கிசு கிசு - அடம் பிடிக்கும் நடிகை : உல்டா தயாரிப்பு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

கைகொடுக்கும்னு நம்பின படம் கையை சுட்டதால ஜீன்ஸ் நடிகரு ரொம்பவே வருத்தமா இருக்காராம்... இருக்காராம்... திரும்ப தன்னை வச்சி படம் தயாரிக்க அப்பா நடிகருக்கு பிரஷர் தர்றாராம்... தர்றாராம்... பைனான்சியருங்க கிடைச்சாதானே படம் எடுக்கிறதுன்னு அப்பா நடிகரு புலம்புறாராம்... புலம்புறாராம்...

மல்லுவுட்லேருந்து வந்த மேகன நடிகை கவர்ச்சியா நடிச்சு வாய்ப்புகளை பிடிக்க பார்த்தாரு. ஆனா நினைச்சபடி நடக்கல... நடக்கல... இதனால நடிகை மல்லுவுட்ல சின்ன சின்ன ரோல்கள்ல நடிச்சி, சைடு ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்கு மாறிட்டாராம்... மாறிட்டாராம்... தமிழ்ல கூட அந்த மாதிரி சில ரோல்கள் வந்ததாம். நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு நடிகை அடம் பிடிக்கிறாராம்... பிடிக்கிறாராம்...

மூன் மேல லவ்வுனு தமிழ்ல படம் எடுக்கிறாங்க. முருங்கைக்காய் இயக்குனரு எடுத்த 7 நாள் கதையை உல்டா பண்ணித்தான் இந்த படத்தை பண்றாங்க... பண்றாங்க... ஆனா பட தயாரிப்புக்கு தன்னை எழுத்தாளரா காட்டிக்க ஆசையாம்... ஆசையாம்... அதனால கதை, வசனம்னு தன்னோட பெயரையே போட்டுக்கிட்டு பப்ளிசிட்டி பண்றாராம்... பண்றாராம்...


 

எனது படத்தில் தீபிகாவை நடிக்க வைப்பேன் : பாலிவுட் தயாரிப்பாளர் சவால்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
என்ன நடந்தாலும் தீபிகா 'ரேஸ் 2' படத்தில் நடித்தே தீர வேண்டும். அவரை நடிக்க வைப்பேன் என பாலிவுட் தயாரிப்பாளர் சவால் விட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளர் ரமேஷ் துரானி தயாரிக்கும் 'ரேஸ் 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பின்னர் நடிக்க மறுத்து வெளியேறினார் தீபிகா படுகோன். தமிழில் 'கோச்சடையான்' படத்தில் அவர் நடிக்க உள்ளார். இதற்காகவே 'ரேஸ் 2'விலிருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது. இது பற்றி துரானி கூறும்போது,"அவரது 4 மாத கால்ஷீட்டை நான் வீணடித்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் அந்த நேரத்தில் 'தேசி பாய்ஸ்' மற்றும் 'காக்டெய்ல்' படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். பின்னர் எங்களை சந்தித்த தீபிகாவின் மேனேஜர், 'தீபிகாவுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு வந்துள்ளது. எனவே ரேஸ் 2 படத்தில் அவர் நடிக்க விரும்பவில்லை' என்றார். பலமுறை நேரில் சந்தித்து பேச முற்பட்டபோது என்னை பார்க்காமல் தவிர்த்தார். இதுவரை எவ்வளவோ பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்திருக்கிறேன். யாரிடமும் இப்படி பிரச்னை ஏற்பட்டதில்லை. தீபிகாவிடம் அவமானப்பட்டதுபோல் வேறு யாரிடமும் அவமானப்படவில்லை. இதையடுத்துதான் அவர் மீது புகார் கொடுத்தேன். என்ன விலை கொடுத்தாவது அவரை நடிக்க வைத்தே தீருவேன்" என்றார்.


 

தெலுங்கு ஹீரோவுடன் நடிக்க தமன்னா திடீர் மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபல தெலுங்கு நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் தமன்னா. தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. தமிழில் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாத நிலையில் தெலுங்கில் பிரபல ஹீரோ மகேஷ்பாபுவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். 'தூக்குடு' வெற்றி படத்தை தயாரித்த அனில் இப்படத்தை தயாரிக்கிறார். ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து தமன்னா நடிக்க மறுத்து வெளியேறிவிட்டார்.

இது குறித்து அனில் கூறும்போது, "தமன்னா வுக்கு கால்ஷீட் பிரச்னை உள்ளது. எனவே வேறு முன்னணி நடிகையை ஹீரோயினாக்க பேசி வருகிறேன். விரைவில் முடிவாகிவிடும்" என்றார். சமீபகாலமாகவே தமன்னா குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் இப்படி ஆகிவிட்டார் என்று கூறப்பட்டது. தமிழ் படங்களில் நடிக்க கேட்டு சிலர் சென்றபோதும் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் தமிழில் நல்ல கதை வந்தால் நடிப்பேன் என்று கூறி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படத்திலிருந்தும் அவர் விலகி இருப்பது திரையுலகில் பலவித கேள்விகளை எழுப்பி உள்ளது.


 

கதை பிடித்திருந்தால் மட்டுமே இனி கால்ஷீட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நண்பன் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் நல்ல பெயரை எடுத்திருக்கும் சத்யன், கதை பிடித்திருந்தால் மட்டுமே இனி கால்ஷீட் என்று கூறி வருகிறாராம். ஏன்.. இந்த திடீர் மாற்றம் என அவரிடம் கேட்டதற்கு.. 'நண்பனில் கிடைத்த நல்ல பெயரை.. நிறைய படங்கள் செய்வதன் மூலம் காலி பண்ணக் கூடாது' என்று பதில் சொல்கிறார் சத்யன். இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இந்த படத்திற்காக மொத்தம் 55 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளார் நம்ம சத்யன். நண்பனைப் போல இதுவும் தனது கே‌ரிய‌ரின் முக்கியமான படம் என்று அவர் நம்புவதால்தான் இந்த தாராளம்.


 

சூடு பிடிக்கும் கோச்சடையான் பிசினஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'கோச்சடையான்' படத்தின் பிசினஸ் சூடுபிடித்துவிட்டது. விரைவில் ஷூட்டிங் தொடங்கயிருக்கும் இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் உ‌ரிமையை வாங்க இப்போதே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரபல தயா‌ரிப்பாளர் ஒருவர் கோச்சடையானின் தெலுங்கு டப்பிங் உ‌ரிமைக்கு 28 கோடிகள் தர‌ தயாராக இருப்பதாக‌த் தெ‌ரிவித்திருக்கிறார். சில மாஸ் ஹீரோக்களின் படங்களின் மொத்த கலெக்சன்தான் இது. இதேபோல் படத்தின் கேரள மற்றும் வெளிநாட்டு உ‌ரிமைக்கும் இப்போதே அடித்துக் கொள்ள தொடங்கியிருக்கின்றனர். ஆனாலும் படம் முடியும் வரை நோ பிசினஸ் என்று தீர்மானித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின்.