காதலுடன் நடிப்பதற்காக கை கோர்க்கிறார் மீரா ஜாஸ்மின்!

Meera Jasmine Act With Lover Rajesh   
காதலில் கசிந்துருகி, நடிபைக் கூட சுருக்கிக் கொண்டிருக்கும் மீரா ஜாஸ்மின் இப்போது தனது காதலருடன் இணைந்து ஒருதெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாராம். அத்தோடு நடிப்புக்குக் குட்பை சொல்லி விட்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகப் போவதாக கூறப்படுகிறது.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழில் பெயர் சொல்லும்படியான படங்களில் நடித்த இவர் மலையாளப் படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார்.

எல்லோரையும் தாக்கும் காதல் நோய் இவரையும் தாக்கவே படங்களைக் குறைத்துக் கொண்டு மாண்டலின் ஸ்ரீனிவாஸின் தம்பி ராஜேஸுடன் தீவிரக் காதலில் மூழ்கினார்.

காதல் வாழ்க்கை சுகமாகிப் போக சினிமாவைக் குறைத்துக் கொண்டார். சமீப காலமாக சுத்தமாக படங்களே இல்லாமல் போனது. இந்த நிலையில் மறுபடியும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறாராம் மீரா. அது தமிழில் இல்லை, தெலுங்கில். இப்படத்தில் அவருடன் இணைந்து ஜோடி போடப் போவது ராஜேஷாம்.

விரைவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கப் போகிறதாம். படம் வெளியான பின்னர் சினிமாவுக்கு குட் பை சொல்லி விட்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளனராம் மீராவும், ராஜேஷும்.
Close
 
 

சிங்கப்பூர் விழாவில் விஸ்வரூபம் ...பிரபுதேவா டான்ஸ்!

Viswaroopam Be Screened Singapore India Film Fest    | பிரபுதேவா   | விஸ்வரூபம்  
கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி பலரின் எதிர்பார்ப்புகளையும் ஈர்த்துள்ள விஸ்வரூபம் முதல் முறையாக சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவில் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவில் கமல்ஹாசனுடன், நடிகை ராதிகா, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். பலரையும் இப்படம் வெகுவாக ஈர்த்துள்ளது. காரணம் இப்படம் உருவாகியிருக்கும் விதம் குறித்து வெளியாகி வரும் தகவல். 100 சதவீதம் அக்மார்க் கமல் பாணி படம் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் ஏகமாகிக் கொண்டிருக்கின்றன.

கமல்ஹாசன் இப்படத்தில் மாறுபட்ட நடிப்பு, உடல் மொழியை வெளிப்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது. இதனால் ஹாலிவுட் வரையிலும் அவரது இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு பாய்ந்தோடி வருகிறது.

இந்த நிலையில் விஸ்வரூபம் முதல் முறையாக உலகப் பார்வையாளர்களுக்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ஜூன் மாதம் சிங்கப்பூரில் 3 நாட்கள் நடைபெறவுள்ள 13வது சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வி்ஸ்வரூபம் திரையிடப்படவுள்ளதாம். கமல்ஹாசனே இதைத் தெரிவித்துள்ளார்.

ஜூன் 8ம் தேதி இப்படத்தின் இந்திப் பதிப்பு திரையிடப்படவுள்ளது. கமல்ஹாசன் தவிர பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சிங்கப்பூர் லயன் சிட்டியில் நடைபெறும் இந்த விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அவருடன் நடிகைகள் ராதிகா, ஷ்ரேயா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். பிரபுதேவாவின் சிறப்பு நடனமும் விழாவில் இடம் பெறுகிறது.
Close
 
 

ப்ரீத்தி ஜிந்தாவும், ஷில்பா ஷெட்டியும் எனக்கு அண்ணி மாதிரி... ஸ்ரீசாந்த்

Shilpa Is Like Bhabhi Me Sreesanth
ப்ரீத்தி ஜிந்தாவும், ஷில்பா ஷெட்டியும் எனக்கு அண்ணி மாதிரி என்று கூறியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

