ஜீவா - டாப்ஸியின் வந்தான் வென்றான் இசை வெளியீடு


ஜீவா - டாப்ஸி நடிக்கும் வந்தான் வென்றான் திரைப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சத்யம் தியேட்டரில் நடந்தது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர், இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் சீனிவாசன் மற்றும் இயக்குனர் கண்ணன் வெளியிட, கதாநாயகன் ஜீவா, கதாநாயகி டாப்சீ, நடிகர் ஜெயம் ரவி மற்றும் இசையமைப்பாளர் தமன் பெற்று கொண்டனர்.

இவ்விழாவை தயாரிப்பாளர்கள் டி சிவா, எடிட்டர் மோகன், பிரமிட் நடராஜன், இயுக்குனர்கள் சுசீந்திரன், ராஜேஷ், சமுத்திரக்கனி, மனோபாலா, வெற்றி மாறன், பாடலாசிரியர் நா. முத்துக்குமார், கார்கி மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்தினர்.
 

அமெரிக்க தொழிலதிபருடன் கல்யாணமா? - த்ரிஷா பதில்


அமெரிக்க தொழிலதிபருடன் திருமணம் என்று வரும் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை த்ரிஷா.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை த்ரிஷாவுக்கு திருமணம், மாப்பிள்ளை ரெடி என்று செய்தி வெளியாவதும், அவர் இல்லையில்லை அது பொய் செய்தி என மறுப்பதும் வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில் இப்போது மேலும் ஒரு செய்தியும் விளக்கமும் வெளியாகியுள்ளது.

த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் மிகத் தீவிரமாக இருந்த அவரது அம்மா உமா, இரண்டு வரன்களைப் பார்த்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரை விரைவில் இறுதி செய்வார் என்றும் தெலுங்கு இணையதளங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த இரு வரன்களில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் உண்டாம். இவரைத்தான் த்ரிஷா கல்யாணம் செய்வார் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், த்ரிஷா இந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "எனக்கு திருமணம் என்றால் நிச்சயம் நான் அனைவருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது காதல் திருமணமாகவே இருந்தாலும். ஆனால் நான் பெற்றோர் முடிவு செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன். எப்போது என்பதை நான்தான் சொல்வேன். மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது," என்றார்.
 

கிசு கிசு - நடிகையின் கால்ஷீட் பிரச்னை!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நடிகையின் கால்ஷீட் பிரச்னை!

7/21/2011 3:18:50 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

கவுதம இயக்கம், தன்னோட படத்துல நடிக்க கூப்பிடுறேன்னு சமந்த நடிகைக்கு வாக்கு கொடுத்திருந்தாராம்… கொடுத்திருந்தாராம்… ஆனா இதுவரைக்கும் எந்த அழைப்பும் இல்லையாம். இயக்குனரை நம்பி, தனக்கு வந்த ஒரு தெலுங்கு பட வாய்ப்பையும் நடிகை மறுத்துட்டாராம். அதை நினைச்சு, நினைச்சு நடிகை இப்போ கவலைப் படுறாராம்… கவலைப்படுறாராம்…

இருட்டு வேர்ல்ட் படத்துலேருந்து ஆண்ட நடிகை விலகிட்டாரு. அந்த படத்துல தன்னோட காட்சிகள்ல 60 சதவீதத்தை நடிகை முடிச்சிருந¢தாராம். அதுல 40 சதவீத காட்சிகளுக்கான சம்பளம் மட்டும் முன்பணமா வாங்கியிருந்தாராம்… வாங்கியிருந்தாராம்… இப்போ பேலன்ஸ் 20  சதவீத காட்சிக்கான சம்பளத்தையும் கொடுக்கணும்னு நடிகை கேட்கிறாராம்… கேட்கிறாராம்… இப்போ படத்துல நீங்க இல்லே. அதனால அந்த காட்சிகளுக்கான சம்பளமும் கிடையாதுனு தயாரிப்பு ஜகா வாங்குறாராம்… வாங்குறாராம்…

பிரகாச ஹீரோ படத்தோட முதல் 2 ஷெட்யூலுக்கு மொத்தமா கால்ஷீட் கொடுத்திருந்தாரு காஜலான நடிகை. இப்போ நடிகை, தேதிகளை பிரிச்சி தர்றேன்னு சொல்றாராம்… சொல்றாராம்… பர்சனல் விஷயமா இந்த மாற்றம்னு சொல்றாராம். இதனால இயக்கம் என்ன பண்றதுனு யோசிக்கிறாராம்… யோசிக்கிறாராம்… அப்படி என்ன பர்சனல் விஷயமோ என்று யூனிட்ல முணுமுணுக்கிறாங்களாம்…
முணுமுணுக்கிறாங்களாம்…

 

தினமும் 10 சிகரெட் ஊதித் தள்ளும் வித்யா பாலன்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

தினமும் 10 சிகரெட் ஊதித் தள்ளும் வித்யா பாலன்!

