விளையாட்டு ரசிகர்களுக்கு ஏற்ற பந்தையக் களம்

விளையாட்டுச் செய்திகளை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு செய்திகள் நிகழ்ச்சியை தினமும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்புகிறது சத்தியம் டிவி.

தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் முதல் இந்திய அளவிலும் உலக அளவிலும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி ‘பந்தையக்களம்' என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் கண்டு ரசிக்கலாம்.

sports news panthayakkalam on sathiyam tv

விளையாட்டுத் துறை பற்றி ஆர்வமுள்ளவர்கள் பந்தையக் களத்தை காணலாம். சரியான புள்ளி விவரங்களுடன் தகவல்களை அள்ளித் தருகின்றனராம். சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணி முதல் 5.30 வரை "பந்தையக்களம்" என்ற விளையாட்டுச் செய்தித் தொகுப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது .

 

விஜய்யை ஹாலிவுட்டுக்கு அழைத்துச் செல்லும் பி. வாசு?

P Vasu Takes Vijay Hollywood

சென்னை: இயக்குனர் பி. வாசு ஹாலிவுட் படத்தை எடுக்கிறாராம். அதில் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் பி. வாசு தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களை எடுத்து வெற்றி கண்டவர். அவர் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றை எடுக்கவிருக்கிறாராம். படத்திற்கு கரி ஆஃப் லவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

ஹாலிவுட் போகும் வாசு தன்னுடன் இளைய தளபதி விஜய்யை அழைத்துச் செல்ல விரும்புகிறாராம். அதாவது தனது ஹாலிவுட் படத்தில் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். விஜய்க்கு ஜோடியாக சோனம் கபூரை நடிக்க வைக்க வாசு விரும்புகிறாராம்.

ஆனால் இது குறித்து வாசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 

சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகை மீரா நந்தன்.. சாஃப்ட்வேர் மாப்பிள்ளை ரெடி!

Meera Nandhan Announces Her Marriage

சென்னை: நடிகை மீரா நந்தன் விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகுகிறார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளவர் மீரா நந்தன். தமிழில் சூரியநகரம், காதலுக்கு மரணமில்லை, அய்யனார், வால்மிகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்போது நடித்தது போதும், திருமணம் செய்து செட்டிலாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.

சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் மீராநந்தனே இதனைத் தெரிவித்தார்.

திருமணம் எப்போது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. ஆனால், சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் ஒருவரைத்தான் திருமணம் செய்யப் போகிறாராம்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்க மீராநந்தன் திட்டமிட்டுள்ளாராம். தமிழில் இப்போது அவருக்கு எந்தப் படமும் இல்லை. மலையாளத்தில் இரண்டு படங்களிலும் கன்னடத்தில் இரண்டு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் மீராநந்தன் தற்போது நடித்து வருகிறார்.

 

பேருதான் பெத்த பேரு.. தண்ணி வரி கூட கட்ட கசக்குதாம் தியா மிர்சாவுக்கு!

Dia Mirza Gets Notice Defaulting 2 26 Lakh Water Dues   

ஹைதராபாத்: பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா, தனது ஹைதராபாத் வீட்டுக்கு தண்ணீர் வரியாக ரூ 2 லட்சத்து 26 ஆயிரம் பாக்கி வைத்துள்ளாராம்.

பாலிவுட்டில் டாப் நடிகையாக இருந்தாலம், தியா மிர்சா பிறந்தது ஆந்திராவில். மாடல் அழகி, மிஸ் ஏசியா பசிபிக் பட்டம் வென்றவர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகி என பல துறைகளில் கால்பதித்திருப்பவர் தியா மிர்சா.

முன்னாபாய் எம்பிபிஎஸ், ஓம் சாந்தி ஓம் உள்பட பல படங்களில் நடித்துள்ள தியா மிர்சா, முதலில் அறிமுகமானது என் சுவாசக் காற்றே என்ற தமிழ்ப் படத்தில்தான்.

இவருக்கு ஹைதராபாத் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பெரிய வீடு உள்ளது. இந்த வீட்டுற்கு கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து தண்ணீர் வரி செலுத்தவில்லை. 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது கணக்கில் ரூ. 33 ஆயிரத்து 480 வரி பாக்கி இருந்தது. தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் கட்டவேண்டும் என்று ஐதராபாத் மெட்ரோபாலிடன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ரெட் நோட்டீஸ் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குடிநீர் வாரியம் இந்தத் தொகையை செலுத்த சொல்லி பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆயினும் பணம் செலுத்தப்படாததால் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஒரு வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாதபோது இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டு செல்ல வேண்டும். தியாவின் சார்பில் அதுவும் செய்யப்படவில்லை என்று ஜுபிலி ஹில்ஸின் குடிநீர் வடிகால் வாரிய பொறுப்பாளரான பி. ஜே. ஸ்ரீநாராயணா தெரிவித்தார்.

