சென்னைக்குத்தாம்பா ஆதரவு கொடுத்தேன்... திரிஷா புலம்பல்!

I Supported Csk Not Kkr Says Trisha   
ஐபிஎல் இறுதிப் போட்டியில் நான் சென்னை சூப்பர் கிங்ஸுக்குத்தான் ஆதரவு கொடுத்தேன் என்று பதறியடித்துப் போய்க் கூறியுள்ளார் திரிஷா.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. சென்னை அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

போட்டியைக் காண பல திரைப்பட பிரபலங்கள் குவிந்திருந்தனர். கொல்கத்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜெனிலியா, பாடகி உஷா உதுப் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அதேபோல சென்னை அணிக்கு ஜெயம் ரவி, உமா ரியாஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். நம்ம திரிஷாவையும் ஸ்டேடியத்தில் காண முடிந்தது.

ஆனால் அவர் கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார. இதனால் அவர் கொல்கத்தாவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாக பேச்சு வெடித்தது. கொல்கத்தா வேறு வெற்றி பெற்றதால் திரிஷா மீது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் திரிஷா மீது காட்டமாகியுள்ளனர். டிவிட்டர் மூலமும், பிளாக்குள் மூலமும் திரிஷாவைத் திட்டித் தீர்த்து வருகின்றனராம்.

இது திரிஷாவின் காதுகளுக்குப் போய் அவர் களேபரமாகி விட்டார். நான் எப்போதுமே சென்னையின் ரசிகைதான். நேற்றும் கூட சென்னைக்குத்தான் ஆதரவு கொடுத்தேன். எனது நெருங்கிய தோழி சபீனா கான் அங்கிருந்ததால் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். மற்றபடி நான் கொல்கத்தாவையெல்லாம் ஆதரிக்கவி்ல்லை, சாமி. தயவு செய்து விட்டுடுங்க என்று புலம்பியுள்ளார்.

விடுங்கப்பா, விடுங்கப்பா...
Close
 
 

'தலைவரின்' உத்தரவை மதித்தார் ரஜினி ரசிகர்.. இடைத் தேர்தலில் போட்டியில்லை!

Rajini Fan Withdraws From Poll Cont
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ஸ்ரீதர் தனது வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார்.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீதர் மனு தாக்கல் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. ரஜினி படம், கொடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அவர் ஊர்வலமும நடத்தினார்.

இது ரஜினிக்குப் பிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின. ஸ்ரீதர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என ரஜினி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறின. இதே கருத்தை ரஜினியின் உதவியாளர்களில் ஒருவரான சுதாகரும் வெளிப்படுத்தினார்.

ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்கவே போட்டியிடும் முடிவை தான் எடுத்ததாக கூறியி்ருந்தார் ஸ்ரீதர்.

இந்த நிலையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான இன்று தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார் ஸ்ரீதர். இதன் மூலம் தலைவர் உணர்வுகளை அவர் மதித்துள்ளதாக ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Close
 
 

நடிகை ரேகா பங்கேற்ற அமீரகத் தமிழ் மன்றத்தின் கனவு மெய்ப்பட வேண்டும்

Ameeraga Tamil Mandram S Kanavu Meipada Vendum
துபாய்: கணினியில் தமிழைப் பரப்புவதை இலட்சியமாகக் கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வரும் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற தலைப்பில் வெகு சிறப்பாக துபாய் ஸ்டார் சர்வதேச பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக அமீரகத் தமிழ் மன்றம் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே மேடையில் தோன்றி தங்கள் திறமையை வெளிக்காட்டும் வண்ணம் மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளை போலவே சமையல் போட்டிகள், கைவினைக் கலைஞருக்கான போட்டிகள், கட்டுரை போட்டிகள் என பல போட்டிகளை அமீரகத் தமிழ் மன்றம் நடத்தியது.

