ஐ ஆம் இன் லவ்: சொல்கிறார் தனுஷ்

I Am Love Says Dhanush

சென்னை: நடிகர் தனுஷ் மனதை பறிகொடுத்துவிட்டார். ஏ.ஆர். ரஹ்மானின் பாடலைக் கேட்டுத் தான் தனது மனதை பறிகொடுத்துள்ளார்.

தனுஷ் தான் நடிக்கும் முதல் இந்தி படமான ராஜ்னாஹாவின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அவர் அனில் கபூரின் மகள் சோனம் கபூருடன் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் காசியில் நடக்கிறது.

இந்நிலையில் தனுஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

பரத் பாலாவின் மரியான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபரில் துவங்குகிறது. அந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்களைக் கேட்டு மனதை பறிகொடுத்துவிட்டேன். எனது இந்தி படத்தின் படப்பிடிப்பு 15 சதவீதம் முடிந்துவிட்டது. இது ஒரு புதுவித அனுபவமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


நடிப்பது தவிர சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் ஆகியோரை வைத்து எதிர் நீச்சல் என்ற படத்தை அவர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர். ரஹ்மான் பாடலைக் கேட்டு மனதை பறிகொடுக்காதவர் ஏது?

 

தமன்னாவின் அழகில் மயங்கி டூயட் பாட தூது அனுப்பிய ரித்திக்

Tamanna Pair Up With Hrithik Roshan   

சென்னை: தமன்னாவை பார்த்து அவரது அழகில் மயங்கிய ரித்திக் ரோஷன் அவரை தன்னுடன் ஒரு படத்தில் நடிக்க அழைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

நடிகை தமன்னாவுக்கு தமிழில் தான் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. ஆனால் ஆந்திராவில் அவருக்கு ஏக கிராக்கியாகத் தான் உள்ளது. அதிலும் சிரஞ்சீவி குடும்பத்தார் ஆதரவில் அவர் அமோகமாக இருக்கிறார். இந்நிலையில் இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் கஜோல் கணவர் அஜய் தேவ்கனுடன் சேர்ந்து நடிக்கிறார்.

இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற தமன்னாவை பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் பார்த்துள்ளார். தமன்னாவின் அழகில் மயங்கிவிட்டாராம். அதன் பிறகு வீட்டுக்கு சென்ற அவர் தமன்னாவுக்கு தூது அனுப்பியுள்ளார். அதாவது தன்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை வைத்துள்ளார்.

ரித்திக்குடன் நடிக்க நான், நீ என்று நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்போது அவரதே தனக்கு தூதுவிட்டதில் அம்மணிக்கு ஏக சந்தோஷமாம். உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.

சில நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுகையில் தமன்னாவுக்கு வாய்ப்பு வீடு தேடி வருகிறது. இது தான் அதிர்ஷ்டம் என்பதோ...

 

மூச்சு, மொடையில்லாமல் கத்ரீனாவின் புதுவீட்டுக்கு சென்ற சல்லு, ரன்பீர்

Salman Ranbir S Hush Hush Visit Katrina New Abode   

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் வாங்கியுள்ள புது வீட்டுக்கு சல்மான் கானும், ரன்பீர் கபூரும் சத்தமில்லாமல் சென்று வந்துள்ளனர்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் மும்பை அந்தேரி பகுதியில் டூப்ளெக்ஸ் வீடு வாங்கியுள்ளார். இந்த வீட்டில் அவர் தனது குடும்பத்தாரோடு வசிக்கவிருக்கிறார். இந்த புது வீட்டுக்கு முதன்முதலாக வந்தது யார் தெரியுமா? கத்ரீனாவின் முன்னாள் காதலர் சல்மான் கான் தான். அதையடுத்து கத்ரீனாவின் நண்பர் ரன்பீர் கபூர் பத்திரிக்கையாளர்கள் கண்ணில் படாமல் இரவு 11 மணிக்கு வந்துவிட்டு 12.45 மணிக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே வந்த ரன்பீர் பத்திரிக்கையாளர்கள் யாரும் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்று விருட்டென்று காரில் ஏறிச் சென்றுவிட்டாராம்.