7/21/2011 3:17:44 PM

‘டர்ட்டி பிக்சர்ஸ்’ இந்தி படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் வித்யா பாலன் நடிக்கிறார். மிலன் லுதாரியா இயக்குகிறார். ஹீரோ அஜய் தேவ¢கன். இப்படத்தில் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவராக வித்யா பாலன் நடிக்கிறார். இதற்காக தினமும் பத்து சிகரெட் வரை ஊதித் தள்ளுகிறாராம். இது பற்றி வித்யா கூறுகையில், “படத்தில் சில காட்சிகளில் ஓவர் கிளாமராக நடிக்க கேட்டார்கள். மறுத்துவிட்டேன். சிகரெட் பிடிக்க வேண்டும் என கூறியபோது மறுக்க முடியவில்லை. இது படத்துக்காக செய்வதுதான¢. ஆனால் எனது வீட்டில் இருப்பவர்கள், ‘அய்யோ… சிகரெட் பிடிக்கிறியா?’ என கவலைப்படுகிறார்கள். அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் ஒரு வழியாகிவிட்டேன்” என்றார்.

 

சம்பளம் உயர்த்தினார் திவ்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சம்பளம் உயர்த்தினார் திவ்யா!

7/21/2011 2:49:28 PM

கன்னடத்தில் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார் திவ்யா. இவர் கடைசியாக நடித்த 'ஜானி மேரா நாம்', 'சஞ்சு வெட்ஸ் கீதா' ஆகியவை ஹிட்டாயின. இதனால் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் திவ்யா. ரூ.27 லட்சம் வாங்கிக் கொண்டிருந்தவர், அடுத்து 'காந்தி நகர மகாத்மே' படத்துக்காக ரூ.32 லட்சம் வாங்கியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்குகிறார் பிரியாமணி. ஒரு படத்துக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரை வாங்குகிறார். பூஜா காந்தி ரூ.22 லட்சமும் பாவனா ரூ.15 லட்சமும் வாங்குகின்றனர். சம்பளம் உயர்த்தியதை பற்றி திவ்யா கூறும்போது, "நான் செட்டில் டைரக்டருடன் சண்டை போடுகிறேன், தயாரிப்பாளருடன் தகராறு செய்கிறேன் என்றெல்லாம் விமர்சித்தார்கள். எனக்கு கன்னட சினிமாவில் நடிக்க தடை போடுவதாகவும் சிலர் மிரட்டினார்கள். அத்தனை பிரச்னைகளையும் மீற¤ ஜெயித்துக் கொண்டிருக்கிறேன். தவறு நடக்கும்போதுதான் மற்றவர்களுடன் சண்டை போடுவேன். அதில் என்ன தவறு? இப்போது சண்டை போட்டு யாரிடமும் அதிக சம்பளம் வாங்கவில்லை. என் மார்க்கெட்படிதான் சம்பளம் வாங்குகிறேன்" என்றார்.




 

என்னை கவர்ந்தவர் ரஜினி : தீபிகா படுகோன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
என்னை கவர்ந்தவர் ரஜினி : தீபிகா படுகோன்!

7/21/2011 2:39:22 PM

'இப்போதுள்ள நடிகைகளில் மிக அழகானவர்' என என்னைப் பற்றி ரஜினிகாந்த் கூறியது பெருமையாக உள்ளது என்கிறார் இந்தி நடிகை தீபிகா படுகோன். ராணா படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க உள்ளார் தீபிகா படுகோன். அவர் கூறியதாவது: நான் பெங்களூர் பெண். மாடல் அழகியாக இருந்தபோதே கன்னடம், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. கன்னடத்தில் அறிமுகமானேன். இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறேன். அங்கு பிஸியாக இருப்பதால் மற்ற மொழி படங்களை ஏற்க முடியவில்லை. இதற்கிடையேதான் ராணா பட வாய்ப்பு கிடைத்தது. ரஜினியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன்.