விழாவின் துவக்கமாக அமீரகத் தமிழ் மன்றத்தின் மகளிர் அணியினர் ஒருங்கிணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாட தொடர்ந்து அமீரா அமீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நடனத்தை நஷ்வா மற்றும் நவ்ஷீன் ஆகியோர் சிறப்புற வடிவமைத்து வழங்க மதர் ப்ரீஸ் குழுவினரின் சார்பில் வழங்கப்பட்ட நடனம் தேசிய உணர்வுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மகளிர் தினம்-ஒரு பார்வை என்ற தலைப்பில் திருமதி.நர்கீஸ் ஜியாவுதீன் மகளிர் தினம் குறித்த செய்திகளையும், மகளிரின் அன்றாட சிக்கல்களையும் சிறப்பாக எடுத்துரைத்தார். மூன்றிலிருந்து ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மேடை பயத்தை அகற்றும் விதமாக 'அரும்புகளின் தளிர்நடை' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பாக அலங்காரம் செய்து கொண்ட 20 குழந்தைகள் கலந்து கொண்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். நிகழ்ச்சியை செல்வி. லாவண்யா அழகுற ஒருங்கிணைத்தார்.

அடுத்து நடைபெற்ற மதர் ப்ரீஸ் குழுவினரின் நடனத்தில் நிவேதிதா மற்றும் அபி ஆகியோர் ஆண் பெண் என இரு தோற்றங்களில் நடனமாடியதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதாக அமைந்தது. கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற தலைப்பில் குறுநாடகமும் அமீரகத் தமிழ் மன்றத்தின் பெண்கள் பிரிவினரால் சிறப்புற அரங்கேற்றப்பட்டது. பெண்களுக்கும் மனதும் உணர்வும் இருக்கிறதென்பதை அழுத்தமுறச் சொன்ன இந்தக் குறுநாடகத்தில் லாவண்யா, நிவேதிதா, ரோஷினி, அபி, ஸ்ரீவாணி ஆனந்தன், கோமதி, சுஜாதா, பொற்செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.

தாயும், மகளும் ஒரே அணியில் கலந்து கொண்ட 'என்னுயிர்த் தோழி' என்ற வேடிக்கை வினோத நிகழ்ச்சியை லட்சுமி ப்ரியா வழங்கினார். பொது அறிவு, திரைப்படப் பாடல்கள், பழமொழிகள் என்று பல்சுவை கொண்ட இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் உற்சாகத்துடன் பங்கு கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருமதி ரேணுகாவும் தமிழகத்திலிருந்து வந்திருந்த அவரது அன்னையாரும் முதல் பரிசை வென்றனர்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகை ரேகா அவர்கள் குறித்த காணொளி திரையிடப்பட்டது. விழாவில் இந்த ஆண்டின் சுவை அரசியாக திருமதி. நஸீம் நாஸர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த கைவினைக் கலைஞருக்கான விருது நஷ்வா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மகளிரின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே மகளிருக்காக மகளிரே நடத்தும் மகளிர் தின நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வந்தாலும் தங்களுக்கு வழங்கப்படும் இந்த வாய்ப்புகளை பெண்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக இருப்பதாகக் கூறிய அமீரகத் தமிழ் மன்றத்தின் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் `சமூகத்திற்குச் சிறந்த வகையில் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து வரும் மகளிரைக் கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கடந்த மூன்றாண்டுகளாக அமீரகத்தின் சிறந்த தமிழ்ப் பெண்மணி விருதை அமீரகத் தமிழ் மன்றம் வழங்கி வருவதாகவும், இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் பெண்மணியாக தனது சிறப்பான சமூகப் பங்களிப்பிற்காக திருமதி. மர்யம் சலாஹுதீன் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்` என்பதையும் அவர் தெரிவித்தார்.

சிறந்த தமிழ்ப் பெண்மணிக்கான விருதையும், கிரீடத்தையும் ரேகா வழங்க மர்யம் சலாஹூதின் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டார். தனது ஏற்புரையில், குழந்தைகளுக்கான கல்வி குறித்தும் பெண்கள் கல்வி குறித்தும் சிறப்புற எடுத்துரைத்த மர்யம் ஸலாஹுதீன், குழந்தைகளை அவர்களது திறனறிந்து அந்தத் திறனுக்கேற்றவாறு வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். எல்லா குழந்தைகளாலும் நூறு சதவீதம் கற்றுக் கொள்ள முடியாது சிலருக்கு 50 சதவீதம் மட்டுமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் இருக்கும் என்றால் அந்த 50 சதவீதத்தை முழுமையாக குழந்தைகள் வெளிப்படுத்த பெற்றோர்கள் அவர்களுக்கு உதவ வேண்டுமே தவிர ஏன் நூறு சதவீதம் எடுக்கவில்லை எனப் புரியாமல் நச்சரிக்கத் தேவையில்லை` என்று குழந்தைகள் கல்வி குறித்த கருத்தை வெளிப்படுத்தினார். தனக்கு வழங்கப்பட்ட இந்த விருது தனது பெற்றோர்களின் நன்கொடைதான் என்று பணிவுடன் குறிப்பிடவும் அவர் தவறவில்லை.

