''நான் பாஸ்கர் இல்லை, பாண்டி'' ஸ்டைலில் தப்ப முயன்ற புவனேஸ்வரி!

Actress Buvaneswari Attempt Cheat Police

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வைத்து போலீஸாரிடம் சிக்கிய கவர்ச்சி நடிகையும், விபச்சார வழக்கில் சிக்கி கைதாகி மீண்டவருமான புவனேஸ்வரி, என் பெயர் ஷிவானி என்று கூறி போலீஸாரை ஏமாற்றப் பார்த்துள்ளார். ஆனால் போலீஸார் இதற்கெல்லாம் மயங்காமல் படு ஸ்டெடியாக இருந்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

சென்னை அருகே டிரைவ் இன் தியேட்டர் ஒன்றுக்கு கும்பலோடு சென்றுள்ளார் புவனேஸ்வரி. அப்போது புவனேஸ்வரியின் கார் டிரைவர் சரியாக காரை ஓட்டாமல், தியேட்டருக்குள் போய்க் கொண்டிருந்த ஒரு காரின் பின்னால் போய் மோதி விட்டார். இதையடுத்து சேதமடைந்த காரின் உரிமையாளரான குமார் என்பவர் இதைத் தட்டிக் கேட்டபோது பெரும் வன்முறையில் இறங்கி விட்டது புவனேஸ்வரி கும்பல்.

முதலில் குமாரை அடித்தனர். அதைத் தடுக்க வந்த தியேட்டர் ஊழியரைத் தாக்கினர். தகவல் அறிந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸாரையும் தாக்கினர். அத்தோடு நில்லாமல் தியேட்டரையும் தாக்கி சூறையாடி ரவுடித்தனத்தில் ஈடுபட்டு விட்டு ஓடி விட்டனர்.

இதையடுத்து புவனேஸ்வரி உள்ளிட்ட 13 பேர் மீ்து போலீஸார் வழக்குப் போட்டனர். இதனால் பயந்து போன புவனேஸ்வரி தப்பி ஓடி தலைமறைவானார். அவர் ஆந்திரா அல்லது பெங்களூருக்கு ஓடலாம் என்று தகவல் கிடைத்ததால் போலீஸார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். இதில் ஆம்பூரில் வைத்து சிக்கி விட்டார் புவனேஸ்வரி.

ஆம்பூர் அருகே கன்னிகாபுரம் என்ற இடத்தில் புவனேஸ்வரியின் கார் சென்ற போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காரை மடக்கினர். அப்போது காருக்குள் பம்மியிருந்த புவனேஸ்வரி கார் கண்ணாடியை மட்டும் இறக்கி விட்டு வெளியில் எட்டிப் பார்த்தாராம். உடனே போலீஸார் உங்களைக் கைது செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு உடனே புவனேஸ்வரி, அய்யய்யோ அது நான் இல்லை. என் பெயர் ஷிவானி, புவனேஸ்வரி இல்லை என்று கூறினாராம். ஆனாலும் விடாத போலீஸார், கிடுக்கிப்பிடியாக செயல்பட்டு புவனேஸ்வரியை காரிலிருந்து இறக்கி அவரைக் கைது செய்து உடனடியாக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு போய் விட்டனராம்.

 

குத்துச்சண்டை ராணி மேரி கோமாக நடிக்கும் பிரியங்கா சோப்ரா

 

விஷ்ணுவர்தன் படம் முடியும் முன்பே... அடுத்த படத்துக்கு ஆயத்தமாகும் தல!

Ajith Attend The Shoot His Next

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்துவரும் அஜீத், அந்தப் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை நெருங்குவதால், அடுத்த படத்துக்கான வேலைகளில் ஆயத்தமாகி வருகிறார்.

விஷ்ணுவர்த்தன் படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பாடல் காட்சிகள் கூட படமாக்கப்பட்டுவிட்டன.

இந்தப் படத்துக்கு ‘தல' என்ற தலைப்பை வைக்கலாம் என பலரும் சிபாரிசு செய்தாலும், அதற்கு சம்மதிக்காத அஜீத், கதைக்கு தேவையான பெயரை சூட்டுங்கள் என கூறி விட்டார்.