எல்லோரும் 'ராணாÕ ஷூட்டிங்கில் எப்போது பங்கேற்கப் போகிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். எனது முதல் கவனம் ரஜினியின் உடல் நிலையில்தான் இருக்கிறது. அதனால் இப்படத்தில் நடிக்க அவசரம் காட்டவில்லை. ரஜினியின் மகள் சவுந்தர்யாவுடன் தயாரிப்பாளர் என்ற முறையில் தொழில் ரீதியாகத்தான் பழக்கம் ஏற்பட்டது. இப்போது நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். அடிக்கடி செல்போனில் பேசியும், எஸ்எம்எஸ் பகிர்ந்துகொண்டும் தொடர்பில் இருக்கிறோம்.

'ராணாÕ எனக்கு ஸ்பெஷல் படம். இதை ரஜினி குடும்பத்திடம் உறுதிபட கூறி இருக்கிறேன். செப்டம்பர், அக்டோபர் அல்லது அதற்கு பிறகு எப்போதாக இருந்தாலும் அவர்கள் கேட்கும் தேதியில் கால்ஷீட் தர தயாராக இருக்கிறேன். அதற்காக எனது இந்தி  படங்களின் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்ய தயங்க மாட்டேன். ரஜினி மிகப்பெரும் சாதனையாளர். என்னை கவர்ந்தவர். 'இப்போதுள்ள நடிகைகளிலேயே தீபிகாதான் மிக அழகானவர்Õ என்று ரஜினி பாராட்டியது பற்றி கேள்விப்பட்டேன். உண்மையாகவே அதுபற்றி விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் அவரது பாராட்டு என்னை மெய்மறக்க செய்துவிட்டது. பெருமையாக உள்ளது. மிகப்பெரிய பாராட்டாக இதை கருதுகிறேன். இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்.




 

ஹீரோயின்: ஐஸ்வர்யாவை ஓரங்கட்டிய கரீனா


மாதுர் பந்தர்கரின் ஹீரோயின் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு பதில் கரீனா கபூர் நடிக்கவிருக்கிறார்.

மாதுர் பந்தர்கரின் ஹீரோயின் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே அவர் கர்ப்பமாக இருப்பதாக அமிதாப் தெரிவித்தார். இதையடுத்து ஹிரோயின் படம் ஹீரோயின் இல்லாமல் பல பிரச்சனைகளை சந்தித்தது.

ஏன் படமே கைவிடப்பட்டது என்று கூட நினைக்கப்பட்டது. பின்னர் மாதுர் பந்தர்கர் படத்தை தூசி தட்டி ஹீரோயின் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஹீரோயின் பட ஹீரோயினாக நடிக்க கரீனா கபூர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது வரை தம்மடிக்கும், மது அருந்தும் காட்சிகளுக்கு தடா விதித்த கரீனா ஹீரோயினுக்காக தனது கொள்கையை சிறிது தளர்த்தியுள்ளார். ஆனால் படத்தில் அர்ஜுன் ராம்பலுடன் வரும் படுக்கையறைக் காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டியுள்ளார். இதனால் மாதுரை சமாதானப்படுத்தி சில காட்சிகளை மாற்ற தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

இதில் விந்தை என்னவென்றால் மாதுர் பந்தர்கர் தனது படத்தில் நடிக்குமாறு முதலில் கரீனாவைத் தான் கேட்டுள்ளார். கரீனா மறுத்ததால் ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானார்.

எப்படியோ, ஒரு வகையா ஹீரோயின் கிடச்சாச்சு...
 

நடிகர் ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

7/21/2011 12:34:55 PM

சினிமா நடிகர் ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். பின்னர் அதே கண்கள்,இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.  ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின. விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் படங்களிலும் நடித்தார். ரவிச்சந்திரன் மனைவி விமலா, மகள் லாவண்யா, மகன்கள் அம்சவர்த்தன் பாலாஜி ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வருகிறார்கள்.




 

கமலின் ஹீரோயின் வேட்டை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமலின் ஹீரோயின் வேட்டை!