சிறப்பு விருந்தினருக்கான நினைவுப் பரிசுகளை அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ரேகாவுக்கு வழங்கியதன் பின்னர் சிறப்புரையாற்ற வந்த ரேகா, நிகழ்ச்சி தனக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாகக் குறிப்பிட்டார். நடனங்கள், குறுநாடகங்கள், வேடிக்கை நிகழ்ச்சிகள் அனைத்திலுமே பெண்களே நிறைந்திருந்தது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொன்ன அவர் நிகழ்ச்சிகள் அனைத்துமே தரமானதாகவும், சிறப்பானதாகவும் இருந்ததற்காகப் பங்கேற்பாளர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும் பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு பெண்கள் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் பெண்கள் கல்வி எவ்வாறு ஒரு சமூகத்தை மேம்படுத்த முக்கியமான பங்க்ளிப்பாக அமையும் என்பது குறித்தும் பேசினார். துபாயில் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் கூட இந்நிகழ்ச்சி தனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருப்பதாகக் கூறிய ரேகா தனது வாழ்வின் மிக முக்கியமான அங்கமான தனது மகளின் பிறந்த தினத்தை பார்வையாளர்கள் ஆசிகளோடு மேடையிலேயே கொண்டாடப் போவதாகச் சொல்லி தனது மகளை மேடைக்கழைக்க பார்வையாளர்கள் பிறந்த நாள் வாழ்த்து பாட, ரேகா தனது நன்றியுடன் பேச்சை நிறைவு செய்தார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு மருத்துவர் தஸ்னீம் முன்னிலை வகித்தார். அவரது நிறுவனமான ப்ரைம் மெடிக்கல் சென்டர் மூலமாக இலவச மருத்துவ முகாமொன்றினையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியை சின்னத்திரை புகழ் ஐஸ்வர்யா சிறப்புற தொகுத்து வழங்கினார். விழா தொடர்பான ஏற்பாடுகளை அமீரகத் தமிழ் மன்ற நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Close
 
 

'வழக்கு எண்' பார்த்த ரஜினி.. 'ஓகே. ஓகே'. பார்த்த கமல்!

Rajini Watches Vazhakku Enn 18 9
தமிழ்த் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினியும், கமலும் சமீபத்தில் இரு முக்கியப் படங்களைப் பார்த்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் வசூலிப்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் இவை.

சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை கமல்ஹாசன் பார்த்து வெகுவாக ரசித்தாராம். படத்தின் இயக்குநர் ராஜேஷை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சனிக்கிழமையன்று இன்னொரு ஹிட் படமான வழக்கு எண் 18/9 படத்தை போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் பார்த்து ரசித்துப் பாராட்டினார்.

படத்தைப் பார்த்து முடித்த பி்ன்னர் பிரமாதமாக வந்திருப்பதாக தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குச்சாமியிடம் கூறினாராம் ரஜினி. மேலும் படத்தின் நாயகன் உள்ளிட்ட குழுவினரையும் வெகுவாக பாராட்டினாராம்.

அதை விட முக்கியமாக இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்த முத்துராமன் என்ற புதுமுக நடிகரை கூப்பி்ட்டுப் பாராட்டிய ரஜினி, இது உங்களுக்கு முதல் படமா என்று கேட்டுள்ளார். அவரும் ஆமாம் என்று கூறி என்னை ஆசிர்வதியுங்கள் என்றாராம். ஆனால் அதற்கு ரஜினி கூறிய வார்த்தைகளைக் கேட்டு முத்துராமன் பேச முடியாமல் திகைத்துப் போய் விட்டாராம். அப்படி என்ன சொன்னார் ரஜினி.. உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதுதான் ரஜினி சொன்ன வார்த்தை....

அதேபோல லிங்குச்சாமியிடமும் மிகத் துணிச்சலாக படம் எடுத்துள்ளீர்கள் என்று பாராட்டினாராம் ரஜினி.

