புயல் நிவாரண நிதிக்கு நடிகர்களால் இவ்வளவு தான் கொடுக்க முடியுமா?: ராம் கோபால் வர்மா

ஹைதராபாத்: ஹூட்ஹூட் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ள நடிகர்களை இயக்குனர் ராம்கோபால் வர்மா விமர்சித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா அடிக்கடி செய்தியில் வருவார். சாதனைகளுக்காக அல்ல ஏதாவது சர்ச்சையை கிளப்பி செய்தியில் வருவார். மனிதர் மனதில் பட்டதையெல்லாம் பட் பட் என்று பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

இந்நிலையில் அவர் ஹூட்ஹூட் புயல் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த நடிகர்களை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஹூட்ஹூட் நிவாரண நிதி அளித்த நடிகர்களை வம்புக்கு இழுக்கும் ராம் கோபால் வர்மா

திரை நட்சத்திரங்கள் மக்களிடம் இருந்து ரூ.100 கோடிகள் வாங்கிக் கொண்டு விசாகப்பட்டினத்திற்கு சில லட்சங்களை மட்டுமே நன்கொடையாக அளித்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைகிறேன். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பை அளிப்பதோடு, பிரார்த்தனை செய்கிறார்களாம். ஏனென்றால் அவை இலவசமாச்சே என்று தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தை தாக்கிய ஹூட்ஹூட் புயல் நிவாரண நிதிக்கு நடிகர் பவன் கல்யாண் ரூ.50 லட்சமும், மகேஷ் பாபு ரூ.25 லட்சமும், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் அல்லு அர்ஜுன் தலா ரூ.20 லட்சமும், ராம் சரண் தேஜா ரூ.15 லட்சமும் நன்கொடை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இணையத்தில் உலாவரும் ஆபாச வீடியோவில் இருப்பவர் பிரபல நடிகையா?

இன்று இணையத்தில் பரபரப்பாக உலாவருகிறது ஒரு ஆபாச வீடியோ. அதில் முக்கால் நிர்வாணத்தில்இருக்கும் பெண், தனது மார்புக் கச்சையை மாட்ட முயல, உடனிருக்கும் ஒரு நபர் பிடித்து இழுக்க, அவர் கத்துவதுமாகப் போகிறது அந்த சில நிமிடக் காட்சி.

அந்த வீடியோவில் இருக்கும் பெண் பிரபல முன்னணி நடிகை என்று இணையத்தில் தகவல் பரவியுள்ளது. பார்த்தால் அந்த நடிகை மாதிரிதான் தெரிகிறது.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் பேய் படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவர் இவர். மங்களகரமான பெயர் கொண்ட அவரா இப்படி என்று ஷாக்காகிறார்கள் பார்த்தவர்கள்.

நடிகையின் பெயரைக் குறிப்பிட்டால், நிச்சயம் அது போட்டோஷாப் வேலை என்றுதான் எடுத்த எடுப்பில் கூறுவார்கள் என்பதால், எந்த நடிகை பெயரை நாம் குறிப்பிடவில்லை.

இணையத்தில் இதற்கு முன் நான்கு முன்னணி நடிகைகளின் வீடியோக்கள் இதைப் போன்று வெளியாகியுள்ளன. அவற்றில் நம்பியின் நாயகியுடையதும் அடக்கம்!

 

தாதா தாவூதின் தங்கையாவாரா “ராணி முகர்ஜி”?

மும்பை: நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் தங்கையான ஹசீனா பார்க்கரின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

அந்தப் படத்தை இயக்கப் போகிறார் இயக்குனரான அபூர்வா லக்கியா.

இது அபூர்வாவின் மனதில் நீண்ட காலமாகவே இருந்து வந்த கனவுக் கதையாகும். இப்போதுதான் அது நனவாகப் போகிறது.

தாதா தாவூதின் தங்கையாவாரா “ராணி முகர்ஜி”?