வரும் ஏப்ரல் மாதம் அஜீத் - விஷ்ணுவர்தன் படம் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன்பே டிசம்பரில் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஆயத்தமாகிறார் தல.

இயக்குநர் சிவா ஏற்கனவே கார்த்திக்கை வைத்து சிறுத்தை படத்தை எடுத்தவர். அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் 10-ந் தேதி ஹைதராபாத்தில் அவர் துவக்குகிறார். இப்படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். விஜயா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

 

எனக்குப் பிடிச்ச சினேகா... - பாலுமகேந்திரா

எனக்குப் பிடித்த நடிகை சினேகா. அவரை ஏன் பிடிக்கும் என்று விளக்கமாக சொல்ல முடியாது, என்றார் இயக்குநர் பாலுமகேந்திரா.

சினேகா, கிஷோர் நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி, டாக்டர் வி.ராம்தாஸ் தயாரித்துள்ள படம் 'ஹரிதாஸ்'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

sneha is my fav actress says balu mahendra
விழாவில் கலந்து கொண்டு பேசிய பாலு மகேந்திரா, ''இந்த படம் தந்தை மகனுக்கு இடையேயான கதை என்று கேள்விப்பட்டேன். ஒரு காலத்தில் தந்தை மகனுக்கு ஹீரோவாக இருக்கிறான். அப்புறம் தந்தைக்கு மகன் ஹீரோவாக இருக்கிறான்.

தந்தை மகன் உறவு, பவித்ரமானது. என் மூத்த மகன் பாலா, இன்னொரு மகன் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம் ஆகியோரும் என் பிள்ளைகள்தான். இவர்கள் எல்லோருமே உலக தரத்தில் படங்களை இயக்குகிறார்கள். இதைவிட ஒரு தகப்பனுக்கு என்ன பெருமை வேண்டும்?

எனக்கு ரொம்ப பிடித்த நடிகை சினேகா. ஏன் என்று விளக்கம் சொல்ல முடியாது. கிஷோர், மிக சிறந்த நடிகர். இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரத்னவேல்,'' என்றார்.

விழாவில் இயக்குநர்கள் பாக்யராஜ், பாலா, சசி, கண்ணன், நடிகர்கள் விக்ரம், பிரசன்னா, கிஷோர், விஜய் ஆதிராஜ், இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரத்னவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

 

ஜோதி கிருஷ்ணா திருமண வரவேற்பு... ரஜினி நேரில் வாழ்த்து

சென்னை: இயக்குநர் ஜோதி கிருஷ்ணா - ஐஸ்வர்யா திருமண வரவேற்பில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajini wishes jothikrishna aishwarya couple
எனக்கு 20 உனக்கு 18, கேடி, ஊலலல்லா படங்களின் இயக்குநரும் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்தின் மகனுமான ஜோதி கிருஷ்ணாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு உலகநாயகன் கமல் ஹாஸன் நேரில் வந்து வாழ்த்தினார்.

ஜோதிகிருஷ்ணா - ஐஸ்வர்யா திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னை லீலா நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு முதல் ஆளாக வந்தார் ரஜினி. அவர் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைச் சொன்னார் சூப்பர் ஸ்டார்.

இந்த நிகழ்ச்சியில் அஜீத் தன் மனைவியுடன் வந்திருந்து வாழ்த்தினார். சூர்யாவும் தன் மனைவி ஜோதிகாவுடன் நிகழ்ச்சிக்கு வந்தார். விஜய் வரவில்லை. அவர் மனைவி சங்கீதா மட்டும் வந்திருந்தார்.

 

சந்தானம் இனி 'காமெடி சூப்பர்ஸ்டார்'...!