கத்ரீனா தான் புது வீடு வாங்கியதை யாருக்கும் கூறாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரால் அந்த ரகசியத்தை காக்க முடியவில்லை. சல்மானுடன் சேர்ந்து அவர் நடித்த ஏக் தா டைகர் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

'ஓ மை காட்'... ரஜினி?

Will Rajini Star Omg Tamil Remake

மும்பை: இந்தியில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள ஓ மை காட் படம் தமிழில் ரீமேக் செய்யத் தயாராகி வருகிறதாம். ஆனால் இதில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் அக்ஷய் குமார் நிபந்தனை விதித்துள்ளதால் தற்போது பந்து ரஜினியின் கோர்ட்டுக்கு வந்து பதிலுக்காக காத்திருக்கிறது.

தமிழில் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தின் கதையைப் போன்றதுதான் இந்த ஓ மை காட் படத்தின் கதையும். அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் குறித்த கதை இது.

இருப்பினும் இதில் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. அதாவது பாபா படத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நம்பிக்கைக்கு மாறுகிறான். அதேசமயம், ஓ மை காட் படத்தின் ஹீரோ கடவுள் மீதான அதீத நம்பிக்கையிலிருந்து தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் கடவுளையே அழிக்கக் கிளம்புகிறான் என்பதுதான் அந்த வித்தியாசம்.

இருப்பினும் கடவுளுக்கு எதிரான செயலில் ஹீரோ ஈடுபடுவதாக ஓ மை காட் படத்தின் கதைக் கரு அமைந்துள்ளதால் இதில் ரஜினி நடிக்க முன்வருவாரா என்பது சந்தேகம் என்கிறார்கள்.

ஆனால் ரஜினி நடித்தால் மட்டுமே இப்படம் தமிழில் பிரமாதமாக போகும் என்பதில் அக்ஷய் குமார் நம்பிக்கையுடன் உள்ளாராம்.

கடவுள் நம்பிக்கையை விடுங்க, ஓ மை காட் படத்தில் பிரபுதேவாவும், சோனாக்ஷி சின்ஹாவும் போட்ட செமத்தியான குத்தாட்டம் இருக்கிறதே, அது தமிழிலும் வருமா என்பதை முதலில் சொல்லுங்க குமார்....!

 

மணிரத்னத்தை இம்பிரஸ் செய்த கௌதம்

Gautham Impresses Mani Ratnam

சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் தனது முதல் படமான கடல் இயக்குனர் மணிரத்னத்தை தனது நடிப்பால் இம்பிரஸ் செய்துவிட்டாராம்.

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம், ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து மணிரத்னம் இயக்கும் படம் கடல். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் முதலில் சமந்தா தான் கதாநாயகியாக நடித்தார். பின்னர் அவருக்கு பதில் துளசி வந்தார். துளசி இந்த கதைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டதைப் பார்த்து மணி அசந்துவிட்டாராம்.

இந்நிலையில் கௌதமி்ற்கு இது தான் முதல் படம் என்றாலும் அவர் நடிப்பில் பின்னி பெடலெடுத்துள்ளாராம். அவரது நடிப்பைப் பார்த்து மணி பெருமைப்பட்டுள்ளார். நவரச நாயகனின் மகனாச்சே நடிப்பதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

அது மட்டமின்றி ஒரு நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் வல்லவரான மணிரத்னத்தின் படத்தில் அல்லவா கௌதம் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அஞ்சலி படத்தில் ஷாமிலியின் நடிப்பைப் பார்த்தவர்கள் இந்த குழந்தையை மணி எப்படி நடிக்க வைத்தார் என்று இன்றும் வியக்கின்றனர்.