முன்பு ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தவர் ஸ்ரீசாந்த். அப்போதுதான் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வந்த ஹர்பஜன் சிங்கிடம் கன்னத்தில் பளார் என அடி வாங்கி கிரவுண்டிலேயே ஓவென கதறிக்கதறி அழுது பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

பஞ்சாப் அணியின் ஓனராக இருப்பவர் ப்ரீத்தி ஜிந்தா. ராஜஸ்தான் அணியின் ஓனர்களில் ஒருவர் ஷில்பா ஷெட்டி. இவர்கள் இருவருக்கும் உங்களுக்குமிடையிலான உறவு குறித்து சொல்லுங்களேன் என்று அவரிடம் கேட்டபோது,

இருவரின் பெரிய ரசிகன் நான். பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நான் ஷில்பா ஷெட்டியின் பெரிய விசிறியாக இருந்தேன். அதேபோல ப்ரீத்தி ஜிந்தாவும் என்னைக் கவர்ந்தார். ஆனால் தற்போது இருவரும் எனக்கு அண்ணி போல.

எனது அறையில் ப்ரீத்தி ஜிந்தாவின் பெரிய படம் இன்றும் கூட உள்ளது. ஆனால் அதை உடனே மாற்றி ஷில்பா பாபியின் படத்தை வைக்க வேண்டும் என்றார் சிரித்தபடி.

ஸ்ரீசாந்த்துக்கு கிரிக்கெட், ஆட்டம், பாட்டு ஆகியவற்றைத் தாண்டி படம் வரைவதிலும் நல்ல ஆர்வம் உண்டாம். அவ்வப்போது சூப்பராக வரைவராம். விரைவில் அண்ணி ஷில்பாவையும், அவருடைய மகனையும் படம் வரைய காத்திருக்கிறாராம்.

சரி ஸ்ரீசாந்த், அண்ணன் ராஜ் குந்த்ராவுக்கு மகன் பிறந்திருக்கிறானே, போய்ப் பார்த்து அண்ணியிடம் நலம் விசாரித்தீர்களா...?
Close
 
 

குத்துப் பாட்டில் குதித்தார் பத்மப்ரியா!

Padmapriya Excited About Item Number
மலையாளத் திரையுலகில் இப்போது இதுதான் பரபரப்பான பேச்சாக உள்ளது. ஹீரோயின் ஒருவர் குத்துப் பாட்டுக்கு ஆடுவது என்பது அங்கு ரொம்பப் புதுசான விஷயம். ஆனால் பத்மப்பிரியா அதை உடைத்துள்ளார். பேச்சலர்ஸ் பார்ட்டி படத்தில் அவர் ஒரு அருமையான குத்துப் பாட்டுக்கு டான்ஸ் போடுகிறாராம்.

பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் குத்துப் பாட்டுக்களுக்கு நாயகிகளே நடனமாடுவது என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் மலையாளத்தில் மட்டும் அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை. ஆனால் முதல் முறையாக பத்மப்ரியா ஒரு படத்தில் குத்துப் பாட்டுக்கு கவர்ச்சிகரமாக ஆடியுள்ளாராம்.

பேச்சலர்ஸ் பார்ட்டி என்ற படத்தில்தான் இந்தக் குத்தாட்டத்தை ஆடியுள்ளார் பத்மப்ரியா.

இதுகுறித்து அவர் கூறுகையில், குத்துப்பாட்டுக்கு நான் எதிரானவள் கிடையாது. அதை ஒருபோதும் வெறுத்ததில்லை. அதுவும் சினிமாவில் ஒரு அங்கம்தான்.

