திருப்பூர்: பணமோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பாலாஜி திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
திருப்பூர் அவினாசி பகுதியில் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள், சுமார் 2 கோடிக்கும் கூடுதலான பண மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் பேரில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி போலீஸார் வழக்கு பதிவு செய்து டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாணையின் போது இந்த பணத்தில் ஒரு பகுதியை நட்சத்திர இரவு நடத்த நடிகர் பாலாஜியிடம் கொடுத்ததாக வாக்கு மூலம் அளித்தனர்.
இதையடுத்து முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு திருப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் பாலாஜிக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து இன்று காலை நடிகர் பாலாஜி திருப்பூர் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் இன்று ஆஜாராகி முன் ஜாமீன் பெற்றுக்கொண்டார்.