தாவூதின் தங்கை:

ஹசீனாவின் பெயர் இந்தியாவில் ஒரு காலத்தில் யாருக்கும் தெரியாத பெயராகத்தான் இருந்தது. ஆனால் அவரது கணவர் இஸ்மாயில் பார்க்கர், 1991 ஆம் ஆண்டு அருண் காவ்லி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகுதான் ஹசீனா யார் என்பதும், அவர் தாவூத்தின் தங்கை என்பதும் பலருக்குத் தெரிய வந்தது.

இஸ்மாயிலின் இறப்பு:

இஸ்மாயிலை சுட்டுக் கொன்றவர்களை பின்னர் தாவூத் கும்பல் வேட்டையாடியது. பிரபலமான ஜேஜே மருத்துவமனையில் வைத்து கொலையாளிகளை தாவூத் கும்பல் துரத்தித் துரத்தி சுட்டுக் கொன்றது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இடம்பெயர்ந்த ஹசீனா:

இந்த சம்பவங்களுக்குப் பின்னர் ஹசீனா, நக்பதாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு இடம் பெயர்ந்தார். அப்பகுதியின் குட்டி தாதாவாக

மாறிப் போனார். கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி ஹசீனா மரணமடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஹசீனாவின் வாழ்க்கை:

தற்போது இந்த ஹசீனாவின் கதையைத்தான் அபூர்வா லக்கியா திரைப்படமாக்கவுள்ளார். இப்போதைக்கு ஹசீனா என்று படத்திற்குப் பெயர் வைத்துள்ளார். நவம்பரில் படப்பிடிப்புஆரம்பிக்கலாமாம். ராணி முகர்ஜியை, ஹசீனா பாத்திரத்தில் நடிக்க அணுகியிருக்கிறாராம்.

ராணி முகர்ஜிதான் பொருத்தம்:

இந்தப் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக ஹசீனாவின் மறைவுக்கு முன்பு அவருடன் நிறைய நேரம் செலவிட்டு பல தகவல்களை சேகரித்துள்ளார் அபூர்வா. ஹசீனா பாத்திரத்திற்கு ராணி முகர்ஜிதான் பொருத்தமாக இருப்பார் என்பது அபூர்வாவின் நம்பிக்கை.

பதில் கிடைக்குமா?:

இதுவரை அபூர்வாவின் கோரிக்கைக்கு ராணி பதிலளித்தது போலத் தெரியவில்லை. விரைவில் பதில் கிடைக்க காத்துக் கொண்டிருக்கின்றார் அபூர்வா.

 

கலாபவன் மணி ஓங்கிக் குத்தியதில் கமல் மூக்கில் புகுந்த ரப்பர்.. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு!

பாபநாசம் படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசன் மூக்கில், நடிகர் கலாபவன் மணி ஓங்கிக் குத்தும் காட்சியின்போது மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் உள்ளே போய் விட்டதால் கமல்ஹாசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதித்து எண்டோஸ்கோப்பி மூலம் ரப்பரை வெளியே எடுத்த பிறகே அவர் அபாய கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்' படம் தமிழில் ‘பாபநாசம்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழில் கமலஹாசன், கவுதமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கலாபவன் மணி ஓங்கிக் குத்தியதில் கமல் மூக்கில் புகுந்த ரப்பர்.. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு!

இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தொடர்ந்து கேரளாவிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சமீபத்தில் கமலஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒருமாதமாக ஒத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது.

கேரளாவில் படப்பிடிப்பு

தொடுபுழாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. போலீசார் தாக்கியதில் மூக்கில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

ஓங்கிக் குத்திய கலாபவன் மணி

இந்தக் காட்சியில் கமல்ஹாசனும், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்தனர். பாதுகாப்புக்காக கமல்ஹாசன் மூக்கில் ரப்பர் பொருத்தப்பட்டிருந்தது. காட்சியின்போது கலாபவன் மணி ஓங்கிக் குத்தினார். ஆனால் சற்று பலமாக குத்தி விட்டார். இதனால் ரப்பர் கமல்ஹாசனின் மூக்குக்குள் போய் விட்டது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறினார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரப்பர் அகற்றம்

பதறிப்போன படப்பிடிப்பு குழுவினர் அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவமனையில் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் ஆபரேஷன் செய்து ரப்பரை வெளியே எடுத்தனர்.