New Title Santhanam

சென்னை: வைகைப் புயல், சின்னக் கலைவாணர், சின்ன தளபதி, குட்டி தளபதி, தக்கனூண்டு தளபதி என்ற வரிசையில்... அடுத்து ஒரு புதிய பட்டம் ஒரு நடிகருக்கு கொடுக்கப் போகிறார்கள். அந்தப் பட்டத்தைப் பெறப் போவது சந்தானம். அவருக்கு்க கொடுக்கப் போகும் பட்டத்தின் பெயர் காமெடி சூப்பர் ஸ்டார்.

சேட்டை படக் குழுவினர்தான் இந்த பட்டத்தை டைட்டில் கார்டில் போட்டு சந்தானத்தை உசுப்பேத்தி விடப் போகிறார்களாம். இந்த டைட்டிலை வச்சுக்கவா, வேண்டாமா என்பதை ஒரிஜினல் சூப்பர் ஸ்டாருக்கே போன் போட்டுக் கேட்டாராம் சந்தானம். ரஜினியும், வெரிகுட் என்று கூறி ஆட்சேபனை தெரிவிக்கவில்லையாம்.

சந்தானத்தின் காட்டில் இப்போது செம மழை. வடிவேலு வேறு பீல்டில் இல்லை, விவேக்கும் முன்பு போல ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை. கஞ்சா கருப்பும் எடுபடாமல் போய் விட்டார். இதனால் ஒண்டி ஆளாக சண்டிக் குதிரை போல ஓடிக் கொண்டிருக்கிறார் சந்தானம். அவரது கையில் ஏகப்பட்ட படங்களாம்.

அந்த வகையில் ஆர்யாவுடன், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்குப் பின்னர் அவர் இணைந்து நடிக்கும் படம் சேட்டை. கண்ணன் இயக்கியுள்ளார். காமெடிக்கே முக்கியத்துவமாம்.

இந்த நிலையில்தான் சேட்டை படக் குழுவினர் ஒன்று கூடி விவாதித்து சந்தானத்திற்கு காமெடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை அளிக்க முடிவு செய்துள்ளனராம்.

இருப்பினும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே என்பதால் ரஜினிக்கே போன் போட்டுக் கேட்டாராம் சந்தானம். அதற்கு ரஜினி சற்றும் தாமதிக்காமல் வெரிகுட் என்று பாராட்டினாராம். மேலும், சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் என்னுடைய பெயரில் பதிவு செய்யப்படவில்லையே என்றும் சந்தானத்திடமே காமெடியாகப் பேசினாராம்.

ஆக, சந்தானத்தை கொம்பு சீவி விட்டாயிற்று, இனி அது எங்கு போய் நிற்கப் போகிறதோ...!

 

ஆட்களைத் திரட்டி வந்து தியேட்டரில் நடிகை புவனேஸ்வரி பெரும் ரகளை

Actress Buvaneswari Booked Attack On Police

சென்னை: சென்னை அருகே டிரைவ் இன் தியேட்டருக்கு வந்த கவர்ச்சி நடிகையும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக முன்பு கைது செய்யப்பட்டவருமான புவனேஸ்வரியும், அவரது ஆட்களும் பெரும் ரகளையில் ஈடுபட்டு தியேட்டரை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து புவனேஸ்வரியும் அவரது கும்பலும் தலைமறைவாகி விட்டனர்.

விபச்சாரம் செய்ததாக கையும் களவுமாக பிடிபட்டவர் புவனேஸ்வரி. இவரது விவகாரத்தால் பத்திரிக்கையாளர்களுக்கும் திரையுலகினருக்கும் கூட பெரும் பிரச்சினை வெடித்தது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கூட கூட்டம் போட்டுப் பேசி வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே இதுபோல செய்கிறார்கள் என்றெல்லாம் நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார்கள்.

இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரி ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள à®'ரு டிரைவ் இன் ஹோட்டலுக்கு தாமோதரன் என்பவர் உள்ளிட்ட ஆட்களுடன் துப்பாக்கி படம் பார்க்க வந்தார். அப்போது தியேட்டர் வளாகத்திற்குள் நுழைய காரை à®"ட்டி வந்த புவனேஸ்வரியின் டிரைவர், தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த கார் மீது இடித்து விட்டார்.

