அவதார் -2...வேலையைத் துவங்கினார் கேமரூன்!

Avatar
வசூலிலும் தரத்திலும் யாரும் எட்ட முடியாத சிகரம் தொட்ட சினிமா என்றால் உலக அளவில் அது ஜேம்ஸ் கேமரூனின் அவதார் மட்டுமே.
நாடுகள், மொழிகளின் எல்லைகளைக் கடந்து மக்களின் மனங்களை வென்ற சினிமா அது. இப்போதும் சென்னையில் இந்தப் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா…
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த படைப்பாக டைம் இதழால் பாராட்டப்பட்ட அவதாரின் அடுத்த பாகம் தயாராகிறது.
அவதார்-2 என்ற பெயரில் தயாராகும் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை ஜேம்ஸ் கேமரூன் தொடங்கியுள்ளார். இப்போதைக்கு அதன் முழு ஸ்கிரிப்டையும் முடிவு செய்வது முக்கியம் என்பதால், அந்தப் பணியில் கவனம் செலுத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.
அவதார்-2-ன் படப்பிடிப்பு வரும் 2011 மே மாதம் தொடங்கும் என ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நிறுவனம் அறிவித்துள்ளது.
அவதாரின் மூன்றாவது பாகமும் தயாராக உள்ளது. இதனை 2015ம் ஆண்டு துவக்கவிருக்கிறார்களாம்.
ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து இந்த இரு படங்களையும் ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரி நிறுவனமே தயாரிக்கிறது.
இதற்கிடையே, எகிப்திய பேரரசி கிளியோபாட்ரா பற்றிய படம் ஒன்றையும் கேமரூன் எடுக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக ஏஞ்சலினா ஜூலி நடிக்கிறார்.
 

மீன்வாடை தாங்காமல் திவ்யா ஓட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'சிங்கம் புலிÕ படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்கிறார் திவ்யா. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ராயபுரம் மீன் மார்க்கெட்டில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட திவ்யா, ஸ்பாட்டுக்கு வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தார். ஜீவா, திவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. காட்சிக்கு இடையே அவ்வப்போது கேரவானுக்குள் ஓடியபடி இருந்தார் திவ்யா.
'உடல்நிலை எதுவும் சரியில்லையா?Õ என்று அவரிடம் கேட்டபோது, 'அதெல்லாம் ஒன்றுமில்லை. மீன் மார்க்கெட்டில் இதுபோன்ற சூழலில் இதுவரை நடித்ததில்லை. மீன்வாடையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுதான் காட்சி முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிவிடுகிறேன்Õ என்றார். திவ்யாவின் நிலையை புரிந்து கொண்ட இயக்குனர், அவர் சம்பந்தப்பட்ட காட்ச¤களை உடனடியாக எடுத்து திவ்யாவை அனுப்பி வைத்தாராம்.


Source: Dinakaran
 

கிசு கிசு - மாஸ்டர் நடிகை அன்பு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
லட்சுமிகரமான நடிகை
மேல ராகவ டான்ஸ் மாஸ்டரு அன்பா இருக்கிறாராம்…
இருக்கிறாராம்… ஒரு படத்துல ஒரு பாட்டுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து ஆடினாங்க. அதுலேருந்து நட்பு தொடருதாம். இயக்கி, ஹீரோவா நடிக்கிற படத்துல நடிகைக்கு பெரிய ரோலா கொடுத்திருக்கிறாராம்… மாஸ்டரு கொடுத்திருக்கிறாராம்…
பிரியமான நடிகையோடு சேர்ந்து நடிக்கிறாரு ஆட்டோகிராப் இயக்கம். ஷூட்டிங் ஸ்பாட்ல நடிகையின் பெயரை சுருக்கி செல்லமா அழைக்கிறாராம்… அழைக்கிறாராம்… ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும் சூப்பர் நடிப்புன்னு நடிகையை புகழ்ந்து தள்ளுறாராம். நெருக்கமானவங்ககிட்ட சொல்லி நடிகை பூரிச்சு போறாராம்… போறாராம்…
Ôஎன்னை மாதிரி திறமையான நடிகைக்கு கோலிவுட்ல வாய்ப்பு எட்டா கனியாத்தான் இருக்குன்'னு பத்ம நடிகை நொந்துபோறாராம்… நொந்துபோறாராம்… நெருக்கமான இயக்குனர்களுக்கு தூது விட்டும் பார்த்தாராம். ஆனா வாய்ப்புதான் வரலயாம்…
வரலயாம்…
 

எல்லோரும் கூப்பிட்டுப் பாராட்டறாங்க! - ரீமா சென் சென் புல்லரிப்பு

Reema Sen
ரீமா சென்னுக்கு இன்று பிறந்தநாள். முன்னெப்போதையும் விட சந்தோஷமாக இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.
அப்படியென்ன விசேஷம் இந்த ஆண்டு மட்டும்?
“காரணம் இருக்கே… இந்த ஆண்டு நான் நடித்த ஆக்ரோஷ் இந்திப் படம் வெளியாகியுள்ளது. இதில் எனக்குத்தான் அதிக முக்கியத்துவம். படம் வெளியானதும் பாலிவுட்டின் பெரிய டைரக்டர்கள் எல்லாம் என்னை கூப்பிட்டுப் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
இதுவரை என்ன போன் நம்பரே தெரியாமலிருந்த டைரக்டர்கள் கூட, தெரிந்தவர்களிடம் நம்பர் வாங்கி என்னை கூப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்க…” என்கிறார் ரீமா குஷியாக.
அப்போ கோலிவுட் அவ்வளவுதானா… இனி இங்குள்ள ரசிகர்களை மறந்துவிடுவாரா?
“இல்லையில்லை… விரைவில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கப் போகிறேன்…,” என்றார்.
பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் எப்படி?
“என் தங்கை திஷா ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கா. இந்த இரவு விருந்துக்கு 50 பேரை மட்டும் கூப்பிட்டிருக்கேன்…”, என்றார்.
என்ஜாய்!
 

