பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் வாங்கியுள்ள அஜீத்

சென்னை: அஜீத் குமார் பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

கார் பந்தய வீரரான அஜீத் குமாருக்கு பைக்குகள் என்றாலும் கொள்ளைப் பிரியம். அவர் நடிக்கும் படங்களில் பைக் சாகசம் செய்ய அவர் தயங்குவதே இல்லை. மங்காத்தாவில் கூட அவர் பைக் சாகசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் வாங்கியுள்ள அஜீத்

விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் டுகாட்டி பைக்கில் சாகசம் செய்யும் காட்சி உள்ளது. அஜீத் வீட்டில் ஏற்கனவே பல சூப்பர் பைக்குகள் உள்ளன. இந்நிலையில் அவர் பிஎம்டபுள்யூ எஸ்1000ஆர்ஆர் என்னும் ரேசிங் பைக்கை வாங்கியுள்ளார்.

காலில் காயம் ஏற்பட்டு வரும் அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருக்கும் அஜீத்தால் இந்த பைக்கை ஓட்ட முடியுமா என்று தான் தெரியவில்லை.

 

பாடலாசிரியர் பழனிபாரதியின் தந்தை சாமி பழனியப்பன் மரணம்

சென்னை: பிரபல பாடலாசிரியர் பழனி பாரதியின் தகப்பனார் சாமி பழனியப்பன் மரணமடைந்தார்.

82 வயதான பழனியப்பன், பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞர் ஆவார். தீவிர பெரியார் பற்று கொண்டவர். பாரதிதாசன், அண்ணா, கருணாநிதி, கண்ணதாசின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், தமிழறிஞர்களுடன் நல்ல தொடர்பு வைத்திருந்தவர்.

பத்திரிக்கையாளராகவும் பரிமளித்தவர் சாமி பழனியப்பன். தமிழக அரசின் செய்தித்துறை ஏடான தமிழரசு பத்திரிக்கையிலும் பணியாற்றியுள்ளார்.

உடல்நலக்குறைவால் காலமானார் சாமி பழனியப்பன். அவரது உடலுக்கு திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

 

இனி 'அப்படி' பேச மாட்டேன்: அம்மாவுக்கு சந்தானம் சத்தியம்

இனி 'அப்படி' பேச மாட்டேன்: அம்மாவுக்கு சந்தானம் சத்தியம்

சென்னை: சந்தானம் தனது தாய்க்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

சந்தானம் தாய் சொல்லைத் தட்டாதவர். அவர் என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் நடப்பாராம். படங்களில் சந்தானம் இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் பயன்படுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே.

கிருத்திகா உதயநிதி இயக்கும் வணக்கம் சென்னை படத்தில் சந்தானம் நடிக்கிறார். என் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கூடவே கூடாது என்று கிருத்திகா சந்தானத்திடம் கறாராக தெரிவித்துவிட்டார். இந்நிலையில் சந்தானத்தின் வசனங்கள் அவரது தாய்க்கும் பிடிக்கவில்லை போன்று.

இதையடுத்து இனி தான் நடிக்கும் படங்களில் அருவெறுப்பான வசனங்களை பேசவே மாட்டேன் என்று சந்தானம் தனது தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

 

’ஆடி’ செண்டிமெண்ட் பார்க்கும் சந்தானம்

சென்னை: பொதுவாக திரைத்துறையில் உள்ளவர்கள் ஆடி மாத செண்டிமெண்ட் பார்ப்பார்கள். எனவே, இந்த மாதத்தில் புதுப்பட பூஜைகள் மற்றும் ரிலீஸ்கள் பெரும்பாலும் இருக்காது.

நடிகர், நடிகைகளும் இந்த ஆடி செண்டிமெண்ட் பார்க்கும் விஷயத்தில் விலக்கல்ல. தற்போது, காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானமும் இந்த செண்டிமெண்ட் கலாச்சாரத்தில் சிக்கி விட்டாராம்.

எனவே, தான் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள படத்தின் பூஜையையும் ஆடிக்கு முன்னதாகவே முடித்து விட்டாராம் சந்தானம்.

{photo-feature}