விரைவில் கமல்ஹாசனும் இப்படத்தைப் பார்க்கவுள்ளாராம்.
Close
 
 

ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு எதிரொலி... விக்ரம் படத்திலிருந்து ஆசின் தூக்கப்பட்டார்!

Asin Sacked From Vikram Movie   
ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் உறவாடி வந்தவரான நடிகை ஆசின், விக்ரம் நடிக்கும், ஷங்கர் இயக்கும் படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் பாணா காத்தாடி பட நாயகி சமந்தாவை புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈழத்தில் போர் முடிந்து, பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பி்ன்னர் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் முண்டியடித்துக் கொண்டு இலங்கைக்கு ஓடினர். அத்தனை பேரையும் ராஜபக்சேவும் அவரது அரசும் இரு கரம் நீ்ட்டி வரவேற்று விருந்து வைத்து அனுப்பினர். சல்மான் கான் முதல் பலரும் அங்கு போய் விருந்தாடி வந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஆசின்.

சல்மானுடன் ரெடி படத்தில் நடித்த அவர் அப்பட ஷூட்டிங் இலங்கையி்ல வைக்கப்பட்டதால் அங்கு போனார். தமிழ்த் திரையுலகினர் யாரும் இலங்கைக்கு போகக் கூடாது என்று இங்குள்ள திரையுலக கூட்டமைப்பு உத்தரவிட்டபோதும் அதையும் மீறிப் போய் விட்டு வந்தார் ஆசின்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதை ஆசின் கண்டு கொள்ளவில்லை. இடையில் விஜய் கூட தனது காவலன் படத்தில் நடிக்க வைத்தார்.

இந்த நிலையில் ஷங்கர் இயக்க, விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஆசினை நாயகியாககப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு ஈழ ஆதரவாளர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

ஷங்கர் வீட்டை முற்றுகையிடப் போவதாக இநது மக்கள் கட்சியும் அறிவித்தது. இதையடுத்து தற்போது ஆசினை தூக்கி விட்டதாகவும், சமந்தா நாயகியாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாணா காத்தாடி படத்தின் மூலம் நாயகியானவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

'மாடர்ன்' டிரஸ்ஸுக்கு மாறிய சன் நியூஸ் ரீடர்கள்!

Sun News Women News Readers Change Their Dresses
சன் நியூஸ் சானலின் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மாடர்ன் உடைக்கு மாறியுள்ளனர். இதுவரை புடவையில் மட்டுமே வலம் வந்த அவர்கள் தற்போது மாடர்ன் டிரஸ்ஸுக்கு மாறி விட்டனர்.

ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் விதம் விதமான மேக்கப்புடன், விதம் விதமான உடைகளில் கண்ணைக் கவரும் வகையில் செய்தி வாசிப்பாளர்களைக் காணலாம். இருப்பினும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பெரும்பாலும் தெய்வீகத் தேவதைகளாக காட்சி தந்து வந்தனர்.

தமிழக மக்களுக்கு மாடர்ன் கலாச்சாரம் பொருந்தாது என்பதாலும், நம் பெண்களுக்கு அழகே புடவைதான் என்பதாலும், புடவையில் வரும்போதுதான் கம்பீரமும், கண்ணியமும் தூக்கலாக தெரியும் என்பதாலும் புடவையிலேயே வநது செய்தி வாசித்து வந்தனர் தமிழ் சேனல்களின் பெண் செய்தி வாசி்ப்பாளர்கள்.

இருப்பினும் விஜய் டிவி முன்பு இந்த பாரம்பரியத்தை உடைத்தது. சமீபத்தில் புதிய தலைமுறை புதிய கோணத்தில் தனது பெண் செய்தி வாசிப்பாளர்களை காட்ட ஆரம்பித்தது.

இந்த நிலையில் நீண்ட காலமாக புடவையிலேயே செய்தி வாசித்து வந்த சன் டிவியிலும் இப்போது ஒரு புது மாற்றம். சன் நியூஸ் சானலில் கடந்த சில நாட்களாக பெண் செய்தி வாசிப்பாளர்கள் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை புடவையில் பார்தது வந்த பெண் செய்தி வாசிப்பாளர்கள இப்போது மாடர்ன் டிரஸ்ஸில் பார்ப்பது நேயர்களுக்கு வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது.

