இயக்குனர் கோபம் : சிம்புக்கு ஜோடி நயன்தாராவா...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்புக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசவில்லை என்றார் இயக்குனர் வெற்றிமாறன். பிரபுதேவா, நயன்தாரா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டிருக்கிறார்.  வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'வட சென்னை'. இதில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.  மற்றொரு ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. அந்த வேடத்தில் நயன்தாராவை நடிக்க கேட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து வெற்றிமாறன் தரப்பில் கேட்டபோது, "அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. பரபரப்புக்காக யாரோ இப்படி வதந்தி கிளப்புகிறார்கள்" என்றார்.


 

கிசு கிசு - மனைவியால் நடிகர் அப்செட்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மில்க் இயக்கத்தோட படத்துல அதர்வ நடிகரு நடிக்கிறாரு. ஒரு சீனுக்கு பல டேக் வாங்குறாராம்... வாங்குறாராம்... முன்னணி ஹீரோக்களையே படாய் படுத்துற மில்க் இயக்கமும் விட மாட்டேங்கிறாராம். நடிகரோட முக எக்ஸ்பிரஷன், பாடி லாங்குவேஜ் சரியா வராததை விட மாட்டேங்கிறாராம்... மாட்டேங்கிறாராம்... இதனால இந்த பட ஷூட்டிங்கும் சீக்கிரமா முடியாதுப்பான்னு யூனிட்ல இப்போவே பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...

ரீமேக் கிங் இயக்கம் அடுத்த பட கதையை சொந்தமா எழுத ட்ரை பண்றாராம். ஆனா முடியலையாம்... முடியலையாம்... தலையை பிச்சிக்கிட்டு கதை யோசிக்கிறாராம். இதுக்கிடையே அவருக்கு ஹீரோ வாய்ப்புகளும் வருதாம்... வருதாம்... டைரக்ஷனா, நடிப்பான்னு முடிவு பண்ண முடியாம இயக்கம் தவிக்கிறாராம்... தவிக்கிறாராம்...

பிரகாச வில்லன் நடிகரோட போனியான மனைவிகுலம் படம் இயக்கப்போறாரு. சமீபத்துல நடிகர்கிட்ட மனைவிகுலம் அந்த பட கதையை சொன்னாராம்... சொன்னாராம்... முழு கதையும் கேட்டவரு, அப்செட் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... பிரகாசம் அப்செட் ஆனதுக்கு காரணம், படத்துல அவருக்கு கேரக்டரே இல்லேங்கிறதுதானாம்... இல்லேங்கிறதுதானாம்...


 

ஸ்டிரைக் நடக்கும்போது படப்பிடிப்பா? அஜீத் ஷூட்டிங்கில் டெக்னீஷியன்கள் முற்றுகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீத் பட ஷூட்டிங்கை நிறுத்த கோரி சினிமா தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பள பிரச்னை காரணமாக தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் பாதித்திருக்கிறது. ஆனால் ஒரு சில படங்களின் ஷூட்டிங் மட்டும் வெளியூர்களில் நடக்கிறது. அஜீத் நடிக்கும் 'பில்லா 2' படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு சென்ற சினிமா தொழிலாளர்கள் சிலர், 'தமிழ் படவுலகம் ஸ்டிரைக்கில் இருக்கிறது. உங்கள் பட ஷூட்டிங்கை எப்படி நடத்தலாம். உடனே ஷூட்டிங்கை நிறுத்துங்கள்' என்று கூறி முற்றுகையிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி கூறும்போது, "இப்படத்தில¢ விடுபட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம். சில பெப்சி உறுப்பினர்கள் வந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர். குறிப்பிட்ட  சினிமா ஸ்டுடியோவுடன் நாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அங்குள்ள உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் இருக்கிறது. சம்பள பிரச்னையில் இருக்கும் யாரையும் இந்த பணியில் ஈடுபடுத்தவில்லை என அவர்களிடம் விளக்கினோம். பின் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தினோம். எந்த சங்கத்துக்கும் விரோதமாக நாங்கள் போக விரும்பவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பே 'பில்லா 2' பட ஷூட்டிங் தொடங்கிவிட்டோம். அதை முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். திரையுலக பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக ஐதராபாத்தில் நாங்கள் ஷூட்டிங் நடத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது" என்றார்.