இயக்குநர் அமல் நீரத்திடம் நான் ஒரு முறை கூறியிருந்தேன். ஏன் குத்துப்பாட்டுக்கெல்லாம் எங்களைப் போன்றவர்களை கூப்பிடுவதில்லை என்று. ஆனால் அதை அவர் சீரியஸாக எடுத்துக் கொண்டு தனது அடுத்த படத்திலேயே கூப்பிட்டது வியப்பாகி விட்டது.

எனக்கு டான்ஸ் என்றால் பிடிக்கும். அதிலும் குத்துப்பாட்டு என்றால் ஜாலியாக இருக்கும். இப்போது நானே ஆடப் போவது வித்தியாசமாக உள்ளது, ரொம்ப எதிர்பார்ப்பு உள்ளது. ஒன்றரைநாளிலேயே இந்தப் பாட்டைப் படமாக்கி விட்டனர். படத்தின் கதைக்கும், இந்தப் பாட்டுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆனால் படத்தின் அத்தனை கேரக்டர்களும் சங்கமிக்கும் இடத்தில் இந்தப் பாடல் வருவதாக இயக்குநர் கூறியுள்ளார் என்றார் பத்மப்ரியா.

'கப்ப கப்ப' என்று ஆரம்பிக்கிறதாம் இந்தப் பாடல்... பலே!
Close
 
 

சர்வதேச மொழிகளில் ரீமேக்காகும் முப்பொழுதும் உன் கற்பனைகள்

Muppozhudum Un Karpanaigal International Languages   
கேன்ஸ் திரைப்பட விழாவில் எல்ரெட் குமாரின் முப்பொழுதும் உன் கற்பனைகள் திரையிடப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடிந்து வருகிறது. இதில் எல்ரெட் குமார் தயாரித்து இயக்கிய முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் கடந்த 22ம் தேதி திரையிடப்பட்டது. இந்த படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, அமலா பால் நடித்துள்ளனர். இந்த படம் ரிலீஸாகி 100 நாட்களை தொடவிருக்கும் நிலையில் சர்வதேச அரங்கில் திரையிடப்பட்டுள்ளது படத்திற்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.

படத்தை இயக்கிய எல்ரெட் குமார் திரைப்பட விழாவில் சர்வதேச இயக்குனர்களுடன் சிவப்பு கம்பளத்தில் ஆனந்த கண்ணீரோடு நடந்துள்ளார். இந்த படத்தைப் பார்த்தவர்கள் ரீமேக் உரிமையைப் பெற போட்டா போட்டி போட்டுள்ளனர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த எக்கோ என்ற நிறுவனம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது. இந்த படத்தை கொரியா மற்றும் ஐரோப்பா பகுதியில் வெளியிட அந்நாட்டு இயக்குனர்களும் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஆக முப்பொழுதும் உன் கற்பனைகள் பல்வேறு மொழிகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
Close
 
 

நடிகர் ரவி ராகுலுக்கு மீண்டும் ஹீரோ சான்ஸ்!

Ravi Rahul Storm Cinema Again
சின்னத்திரையில் இருந்து மறுபடியும் பெரிய திரை ஹீரோவாக புரமோசன் ஆகியுள்ளார் நடிகர் ரவி ராகுல். தற்போது நாதஸ்வரம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் இயக்குநர் திருமுருகனிடம் அனுமதி பெற்றே இதனை ஒப்புக்கொண்டுள்ளாராம்.

ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் கஸ்தூரி ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரவி ராகுல். மாங்கல்யம் தந்துனானே, தமிழ்ப் பொண்ணு, மிட்டாமிராசு போன்ற பிரபல படங்களிலும் நடித்திருக்கிறார்.