ரெட் நோட்டீஸ் தகவல் கிடைத்த 15 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படுதல்வேண்டும். இல்லையெனில், குடிநீர் இணைப்பைத் துண்டிப்பதுடன், வருவாய் வசூல் சட்டத்தின் கீழ், குடிநீர் வாரியத்தின் தகவல் பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ள அவரது அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் மூலம் வசூலிக்கப்படும் என்று குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.

 

புது தில்லு முல்லு- கே பாலச்சந்தர் பாராட்டு

k balachander praises thillu mullu
சென்னை: 1981-ல் தான் இயக்கி ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தின் புதிய ரீமேக்கைப் பார்த்த கே பாலச்சந்தர், அந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்தப் படம் பார்த்த பின்னர் கேபி கூறுகையில், "இந்த தில்லு முல்லு படம் எனக்கே புதுசா இருக்கு. நிறைய மாற்றங்கள் பண்ணிருக்காங்க. மாடர்ன் ஆகவும் இருக்கு. அதே சமயம் அனைவரும் பார்க்கும் விதமாகவும் அமைத்திருக்கிறார்கள்.

இது மிக பெரிய அளவில் கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இசை அற்புதமாக வந்துள்ளது. சிவா மிக அருமையாக நடித்துள்ளார்," என்றார்.

இயக்குநர் பத்ரி பற்றி கூறும்போது, "கொஞ்சம் கூட பழைய தில்லு முல்லு படத்தின் சாயலே இல்லாமல் இந்த காலத்திற்கு ஏற்ப மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார் பத்ரி. தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைங்கர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தில்லுமுல்லு படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, ரசிகர்கள் மத்தியில்.

 

இரும்புக் குதிரை... ஆக்ஷனில் இறங்கினார் அதர்வா!

Atharva Turns Action Hero

பாலாவின் பரதேசியில் 'நியாயமாரே..' என சோகத்தைப் பிழிந்த அதர்வா அடுத்து முழுநீள ஆக்ஷனில் இறங்கிவிட்டார்.

இந்தப் படத்துக்கு இரும்புக்குதிரை என பெயரிடப்பட்டுள்ளது. பரதேசிக்குப் பிறகு ரொம்ப நாளாக பல கதைகளைக் கேட்டு, முக்கியமாக அவற்றுக்கு பாலாவின் ஒப்புதலுக்காக காத்திருந்தாராம் அதர்வா.

அப்படி பாலா ஓகே சொன்ன கதைகளில் ஒன்றுதான் இந்த இரும்புக் குதிரை.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. யுவராஜ் இயக்குகிறார்.

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்த வியட்நாம் - அமெரிக்க நடிகர் ஜானி ட்ரை நூகி நடிக்கிறார் (அதாங்க டாங் லீ).

ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க, ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே இதே நிறுவனம் தயாரிக்கும் ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வையிலும் ப்ரியா ஆனந்த்தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கிறார்கள் இளையராஜா - யுவன்!

Ilayarajaa Yuvan Compose Hollywood Movie

சென்னை: இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு கர்ரி இன் லவ் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் பி வாசு இயக்கவிருக்கிறார். நடிகர் விஜய் - சோனம் கபூரை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

கர்ரி இன் லவ் படத்தின் கதை திரைக்கதையை அமெரிக்க தமிழரான ராஜ் திருச்செல்வன் எழுதியுள்ளார்.

இளையராஜா ஏற்கெனவே ரஜினி நடித்த ஹாலிவுட் படமான ப்ளட் ஸ்டோனுக்கு இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் அவர் பாடல்கள் பாடி இருந்தாலும், அப்பாவும் மகனும் இணைந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல் முறை.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

 

அமராவதி படத்திற்கு அஜீத்தை பரிந்துரைத்த எஸ்.பி.பி.

