சினிமா 200 ஐக் கடந்து புதிய சாதனைப் படைத்துவிடும். ஆனால் இவற்றுக்கு தியேட்டர் கிடைப்பதுதான் பெரும்பாடாக இருக்கும்.

 

தங்கையின் தலை தீபாவளியை ஜமாய்த்த காஜல் அகர்வால்

மும்பை: தங்கை நிஷாவின் தலை தீபாவளிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்து அசத்தினாராம் அக்கா காஜல் அகர்வால்.

நடிகை காஜல் அகர்வாலின் தங்கையும் அக்கா வழியில் நடிகையானார். ஆனால் போட்டி நிறைந்த திரை உலகில் நிஷாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் கரண் வேலச்சாவை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தங்கையின் தலை தீபாவளியை ஜமாய்த்த காஜல் அகர்வால்

இந்நிலையில் நிஷா தலை தீபாவளியை கொண்டாடினார். தங்கையின் தலை தீபாவளி அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் காஜல். இதையடுத்து தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தங்கையை அசத்திவிட்டாராம்.

காஜல் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர இரண்டு இந்தி படங்களிலும், ஒரு தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். காஜல் தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு அடங்கிவிட்டது.

அவர் தனது திருமணம் பற்றி தற்போதைக்கு யோசிப்பதாக தெரியவில்லை.

 

கேரள வினியோகஸ்தர்களை பதம் பார்க்கும் தமிழ் படங்கள்: கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்

திருவனந்தபுரம்: தமிழ் திரைப்படங்களின் வினியோக உரிமையை எடுக்கும் கேரள வினியோகஸ்தர்கள் கை சுட்டுக்கொள்வது கத்தி திரைப்படம் வரை தொடர் கதையாகிவருகிறது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன கத்தி திரைப்படத்தின் கேரள வினியோக உரிமை ரூ.4.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. கேரளாவில் சுமார் 120 தியேட்டர்களில் இப்படம் ரிலீசான நிலையில், முதல் நாளில் ரூ.1 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த நாள் அதைவிட பாதிதான் வருமானம் வந்துள்ளது. அதற்கடுத்த நாட்களில் இந்த வருவாய் மதிப்பு மேலும் சரிவை சந்தித்தது.

இதனால் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கத்திக்கு மட்டுமே கேரளாவில் இந்த நிலை ஏற்படவில்லை. இதற்கு முன்பு தமிழிலில் மிகவும் எதிர்பார்ப்புடன் ரிலீசான சில படங்களாலும் வினியோகஸ்தர்கள் கையை சுட்டுக் கொண்டுள்ளனர்.

கேரள வினியோகஸ்தர்களை பதம் பார்க்கும் தமிழ் படங்கள்: கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்

லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடித்து மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான அஞ்சான் திரைப்படமும் கேரளாவில் சுமார் ரூ.4.5 கோடிக்கு விற்பனையானது. ஆனால் அந்த படம் மிக மோசமாக வினியோகஸ்தர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்த்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், பாக்ஸ் ஆபீசை கலக்கிய, முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த, துப்பாக்கி திரைப்படத்தால் கூட கேரள வினியோகஸ்தர்கள் நஷ்டத்தையே அனுபவித்துள்ளனர்.

எனவே கேரள வினியோகஸ்தர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை வைத்து ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய முடியாது என்பது புரிகிறது. அப்படியானால் இதற்கு என்னதான் காரணம்?

ஒரு வினியோகஸ்தர் இதுகுறித்து கூறுகையில் "கேரளாவில் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் முன்பெல்லாம் விஜய் படங்களின் கேரள வினியோக உரிமை, ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி வரையில்தான் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது இருமடங்காக விலை உயர்த்தப்பட்டுள்ளதுதான் நஷ்டத்துக்கான காரணம்" என்றார்.

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்து வெளியாக உள்ள 'ஐ' திரைப்பட உரிமை கேரளாவில் ரூ.5.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம். இதனால் பீதியிலேயே உள்ளனர் கேரள வினியோகஸ்தர்கள். ஐ திரைப்படம் அவர்களை காப்பாற்றுமா, கைவிடுமா என்பது அடுத்த மாதத்தில் தெரிந்துவிடும்.

 

யுவன் சங்கர் ராஜாவுக்கு கீழக்கரை முஸ்லீம் பெண்ணுடன் நிச்சயம் முடிந்தது: துபாயில் திருமணம்

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற உள்ளது.