 

காஜல் உங்களுக்கு விருந்து வைக்கணுமா? இதைப் படிங்க

Do You Want Kajal Treat You Read This   

சென்னை: காஜல் அகர்வாலிடம் யாராவது நீங்கள் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று சொன்னால் இன்னொரு வாட்டி சொல்லுங்க என்கிறாராம். மேலும் அவர்களுக்கு விருந்து கொடுக்கிறாராம்.

காஜல் அகர்வால் தமிழில் விஜயுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் காஜல் தமிழ், தெலுங்கு என்று இத்தனை படங்களில் நடித்து வரும் நீங்கள் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று பலரும் அவருக்கு ஐஸ் வைத்து வருகிறார்களாம்.

இதைக் கேட்டு உச்சி குளிர்ந்து போகும் காஜல் அந்த ஐஸ் பார்டிகளிடம் இன்னொரு வாட்டி சொல்லுங்க என்று கேட்கிறாராம். அவர்களும் அதை திரும்பச் சொல்ல மகிழ்ந்துபோகும் அவர் ஐஸ் பார்ட்டிகளுக்கு விருந்து கொடுத்து அசத்துகிறாராம்.

இத்தனை படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள காஜல் கால்ஷீட்டை குழப்பியதாக சிலர் முணுமுணுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கும், இங்கும் ஓடி, ஓடி நடிப்பதால் சில படங்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க காலதாமதமாவதாகவும் கூறப்படுகிறது.

 

சூர்யாவுடன் குத்தாட்டம் போடப்போவது நயனா, ஸ்ரேயாவா?

Who Ll Be Suriya S Item Babe

சென்னை: சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டம் போட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சிங்கம் 2 படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் 26ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் துவங்கப்படுகிறது. இந்த படத்தில் அனுஷ்கா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தில் ஒரு குத்துப்பாட்டு வைத்துள்ளனராம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.

அம்மணிகள் இருவருமே பிசியாக இருப்பதால் ஒரு வேளை நோ சொன்னால் அந்த வாய்ப்பு ரிச்சா கங்கோபத்யாயாவுக்கு போகும் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர பாலிவுட் நடிகைகளின் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

நயன் ஏற்கனவே ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் ஒரு பாட்டிற்கு ஆட்டம் போட்டுள்ளார். ஸ்ரேயோ இதுவரை சூர்யாவுடன் நடித்ததே இல்லை. அது தவிர குத்துப்பாட்டுக்கு அவர் ஏற்றவர் என்று சிலர் தெரிவித்தனர்.

சிங்கம் படம் தமிழில் இருந்து இந்திக்கு போய் அங்கும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பைனான்சியரிடம் ரூ.90 லட்சம் மோசடி: நடிகை, தாயார் கைது, புழல் சிறையில் அடைப்பு

Actress Held Cheating Financier Rs 90 Lakh

சென்னை: திரைப்படம் தயாரித்து அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்ததை காட்டி பைனான்சியர் ஒருவரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த நடிகை புவனேஸ்வரி, அவரது தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33). அவர் அம்பத்தூர் எஸ்டேட் 2வது மெயின் ரோட்டில் தர்சினி பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சினிமாக்காரர்களுக்கும் பைனான்ஸ் செய்து வருகிறார். இந்நிலையில் புரோக்கர் மூலம் சாலிகிராமத்தில் வசிக்கும் புதுமுக நடிகை புவனேஸ்வரி அவருக்கு அறிமுகம் ஆனார்.

கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகை புவனேஸ்வரியும், அவரது தாயார் சம்பூரணமும் சேர்ந்து பிரகாஷை சந்தித்து தாங்கள் 'கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்' என்ற படத்தை தயாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தனர். அந்த படத்தை தயாரிக்க ரூ.90 லட்சம் தேவைப்படுகிறது அதை கடனாகக் கொடுத்தால் படத்தின் லாபத்தில் அசலுடன் சேர்த்து பங்கு தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.