சேலையை மாற்றிய கையோடு இன்னொன்றையும் செய்தி வாசிப்பாளர்கள் மாற்றினால் நன்றாக இருக்குமே என்பது நேயர்களின் கோரிக்கை - அதாவது செய்திவாசிப்பாளர்களின் உச்சரிப்பும், செய்தியை கூறும்போது மாறும் முகபாவமும் அவசியம். புடவையோ, நாகரீக உடையோ செய்திவாசிப்பாளர்களின் முக பாவம் முக்கியம். எந்த செய்தியானாலும் ஒரே சோக கீதம் பாடுகின்றனர் செய்திவாசிப்பாளர்கள். அதையும் கொஞ்சம் கவனித்தால் நல்லது அப்பொழுதுதான் சேனலை மாற்றாமல் செய்தியை கொஞ்சம் கேட்பார்கள் என்கின்றனர் நேயர்கள்.

நேயர் விருப்பத்தை நிறைவேற்றப் பாருங்கப்பா...
Close
 
 

பாய் பிரெண்டுடன் பட விழாவுக்கு வந்த ஸ்ரேயா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் படங்களை இயக்காமல் பாலிவுட்டில் கவனம் செலுத்துவது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் பிரபுதேவா. போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கிய பிரபுதேவா, இப்போது பாலிவுட் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்துகிறார். இது பற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து ரவுடி ரத்தோர் படத்தை பாலிவுட்டில் இயக்கினேன். தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்பு வருவதால் தமிழ் படங்கள் இயக்க நேரமில்லாமல் இருக்கிறது.

நல்ல ஸ்கிரிப்ட் அமைந்ததும் இயக்குவேன். தெலுங்கு 'கிக் படத்தை சல்மானை வைத்து பாலிவுட்டில் இயக்கப்போவதாக அடிக்கடி செய்தி வருகிறது. ஆனால் சல்மான் கானை இயக்கும் ஐடியா இப்போதைக்கு இல்லை. இதையடுத்து ஷாஹித் கபூர் நடிக்கும் படத்தை இயக்க பேச்சு நடக்கிறது. அஜய் தேவகன் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறேன். இயக்குனரான பிறகும் நடிக்க நிறைய வாய்ப்பு வருகிறது. ஆனால் அதற்கு நேரமில்லை. சந்தோஷ் சிவன் இயக்கிய 'உருமி படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரம் அமைந்ததால் நடித்தேன். இவ்வாறு பிரபுதேவா கூறினார்.


 

தமிழ் படங்கள் இயக்காதது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் படங்களை இயக்காமல் பாலிவுட்டில் கவனம் செலுத்துவது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் பிரபுதேவா. போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி படங்களை இயக்கிய பிரபுதேவா, இப்போது பாலிவுட் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்துகிறார். இது பற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து ரவுடி ரத்தோர் படத்தை பாலிவுட்டில் இயக்கினேன். தொடர்ந்து பாலிவுட்டில் வாய்ப்பு வருவதால் தமிழ் படங்கள் இயக்க நேரமில்லாமல் இருக்கிறது.

நல்ல ஸ்கிரிப்ட் அமைந்ததும் இயக்குவேன். தெலுங்கு 'கிக் படத்தை சல்மானை வைத்து பாலிவுட்டில் இயக்கப்போவதாக அடிக்கடி செய்தி வருகிறது. ஆனால் சல்மான் கானை இயக்கும் ஐடியா இப்போதைக்கு இல்லை. இதையடுத்து ஷாஹித் கபூர் நடிக்கும் படத்தை இயக்க பேச்சு நடக்கிறது. அஜய் தேவகன் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறேன். இயக்குனரான பிறகும் நடிக்க நிறைய வாய்ப்பு வருகிறது. ஆனால் அதற்கு நேரமில்லை. சந்தோஷ் சிவன் இயக்கிய 'உருமி படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரம் அமைந்ததால் நடித்தேன். இவ்வாறு பிரபுதேவா கூறினார்.


 

கலைஞர் டிவியில் இன்னிசை மழை

 

பிரபுதேவா வியந்து பாராட்டிய 'அடுத்த பிரபுதேவா'!

 

பாலிவுட்டைக் கலக்க கர்நாடகத்திலிருந்து பாயும் இன்னொரு அழகு நதி - நிதி!

 

இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த அமீர்கான்