என்னைப் பற்றி யாரிடமும் வாய் திறக்கக் கூடாதுன்னு ஆர்யா மிரட்டினார்: நஸ்ரியா

சென்னை: தன்னைப் பற்றி யாராவது கேட்டால் எதுவும் சொல்லக் கூடாது என்று ஆர்யா தன்னை மிரட்டியதாக நஸ்ரியா நஸீம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான நேரம் படத்தில் நடித்திருக்கும் நஸ்ரியா நஸீம் நடிக்கத் தெரிந்தவர் என்று முதல் படத்திலேயே பெயர் எடுத்துவிட்டார். அவர் தற்போது ராஜா ராணி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நயன்தாரா இருந்தாலும் ஆர்யாவுக்கு நஸ்ரியா தான் ஜோடி என்று கூறப்படுகிறது. அடுத்ததாக நையாண்டி படத்தில் தனுஷுடன் நடிக்கிறார். ஜெய்யுடன் நிக்காஹ் எனும் திருமணம் படத்திலும் நடிக்கிறார்.

arya nearly threatens me nazriya nazim

இந்நிலையில் நஸ்ரியாவிடம் நீங்கள் நடிக்கும் ஹீரோக்கள் பற்றி கூறுங்கேளன் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,

நீ என்னுடன் நடிப்பது தெரிந்து என்னைப் பற்றி உன்னிடம் ஏதாவது கேட்பார்கள். யாரிடமும் நீ எதுவும் சொல்லக் கூடாது என்று ஆர்யா என்னை கிட்டத்தட்ட மிரட்டினார் என்றார்.

 

ஹீரோயிசமுள்ள கதையே வேண்டாம்: நயன் கறார்

Nayan Says No Heroism   

சென்னை: ஹீரோயிசம் உள்ள கதைகளில் இனி நயன்தாரா நடிக்க மாட்டாராம்.

நயன்தாராவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் அந்த படங்கள் எல்லாம் முன்னணி ஹீரோக்களின் படங்களாக உள்ளனவாம். படத்தில் நயன்தாராவை வயதான நடிகையாக கருதி பிளாஷ்பேக் காட்சி இல்லை என்றால் ஏதாவது கேரக்ரடில் வந்து செல்வது போன்ற கதாபாத்திரத்தை தான் தருவதாக சொல்கிறார்களாம்.

ஹீரோக்களுக்கு வளர்ந்து வரும் இளம் நடிகைகளை ஜோடியாக்கிவிட்டு நயனுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தை தருகிறார்களாம். அஜீத் நடித்துள்ள பெயரிடப்படாத படத்தில் கூட டாப்ஸிக்கு தான் அதிக முக்கியத்துவம் என்று கூறப்படுகிறது. ராஜா ராணி படத்தில் கூட நஸ்ரியா நஸீம் தான் ஆர்யாவின் ஜோடியாம்

அதனால் இனி ஹீரோயிசம் உள்ள படங்களில் நடிப்பதில்லை என்று நயன் முடிவு செய்துள்ளாராம். கஹானி ரீமேக்கில் நடிக்கும் நயன் அது போன்று தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் இனி நடிப்பாராம்.

 

தனுஷ் அப்படியே அவர் மாமா ரஜினி மாதிரி: அனில் கபூர்

மும்பை: தனுஷ் அவரது மாமனார் ரஜினிகாந்த் போன்று மிகவும் அடக்கமாக இருப்பதாக இந்தி நடிகர் அனில் கபூர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா இந்தி படம் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரைப் பார்த்த அனில் தனது மகளிடம் தனுஷை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். தனுஷின் நடிப்பை நாள் முழுவதும் பாராட்டியுள்ளார்.

anil kapoor compares dhanush rajini

இந்நிலையில் ரஜினிகாந்துடன் 2 படங்களில் நடித்துள்ள அனில் தனுஷிடம் அவரது மாமனாரின் குணம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். தனுஷை சந்தித்த அனில் மாப்பிள்ளையிடம் அப்படியே மாமனார் போன்று தன்னடக்கம் இருப்பதைப் பார்த்துள்ளார்.

ரஜினி என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் பெருமை அடித்துக்கொள்ளாமல் இருப்பது போன்று தனுஷும் இருப்பதாக அனில் தெரிவித்துள்ளார்.