7/21/2011 12:09:07 PM

கமலின் ‘விஸ்வரூபம்’ படத்திலிருந்து செல்வராகவன் விலகிய பிறகு படத்தின் ஸ்கி‌ரிப்டில் மாற்றங்களை கமல் செய்துள்ளதாக தெ‌ரிவிக்கின்றனர். தனது உலகப் பயணத்தின் போது இந்த மாற்றங்களை கமல் ச‌ரி செய்துள்ளார். இப்போது ஸ்கி‌ரிப்ட் பக்காவாக முழுமைப் பெற்றிருக்கிறது. கமலின் இப்போதைய பிரச்சனை ஹீரோயின். சோனாக்‌சி சின்கா விலகியதால். கமல் ஹீரோயின் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். செல்வராகவன் விலகிய பிறகு இயக்குனர் பொறுப்பும் கமலின் தோள்களில். லொகேஷன் படத்தின் முக்கிய பங்கு வகிப்பதால் கனடா, அமெ‌ரிக்கா, ஐரோப்பா என கிட்டத்தட்ட பாதி உலகை வலம் வந்திருக்கிறார் கமல்.

 

மங்காத்தாவில் நான் கெட்டவ¡ : அ‌‌ஜீத்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மங்காத்தாவில் நான் கெட்டவ¡ : அ‌‌ஜீத்!

7/21/2011 12:04:44 PM

மங்காத்தாவில் தனது கதாபாத்திரம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த பேசியிருக்கிறார் அ‌‌ஜீத். அ‌‌ஜீத்தின் 50வது படமான குறித்து நாளுக்கு நாள் சுவாரசியமான தகவல்கள் வருகின்றன.மங்காத்தா ப இந்தப் படத்தில் நான் கெட்டவனாக வருகிறேன். மொத்தம் 5 கெட்டவர்கள் இதில் இருக்கிறார்கள். அவர்களில் நான்தான் ரொம்ப கெட்டவன். நான் வொர்க் பண்ணியதில் வெங்கட்பிரபுவின் டெடிகேஷன் யா‌ரிடமும் பார்த்தில்லை. அவரது டெடிகேஷன் காரணமாக மங்காத்தா சிறப்பாக வந்திருக்கிறது ஐயம் ஹேப்பி. யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

 

பட்ஜெட்டை தாண்டிய வேலாயுதம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பட்ஜெட்டை தாண்டிய வேலாயுதம்

7/21/2011 11:51:03 AM

விஜய் இதுவரை நடித்தப் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் ‘வேலாயுதம்’ படம், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயா‌ரித்திருக்கிறார். இயக்குனர் ராஜா முதலில் சொன்ன பட்ஜெட்டைவிட பல கோடிகள் அதிகம் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து வேலாயுதம் படத்தின் போஸ்ட் புரொட‌க்சன் வேலைகள் து‌ரிதகதியில் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர் படக்குழுவினர். கேரளாவில் மட்டும் 80க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வேலாயுதம் வெளியாவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 

வெற்றிக்காக மீண்டும் கூட்டணி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வெற்றிக்காக மீண்டும் கூட்டணி

7/21/2011 10:59:14 AM

பையா படத்துக்குப் பிறகு இயக்குனர் லிங்குசாமியின் மார்கெட் உயர்ந்திருக்கிறது. தற்போது மூன்று மொழிகளில் தயாராகிவரும் வேட்டை வெளிவந்தால் லிங்குவின் மார்க்கெட் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் உட்பட பல முன்னணி ஹீரோக்கள் இவரது இயக்கத்தில் நடிக்கலாம் என ஒரு பட்டியலே காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக விக்ரம் தெ‌ரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய பீமா வருடங்களை சாப்பிட்டதே தவிர பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெறவில்லை. அந்தக் குறையை புதிய படம் நிவர்த்தி செய்யும் என்று நம்பலாம்.

 

பாலாவின் அடுத்த ஹீரோ "சரத் குமார்"!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாலாவின் அடுத்த ஹீரோ ‘சரத் குமார்’!

