பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் தயாரிப்பாளர் போடும் பணத்துக்கு மினிமம் கியாரண்டி முக்கியம் என்று விஜய் கூறினார். சென்னையில் நிருபர்களை சந்தித்த விஜய் கூறியதாவது: ஒரே மாதிரியான ஆக்ஷன் படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை. சில படங்கள் ஓவர் ஆக்ஷன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். என்னை வித்தியாசமான கதையில் பார்க்க வேண்டும் என்று நானே விரும்பினேன். புதிய முயற்சியில் நடித்தாலும் படத்தின் வருமானத்துக்கு மினிமம் கியாரண்டி வேண்டும் என்று நினைத்தேன். இந்தியில் வெற்றி பெற்ற கதை, பெரிய இயக்குனர், ஷங்கர் கூட்டணி அமைந்ததால் மினிமம் கியாரண்டிக்கு நம்பிக்கை வந்தது. 'நண்பன்' படத்தில் நடித்தேன். பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் பணம் போடும் தயாரிப்பாளருக்கு மனிமம் கியாரண்டி கட்டாயம் வேண்டும் என்பது என் கருத்து.
நல்ல கதைகள் அமைந்தால் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன். வித்தியாசமான கதைகளில் புதுமையான கேரக்டர்களில் நடிக்க, நல்ல இயக்குனர்கள் முக்கியம். இவை இரண்டும் அமைந்தால் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிப்பேன். 'நண்பன்' தெலுங்கில் வெளிவந்தாலும் பிறமொழி படங்களில் இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை. தமிழ்ப் படங்களில் நடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. 'நண்பன்' ஷங்கர் படம் என்பதை போல எனது அடுத்த படமான 'துப்பாக்கி' ஏ.ஆர்.முருகதாஸ் படமாக இருக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.