ஒய்வுக்கு பின்னர்

சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் கமலஹாசன் இயல்புநிலைக்கு திரும்பினார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

டேக் எ போட்டோ

தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

 

அஜீத்துடன் டூயட்: ஹன்சிகாவின் ஆசையை நிறைவேற்றிய சிவா?

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்து அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அதீத முயற்சி செய்து கிட்டத்தட்ட பெற்றுவிட்டாராம் ஹன்சிகா.

கோலிவுட்டுக்கு புதிதாக நடிக்க வரும் நடிகைகள் தங்களுக்கு அஜீத், விஜய்யுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆரம்பத்திலேயே ஒரு பிட்டை போட்டுவிடுகிறார்கள். பின்னர் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெறவும் சிலர் முயற்சி செய்கிறார்கள். ஏற்கனவே அஜீத், விஜய்யுடன் ஜோடி சேர முன்னணி நடிகைகள் முயற்சி செய்வதால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது.

அஜீத்துடன் டூயட்: ஹன்சிகாவின் ஆசையை நிறைவேற்றிய சிவா?

இந்நிலையில் கோலிவுட்டின் முன்னணி நாயகியான ஹன்சிகாவுக்கும் அஜீத்துடன் நடிக்கும் ஆசை வந்துள்ளது. இதையடுத்து அவர் அஜீத்தை அடுத்ததாக இயக்கும் சிறுத்தை சிவாவை அணுகி வாய்ப்பு கேட்டாராம். அந்த படத்தில் நடிக்க சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் அடிபோட்ட நிலையில் ஹன்சிகாவும் முயற்சியில் இறங்கினார்.

ஹன்சிகாவின் முயற்சியால் சிவா இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம். ஹன்சிகா ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். மேலும் சிம்புதேவன் இயக்கும் படத்திலும் விஜய்யுடன் நடிக்கிறார் ஹன்சிகா.

 

களம்.. நான் இயக்குநர் ஜீவா சங்கர் உதவியாளர் இயக்கத்தில் வரும் அமானுஷ்ய படம்!

பேய் படங்கள், அமானுஷ்யக் கதை படங்களுக்குக் கிடைக்கும வரவேற்பைப் பார்த்து, கோலிவுட்டே பேய் உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் வரும் இன்னொரு படம் களம்.

அருள் மூவீஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் பி.கே.சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை, ‘நான்' பட இயக்குனர் ஜீவா ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராபர்ட் எஸ். ராஜ் இயக்குகிறார்.

இதில் ஸ்ரீனி, அம்ஜெத், லக்ஷ்மி ப்ரியா, மதுசூதனன், ரேகா சுரேஷ் மற்றும் பேபி ஹியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

களம்.. நான் இயக்குநர் ஜீவா சங்கர் உதவியாளர் இயக்கத்தில் வரும் அமானுஷ்ய படம்!

Arri Alexa cooke S-4 என்ற அதி நவீன கேமிராவின் மூலம் ‘களம்' படத்தை படமாக்குகிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ். பிரகாஷ் நிக்கி என்ற புதிய இசை அமைப்பாளர் ‘களம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனத்தை சுபீஷ் எழுதுகிறார்.

களம்.. நான் இயக்குநர் ஜீவா சங்கர் உதவியாளர் இயக்கத்தில் வரும் அமானுஷ்ய படம்!

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ் கூறும்போது, "சராசரி மனிதனின் கற்பனைக்கும் எட்டாத உண்மைகள் ‘அமானுஷயம்' என்று அழைக்கப்படும். இந்த பாணியில் பல்வேறு படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்தக் கதையின் ‘களம்' படத்தின் தரத்தை மெருகேற்றும்.

‘களம்' படத்தின் கதையே ஒரு ‘கள'த்தை பற்றிய கதைதான் என்பதே சிறப்பு. ஒரு விலை மதிப்பிட முடியாத குறிப்பிட்ட ஒரு மாளிகையை பற்றிய கதை. ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு ‘களம்' இதில் இருக்கும். அது என்ன என்பதுதான் சஸ்பென்ஸ்..." என்கிறார்.