என்னுடைய படம் வெளிவர முடியவில்லை மிஷ்கின் வேதனை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தான் எடுத்த படங்களில் மிகச் சிறந்தபடம் ‘நந்தலாலா’ என்றார். தான் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகியவை மிகவும் கீழ்த்தரமான படங்கள் என்றார் இயக்குநர் மிஷ்கின். இதுபற்றி படவிழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசுகையில், நான் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படமும், ‘அஞ்சாதே’ படமும் மிக கீழ்த்தரமான படங்கள். மூன்றாம் தரமானவை.
நான் இயக்கிய மிக சிறந்த படம், ‘நந்தலாலா.’ ஆனால் அந்த படம் வெளிவர முடியவில்லை. படத்தை பார்த்தவர்கள் எல்லாம் என்னை பாராட்டினார்கள். படத்தை பார்த்தவர்கள், அழாமல் வெளியே வரமுடியாது என்றார்கள்.
‘நந்தலாலா’ படத்தை இங்கு நடக்கும் சந்தையில், ஒரு பொருளாக விற்பதற்கு எடுக்கவில்லை. ஆத்மார்த்தமாக அந்த படத்தை எடுத்தேன். தமிழ் சினிமா இருக்கும் சூழலில் ஒரு நல்ல படம் எடுப்பதும், வெளியிடுவதும் சிரமமான விஷயமாக இருக்கிறது.
குத்துப்பாட்டு இல்லாமல் எடுத்தால், அதுதான் நல்ல சினிமா. குத்துப்பாட்டும், நகைச்சுவையும், சுவிட்சர்லாந்தில் 25 பெண்களுடன் கதாநாயகன்-கதாநாயகி ஆடுவதும், உச்சக்கட்ட காட்சியில் 200 பக்க வசனத்தை பேசுவதும் இல்லாமல் படம் எடுத்தால், அது நல்ல சினிமா.
குடும்பத்துடன் படம் பார்க்க போகலாமா? என்று கேட்டால், என் வீட்டில் ரஜினிகாந்த் படம் பார்க்க போகலாம் என்றுதான் சொல்வார்கள். நல்ல படம் பார்க்க போகலாம் என்றா சொல்வார்கள்?
அப்படி இருந்தும் ‘நந்தலாலா’ மாதிரி நல்ல சினிமா எடுப்பது ஏன் தெரியுமா? நல்ல படங்களை விரும்பும் வெகு சிலருக்காகத்தான். நல்ல சினிமா எடுப்பது, ஒரு தாய்மை போராட்டம் மாதிரி. எல்லா தாய்மார்களும் பிரசவத்தின்போது, ஒரு மகாராஜனை பெறவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி நினைத்துதான் நல்ல சினிமா படங்களை எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்…,” என்றார்.


Source: Dinakaran


Source: India Glitz
 

அபிநயாவுக்கு எந்தக் கட்டளையும் போடலை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தங்கள் படம் முடியும் வரை, வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்று அபிநயாவுக்கு கட்டளையிட்டிருக்கிறார் இயக்குநர் சசிக்குமார். இதுபற்றி சசிக்குமாரிடம் கேட்டோம் “இது வீண் வதந்தி 'நாடோடிகள்' படம் நடிக்கிறப்பவே அந்தப் பொண்ணோட திறமைய பார்த்தேன். 'என்னோட அடுத்த படத்துல நீ நடிக்கிறம்மா' என்று வாக்கு கொடுத்தேன். அதேமாதிரி இப்ப 'ஈசன்' படத்துல நடிக்கிறாங்க. மத்தபடி எந்தக் கட்டளையும் அபிநயாவுக்கு போடலை” என்கிறார் சசிக்குமார்.
 

தமிழ் படத்தில் நடிக்க ஏகப்பட்ட நிபந்தனைகள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் படத்தில் நடிப்பதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கிறார் மம்தா. இதுபற்றி அவரிடம் கேட்ட போது “நாலு பாட்டுக்கு ஆடி, ஹீரோ பின்னாடி சுத்துகிற மாதிரி கேரக்டர் வேண்டாம். நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள கேரக்டரில் நடிப்பதென்று முடிவு செய்திருக்கிறேன். அதுபோன்ற படங்கள் எதுவும் அமையவில்லை. ஹீரோயினுக்கும் முக்கியத்துவமான கேரக்டர் வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை” என்கிறார் மம்தா.
 

ஆர்யாவுக்கு விரைவில் திருமணம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆர்யாவுக்கு வீட்டில் பெண் தேடுகிறார்கள். இதுபற்றி அவரிடம் கேட்ட போது “வயசாயிட்டே போறதால வீட்டுல உள்ளவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசை. 'பொண்ணு பார்க்கட்டுமா'னு கேட்டாங்க. 'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க'னு சொல்லியிருக்கேன். கொஞ்சம்னா எத்தனை நாள்னு உடனே கேட்காதீங்க பாஸ்” என்கிறார் ஆர்யா.