7/21/2011 10:55:27 AM

அவன் இவனுக்குப் பிறகு புதுமுகம் ஒருவரை வைத்து படமெடுக்க இருப்பதாக பாலா தெ‌ரிவித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு விஷாலை வைத்து இயக்குவதாகவும், விக்ரமுடன் ஒரு படத்தில் இணைவதாகவும் பல்வேறு ஹாஸ்யங்கள். இதில் எது உண்மை? சமீபத்தில் பாலா சரத்குமாரை சந்தித்துப் பேசியிருக்கிறார். தனது அடுத்தப் படத்தில் சரத்குமாரை நடிக்க வைப்பது குறித்து பாலா பேசியதாக அவருக்கு நெருக்கமான சட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் முழு விவரம் தெ‌ரிய வரலாம். படப்பிடிப்பு தொடங்கும் வரை பாலா படத்தின் ஹீரோ யார் என்பது மர்மமாகவே இருக்கும்.

 

ஜூலை 25 முதல் மாற்றான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜூலை 25 முதல் மாற்றான்

7/21/2011 10:51:35 AM

கோ படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படம் மாற்றான். சூர்யாவுக்கு இதில் பல கெட்டப்புகள். காஜல் அகர்வால் ஹீரோயின். தமிழ் திரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் மாஸ் இயக்குனராக இருப்பார். ஒருகாலத்தில் கே.எஸ்.ரவிக்குமார் பிறகு ஹ‌ரி இப்போது கே.வி.ஆனந்த். அயன், கோ என்று இவ‌ரின் அடுத்தடுத்தப் படங்கள் பிளாக் பஸ்டர்ஸ். முந்தையப் படங்களைப் போலவே இந்தப் படத்துக்கும் எழுத்தாளர்கள் சுபா கதை, வசனம் எழுதுகின்றனர். இதுதான் ஆனந்த் இயக்கியப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகப் போகும் படம். சூர்யாவுக்காக காத்திருந்த மாற்றான் யூனிட் வரும் 25ஆம் தேதியிலிருந்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது.

 

கதிர் படத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீகாந்த்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கதிர் படத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீகாந்த்!

7/21/2011 10:49:58 AM

இதயம், காதல் தேசம், காதலர் தினம் படங்களை இயக்கிய கதிர் பல வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘கோடை விடுமுறை’. ஸ்ரீகாந்த் ஹீரோ என்று படத்தின் பூஜையின் போது தெ‌ரிவித்தார்கள். ஆனால் தற்போது அந்த படத்திலிருந்து ஸ்ரீகாந்த் விலகியுள்ளார். ஸ்ரீகாந்த் தற்போது நண்பன் படத்தில் நடித்த வருவதால் ‘கோடை விடுமுறை’ படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். ஸ்ரீகாந்த் தற்போது நண்பன் படத்திலும், எதி‌ரி எண் 3 படத்திலும் மட்டுமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

தெலுங்கிலும் அசத்திய தெய்வத்திருமகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெலுங்கிலும் அசத்திய தெய்வத்திருமகள்!

7/21/2011 10:44:56 AM

பொதுவாக தெலுங்கு சினிமா என்றாலே கரமசாலா ரசனை அதிகமாக இருக்கும். இந்நிலையில் ‘தெய்வத்திருமகள்’ நானா என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகியுள்ளது. ஆந்திரா ரசிகர்களின் கரமசாலா ரசனையை இந்த‌க் கலைப்படம் கவருமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. ஆச்ச‌ரியமாக சென்னையில் உள்ளது போன்றே ஹைதராபாத்திலும் படத்தை ரசிகர்கள் அமோகமாக வரவேற்றிருக்கிறார்கள். ஆந்திரா ரசிகர்கள் ஆக்சனை மட்டுமே ரசிப்பார்கள் என்பதை நானா – தெலுங்கில் அப்பா என்று பொருள் – உடைத்திருக்கிறது. விக்ரம், இயக்குனர் விஜய், அனுஷ்கா, குழந்தை சாரா என அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் உரையாடியிருக்கிறார்கள். ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து விக்ரம் உள்ளிட்ட அனைவருக்கும் திருப்தி.

 

ராகுலை விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்டார் கேத்ரினா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

ராகுலை விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்டார் கேத்ரினா

7/21/2011 10:25:11 AM

ராகுல் காந்தி பற்றி தெரிவித்த விமர்சனத்துக்காக இந்தி நடிகை கேத்ரினா கைப் மன்னிப்பு கோரினார். இந்தி நடிகை கேத்ரினா கைப் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 'எனது தந்தை காஷ்மீரை சேர்ந்தவர். தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர். அப்பா ஆசியர், அம்மா இங்கிலாந்துக்காரர். எனவே, நான் பாதி ஆசியன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. எனக்கு இதில் பெருமைதான். நான் மட்டுமா? ராகுல் காந்தி கூட அரை இந்தியர். அரை இத்தாலிக்காரர்' என்று கூறினார்.

இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யாரென்றே தெரியாத கேத்ரினா கைபுக்கு எல்லாம் பதில் சொல்லி, அரசியலின் கண்ணியத்தை குறைக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கடுமையாக சாடினார். கேத்ரினாவுக்கு எதிராக காங்கிரசார் போராட ஆயத்தமான நிலையில், ராகுல் பற்றிய தனது விமர்சனத்துக்காக கேத்ரினா மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது கருத்து குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு கேத்ரினா அளித்த பேட்டியில் கூறியதாவது:நான் பாதி ஆசியன். இதில் பெருமைதான் என்று கூறி ஒரு உதாரணத்துக்காக ராகுலை பற்றி கூறினேன். அவரை தவறாக விமர்சிக்கவில்லை. எனது கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டன.

எனினும், யாருடைய உணர்வுகளாவது புண்பட நான் காரணமாக இருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. சாதாரணமாக தெரிவிக்கும் கருத்துக்களை ஊடகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடக் கூடாது. இவ்வாறு கேத்ரினா கூறினார்.

 

இலங்கை சென்ற பாடகர்களுக்கு எதிர்ப்பு நிகழ்ச்சி ரத்து

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இலங்கை சென்ற பாடகர்களுக்கு எதிர்ப்பு நிகழ்ச்சி ரத்து

7/21/2011 10:24:17 AM

இலங்கை கிளிநொச்சியில் கச்சேரி நடத்த சென்ற பாடகர்கள் மனோ, கிரிஷ், பாடகி சுசித்ரா ஆகியோர், கடும் எதிர்ப்பு காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிளிநொச்சியில் தமிழக பின்னணி பாடகர்களை அழைத்து இசை கச்சேரி நடத்த, இலங்கை அதிபர் ராஜபக்சே கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை பாடகர்கள் மனோ, கிரிஷ், பாடகி சுசித்ரா ஆகியோர் கொழும்பு சென்றனர். இது ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், கடும் எதிர்ப்பு கிளம்பியது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பாடகர்கள் கச்சேரியை ரத்து செய்துள்ளனர்.

இதுபற்றி பாடகர் மனோ கூறும்போது, ''கிளிநொச்சியில் ஸ்டேடியம் திறப்புவிழா என்று பாட அழைத்திருந்தனர். தமிழர்கள் மத்தியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நினைத்துதான் சம்மதித்தோம். இங்கு வந்தபிறகுதான் ராஜபக்சே கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்று தெரிந்தது. இதையடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம்'' என்றார்.

 

மாற்றுத்திறனாளிகளிடம் அன்பு காட்ட வேண்டும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மாற்றுத்திறனாளிகளிடம் அன்பு காட்ட வேண்டும்

7/21/2011 10:21:35 AM

'தெய்வ திருமகள் படத்தைபோல் மாற்றுத்திறனாளிகளிடம் அனைவரும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்' என திருச்சியில் நடிகர் விக்ரம் கூறினார். திருச்சியில் நடிகர் விக்ரம் நிருபர்களிடம் கூறியதாவது: தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரம் சாராவின் நடிப்பு என் நடிப்பை விட அருமையாக இருந்தது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில், என்னை பாதிக்கும் விஷயங்களை கதையாக சித்தரித்து அவற்றை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என நினைத்து நடிப்பேன். எனக்கு நடிப்பு தொழில் அல்ல. அது ஒரு கலை. கதாபாத்திரம் தெரியாதபடி கேரக்டராகவே ஒன்றி நடிக்க வேண்டும் என்பது முயற்சி, குறிக்கோள். தெய்வத்திருமகள் படத்திற்காக மாற்றுதிறனாளிகள் பள்ளியில் உள்ளவர்களின் அங்க அசைவுகள், அவர்களின் நடை, பாவனை ஆகியவைகளை ஒரு மாதமாக கூர்ந்து கவனித்தேன். மாற்றுத்திறனாளிகளை மதித்து அவர்களிடம் நாம் அன்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த படத்தைப்போல் அனைவரும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.