சினிமா வாய்ப்பு குறைந்ததை அடுத்து சீரியல்கள் பக்கம் கவனத்தை திருப்பினார். ரவிராகுல் இதுவரை 53 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ள போதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாதஸ்வரம் தொடரில் செல்வரங்கம் கதாபத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. இவருக்கு தற்போது மீண்டும் பெரியதிரையில் பொல்லாங்கு படத்தின் நாயகனாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

சினிமாவில் மீண்டும் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் தனக்கு பெயர் வாங்கி தந்த நாதஸ்வரம் தொடரில் நடிப்பதை தவற விட கூடாது என்று நாதஸ்வரம் தொடரின் இயக்குனர் திருமுருகனின் அனுமதி கிடைத்த பின்பே பெரியதிரையில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். சின்னத்திரையில் நடிக்க வந்த பிறகு பெரிய திரையில் மீண்டும் ஹீரோவாக நடிப்பது அநேகமாக இவராகத்தான் இருக்கும்.
Close
 
 

மக்கள் டிவியில் களை கட்டும் 'விளையாடு வாகை சூடு'

Makkal Tv Game Show Velayadu Vakai Soodu
தொலைக்காட்சிகளில் கேம் ஷோ என்பது இன்றைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எந்த சேனலை திருப்பினாலும் யாராவது ஒருவர் பந்து பொருக்கி போடுகிறார். வளையலை கையில் கோர்க்கிறார். பாட்டிலில் தண்ணீர் பிடித்து ஊற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்தியா முழுக்க எல்லா மொழி சேனல்களிலும் கேம் ஷோ நிகழ்ச்சிகள் களை கட்ட ஆரம்பித்து விட்டன. தமிழ்நாட்டிலும் கூட நிறைய தமிழ் சேனல்களில் கேம் ஷோக்கள் நடத்தப்படுகின்றன. (புத்திசாலித்தனமான போட்டிகள் எதுவுமில்லை).

இந்த பந்தயத்தில் மக்கள் தொலைக்காட்சியும் பங்கெடுத்துக் கொண்டுள்ளது. ‘விளையாடு வாகை சூடு’ என்ற கேம் ஷோவில் ஒரு நிமிட போட்டிகள் வைக்கின்றனர். போட்டியில் அவர்கள் கூறுவதை 1 நிமிடத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுவெளிகளில் வரும் பார்வையாளர்களே இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். வெற்றி பெறுவோருக்கு ஏகப்பட்ட பரிசுகளையும் தருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 1மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

அரங்கில் மட்டுமல்லாது விஜிபி யுனிவர்சல் கிங்டம், அபிராமி மெகாமால் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களுக்கு சென்று அங்கே மக்களை நேரடியாக சந்தித்து போட்டியில் பங்கேற்கச் செய்கின்றனர். கடந்த வாரங்களில் மீன் தொட்டியில் பிளாஸ்டிக் மீனை போட்டு தூண்டிலில் பிடிக்க வைத்தார்கள். அதிக மீன் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.

விளையாட்டை விட நிகழ்ச்சியை நடத்திய தொகுப்பாளினியின் கொஞ்சல் பேச்சிற்காகவே ஒருமுறை பாருங்களேன்.
Close
 
 

ஒரு நாயகி உருவாகிறாள்…. ‘நிலா’ பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

Pillai Nila Neya Attracts Tv Viewers
சன் தொலைக்காட்சியில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பிள்ளை நிலா தொடர் குழந்தை பிள்ளை பாசத்தை கருவாகக் கொண்ட கதை. இந்த புதிய தொடர் இப்பொழுது பெண்கள் விரும்பி பார்க்கும் தொடராக மாறிவருகிறது. பிள்ளை நிலா தொடரில் நிலாவாக வரும் குட்டி நட்சத்திரம் நேகா, நடிப்பில் பார்ப்பவர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருகிறாள்.

குட்டி நட்சத்திரத்திரம் நேகாவிற்கு இதுதான் முதல் தொடராம். ( பார்த்தால் நம்ப முடியலையே) ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சொன்ன காட்சியை ஒரே டேக்கில் நடித்து விட்டு, நொடியில் அடுத்த காட்சிக்குத் தயாராகிவிடுகிறார். ( வருங்கால கதாநாயகி இப்பவே ரெடி)

நேகா சென்னை சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் 6-வது படிக்கிறார். பெற்றோர் ராஜேஷ்-பிரசன்னாவின் ஒரே வாரிசு. அப்பா என்ஜினீயர். அம்மா குடும்பத்தலைவி.