 

நாயகன் பட வில்லன் ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே. பிரசாத் மரணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'நாயகன்' படத்தில் வில்லனாக நடித்த ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே. பிரசாத் (81) சென்னையில் நேற்று காலமானார். 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் கமலுக்கு அப்பாவாக நடித்தவர், ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் (81). சிவகுமார் நடித்த 'அன்னக்கிளி', 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி', 'உறவு சொல்ல ஒருவன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சென்னையிலுள்ள வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி உஷா, மகன் மாலா, மகன் ராஜீவ் பிரசாத் உள்ளனர். இவர்களில் ராஜீவ் பிரசாத், கன்னடத்தில் சில படங்கள் இயக்கியுள்ளார்.   

'நாயகன்' படத்தில் ரெட்டி சகோதரர்களில் ஒருவராக நடித்த ஆர்.என்.கே.பிரசாத்,  ரஜினியுடன் 'தம்பிக்கு எந்த ஊரு?' சரத்குமாரு டன் 'வேடன்', விஜயகாந்துடன் 'பதவிப் பிரமாணம்' உட்பட தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பிரசாத்தின் தந்தை ஆர்.நாகேந்திர ராவ், பழம்பெரும் நடிகர். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் 'அபூர்வ சகோதரர்கள்', 'ஜாதகம்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில், பெசன்ட் நகர் மின் மயானத்தில் பிரசாத்தின் உடல் தகனம் செய்யப்படுகிறது.


 

போலீசில் கொடுத்த புகார் திடீர் வாபஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முதல் திருமணத்தை மறைத்து, அனன்யாவை 2வது திருமணம் செய்ய இருந்ததாக தொழிலதிபர் மீது கொடுக்கப்பட்ட புகார் திடீர் வாபஸ் ஆனது. இந்நிலையில் அவரையே மணப்பேன் என அனன்யா கூறியுள்ளார்.  'நாடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்' படங்களில் நடித்திருப்பவர் அனன்யா. இவருக்கும் திருச்சூர் தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதை மறைத்து அனன்யாவை ஏமாற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அனன்யாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். ஆனால் அனன்யா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்னை பிடிக்காதவர்கள் யாரோ இப்படி புகார் சொல்கிறார்கள். எங்கள் திருமணம் நடக்கும் என்று கூறி வருகிறார்.

இதை ஏற்காத பெற்றோர் அவரை வீட்டுச் சிறை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மகளை ஏமாற்றி ஆஞ்சநேயன் திருமணம் செய்ய முயன்றதாக பெரும்பாவூர் போலீசில் அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை நேற்று திடீரென்று அவர் வாபஸ் பெற¢றார். ஆனால் இது பற்றி அவர் கூறும்போது, 'நான் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை. அதெல்லாம் வெறும் வதந்திதான்' என்று கூறினார். இதுகுறித்து அனன்யா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

நான் நடிகை என்ற வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறேன் என்பது உண்மைதான். அதற்காக என்னை பொதுச் சொத்து என்று எண்ணிவிடக்கூடாது. என் சொந்த வாழ்க்கையைப்பற்றி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. எனக்கும், ஆஞ்சநேயனுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்க உள்ளது. நானும், எங்கள் குடும்பத்தினரும் சந்தோஷமாக இருக்கிறோம். இதைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. நான் வீட்டு சிறையில் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இருந்தால் கொச்சியில் டைரக்டர் வேணுகோபன் இயக்கும் 'தி ரிப்போர்ட்டர்' பட ஷூட்டிங்கில் எப்படி நடித்துக் கொண்டிருக்க முடியும்.


 

ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு டுவிட்டரில் நிர்வாண போட்டோ வெளியிட்ட பாலிவுட் நடிகை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக டுவிட்டர் பக்கத்தில் நிர்வாண போஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. பாலிவுட் கவர்ச்சி குயின் மல்லிகா ஷெராவத்துக்கு போட்டியாக களத்தில் குதித்திருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. ஐதராபாத்தை சேர்ந்த இவர், 2005ம் ஆண்டு 'டைம் பாஸ்' என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிப்பது பற்றி இவர் வெளிப்படையாக அளிக்கும் பேட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஷெர்லினுக்கு பிறந்தநாள். இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் படுகவர்ச்சி ஸ்டில்கள் வெளியிட்டிருக்கிறார். இதில் முழுநிர்வாண போஸும் அடக்கம். பலவித கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை வெளியிட்டிருக்கும் அவர், இதுபற்றி கூறும்போது, 'ரசிகர்கள் என்னை நடிகையாக, மாடல் அழகியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது. அவர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசாக இந்த புகைப்படத்தை (நிர்வாண போட்டோ) அவர்களது ரசனைக்காக வெளியிடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இது பாலிவுட் கவர்ச்சி நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