 

ஒரு மாத ஓய்வுக்கு பின் ரசிகர்களை ரஜினி சந்திப்பார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு மாத ஓய்வுக்கு பின் ரசிகர்களை ரஜினி சந்திப்பார்

7/21/2011 10:20:33 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ராகவேந்திரா ஆலயத்தில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியதற்காக 12 விதமான ஹோம பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் சசோதரர் சத்யநாராயணராவ் கெய்க்வாட்&கமலாபாய் தம்பதிகள் கலந்து கொண்டு ரசிகர் மன்றம் சார்பில் 20 தம்பதியர்களுக்கு சுமங்கலி பொருட்களை வழங்கினர். அப்போது, சத்யநாராயணராவ் கெய்க்வாட் நிருபர்களிடம் கூறியதாவது: எனது சகோதரர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியுள்ளார். எங்கள் பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனஹள்ளி நாச்சிகுப்பத்தில் ஒரு ஆண்டில் பெற்றோர் நினைவாக மணிமண்டபம் கட்ட உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் குறித்து ரஜினிகாந்துடன் பேசி முடிவு செய்வேன். ஒரு மாத ஓய்விற்கு பின் ரஜினி ரசிகர்களை நேரில் சந்திப்பார். இவ்வாறு சத்யநாராயணராவ் கெய்க்வாட் கூறினார்.

 

நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம்... சிறுநீரகங்கள் செயலிழந்தன!


சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் திடீர் உடல்நலக் குறைவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். இயக்குனர் ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் இவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.

அந்தப் படம் மெகாஹிட் ஆனதால் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் வரிசையில் ரவிச்சந்திரன் இடம்பிடித்தார்.

தொடர்ந்து அதே கண்கள், இதய கமலம், கவுரி கல்யாணம், குமரி பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

ரஜினி, கமல் வருகைக்குப் பின், ரவிச்சந்திரன் படங்களில் நடிப்பதது குறைந்துபோனது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தார் ரவிச்சந்திரன். அதன் பிறகு குணசித்திர வேடங்களில் வந்தார். ரஜினியுடன் அருணாசலம், கமலுடன் பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களிலும் நடித்தார்.

இடையில் மகன் அம்சவிர்தனை வைத்து சில படங்களையும் இயக்கினார்.

ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தேவகி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ரவிச்சந்திரனுக்கு சிறு நீரகங்கள் பாதித்து இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர் இதையடுத்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன் உடல் நிலை மோசமானது. இதனால் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிசிச்சை அளிக்கின்றனர்.

செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு, உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ரவிச்சந்திரன் மனைவி விமலா, மகள் லாவண்யா, மகன்கள் அம்சவர்த்தன், பாலாஜி ஆகியோர் ஆஸ்பத்திரியில் இருந்து கவனித்து வருகிறார்கள்.

 

தெருநாய்களுக்கு கு.க: வெள்ளை அறிக்கை கோரும் அமலா


பெங்களூர்: பெங்களூரில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நடிகை அமலா வலியுறுத்தியுள்ளார்.

விலங்குகள் நலச்சங்கம் நிறுவனரும், நடிகையுமான அமலா நேற்று பெங்களூரில் நிருபர்களிடம் இதுகுறித்துப் பேசுகையில், “பிராணிகளில் நாய்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதனுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறது. அவை நமது வீட்டின் செல்ல பிராணியாகவும், பாதுகாவலனாகவும் விளங்குகின்றன.

தெருநாய்கள் உருவாவதற்கு நாமே காரணம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தெருநாய்களே இல்லை. அங்குள்ள மக்களின் சிறந்த அணுகுமுறையால் தெருநாய்கள் இல்லை.

ஹைதராபாத்தில் பல குடிசைப்பகுதிகள் உள்ளன. அங்கும் தெரு நாய்கள் உள்ளன. அந்த நாய்கள் குடிசைப்பகுதி மக்களுக்கு பாதுகாவலனாக விளங்குகிறது. இதனால் குடிசைப்பகுதி மக்கள் தெருநாய்களை விரும்புகிறார்கள்.