இதையடுத்து அந்தக் காரை à®"ட்டி வந்த தாம்பரத்தைச் சேர்ந்த குமார் கீழே இறங்கி வந்து புவனேஸ்வரியின் கார் டிரைவரை இதுகுறித்துத் தட்டிக் கேட்டார். இதனால் கோபமடைந்த, புவனேஸ்வரிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தாமோதரன் வேகமாக வந்து குமாரை அடித்து உதைத்தார். மேலும் புவனேஸ்வரியும் காரை விட்டு இறங்கி வந்து குமாரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதைப் பார்த்த தியேட்டர் ஊழியர் செல்வராஜ் என்பவர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரையும போட்டு உதைத்தது புவனேஸ்வரி கும்பல். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஜீப் டிரைவர் பாஸ்கர் ஆகியோர் விரைந்து வந்து தகராறு செய்த நடிகை புவனேஸ்வரியையும், அவருடன் வந்தவரையும் கண்டித்தனர்.

அப்போது எங்கிருந்தோ à®'ரு மர்மக் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் புவனேஸ்வரியின் ஆட்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் போலீஸாரைத் தாக்கினர். தியேட்டருக்குள் புகுந்து தியேட்டரையும் அடித்து சூறையாடினர்.

நிலைமை மோசமானதைத் தொடர்ந்து புவனேஸ்வரியும் அவருடன் வந்த கும்பலும் அங்கிருந்து தப்பி à®"டி விட்டனர்.

போலீஸார், பொதுமக்கள், தியேட்டர் ஊழியர் என சகலரையும் தாக்கிய புவனேஸ்வரி மற்றும் அவரது கும்பல் மீது கொலை முயற்சி, பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீஸார்.

இந்த வழக்கில் விரைவில் புவனேஸ்வரியைக் கைது செய்து உள்ளே தள்ள போலீஸார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

 

ரஜினி பெயரைச் சொல்லி கடன்வாங்கி செக் மோசடி செய்த 'சம்பந்தி' கஸ்தூரி ராஜா!!

Cheque Bounce Case On Kasturi Raja

சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது சவுகார் பேட்டையை சேர்ந்தவர் முகுந்சந்த் போத்ரா என்பவர் செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார். தன் மகன் தனுஷ் ரஜினி மகளை மணந்துள்ளதால், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் பிரச்சினை இல்லை என்று கூறி இந்த கடனை வாங்கியுள்ளாராம் கஸ்தூரி ராஜா (!!)

திரைப்படத் துறையினருக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வருபவர் இந்த போத்ரா. இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு இவர் கொடுத்த கடனை திரும்பி தரவில்லையாம்.

இதுகுறித்து முகந்த் சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள மனுவில், "இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சினிமா கம்பெனி நடத்துகிறார். படவேலைகளுக்காக என்னிடம் அவர் ரூ.65 லட்சம் கடன் பெற்றார். நடிகர் தனுஷ் தனது மகன் என்றும், ரஜினிகாந்த் மகளை அவர் திருமணம் செய்துள்ளார் என்றும், எனவே கடனை திருப்பித் தருவதில் பிரச்சினை இல்லை என்றும் உறுதி அளித்திருந்தார்.

ஆனால் வாங்கிய பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. பலமுறை வற்புறுத்திய பிறகு ரூ.40 லட்சத்துக்கும், ரூ.25 லட்சத்துக்கும் தனித்தனி செக்குகள் கொடுத்தார். வட்டிக்கும் இன்னொரு செக் வழங்கினார். ரூ.40லட்சம் செக்கை பாங்கில் செலுத்தினேன். அது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது.

இதையடுத்து கஸ்தூரி ராஜா மீது போலீசில் செக் மோசடி புகார் அளித்தேன் அதன் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே போலீசாருக்கு கஸ்தூரி ராஜா மீது வழக்கு பதிவு செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.