நேர்முகத்தேர்வில் `எனக்கு எங்க அம்மா வேணும்' என்ற டயலாக்கை டைரக்டர் சொன்னது தான் தாமதம், இவள் அந்த டயலாக்கை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்து விட்டாள். அப்போதே டைரக்டர் உற்சாகமாகி, `எங்க கதைக்கான நிலா கிடைச்சாச்சு' என்று தேர்வு செய்து விட்டார்களாம். படிப்பில் மட்டுமல்ல நடிப்பிலும் செம கெட்டியாம். அதனால் நேகா நடிப்பதற்கு பள்ளி நிர்வாகத்தினர் தடை விதிக்கவில்லையாம்.

நேகாவின் நடிப்பை பார்த்து இயக்குநர் சி.ஜே.பாஸ்கர் இப்போது இயக்கி வரும் `மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்' தொடரிலும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நேகாவின் நடிப்பை பற்றி கூறிய அவர், அன்றைய குட்டி மீனாவை பார்த்ததுபோல் அத்தனை துறுதுறுப்பாக இருக்கிறாள். மீனா மாதிரியே கலைத்துறையில் பெரிய நட்சத்திரமாக வருவாள் என்று பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார் இயக்குநர் சி.ஜே. பாஸ்கர்.

எப்படியோ இன்னொரு கதாநாயகியை உருவாக்கினால் சரிதான்.
Close
 
 

தல ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கவிருக்கும் சிம்பு

Str Special Ajith Billa2    | பில்லா 2   | அஜீத்  
அஜீத் குமாரின் பில்லா 2 பட இடைவேளையில் தனது மற்றும் தல ரசிகர்களுக்கு சிம்பு ஒரு சர்பிரைஸ் கொடுக்கப் போகிறார்.

நடிகர் சிலம்பரசன் ஒரு தீவிர அஜீ்த் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அஜீத்தின் பில்லா 2 விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் தல மற்றும் தனது ரசிகர்களுக்கு ஏதாவது சர்பிரைஸ் கொடுக்க வேண்டுமே என்று நினைத்த சிம்பு தனது மண்டையைப் போட்டு உடைத்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

சிம்பு தற்போது ஹன்சிகாவுடன் சேர்ந்து வாலு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா அந்த படத்தின் டீசர் அண்மையில் தான் எடுக்கப்பட்டது. அந்த டீசரை பில்லா 2 இடைவேளையில் திரையிட அவர் திட்டமிட்டுள்ளாராம். இது சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுமானால் சர்பிரைஸ் என்று சொல்லலாம் ஆனால் தல ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ?

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், வி.டி.வி. கணேஷ் நடிக்கும் வாலு படத்தை புதுமுக இயக்குனர் விஜய் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார்.

பில்லா 2 இடைவேளையில் 'வாலு' வந்தால் உங்களுக்கு எல்லாம் ஓ.கே.வா?
Close
 
 

கே. பாலசந்தரின் அமுதா ஒரு ஆச்சரியக்குறி!

K Balachandar Comes With Amutha Oru Acharyakuri
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் சாந்தி நிலையம் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு அடுத்ததாக பாலசந்தர் இயக்கும் புதிய தொடர் ‘அமுதா ஒரு ஆச்சரியக்குறி’ இது ஜெயா டிவிக்காக அல்ல கலைஞர் டிவிக்காக தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் சிறப்பம்சம்.