Spb Recommends Ajith Selva

சென்னை: அஜீத் குமார் என்ற புதுமுக நடிகர் மீது நம்பிக்கை வைத்து அவரை அமராவதி படத்தில் எடுக்குமாறு இயக்குனர் செல்வாவுக்கு பரிந்துரை செய்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

அஜீத் குமார் என்ற நடிகரை திரையுலகிற்கு அடையாளம் காட்டிய படம் அமராவதி. ஒல்லியான உருவம், அரும்பு மீசை வைத்திருந்த அஜீத் என்ற புதுமுக நடிகர் ஹீரோவாக அறிமுகமான படம் அமராவதி. அவருக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார்.

இந்த படத்தை இயக்கிய செல்வா கூறுகையில்,

நான் அஜீத்தை முதன்முதலில் பார்த்ததுமே தமிழ் சினிமாவின் அழகிய ஹீரோவாக இவர் வருவார் என்று நினைத்தேன். அமராவதி படத்திற்கு அவரை எனக்கு பரிந்துரை செய்ததே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான். அஜீத்தை வைத்து கிரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் எடுக்கவிருந்தேன். ஆனாால் அது முடியாமல் போனது.

எனது படங்களில் புதுமுகங்கள் தேவைப்படுவதால் மீண்டும் அஜீத்துடன் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை என்றார்.

 

சிம்ரனின் அதிரடி அறிவிப்பு: குஷியில் இளம் ஹீரோக்கள்

Simran Ready Mother Characters

சென்னை: சிம்ரனின் அதிரடி அறிவிப்பால் இளம் ஹீரோக்கள் குஷியாக உள்ளார்களாம்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஹீரோயினாக இருந்தவர் சிம்ரன். நான் எல்லாம் சிம்ரன் இடுப்பை மட்டும் 3 மணிநேரம் பார்ப்பேன் என்று சத்யன் மாயாவி படத்தில் ஜோதிகாவிடம் கூறி கடுப்பேற்றுவார். இடுப்பழகி என்று பெயர் எடுத்தவர் சிம்ரன்.

கிளாமர் காட்டி நடித்த அவருக்கு நடிப்பும் நன்றாகவே வரும். பிற நாயகிகள் போன்று அவரும் திருமணமாகி, குழந்தை பெற்று செட்டிலாகிவிட்டார். பின்னர் எந்த சூர்யாவின் முதல் நாயகியாக நடித்தாரோ அதே சூர்யாவுக்கு அம்மாவாக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சிம்ரன் நடிக்கிறார்.

முதலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்த சிம்ரன் தற்போது இளம் ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க ரெடி என்று கூறியுள்ளாராம். இதனால் சிம்ரனுடன் நடித்துவிட மாட்டோமா என்று நினைத்த இளம் ஹீரோக்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.

 

இதயத்தைப் பிசையும் மணிவண்ணனின் கடைசி குரல்!

Director Manivannan S Last Speech

இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர்- நடிகர்-சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது.

கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்...

"இன்றைக்கு மணிவண்ணன் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற அடையாளம் தந்தது, எனது குருநாதர், என் ஆசான், நான் இப்போதும் போற்றும் இயக்குநர் பாரதிராஜாதான். அவர் இல்லாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எங்கேயோ திசைமாறிப் போயிருக்கும்.

நான் சொன்ன ‘நிழல்கள்' என்கிற கதையைக் கேட்டு சிலாகித்துப் போய் அதையே தன்னுடைய அடுத்த படத்துக்கான கதையாக முடிவு செய்து அந்தப்படத்துக்கு வசனமும் எழுதும் வாய்ப்பையும் எனக்கு தந்தார்கள். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அப்போது பாரதிராஜா அவர்களுடைய நண்பர்கள் "சொன்னா கேட்கமாட்ட எவனோ ஒருத்தன் கோயம்புத்தூர்ல இருந்து கண்ணாடி, ஜிப்பா போட்டுட்டு வந்தான். அவனை ஒரு பெரிய அறிவாளியா நெனச்சிக்கிட்டு நீ வந்து இந்தப்படத்தை எடுத்து, இதுவரைக்கும் பெயிலியரே கொடுக்காத... நீ இப்போ ஒரு பெயிலியர் கொடுத்து, உன் பேரை கெடுத்துட்ட பாத்தியா... சக்சஸ் குடுக்கலே"ன்னு சொன்னாங்க.

அப்போ அவரு சொன்னாரு.., நான் வந்து இதே மணிவண்ணனை வெச்சு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குறேனா? இல்லையான்னு பாருங்கன்னு சொல்லி, மணி உன்ன நம்பி அவனுங்ககிட்ட நான் வார்த்தை கொடுத்துட்டேன். நீதான் பொறுப்பு.. அந்தக்கதையை நீ எப்படி எழுதுவியோ எனக்கு தெரியாது, உனக்கு ஒரு பத்து நாள் டைம் தர்றேன்னு சொன்னாரு.