 

வேதிகா சிவப்பு தான், ஆனால் அழகான பொண்ணுன்னு சொல்லாதீங்க: பாலா

Vedika Is Fair Not Beautiful Bala

சென்னை: பரதேசி படத்தின் நாயகி வேதிகா சிவப்பான பெண் தான் ஆனால் அழகான பெண் என்று கூறாதீர்கள் என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, வேதிகாவை வைத்து இயக்குனர் பாலா எடுத்துள்ள பரதேசி படம் வரும் டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பிறகு அத்ரவாவின் இமேஜ் கூடிவிடும் என்று கூறப்படுகிறது. பாலாவின் படங்களில் சிவப்பான நாயகிகளை மேக்கப் போட்டு கறுப்பாக காட்டுகிறார்கள்.

இது குறித்து பாலாவிடம் வேதிகா போன்ற சிவப்பான அழகான நாயகிகளைத் தேர்வு செய்து மேக்கப் போட்டு கறுப்பாக காட்டுகிறீர்களே. அதற்கு பதில் கறுப்பான ஒருவரை நாயகியாக நடிக்க வைக்கலாமே என்றதற்கு பாலா கூறுகையில்,

வேதிகாவை சிவப்பான பெண் என்று சொல்லுங்கள் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அழகான பெண் என்று சொல்லாதீர்கள் என்று தெரிவித்துவிட்டார். பாலா இவ்வாறு கூற வேதிகா என்ன செய்தார் என்று தெரியவில்லையே.

இது தவிர பாலாவின் படங்களில் ஹீரோக்களின் ஹேர்கட் பற்றியும் கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கப்படுகிறது. பாலாவின் ஹீரோக்களின் மண்டையை ஏன் இப்படி கரும்பிவிடுகிறார்கள் என்று பலர் தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்கின்றனர்.

 

முத்தம் கொடுக்க பாய்ந்தபோது விவேக் ஓபராய் முட்டி பெயர்ந்தது : ஷூட்டிங்கில் பரபரப்பு

Vivek Oberoi flew to her knees and moved சார்மிக்கு முத்தம் கொடுக்க பாய்ந்த விவேக் ஓபராய் தவறி விழுந்ததில் முட்டி பெயர்ந்தது. பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராய், 'ஜில்லா காசியாபாத் என்ற படத்தில் நடித்து வருகிறார். சார்மி ஜோடி. இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. விவேக் ஓபராய், சார்மி காதல் காட்சி படமாக்க இயக்குனர் திட்டமிட்டார். காட்சிப்படி, காதல் டூயட் பாடியபடி மோட்டார் சைக்கிள் ஓட்டும் விவேக், நடந்து செல்லும் சார்மியை பாய்ந்து முத்தமிட வேண்டும். கேமரா சுழல தொடங்கியதும் காட்சி தொடங்கியது.

மோட்டார் சைக்கிளில் டூயட் பாடியபடி பறந்த ஓபராய் அருகிலிருந்த சார்மிக்கு முத்தம் கொடுப்பதற்காக பாய்ந்தார். அப்போது நிலை தடுமாறினார். கீழே விழுந்ததில் அவரது கால்முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதில் அதிர்ஷ்டவசமாக சார்மி காயமின்றி தப்பினார். ஓபராய் காயம் அடைந்ததை பார்த்து பட குழுவினர் பதறினர். உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு தளத்துக்கு டாக்டர் அழைத்து வரப்பட்டார். அவர் ஓபராய்க்கு சிகிச்சை அளித்தார். இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.
 

சீண்டினால் பொறுத்துக்கமாட்டேன் : திவ்யா கோபம்

If disturb I can not tolerate: Divya angry என்னை சீண்டினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றார் திவ்யா. இது குறித்து அவர் கூறியதாவது: கன்னடம், தமிழ் இரண்டு மொழியிலும் நடிக்கிறேன். தற்போது 'தில் கா ராஜா கன்னட படத்தில் நடித்து வருகிறேன். ஜனவரியிலிருந்து 'நீர் டோஸ், பிப்ரவரியிலிருந்து சிவ்ராஜ்குமார் படம், ஏப்ரல் முதல் தமிழ் படத்தில் நடிக்கிறேன். சொந்த படம் தயாரிக்க உள்ளேன். சரியாக ஸ்கிரிப்ட் கிடைத்தால் தொடங்குவேன். என்னை பொறுத்தவரை எதையும் திட்டமிட்டு செய்வதில்லை. சில சமயம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சில சம்பவங்கள் எரிச்சல் ஏற்படுத்தும். அதை பொறுத்துக்கொள்வேன்.

