நல்ல காலம் பொறக்குது…
ஒச்சி படத்தோட வசனத்துல நிறைய கெட்ட வார்த்தைகள பயன்படுத்தி இருந்தாங்களாம்… இருந்தாங்களாம்… அதுக்கு சென்சார் ஆபிஸருங்க எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம்… தெரிவிச்சாங்களாம்… Ôஏற்கனவே சில படங்கள்ல இந்த மாதிரி வசனமெல்லாம் வந்திருக்கு. யதார்த்தமா பேசுற வார்த்தைங்கதான். அப்படியே அனுமதிக்கணும்Õனு பட இயக்கம் சண்டை போட்டாராம்… போட்டாராம்… முடியாதுன்னு சொல்லி, அந்த வார்த்தையெல்லாம் கேட்க முடியாதபடி பீப் சவுண்டு கொடுத்துட்டாங்களாம்… கொடுத்துட்டாங்களாம்…
கவுரவமானவங்க படத்துல நடிச்ச பலருக்கு தயாரிப்பு சம்பள பாக்கி வச்சிருக்காராம்… வச்சிருக்காராம்… மோனிக ஹீரோயினை தொடர்ந்து, துணை நடிகருங்க நிறைய பேர் சங்கத்துல புகார் கொடுத்திருக்காங்களாம்… கொடுத்திருக்காங்களாம்… ஆக்டர் சங்கம் தயாரிப்பை பிடிச்சு விசாரிக்குதாம்… விசாரிக்குதாம்…
கேப்டன் படத்தோட ஷூட்டிங் இழுத்துட்டே போகுதாம்… போகுதாம்… நினைக்கிறப்போ திடீர்னு ஷூட்டிங்கை நடத்துறாராம் கேப்டன். திடீர்னு ஷூட்டிங் நின்னு போயிடுதாம்… போயிடுதாம்… படம் எப்போ முடியும்னு தெரியாம டெக்னீஷியனுங்க முழிச்சிட்டு இருக்காங்களாம்… இருக்காங்களாம்…