சினிமாவில் ஜாம்பவான் இயக்குநராக இருந்த கே. பாலசந்தர் சின்னத்திரையின் வரவிற்குப் பிறகு பொதிகையில் தொடங்கி சன், கலைஞர், ஜீ தமிழ், ஜெயா டிவி என பிரபல தொலைக்காட்சிகளில் சிறப்பு வாய்ந்த நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார். தற்பொழுது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் சாந்தி நிலையம் தொடர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதனையடுத்து புதிய தொடருக்கான வேலையில் பிஸியாகிவிட்டார் பாலசந்தர். நெடுந்தொடருக்கான தலைப்பு “அமுதா ஒரு ஆச்சரியக்குறி”

இந்த தொடரில் கே.பாலசந்தரின் ஆஸ்தான நட்சத்திரங்களான "கவிதாலயா' கிருஷ்ணனும் ரேணுகாவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் தொடரின் கதையைப் பற்றி அண்மையில் கலைஞரை சந்தித்து பாலசந்தர் கூறியுள்ளார்.

கதையைக் கேட்டறிந்த கலைஞர் மகிழ்ச்சியடைந்து பாலசந்தரை பாராட்டியதோடு தொடரின் தலைப்பைப் பற்றிக் கேட்டுள்ளார். "கமலா ஒரு கேள்விக்குறி' என்று பாலசந்தர் கூறிய உடன் அதனை "அமுதா ஒரு ஆச்சர்யக்குறி' என்று மாற்றியிருக்கிறார் கலைஞர். பாலசந்தருக்கும் அந்தத் தலைப்பு மிகவும் பிடித்துவிட அதனையே விளம்பரப்படுத்திவிட்டார்.
Close
 
 

புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் புதிய பாதை....

Parthiban Remake Puthiya Paathai
பார்த்திபனுக்கு ஒரே படத்தின் மூலம் ஏற்றம் கொடுத்த படமான புதிய பாதை மீண்டும் திரைக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாகும் புதிய பாதையில் மீண்டும் பார்த்திபனே ஹீரோவாக நடிக்கிறார்.

வித்தியாசமான கதைக் களம், வித்தியாசமான நடிப்பு, புத்தம் புதிய ஹீரோத்தனம் என எல்லாவற்றிலும் வித்தியாசமாக அமைந்த படம் புதிய பாதை. அப்படத்தின் கதையும், பார்த்திபன், சீதா ஜோடிப் பொருத்தமும், தேவாவின் புதிய இசையும் படத்தை தூக்கி நிறுத்தின. பெரும் ஓட்டம் ஓடிய இப்படம் பார்த்திபனையும், சீதாவையும் நிஜ வாழ்க்கையிலும் சேர்த்து வைத்தது.

முதல் படத்திலேயே தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது. இப்படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார். அவரே மீண்டும் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இக்காலத்துக்கு ஏற்றவகையில் கதையில் சின்னதாக மாற்றம் செய்து படத்தை ரீமேக் செய்யப் போகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை ஒரு தமிழ்ப் படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் அதில் வேறு ஹீரோதான் நடித்துள்ளனர். குறிப்பாக பி.யூ சின்னப்பா படங்களை ரீமேக் செய்தபோது எம்.ஜி.ஆர். நடித்தார். ரஜினி படங்களை ரீமேக் செய்தபோதும் வேறு ஹீரோக்களே நடித்தனர். ஆனால் ஒரு ஹீரோவின் படம் பல வருடங்களுக்குப் பின்னர் ரீமேக் செய்யும்போது அதே ஹீரோவே நடிப்பது என்பது உலக வரலாற்றில் இதுவரை இல்லாதது. அந்த வகையில், எனது இந்தப் படம் புதிய உலக சாதனையாகும் என்றார்.

பார்த்திபனுக்கும் பெரிய பிரேக் தற்போது தேவைப்படுகிறது. சிறந்த கலைஞரான அவருக்கு இந்தப் புதிய பாதை மீண்டும் ஒரு புதிய பாதையை திறந்து விடட்டும்.

நல்ல கலைஞர்கள் முடங்கிக் கிடப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, கலா ரசிகர்களுக்கும் கூட கஷ்டமான விஷயம்தான்.
Close