தந்தை இளையராஜா வழியில் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். 2008ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அவர் ஷில்பா மோகன் என்பவரை திருப்பதியில் வைத்து கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

யுவனுக்கு கீழக்கரை பெண்ணுடன் நிச்சயம் முடிந்தது: துபாயில் திருமணம்

ஆனால் ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ஷில்பா யுவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாயின் மரணத்தால் மனமுடைந்த யுவன் இஸ்லாத்திற்கு மாறினார். தனது பெயரைக் கூட அப்துல்லா என்று மாற்ற உள்ளார்.

யுவனுக்கு கீழக்கரை பெண்ணுடன் நிச்சயம் முடிந்தது: துபாயில் திருமணம்

தான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஜப்ருன்னிஸாருக்கும் நேற்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துபாயில் நடக்க உள்ளது. ஜப்ருன்னிஸார் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

 

நான் ஏன் சல்மான் கானிடம் டிப்ஸ் கேட்கணும்?: இந்தி 'சிங்கம்'

மும்பை: நான் ஏன் சல்மான் கானிடம் டயலாக் பேச டிப்ஸ் கேட்க வேண்டும் என்று நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.

நம்ம மசாலா கம் ரீமேக் மன்னன் பிரபுதேவா பாலிவுட் கொண்டாடும் இயக்குனர் ஆவார். காரணம் அவர் சரியான அளவில் மசாலா கலந்து படம் தருவதுடன் ரீமேக் படங்கள் எடுப்பதில் வல்லவராக உள்ளார்.

இந்நிலையில் தான் அவர் மீண்டும் ஒரு ரீமேக் படத்தை எடுத்து வருகிறார்.

நான் ஏன் சல்மான் கானிடம் டிப்ஸ் கேட்கணும்?: இந்தி 'சிங்கம்'

தூக்குடு

தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டான தூக்குடு படத்தை இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் பிரபுதேவா.

அஜய், சோனாக்ஷி

ஆக்ஷன் ஜாக்சனில் அஜய் தேவ்கன் தான் ஹீரோ. பிரபுதேவாவின் மனம் கவர்ந்த நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் ஹீரோயின்.

சல்மான்

பஞ்ச் வசனங்கள் பேச, நடிக்க தான் சல்மான் கானிடம் டிப்ஸ் கேட்கப் போவது இல்லை என்று தெரிவித்துள்ளார் அஜய் தேவ்கன்.

ஷாருக்கான்

தனது படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று அஜய் தனக்கு ஆகாத நடிகர் ஷாருக்கானை குத்திக்காட்டி பேசியுள்ளார்.

ஹிட்

ஆக்ஷன் ஜாக்சன் படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று பாலிவுட்டில் பலர் தற்போதே சத்தியம் செய்கிறார்கள். அது என்ன மாயமோ

ரிலீஸ்

ஆக்ஷன் ஜாக்சன் வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஃபரா கான் கிண்லடிக்க நான் தான் கிடைச்சேனா: கொந்தளிக்கும் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான்

மும்பை: ஹேப்பி நியூ இயர் படத்தில் ஃபரா கான் தன்னை கிண்டல் செய்திருப்பதை நினைத்து பிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் கோபம் அடைந்துள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான ஃபரா கான் இயக்கிய ஹேப்பி நியூ இயர் படம் கடந்த 24ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.108 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் ஃபரா கான் மகிழ்ச்சியில் உள்ளார். ஆனால் பாலிவுட்டின் மற்றொரு பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கானோ கோபத்தில் உள்ளார்.

இந்த ஃபரா கான் கிண்லடிக்க நான் தான் கிடைச்சேனா: கொந்தளிக்கும் டான்ஸ் மாஸ்டர்

காரணம் படத்தில் ஃபரா சரோஜ் கானை கிண்டலடித்துள்ளார். மேலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சியிலும் அதாவது கபில் சர்மா நிகழ்ச்சியிலும் சரோஜை நக்கல் செய்துள்ளார்.

இது குறித்து சரோஜ் கான் கூறுகையில்,

ஃபரா விரக்தியில் உள்ளார். அவர்கள் டிவி நிகழ்ச்சியில் செய்ததை நான் பார்த்தேன். இது போன்று நடந்து கொள்வது அவருக்கு பொருந்துகிறதா?

அவரை போன்றவர்களுக்காக பாவப்படுகிறேன். என்னை கிண்டல் அடிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம் என தெரியவில்லை. ஃபராவை நினைத்து வெட்கப்படுகிறேன் என்றார்.

