‘தெய்வமகன்’ பெயர் மாற்றம்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘தெய்வமகன்’ பெயர் மாற்றம்?

2/2/2011 12:22:55 PM

நடிகர் அஜித் நடித்த 'கிரீடம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விஜய், 'மதராசப்பட்டினம்' படத்தைத் தந்ததின் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர் அந்தஸ்த்தை பெற்றார். இருவடைய அடுத்த படம் ‘விக்ரம்’ நடிக்கும் ‘தெய்வமகன்’. தன் ஏழு வயது மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் கதையாக இது இருக்குமாம். மன நோயாளியாக நடிக்கும் விக்ரமுக்கு பக்க பலமாக இருக்கும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில அனுஷ்கா கலக்க இருக்கிறாராம். ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக விஜய் தெ‌ரிவித்தார். மேலும் படத்துக்கு தெய்வமகன் என்ற பெயர் ப‌ரிசீலனையில் இருப்பதாகவும், ஒருவேளை பெயர் மாறலாம் என்றும் தெ‌ரிவித்தார்.


Source: Dinakaran
 

உலகக் கோப்பை முன்பே படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

உலகக் கோப்பை முன்பே படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு

2/2/2011 12:04:25 PM

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருவதால் இம்மாதம் 15 படங்கள் வரை ரிலீஸ் ஆகின்றன. வரும் 19-ம் தேதி முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இதையடுத்து, தியேட்டருக்கு ரசிகர்கள் வருவது குறையும் என்பதால் அதற்கு முன்பே படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் 15 படங்கள் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது.

வரும் 4-ம் தேதி, 'தூங்கா நகரம்', 'யுத்தம் செய்', 'மின்சார காதலி' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன. 10-ம் தேதி 'தம்பிக்கோட்டை', 11-ம் தேதி, 'பயணம்', 'சிங்கம்புலி', 'நந்தி', 'காதலர் குடியிருப்பு', 'ஐவர்', 'வர்மம்', 18-ம் தேதி 'நடுநிசி நாய்கள்', 'மின்சாரம்', 'ஆரண்யகாண்டம்', 25-ம் தேதி 'கோ', 'ஆயிரம் விளக்கு' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன.
மேலும் சில படங்கள் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது.


Source: Dinakaran
 

எதி‌ரியை துவசம் செய்யும் விஷால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எதி‌ரியை துவசம் செய்யும் விஷால்

2/2/2011 12:34:35 PM

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் 'அவன் இவன்' படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவாக போஸ்ட் புரொட‌க்சன் வேலைகளை முடித்து ஏப்ரலில் அதாவது தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் பாலா. இதில், விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார். அதே சமயம் தனக்கு கோபம் வரும் போது, எதிரிகளை துவசம் செய்கிறார் விஷால். இதேபோல் விஷால் பெ‌ரிய மரத்தில் தலைகீழாக இறங்கி வரும் காட்சியும் படத்தில் வருகிறதாம். பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்யும் காட்சிகளில் இதுவும் ஒன்று என்கிறது படயூனிட்.


Source: Dinakaran
 

சூடுபிடிக்கும் ஷங்கரின் நண்பன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சூடுபிடிக்கும் ஷங்கரின் நண்பன்

2/2/2011 11:45:49 AM

ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் நடித்து இந்தியில் ஹிட்டான படம், '3 இடியட்ஸ்'. இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறது. ஆமிர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார். முதலில் இவர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்போது அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், அனுயா உட்பட பலர் நடிக்கின்றனர். 'எந்திரன்' சூப்பர் ஹிட்டுக்குப் பிறகு, ஷங்கர் இயக்குகிறார். படத்துக்கு 'நண்பன்' என்று தலைப்பு வைத்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். நா.முத்துக்குமார் பாடல்கள். படத்தின் ஷூட்டிங், ஊட்டியில் நடந்து வருகிறது. இம்மாதம் 25&ம் தேதி முதல் விஜய் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகிறது.


Source: Dinakaran
 

வதந்தியால் வாய்ப்பை இழந்த பானு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வதந்தியால் வாய்ப்பை இழந்த பானு

2/2/2011 12:06:39 PM

'தாமிரபரணி' படத்தில் அறிமுகமானவர் பானு. பிறகு சில படங்களில் நடித்தவர், சொந்த மாநிலமான கேரளாவுக்கே திரும்பி விட்டார். அவருக்கு திருமணமாகி விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது 'சட்டப்படிக் குற்றம்' படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: நல்ல வாய்ப்புகள் வந்தபோது என் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் வாய்ப்புகளை தவிர்த்தேன். எல்லாம் சரியாகி நடிக்க வந்தபோது வாய்ப்பில்லை. அதற்கான காரணத்தை விசாரித்தபோது நான் திருமணமாகி செட்டிலாகி விட்டதாக வதந்தி பரவி இருப்பது தெரிந்தது. தற்போது 'சட்டப்படிக் குற்றம்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன். இதுதவிர 'பொன்னர் சங்கர்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறேன்.


Source: Dinakaran
 

என் பாலிசி நோ ரீமிக்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என் பாலிசி நோ ரீமிக்ஸ்

2/2/2011 12:12:02 PM

'ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைக்க மாட்டேன்' என்றார் சுந்தர்.சி பாபு. இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது 'அகராதி', 'மார்க்கண்டேயன்', 'வேலூர் மாவட்டம்' படங்களுக்கு இசையமைக்கிறேன். இதுவரை என் இசையில் நான் பாடியது இல்லை. காரணம், என் குரல் வளத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் பாடி ரசிகர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாடல்கள் உருவாகும்போது, டிராக் மட்டும் பாடுவேன். டாக்டர் அறிவுரைப்படி உடற்பயிற்சி செய்கிறேன். இதை வைத்து, ஹீரோவாக நடிக்க தயாராகி வருவதாக சிலர் சொல்கின்றனர். அது உண்மை இல்லை. ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைக்க கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கிறேன். நான் இசையமைக்கும் பாடலே சிறப்பாக இருக்கும்போது, இன்னொருவர் இசையில் உருவான பாடலை நான் ஏன் ரீமிக்ஸ் செய்ய வேண்டும்?


Source: Dinakaran