மேலும் இந்த படத்தை முடித்துவிட்டு தாங்கள் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிரகாஷுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பேச்சை நம்பி பிரகாஷ் பணம் கொடுக்க சம்மதித்தார். அதன்படி அவர் தாய், மகளிடம் எழுதி வாங்கிக் கொண்டு முதல் தவணையில் ரூ.50 லட்சமும், இரணாடவது தவணையில் ரூ.40 லட்சமும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் படத்தை தயாரித்த புவனேஸ்வரி தானே நாயகியாகவும் நடித்தார். அண்மையில் அந்த படம் ரீலீஸ் ஆனது. ஆனால் பிரகாஷுக்கு அசலையும் கொடுக்கவில்லை, லாபத்தில் பங்கும் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து பிரகாஷ் பணத்தை கேட்டுள்ளார். இதில் கடுப்பான புவனேஸ்வரியும், அவரது தாயும் சேர்ந்து பிராகஷுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பிரகாஷ் சென்னை மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் சங்கரிடம் இது குறித்து புகார் கொடுத்தார். அவரது புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சங்கர் அம்பத்தூர் எஸ்டேட் போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று முன்தினம் மதியம் சாலிகிராமம் சென்று புவனேஸ்வரி மற்றும் அவரது தாயாரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

நடிகர் லூஸ் மோகன் மரணம்

Actor Loose Mohan Passes Away

சென்னை: காமெடியில் தனக்கென தனி பாணியில் நடித்து லட்சோபம் லட்சம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பிரபல நடிகர் லூஸ் மோகன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவரான மோகன், மெட்ராஸ் பாஷை எனப்படும் சென்னைத் தமிழில் தனி பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவராவார்.

தனது கடைசிக்காலத்தில் பெரும் மன உளைச்சலுடன் வாழ்ந்த சோகக் கதை மோகனுடையது. அவருக்கு ஒரே மகன் கார்த்திக். லூஸ் மோகனை அவரது மகனும், மருமகளும் கடைசிக்காலத்தில் புறக்கணித்தனர். இதனால் மனம் உடைந்த அவர் காவல்துறை ஆணையரிடம் வந்து முறையிடும் அளவுக்குத் தள்ளப்பட்டார்.

சாப்பாடு கூட கொடுக்க மறுக்கிறார் எனது மருமகள், அதை எனது மகன் தட்டிக் கேட்க மறுக்கிறார். ஒரு மூத்த குடிமகன் என்ற அடிப்படையில், மனிதாபிமானத்துடன் எனது மகன், மருமகள் கடைசிக்காலத்தில் என்னைக் கவனிக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது லூஸ் மோகனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் வேதனைப்பட்டனர். அனைவரையும் சிரிக்க வைத்த லூஸ் மோகனுக்கு இந்த நிலைமையா என்று அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

சொந்த வீடு, சொத்து சுகத்துடன் இருந்தபோதிலும் கடைசிக்காலத்தில் பெரும் மனச் சுமை, வேதனையுடன் போய்ச் சேர்ந்துள்ளார் லூஸ் மோகன்.

தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகர்களோடு இணைந்து ஒரு காலத்தில் காமெடியில் கலக்கியவர் லூஸ் மோகன். அவரது காமெடிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. எம்.ஜி.ஆர். காலம் தொட்டு நடித்து வந்தவர் லூஸ் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

லூஸ் மோகனின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

ஜார்ஜியாவில் ஆர்யாவுக்கு அனுஷ்கா கற்றுக் கொடுத்தது என்ன?

What Did Arya Learn From Anushka Georgia    | அனுஷ்கா  

சென்னை: ஜார்ஜியாவில் நடந்த இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் அனுஷ்கா ஆர்யாவுக்கு யோகா கற்றுக் கொடுத்துள்ளார்.