 

விஷ்வா பாய் சிலை: கோலிவுட் வரலாற்றிலேயே முதல் முறையாக....

சென்னை: தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு நடிகருக்கு ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் பாசக்காரர்கள். தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை கொண்டாடித் தீர்ப்பார்கள். கோலிவுட்டில் இதுநாள் வரை நடிகைகளுக்கு தான் கோவில் கட்டுவது, சிலை வைக்க ஆசைப்படுவதுமாக இருந்தார்கள் ரசிகர்கள் இல்லை இல்லை தீவிர வெறியர்கள். குஷ்புவுக்கு கோவில் கட்டினார்கள். அடுத்ததாக நயன்தாராவுக்கு கோவில் கட்ட வேட்டியை மடித்துக் கட்டினார்கள். ஆனால் நயனோ தனக்கு கோவில் எல்லாம் வேண்டாம் என்று கூறி நைசாக நழுவிக் கொண்டார்.

கோலிவுட் வரலாற்றிலேயே முதல் முறையாக சிலையான 'விஜய்'

இந்நிலையில் தான் தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது. ஆம் ஒரு சுபயோக சுபதினத்தில் விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு சிலை செய்தனர். விஜய் எத்தனையோ படங்களில் நடித்துள்ள போதிலும் அவர் படாதபாடு பட்டு ரிலீஸான தலைவா படத்தில் வரும் விஷ்வா பாய் கதாபாத்திரத்தில் சிலையை செய்து அதை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் வைத்துள்ளனர்.

விஜய்க்கு சிலை திறந்து வைத்திருப்பது பற்றி பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட இளையதளபதியோ கண்டும் காணாமல் கத்தி வெற்றிக் கொண்டாட்டத்தில் பிசியாக உள்ளார்.

 

கத்தி சக்ஸஸ் மீட்டில் விஜய்: வந்தார், வரவேற்றார், போட்டோ எடுத்தார், புறப்பட்டார்.. நோ பேச்சு!

கத்தி படத்தின் வெற்றி குறித்த செய்தியாளர் சந்திப்புக்காக வந்த விஜய், பத்திரிகையாளர்களை வரவேற்று, அவர்களோடு போட்டோ எடுத்துக் கொண்டதோடு புறப்பட்டுப் போய்விட்டார். படம் குறித்து எதுவும் பேசவில்லை.

தீபாவளிக்கு வெளியான கத்தி படம் பெரும் வெற்றி பெற்றதாகக் கூறி, தமிழகத்தின் ஒவ்வொரு நகரந்தோறும் ரசிகர்களைச் சந்தித்து வந்தார் விஜய்.

கத்தி சக்ஸஸ் மீட்டில் விஜய்: வந்தார், வரவேற்றார், போட்டோ எடுத்தார், புறப்பட்டார்.. நோ பேச்சு!

படத்தின் வெற்றியைப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாகக் கூறி, நேற்று மாலை விஜய் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

வேளச்சேரியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சந்திப்புக்காக வந்த செய்தியாளர்களை கைகுலுக்கி வரவேற்ற விஜய், பின்னர் அவர்களுடன் தனித்தனியாகப் படமெடுத்துக் கொண்டார்.

பின்னர், வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பிவிட்டார். படம் குறித்தோ, அதன் வெற்றி குறித்தோ, வசூல், அடுத்த படம் என எதைப் பற்றியும் அவர் பேசவில்லை.

அரை மணி நேரத்தில் இந்தச் சந்திப்பு முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

பார்வதி நாயர்... அஜீத்துக்கு 3வது ஹீரோயின்!

கவுதம் நாயர் இயக்கி வரும் புதிய படத்தில் அஜீத்துக்கு 3வது நாயகியாக பார்வதி மேனன் நடிக்கிறார்.

தல 55 என்று அழைக்கப்படும் அழைத்து வரும் இந்தப் படத்தில், நாயகிகளாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். இந்நிலையில் 3வது நாயகியாக பார்வதி நாயர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்வதி நாயர்... அஜீத்துக்கு 3வது ஹீரோயின்!

இவர் மலையாளம், கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில்' படத்தில் நடித்துள்ளார். மேலும் கமல் நடித்து வரும் ‘உத்தம வில்லன்' படத்திலும் 3வது நாயகியாக நடித்துள்ளார். தற்போது அஜீத் படத்திலும் 3வது கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத்துடன் இணைந்துள்ளார் விவேக். முதல் முறையாக வில்லன் வேடமேற்றுள்ளார் அருண்விஜய்.