ஜெய், அஞ்சலி காதல் தீவிரம், திருமணத்திற்கு ரெடி?


நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் தீவிரமாக காதலித்து வருவதாகவும் தற்போது 2வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள புதிய படத்தில் நடித்து முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கோலிவட்டிலிருந்து சூடான தகவல் வெளியாகியுள்ளது.

திரையுலகில் அவ்வப்போது ஹீரோ, ஹீரோயினை இணைத்து காதல், திருமண வதந்திகள் கிளம்புவது சகஜம்தான். சில வேளைகளில்இது உண்மையாகும், பல நேரங்களில் பொய்த்துப் போகும்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக கோலிவுட்டில் உலா வரும் ஒரு செய்தி, ஜெய்யும், அஞ்சலியும் காதலிக்கிறார்கள் என்பதுதான்.இருவரும் சேர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடி போட்டனர். அது முதலே இருவரையும் இணைத்து செய்திகள் வரத் தொடங்கி விட்டன. ஆனால் தங்களுக்குள் காதல் கிடையாது, ஜஸ்ட் பிரண்ட்ஸ் என்று இருவரும் கூறி வருகின்றனர்.

ஆனால் இருவருமே நெருங்கிப் பழகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களாம், ஜோடியாக பல இடங்களுக்குப் போய் வருகிறார்களாம். மேலும் புதிதாக இருவரும் சேர்ந்து புதுப் படம் ஒன்றில் ஜோடி போடவுள்ளனர். இந்தப் படத்தில் அஞ்சலியை தனக்கு ஜோடியாக போடுமாறு ஜெய்தான் பரிந்துரைத்தாராம்.

இவர்களுக்கிடையிலான காதல் வலுத்து விட்டதாம். புதிய படத்தை முடித்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கோலிவுட்டில் படு சூடாக பேசிக் கொள்கிறார்கள்.

இது சினிமாவில் வருவது போன்ற காதலா அல்லது உண்மையிலேயே நட்புதானா என்பதை போகப் போகத் தெரிந்து கொள்ளலாம்.
 

பிக் பாஸ் வீட்டில் பலான பட நடிகை சன்னி லியோன்-இந்திய உடையில் வந்தார்!


பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டுள்ள இந்திய-கனடிய ஆபாசப் பட நடிகை சன்னி லியோன்,அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, படு அடக்கமான உடையுடன் வந்து சேர்ந்துள்ளார்.

இந்திய டைப் ஜாக்கெட் அணிந்து இந்தியப் பெண்ணாக வந்த சன்னியை, எட்டு ஆண்கள் சேர்ந்து ஒரு பல்லக்கில் வைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் தூக்கி வந்தனர்.

பல்லக்கை விட்டு இறங்கிய சன்னி, தஷன் படத்தில் இடம் பெற்ற சலியா சலியா என்ற பாடல் வரிக்கேற்ப ஒரு சின்ன ஆட்டத்தைப் போட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

இந்திய-கனடிய நடிகை சன்னி. இவர் ஏகப்பட்ட ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமானவர். படு கவர்ச்சிகரமான இவரது வருகையால் பிக் பாஸ் வீடு, செம ஹீட்டாகும் என்று நம்பப்படுகிறது.
 

மகளுக்குப் பெயர் சூட்ட அபிஷேக் ஆர்வம்- பெயர்களைப் பரிந்துரைக்க ரசிகர்களுக்குக் கோரிக்கை


தனது மகளுக்குச் சூட்ட நல்ல பெயராகப் பரிந்துரைக்குமாறு ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் அபிஷேக் பச்சன்.

மற்ற நடிகர், நடிகையருக்கும், அபிஷேக் பச்சன் குடும்பத்தினருக்கும் இடையே இமயமலை அளவுக்கு வித்தியாசம் உள்ளதை சமீப நாட்களாக தொடர்ந்து செய்திகளைப் படித்து வருவோர் உணர முடியும்.

வழக்கமாக நடிகர், நடிகையருக்கு குழந்தை பிறந்தால் அதை படு ரகசியமாக வைத்துக் கொள்வார்கள். என்ன குழந்தை பிறந்தது என்பதை மட்டும் பிரஸ் ரிலீஸ் மூலம் கொடுத்து விட்டு அத்தோடு கப்சிப்பாகி விடுவார்கள். அது நிச்சயம் தனிப்பட்ட விஷயம்தான், மறுப்பதற்கில்லை. இருப்பினும் அபிஷேக் பச்சனும், அமிதாப் பச்சனும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவர்ந்து விட்டனர். இந்தியர்கள் அத்தனை பேரும் தங்களது குடும்பத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்ற உணர்வுடன் அவர்கள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது - ஐஸ்வர்யா ராய் குறித்த செய்திகளை அவர்கள் மாறி மாறி மக்களுக்குத் தந்து கொண்டிருப்பது.

வழக்கமாக மீடியாக்காரர்கள்தான் இப்படி மாய்ந்து மாய்ந்து செய்தி கொடுப்பார்கள். ஆனால் அமிதாப்பும், அபிஷேக்கும் ஐஸ்வர்யா மற்றும் அவரது குழந்தை குறித்த செய்தியை தினசரி அப்டேட் செய்து கொண்டுள்ளனர்.

ஐஸ்வர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை ட்விட்டர் மூலம் இருவரும் மக்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் குழந்தை எப்படி உள்ளது, ஐஸ்வர்யா எப்படி உள்ளார் என்பதையும் தொடர்ந்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் தனது மகளுக்கு நல்ல பெயராக பரிந்துரையுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் அபிஷேக்.

இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எனது குழந்தைக்கு ஏ என்று ஆரம்பிக்கும் வகையிலான ஒரு நல்ல பெயரை பரிந்துரையுங்கள். உங்களது பரி்ந்துரைகள் அனைத்தும் வரவேற்கப்படும் என்று கூறியுள்ளார் அபிஷேக்.

அவர் மேலும் கூறுகையில், உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் நன்றியுடன் ஏற்கிறோம். இதுவரை 8 லட்சம் வாழ்த்துகள் வந்து விட்டன. மிகப் பெரிய வரவேற்பு இது. தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. அனைவருக்கும் எங்களது நன்றிகள். எனது மகள் மிகவும் அதிர்ஷ்டக்காரி, இத்தனை பேரின் வாழ்த்துகள் அவளுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார் அபிஷேக்.

மறுபக்கம் மாமனார் அமிதாப் பச்சன், தனது பேத்தி வீட்டுக்கு வரும்போது அவளை தடபுடலாக வரவேற்க கேமராக்களுடன் தயாராகி வருகிறாராம்.இதுகுறித்து அவர் ட்விட்டர் எழுதுகையில், அந்தக் குட்டிக் குழந்தையை விட்டுசிறிது நேரம் கூட பிரிந்திருக்க முடியாது. இருந்தாலும் அவள் வீட்டுக்கு வரும்போது வீடியோவில் ஷூட் செய்யவும், கேமராவில் படம் பிடிக்கவும் தயாராக இருக்க வேண்டுமே. அதைநான் தற்போது வீட்டில் செய்து கொண்டிருக்கிறேன். எனது பிறப்பின்போது கூட நான் இத்தனை மகிழ்ச்சியான சூழலில் இருந்திருக்க மாட்டேன் என்று கூறி சந்தோஷப்பட்டுள்ளார்.
 

நடிப்பைத் தொடர நயனதாரா திட்டம்?


திருமணத்திற்குப் பிறகு நயனதாரா நடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் அவர் மீண்டும் நடிப்பைத் தொடரலாம் என்று தெரிகிறது.

நடிகை நயன்தாரா இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியானது. கடந்த 18ம் தேதி வெளியான தெலுங்கு புராணப் படம் ஸ்ரீராம ராஜ்ஜியம் தான் நயன்தாராவின் கடைசி படம் என்று அனைவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.

நயன் நடிப்பதை பிரபுதேவாவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளா சென்ற நயன்தாரா சினிமா கோஆர்டினேட்டர் கண்ணில் பட்டுவிட்டார். உடனே அவர் நயனிடம் தமிழ்ப் படங்களில் நடிக்கும் எண்ணம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.

இதற்கு நயன் என்ன சொல்லியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லை, எனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் எண்ணம் இல்லை என்று தானே. ஆனால் நயன் வேறு ஒரு பதிலைக் கூறியுள்ளார்.

அதாவது, இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை, பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் நயன் மீண்டும் நடிக்க வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ராஜபாட்டையைக் கைவிட்டது 'சன்'!


ராஜபாட்டை படத்தை வாங்கியதாக கூறப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது அதை கைவிட்டு விட்டதாம். இதற்கா காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

ராஜபாட்டை படத்தை நாங்கள் வாங்கி விநியோகிக்கவில்லை என்று சன் பிக்சர்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரி செம்பியன் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் டிசம்பர் 16ம் தேதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜபாட்டையின் ரிலீஸ் தற்போது மேலும் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், தீக்ஷா சேத், மித்ரா குரியன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சுசீந்திரன் படத்தை இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் படமான இதை பிவிபி சினிமா தயாரித்துள்ளது. ரூ.40கோடியில் உருவாகியுள்ள ராஜபாட்டையை முதலில் சன் பிக்சர்ஸ் வாங்கியதாக தகவல்கள் கூறின. தற்போது அதை சன் பிக்சர்ஸ் மறுத்துள்ளது.
 

குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போன்ற படம் போலியானது-அமிதாப்


பிறந்த குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போல வெளியாகியுள்ள படம் நிஜமானதல்ல, அது மார்பிங் செய்யப்பட்ட போலியான படம் என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய், ஒரு குழந்தையை கையில் ஏந்தியபடி இருப்பது போல இன்டர்நெட்டில் ஒரு படம் வெளியாகியுள்ளது. ஆனால் இது மார்பிங் செய்யப்பட்ட படம் என்று தற்போது விளக்கியுள்ளார் ஐஸ்வர்யாவின் மாமனார் அமிதாப் பச்சன்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஐஸ்வர்யாவும், அவரது குழந்தையும் இருப்பது போன்ற போலியான படங்கள் நிறைய உலா வர ஆரம்பித்துள்ளன. ஆனால் எல்லாமே போலியானது என்று கூறியுள்ளார்.

எனது மகள் அவரது தாயாரின் கைகளுக்குள் இருப்பது போன்ற படத்தை நானும் பார்த்தேன். நல்லகற்பனை, நல்ல சிந்தனை. அதைச் செய்தவர்களுக்குப் பாராட்டுக்கள். இந்தப் படத்தை எனது மனைவியிடமே காட்டினேன் என்று கூறியுள்ளார் அபிஷேக்.

மேலும், தனது மனைவியின் பிரசவம் குறித்த செய்தியை அடக்கம் ஒடுக்கமாக வெளியிட்ட டிவி நிறுவனங்களுக்கு நன்றியும் கூறியுள்ளார் அபிஷேக் பச்சன்.