 

13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் குரோசவா திரைப்பட விழா

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர் அகிரா குரோசவா திரைப்பட விழா 13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த விழா வரும் ஞாயிற்றுக் கிழமை வரை சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள எடிட்டர் மோகனுக்குச் சொந்தமான எம்எம் தியேட்டரில் நடக்கிறது.

அகிரா குரோசவா இயக்கிய செவன் சாமுராய், ரெட்பிரட், ரேஷ்மோன், ஹய் அன்டு லோ, ஓய்ஜெம்போ, சஞ்ரோ, தி துரோன் அஃப் பிலட், இக்கிரூ ஆகிய 8 திரைப்படங்களை இந்தத் திரைப்பட விழாவில் காணலாம்.

தினமும் மாலை 6 மணிக்கு படங்கள் திரையிடப்படுகின்றன.

இப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தென் இந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சசிகுமார், தி ஜப்பான் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் மசநோரி நகானோ, தெலுங்கு திரைப்பட நடிகை ரேஷ்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அகிரா குரோசவாவின் பெயரில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இத் திரைப்பட விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

 

'கோட்டையெல்லாம் அழிடா.. திரும்ப மொதல்லருந்து ஆரம்பிக்கலாம்!'

தேசிய விருதெல்லாம் வாங்கிய இயக்குநர்தான்.. பார்க்க பரம சாதுவாகத்தான் தெரிவார். ஆனால் இயக்குநராக அவர் பண்ணும் அட்ராசிட்டி தாங்காமல் புலம்புகிறார்கள் படத்தில் நடிப்பவர்களும் சக டெக்னீஷியன்களும்.

அவர் போன வருஷம் ஆரம்பித்த அந்தப் புதிய படத்துக்கு எப்போதோ பாடல்கள் தயாராகிவிட்டன. படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாகத்தான் சொன்னார்கள். ஒரு மாதம் படப்பிடிப்பு முடிந்து, எடுத்ததைப் போட்டுப் பார்த்தவருக்கு திருப்தி வரவில்லையாம்.

'டேய்.. இது சரியா வரலடா.. திரும்ப கெட்டப்பை மாத்தி வேற மாதிரி எடுக்கலாம்'
என ஹீரோவாக நடிக்கும் தன் சிஷ்யப் பிள்ளையிடம் உரிமையுடன் கூற, விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கிறாராம் ஹீரோ.

இந்தப் படத்துக்காக மேக்கப், பாடி லாங்குவேஜை மாற்ற பட்ட பாடு ஒரு பக்கம், பிஸியான ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவரை இந்தப் படத்தில் முடக்கியதால் ஏற்பட்ட வருமான இழப்பு மறுபக்கம்.

என்ன செய்வதென கை பிசைகிறாராம் நடிகர்!

 

லிங்காவுக்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் படம் என்ன தெரியுமா? மனம் திறந்த ரஜினியின் நண்பர்

பெங்களூர்: லிங்காவுக்கு பிறகு, கன்னடத்தில் நடிகர் ராஜ்குமார் நடித்து வெளியான 'பங்காரத மனுஷ்யா' என்ற கன்னட படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரிலுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் கூறியதாவது: லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் முன்பாக என்னுடன் சேர்ந்து பங்காரத மனுஷ்யா திரைப்படத்தை ரஜினி பார்த்தார். இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டியதுதானே என்று ரஜினியிடம் அப்போது நான் கேட்டேன். யோசித்த ரஜினியும், ஓ.கே, நானே நடிக்கிறேன் என்று தெரிவித்தார்.

லிங்காவுக்கு பிறகு ரஜினி நடிக்கப்போகும் படம் என்ன தெரியுமா? மனம் திறந்த ரஜினியின் நண்பர்

அந்த காலகட்டத்தில்தான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா திரைப்பட கதையை ரஜினியிடம் சொன்னார். கதை பிடித்துப்போனதால் லிங்காவில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். இதன்பிறகு எனக்கு போன் செய்து, முதலில் லிங்கா படத்தில் நடித்து முடித்துவிடுகிறேன். அதன்பிறகு பங்காரத மனுஷ்யா படத்தில் நடிப்பேன் என்று தெரிவித்தார். இவ்வாறு ராஜ் பகதூர் கூறினார்.