திருமணத்தை பொறுத்தவரை இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. 'பாய்பிரண்ட் பற்றி வெளிப்படையாக சொன்னது ஏன்? என்கிறார்கள். இதனால்தான் இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. என்னைபற்றி ஆராய்வதே சிலருக்கு வேலையாக இருக்கிறது. அரசியலைப்பொறுத்தவரை நான் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நான் சார்ந்திருக்கும் கட்சிக்காக எனது ஆதரவை தொடர்வேன். 'அடிக்கடி பிரச்னைகளில் சிக்குவது ஏன்? என்கிறார்கள். எதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எதிர்மறையாக சீண்டிப்பார்க்கும்போது அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிர்ப்பை காட்டுகிறேன்.
 

கிசு கிசு - ஹீரோக்களுக்கு நடிகை வக்காலத்து

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

'கன் பட ரிலீஸ் ஆகி இத்தனை நாள் தாண்டியும் கஜல் ஹீரோயின் படத்தை பாக்காம இருந்தாராம்... இருந்தாராம்... இதனால இணைய தள பக்கத்துல எந்த கருத்தயும் பகிர்ந்துக்க முடியாம தவிச்சாராம். ஒரு வழியா ரெண்டு நாளுக்கு முன்ன படத்த பாத்தாராம். இந்தி பட ஷூட்டிங்கிற்காக டெல்லியில இருந்தாராம் நடிகை. இடைவெளி இல்லாம ஷூட்டிங் நடத்தினதாலதான் படம் பார்க்க முடியலேன்னு பாலிவுட் யூனிட் மேல குறை சொல்றாராம்... சொல்றாராம்...

பாலிவுட் ஹீரோக்களவிட என்னோட பாய்பிரண்டே நல்லா இருக்காருன்னு கிர்ஸ்டென் ஹாலிவுட் நடிகை சொன்னாராம்... சொன்னாராம்... இத படிச்ச வேல்டு நாயகனோட வாரிசு நடிகை கொதிச்சிட்டாராம். பாலிவுட் ஹீரோக்கள கிண்டல் பண்ற இவர், ஏற்கனவே தன்னோட பாய்பிரண்ட கைகழுவிட்டு, இயக்கத்தோட சீக்ரெட்டா டச்ல இருந்தவரு. இப்ப அவர ஒதுக்கிட்டு பழைய பிரண்டோட ஒட்டிகிட்டாரு.  இவரு பாலிவுட் ஹீரோக்களோட அழக பத்தி கிண்டலடிக்க¤றது தமாஷா இருக்குன்னு பொரிஞ்சி தள்ளிட்டாராம்... தள்ளிட்டாராம்... இதனால பாலிவுட் ஹீரோக்களோட கருணை பார்வை, வாரிசு நடிகை மேல விழுந்திருக்காம்... விழுந்திருக்காம்...

சுனேன நடிகை தமிழுக்கு வந்த புதுசுல நீங்க டாப்புக்கு போவீங்கன்னு நிறைய ஹீரோக்கள் நேர்லேயே புகழ்ந்தாங்களாம். சான்ஸ் இல்லாம தவிச்சப்போ அந்த ஹீரோக்களுக்கு தூது விட்டும் நடிகைக்கு பலன் கிடைக்கலையாம்... கிடைக்கலையாம்... இப்போ வாட்டர் பேர்ட் படம் ரிலீசாகப்போகுது. அதைத்தான் நடிகை மலைபோல் நம்பியிருக்காராம். இனிமே கவர்ச்சிக்கு டாடா காட்டவும் நடிகை முடிவு பண்ணிருக்காராம்... பண்ணிருக்காராம்...
 