செல்வ ராகவனின் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இரண்டாம் உலகம். அந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அப்போது 80க்கும் மேற்பட்ட ஆண்கள் மத்தியில் ஒரே பெண்ணாக இருந்து எந்த குறையும் சொல்லாமல் சமத்தாக நடித்துக் கொடுத்துள்ளார் அனுஷ்கா. இதை நாயகன் ஆர்யா தான் தெரிவித்தார்.

நடிக்க வரும் முன்பு அனுஷ்கா யோகா வகுப்புகள் நடத்தி வந்தார் என்பது நாம் அறிந்ததே. மேலும் படப்பிடிப்பில் அவர் பலருக்கு யோகா கற்றுத் தருவதாகவும் நாம் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் ஜார்ஜியாவில் நடந்த படப்பிடிப்பின்போது அனுஷ்கா ஆர்யாவுக்கு யோகா கற்றுக் கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியவுடன் ஆர்யா தினமும் யோகா செய்ய ஆரம்பி்த்துவிட்டார். ஜார்ஜியாவில் கற்ற யோகாவை சென்னைக்கு வந்ததும் சின்சியராக செய்து வருகிறார் ஆர்யா. ஏற்கனவே கும்மென்று இருக்கும் ஆர்யா இனி யோகா செய்து பிட்டாக இருக்கப் போகிறார்.

 

சதைப்பிடிப்பான பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கும்... வித்யா பாலன்

Voluptous Is Beautiful Ask Men Vidya Balan   

மும்பை: சற்றே சதைப்பிடிப்பான, இயல்பான வளைவு நெளிவுகளுடன் கூடிய பெண்கள்தான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அதைத்தான் சொல்வார்கள் என்று கூறியுள்ளார் நடிகை வித்யா பாலன்.

இதுகுறித்து வித்யா கூறுகையில், பெண்களைப் பொறுத்தவரை ஒல்லிக்குச்சியாக இருந்தால் அழகு கிடையாது. சற்றே சதைப்பிடிப்புடன் இருக்க வேண்டும். இயல்பான வளைவு நெளிவுகள் இருக்க வேண்டும். அதுதான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே தெரியும்.

இந்தியப் பெண்களுக்கு மட்டுமே இயல்பான வளைவு நெளிவுகள் அழகாக அமைந்துள்ளன. அவர்களின் உடல்அமைப்பே கவர்ச்சிகரமானதுதான். என்னைப் பொறுத்தவரை எனது உடல் அழகு மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு, பெருமை உண்டு. என்னை நானே ரசித்துக் கொள்வேன், அதில் தவறேதும் இல்லை.

டர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக நான் சற்றே சதை போட்டேன். தற்போது அது குறைந்து விட்டது. இதற்காக நான் அதிகம் மெனக்கெடவில்லை. எனது சதைப் பிடிப்பு சற்று குறைந்திருந்தாலும், அது வெளியில் தெரியாத வகையில்தான் எனது உடல் வாகு அமைந்துள்ளது. டர்ட்டி பிக்சர்ஸ் முடிந்தவுடனேயே எனது உடல் எடை குறைய ஆரம்பித்து விட்டது.

எனக்கு பனாரசி சேலைகள் என்றால் உயிர். எங்காவது போவதாக இருந்தால் அந்த சேலையைத்தான் நான் உடுத்திக் கொள்வேன். சேலைதான் பெண்களுக்கு கூடுதல் அழகு தெரியுமா என்று அழகாக சிரித்தபடி கூறுகிறார் வித்யா பாலன்.

சரி கல்யாணம் எப்போ என்று கேட்டால். அதுகுறித்து நான் சிந்திக்கவே இல்லையே. அவசரமும் இல்லை. அவசரம் காட்டவும் நான் விரும்பவில்லை. நடக்கும்போது எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத்தான் செய்வேன், போதுமா என்று கூறி விடை பெற்றார் வித்யா.