பங்காரத மனுஷ்யா அதாவது தங்கமான மனிதன் என்ற பொருளுள்ள இந்த படம் 1972ல் ரிலீஸ் ஆனது. சித்தலிங்கய்யா இயக்கியிருந்தார். இப்போது படம் ரிலீசாகி 42 ஆண்டுகள் ஆகியுள்ளன. அந்த படம் வெளியான போது பெங்களூர் சிட்டி பஸ்சில் ரஜினி கண்டக்டராகவும், ராஜ்பகதூர் டிரைவராகவும் பணியாற்றினர். அப்போது இருவருமே சேர்ந்து தியேட்டரில் பங்காரத மனுஷ்யா படத்தை பார்த்துள்ளனர்.

படித்த சமூகத்தை விவசாயத்தை நோக்கி ஈர்க்க செய்யும் வகையில் அந்த திரைப்படத்தின் கதை இருப்பதால், இப்போதைய சூழ்நிலைக்கும் பங்காரத மனுஷ்யா பொருந்திப்போகும் என்று ரஜினி நம்புவதாக கூறப்படுகிறது.

 

தீபாவளிக்கு இன்னும் ஒரு புது ரிலீஸ்... இது அனேகன் டீசர்!

பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் அனேகன் டீசர், தீபாவளி தினத்தில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் அமிரா தஸ்தூர் என்ற புதுமுகம் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகிறார். கார்த்திக் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு புது ரிலீஸ்... இது அனேகன் டீசர்!

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. நீண்டகால தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை வரும் தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும், தீபாவளிக்கு பிறகு ஆடியோ வெளியீட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் பாடியுள்ள பாடல் இது.

தீபாவளிக்கு ஏற்கெனவே விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய படங்கள் வெளிவருகின்றன. இத்துடன் அனேகன் டீசரும் வெளியாவது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

வாரிசு நடிகையின் ‘விலகல் - நெருங்கல்’ நாடகம்... அதிக சம்பளத்திற்காகத் தானாம் !

சென்னை: எப்படியும் ஆயுதப் பெயரைக் கொண்ட படம் தீபாவளிக்கு ரிலீசாகி விடும் என்ற நம்பிக்கையில், அப்பட நாயகனின் அடுத்த பட வேலைகள் வேகம் பிடித்துள்ளதாம். இப்படத்திற்காக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பத்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம்.

இது ஒருபுறம் இருக்க, வாரிசு நடிகை இப்படத்தில் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், தானே பூடகமாக அதனை மறுப்பது போல தனது சமூக வலைதளப் பக்கத்தில் தகவலை வெளியிட்டார் நடிகை.

ஆனால், தற்போது மீண்டும் வாரிசு நடிகையையே அப்படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாம் படத் தயாரிப்பு. முதலில் நடிகை நோ எனச் சொன்னதற்கும், தற்போது ஓகே எனச் சொன்னதற்கும் பின்னணியில் ஒரே ஒரு காரணம் தானாம்.

அதாவது அதிக சம்பளம். தெலுங்குப் படங்களில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடுவதற்கே நடிகை பெரும் தொகையை சம்பளமாக வாங்குகிறார். அப்படி இருக்கையில் தமிழில் நாயகியாக நடிப்பதற்கு மிகப் பெரிய தொகையை நடிகை எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது.

முதலில் அதற்கு படத்தயாரிப்பு ஒத்துக் கொள்ளாததாலேயே, சூசகமாக படத்திலிருந்து விலகுவதாக சமூக வலைதளப் பக்கத்தில் மிரட்டல் விடுத்தார் நடிகை என்கிறார்கள். பின்னர், ஒரு வழியாக நடிகை கேட்ட சம்பளத்திற்கு தயாரிப்புத் தரப்பு சம்மதம் தெரிவித்ததால், படத்தில் நடிக்க நடிகையும் ஓகே சொல்லி விட்டார் என்கிறார்கள் படத்தயாரிப்புக்கு நெருக்கமானவர்கள்.