அதுக்கப்புறம் நான் எழுதின படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை'. அந்தப்படம் தமிழக அரசினுடைய 9 விருதுகளை பெற்றுத் தந்தது. அதில் சிறந்த கதையாசிரியர் மற்றும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான இரண்டு விருதுகளை நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் இருந்து பெற்றேன்.

இன்றைக்கும் அரசியல் ரீதியாக, சில சொந்த விறுப்பு,வெறுப்புகளில் நான் விலகி இருந்தாலும் கூட - அம்மா அப்பாக்கிட்ட சண்டை போடுறதில்லையா அந்த மாதிரி தான்... - அவரை வந்து நான் எப்போதும் என்னுடைய இரண்டாவது தாய், இரண்டாவது தந்தை என்று தான் நினைக்கிறேன்.

அவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு என்னை அறியாமல் எனக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அந்த நன்றி உணர்வு தான் இன்றைக்கு எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூட நம்புகிறேன்.

என் நேசத்துக்குரிய ஆசான் அப்பா வணக்கம்,

இன்னைக்கு உங்களுடைய ஆசீர்வாதத்தால, உங்களுடைய அரவணைப்பால நான் சிறந்த நிலையில இருக்கேன். எனக்கு நீங்க தான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க.., நேத்து மாதிரி இருக்கு, இன்னைக்கு என் மகளுக்கும் திருமணம் ஆயிடுச்சி, என் மகனுக்கும் ஆகப்போகுது, நாட்கள் வேகமாக நகர்ந்துடுச்சு.

எவ்ளோ பெரிய டைரக்டரா இருந்தாலும், எத்தனையோ பேர் நம்மளை சிலாகித்து பேசினாலும் அப்பா சத்தியமா சொல்றேன் நான் எப்பவும் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான்.( கண்ணீர் விட்டு அழுகிறார் மணிவண்ணன்...) நான் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான், என்மேல ஏதாவது கோபம் இருந்தா என்னை ஒரு அறை விட்டுருங்க; தயவுசெய்து பேசாம மட்டும் இருக்காதீங்க..,

ப்ளீஸ்... ப்ளீஸ்பா...."

- மெல்லக் கரைகிறது மணிவண்ணனின் குரல். நீரால் நிறைகின்றன கண்கள்!

ஆனால், இதற்கு பாரதிராஜா ஆனந்த விகடனில் மணிவண்ணன் குறித்து கடுமையான கருத்துக்களுடன் பதில் பேட்டி தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(இளையராஜா... மணிவண்ணன் பற்றிய தரக்குறைவான கமெண்ட்ஸ்!- முகம் சுழிக்க வைக்கும் பாரதிராஜா!)

(மணிவண்ணனைக் 'கொன்ற' குரு பாரதிராஜா!!)

 

சிம்ரனின் அதிரடி அறிவிப்பு: குஷியில் இளம் ஹீரோக்கள்

Simran Ready Mother Characters

சென்னை: சிம்ரனின் அதிரடி அறிவிப்பால் இளம் ஹீரோக்கள் குஷியாக உள்ளார்களாம்.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஹீரோயினாக இருந்தவர் சிம்ரன். நான் எல்லாம் சிம்ரன் இடுப்பை மட்டும் 3 மணிநேரம் பார்ப்பேன் என்று சத்யன் மாயாவி படத்தில் ஜோதிகாவிடம் கூறி கடுப்பேற்றுவார். இடுப்பழகி என்று பெயர் எடுத்தவர் சிம்ரன்.

கிளாமர் காட்டி நடித்த அவருக்கு நடிப்பும் நன்றாகவே வரும். பிற நாயகிகள் போன்று அவரும் திருமணமாகி, குழந்தை பெற்று செட்டிலாகிவிட்டார். பின்னர் எந்த சூர்யாவின் முதல் நாயகியாக நடித்தாரோ அதே சூர்யாவுக்கு அம்மாவாக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சிம்ரன் நடிக்கிறார்.

முதலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க யோசித்த சிம்ரன் தற்போது இளம் ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க ரெடி என்று கூறியுள்ளாராம். இதனால் சிம்ரனுடன் நடித்துவிட மாட்டோமா என்று நினைத்த இளம் ஹீரோக்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களாம்.