நடிகை சோனா மீது அவதூறு வழக்கு

Actress Sona slander case  ஆண்களுக்கு எதிராக பேசிய விவகாரத்தில் நடிகை சோனா மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. எழும்பூர் 13வது பெருநகர நீதிமன்றத்தில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் மதுசூதனன் தாக்கல் செய்துள்ள மனு: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்பது ஆண்களுக்கு எதிராக நடைபெறும் செயல்களை கண்டித்து வரும் சங்கம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சுமூகமாக பேசி தீர்த்து வரும் எங்கள் சங்கம் ஆண்களுக்கு எதிராக பொய்யாக வரதட்சணை கொடுமை, பெண் கொடுமை சட்டங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறோம்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி ஒரு வாரப்பத்திரிகையில் நடிகை சோனா ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், ஆண்களை டிஷ்யூ பேப்பர் போல உபயோகிப்பதாக கூறியுள்ளார். இந்த பேட்டி சுயமரியாதையுள்ள நமது சமூகத்தைக் கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள ஆண்களின் மரியாதையை கெடுக்கும் வகையில் உள்ளது. உள்நோக்கத்துடன் இந்த பேட்டி அளிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மத்தியில் ஆண்கள் மீது உள்ள மதிப்பை கெடுக்கும் வகையில் இந்த பேட்டி உள்ளது.

அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் அவர் ஆண்களுக்கு எதிராக பேசியுள்ளார். எனவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500 மற்றும் 504, 505 ( அவதூறு பரப்பும் வகையில் பேசுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு 13வது பெருநகர மாஜிஸ்திரேட் சிவகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அருள் துமிலன் ஆஜரானார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை வரும் டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
 

பெண் இசை அமைப்பாளர்களுக்கு வாய்ப்பு குறைவு : பவதாரிணி வருத்தம்

Less chance for female musicians: pavatarini sad பெண் இசை அமைப்பாளர் களுக்கு வாய்ப்பு குறைவு தான் என்றார் பவதாரிணி. வேலு விஸ்வநாத் எழுதி இயக்கும் படம் 'வெள்ளச்சி. பிண்டு, சுசித்ரா உன்னி நடிக்கின்றனர். கே.ஆனந்தன், கீதா தயாரிக்கின்றனர். இளையராஜா மகள் பவதாரிணி இசை அமைக்கிறார். அவர் கூறியதாவது: இப்படத்தின் கதையை இயக்குனர் சொன்னபோது மிகவும் பிடித்தது. காதலை மறைக்க விளையாட்டாக சொல்லும் வார்த்தையால் என்ன விபரீதம் நடக்கிறது என்பதுதான் கரு. நா.முத்துகுமார் பாடல் எழுதி உள்ளார். இப்படத்துக்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடி இருக்கிறார்.

எந்த படத்துக்கு நான் இசை அமைத்தாலும் அதை எனது தந்தைக்கு போட்டுக்காட்டுவேன். அதேபோல் அவர் இசை அமைக்கும் பாடல்களையும் எங்களிடம் போட்டுக்காட்டுவார். 'அமிர்தம் உள்பட 5 படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். தற்போது 'வெள்ளச்சி, 'போரிட பழகு படங்களுக்கு இசை அமைக்கிறேன். 'இளையராஜா மகளாக இருந்தும் அதிக படங்களுக்கு இசை அமைக்காதது ஏன்? என்கிறார்கள். பொதுவாக சினிமாவை பொறுத்தவரை தொழில் நுட்ப துறையில் பெண்களுக்கு வாய்ப்பு குறைவுதான். இசை அமைப்பாளர்கள் பட்டியலில் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் பெண்கள் இருக்கிறார்கள். எந்த வாய்ப்பையும் நான் கேட்டுப் பெறுவதில்லை. என் இசை, குரல் பிடித்து வருபவர்களுக்கு இசை அமைக்கிறேன், பாடுகிறேன்.