 

500 படங்களை தாண்டினார் நிழல்கள் ரவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நிழல்கள் ரவி 500 படங்களை தாண்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 1980ம் ஆண்டு 'நிழல்கள்' படத்தில் அறிமுகமானேன். சினிமாவில் 31 வருட அனுபவம் பெற்றிருக்கிறேன். ஹீரோவாக 60 படங்களில் நடித்திருக்கிறேன். பின் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதிகம் நடித்தது அப்பா வேடங்களில்தான். வில்லனாகவும் நடித்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். சமீபத்தில் வெளியான 'சூழ்நிலை' எனது 500-வது படம். தற்போது பத்து படங்கள் நடித்து வருகிறேன். படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது.


 

ஆர்யன் ராஜேஷ் திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வசந்தபாலன் இயக்கத்தில் 'ஆல்பம்' படத்தில் நடித்தவர், தெலுங்கு நடிகர் ஆர்யன் ராஜேஷ். இவர், மறைந்த தெலுங்கு இயக்குனர் இ.வி.வி. சத்யநாராயணாவின் மகன். இவரது தம்பி அல்லரி நரேஷ், தமிழில் 'குறும்பு', 'போராளி' படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். ஆர்யன் ராஜேசுக்கும், சுபாஷினிக்கும் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. தெலுங்கு மற்றும் தமிழ்ப் படவுலகினர் மணமக்களை வாழ்த்தினர்.


 

மூன்று வேடங்களில் விஷால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விமல், அஞ்சலி, ஓவியா நடிக்கும் 'மசாலா கபே' படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி. இதையடுத்து அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில், மூன்று வேடங்களில் விஷால் நடிக்கிறார். இதுகுறித்து சுந்தர்.சி கூறியதாவது: 'மசாலா கபே' இறுதிக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. பிறகு விஷால் படம் இயக்குகிறேன். கதை விவாதம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏப்ரலில் ஷூட்டிங். தற்போது எந்தப் படத்திலும் நான் நடிக்கவில்லை. எனக்குப் பொருத்தமான வேடத்தில் நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


 

படம் எடுக்காதவர்கள்தான் பிரச்னை செய்கிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் ஊதிய விவகாரத்தில் படம் எடுக்காத தயாரிப்பாளர்கள்தான் பிரச்னை செய்கிறார்கள் என்று அமீர் கூறினார். ஸ்ரீலட்சுமி நரசிம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சி.எச்.மயூரி சேகர் தயாரிக்கும் படம், 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே'. ஆரி, சுபா நடிக்கிறார்கள். நாராயண் நரேந்திரராவ் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் அமீர் பேசியதாவது: இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இங்கே சந்தோஷமாக பேசினார்.

சிறிய தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதற்கு இவரே உதாரணம். படம் தயாரிப்பவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். வேலை செய்பவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். படம் தயாரிப்பவர்கள் படம் தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். தொழிலாளர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். படம் தயாரிக்காதவர்கள்தான் பிரச்னை செய்கிறார்கள். ஒரு அறையில் உட்கார்ந்து ஒரு மணி நேரத்தில் தீர்க்கூடிய பிரச்னையை, படம் எடுக்காத யாரோதான் பெரிதாக்குகிறார்கள்.

இவ்வாறு அமீர் பேசினார். விழாவில், இயக்குனர்கள் சேரன், தாமிரா, பாலாஜி மோகன், நடிகர்கள் விமல், சாந்தனு, பிருத்விராஜ். அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மயூரி சேகர் வரவேற்றார். முடிவில், இயக்குனர் நாராயண் நாகேந்திரராவ் நன்றி கூறினார்.


