டெல்லி: மானை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த1998 ஆம் ஆண்டு ஹம் சாத் சாத் திரைப்படத்தின் படப்படிப்பின் போது, ஜோத்பூர் சென்றிருந்த அவர் இரண்டு மான்களை வேட்டையாடி கொன்றதாக குற்றசாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது.இதற்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதன் மீது இன்று நடைபெற்ற விசாரணையின்போது, நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மான்வேட்டையாடிய வழக்கில் சையிப் அலி கான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.