தெரு நாய்கள் மீது அன்பு காட்ட வேண்டும். அவற்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும். குப்பையில் கிடக்கும் உணவுகளை தின்பதால்தான் நாய்களுக்கு வெறி பிடிக்கிறது. நாய்கள் வெறிபிடித்து கடிப்பதற்கு நாமே காரணம். இதனால் அவைகளை நமது குடும்பத்தில் ஒன்றாக வளர்க்க முயற்சிக்க வேண்டும்.

பெங்களூர் மாநகராட்சியில் சமீபத்தில் நாய் கடித்து 2 வயது குழந்தை இறந்ததை அறிந்தேன். இது வேதனை அளிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்வது நமது கடமை. தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை செய்யும் வழிமுறை உள்ளது. ஆனால் அதை செய்யாமல் நாய்களை மறைமுகமாக கொல்லும் கொடூரம் நடக்கிறது.

தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்க மாநகராட்சி கருத்தடை செய்வது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அதன் மூலம் பெரிய அளவில் பலன் கிடைத்ததாக தெரியவில்லை. இது திட்டத்தின் தோல்வியை காட்டுகிறது. இதில் உண்மை நிலவரம் வெளிவர வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,” என்றார்.

 

ஒரு மாதம் கழித்து ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஒரு மாதம் கழித்து ரசிகர்களைச் சந்திக்கிறார். இந்த தகவலை அவரது அண்ணன் சத்யநாராயணா ராவ் நேற்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ராகவேந்திரா ஆலயத்தில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 12 விதமான ஹோம பூஜைகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் சசோதரர் சத்யநாராயணராவ் கெய்க்வாட் – கமலாபாய் தம்பதிகள் கலந்து கொண்டு ரசிகர் மன்றம் சார்பில் 20 தம்பதியர்களுக்கு சுமங்கலி சீர் வழங்கினர்.

அப்போது, சத்யநாராயணராவ் கெய்க்வாட் நிருபர்களிடம் கூறுகையில், “எனது சகோதரர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியுள்ளார். எங்கள் பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனஹள்ளி நாச்சிகுப்பத்தில் ஒரு ஆண்டில் பெற்றோர் நினைவாக மணிமண்டபம் கட்ட உள்ளோம்.

அதற்கான ஏற்பாடுகள் குறித்து ரஜினிகாந்துடன் பேசி முடிவு செய்வேன். ஒரு மாத ஓய்விற்கு பின் ரஜினி ரசிகர்களை நேரில் சந்திப்பார். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்றார்.

 

ராகுல்காந்தி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் கத்ரினா


ராகுல் காந்தியை பாதி இந்தியர் என்று கூறி பெரும் கண்டனத்துக்கு உள்ளான கத்ரகினா கைப் நேற்று தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டார்.

பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை பாதி இத்தாலிக்காரர் என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், ராகுல்காந்தி பற்றிய விமர்சனத்துக்கு நடிகை கத்ரினா கைப் நேற்று வருத்தம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

 

பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்!


தமிழ் சினிமா இணையதளங்கள் மற்றும் பத்திரிகளில் இன்று பிரதானமாக இடம்பெற்றிருப்பது நடிகை ரீமா சென்னின் படுக்கையறைக் காட்சிப் படங்கள்தான்.

என்ன இது... என்ன படம் இது என்று பலரும் ஆர்வத்தோடு விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இந்த விளம்பரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது.

ஆனால் இவை தமிழ்ப் படக்காட்சிகள் அல்ல. ரீமா சென் முன்பு நடித்த 'இடி ஸ்ரீகந்தா' என்ற வங்க மொழிப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக அவர் நடித்துள்ளார்.

பாலியல் தொழிலாளி என்ற பிறகு படுக்கையறைக் காட்சி இல்லாமலா... தாராளக் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். 2004-ல் வெளியான இந்தப் படத்தை இப்போது தமிழில் இளவரசி என டப் செய்து வெளியிடுகின்றனர்.

இதுகுறித்து ரீமா சென்னிடம் கேட்டபோது, "இந்தப் படத்தில் எனக்கு விலை மாது கேரக்டர். அதனால் ஒரு படுக்கையறைக் காட்சியில் நடித்தேன். அதற்காக ஏதோ நான் முழு நீள செக்ஸ் படத்தில் நடித்தது போல பரபரப்பைக் கிளப்பி விட்டனர். இது செக்ஸ் படமல்ல. நல்ல கலைப் படம்," என்றார்.