 

லீலை நான்கு பேரின் கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஐ.டி கம்பெனியில் பணியாற்றுபவர்களின் காதல் கதையாக 'லீலை' படம் உருவாகியுள்ளது என்றார் அதன் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம், 'லீலை'. ஷிவ், மான்ஸி, சந்தானம், சுகாசினி உட்பட பலர் நடித்துள்ளனர். வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ஆண்ட்ரூ லூயிஸ் கூறியதாவது: இது புதுமையான காதல் படம். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு பேரை சுற்றிய கதைதான் இது. பொதுவாக காதலுக்கு ஜாதி, மதம், மாமன் மகன், உறவினர் என்றுதான் வில்லன் இருக்கும். இதில் அப்படியில்லை. அவர்களே பிரச்னை ஏற்படுத்துவார்கள். அவர்களே சாமாதானப்படுத்திக்கொள்வதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திரைக்கதை ஒரு த்ரில்லர் படத்துக்கானதை போல பரபரப்பாக இருக்கும். அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போல் இருக்கும். சந்தானம் தனி டிராக்காக இல்லாமல் கதையோடு இணைந்து படம் முழுவதும் வருகிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் காமெடியாக இருக்கும். வேல்ராஜின் ஒளிப்பதிவு புது அனுபவத்தைக் கொடுக்கும். படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு ஆண்ட்ரூ லூயிஸ் கூறினார்.


 

உன்னோடு ஒருநாள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
துரை கார்த்திகேயன் எழுதி, இயக்கும் படம், 'உன்னோடு ஒருநாள்'. ஜார்சி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஜிப்ரான், அர்ஜுன், நீலம் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஜய்ராஜ். இசை, சிவப்பிரகாசம். படம் பற்றி துரை கார்த்திகேயன் கூறுகையில், 'காதலுக்கும், நட்புக்கும் இடையே வாழும் சிலருடைய மனநிலை குறித்து படம் சொல்கிறது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் முக்கிய காட்சிகள் படமானது' என்றார்.


 

23ம் தேதி சினிமா காட்சிகள் ரத்து

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மத்திய அரசின் சேவை வரியை திரும்பப் பெறக்கோரி, வரும் 23ம் தேதி இந்தியா முழுவதும் சினிமா ஸ்டிரைக் நடக்கிறது. அன்று தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களிலும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதுபற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சேவை வரியை ரத்து செய்யக் கோரி இந்தியா முழுவதும் திரைத்துறையினர் அனைவரும் அதாவது தயாரிப்பு, திரையரங்கம் அனைத்தும் மூடுவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை நகரிலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றது" என்று கூறியுள்ளார்.


 

கோச்சடையானுக்காக சென்னை வந்தார் தீபிகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'கோச்சடையான்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோ. அவர் ஜோடியாக, தீபிகா படுகோன் நடிக்கிறார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை. இயக்கம் மேற்பார்வை கே.எஸ்.ரவிக்குமார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் மேக்கப் டெஸ்டுக்காக தீபிகா படுகோன் நேற்றுமுன்தினம் சென்னை வந்தார். அப்போது அவரது தோற்றம் ஸ்கேன் செய்யப்பட்டது.

"படத்துக்காக, ஸ்கின்டோன் உட்பட தீபிகாவின் தோற்றத்தை நவீன டெக்னிக்கை பயன்படுத்தி மாற்றம் செய்கின்றனர். தனது தோற்றம் மாற்றப்படுவதற்கு தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார். உடல் அசைவுகள் தெளிவாக வரவேண்டும் என்பதற்காக தீபிகாவை ஸ்கேன் செய்துள்ளனர். இந்திய சினிமாவில் முதன் முறையாக 'பெர்பாமன்ஸ் கேப்சரிங்' என்ற நவீன டெக்னாலஜி இந்தப் படத்துக்காக பயன்படுத்தப்படுகிறது" என்று பட யூனிட் தெரிவித்துள்ளது.

மேலும் இதில் சிவபெருமான் போல ஆக்ரோஷமாக, ரஜினி நடனமாடும் மூன்று நிமிட காட்சி இடம்பெற இருக்கிறது. சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைக்க இருக்கிறார். மார்ச் முதல் வாரத்தில், பாடல் காட்சிகள் ஷூட்டிங்கிற்காக படக்குழு லண்டன் செல்கிறது.