தமிழ் சினிமா என்னை கைவிடாது :ஜோதிர்மயி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் சினிமா என்னை கைவிடாது : ஜோதிர்மயி

1/19/2011 5:52:55 PM

மலையாளத்தில் 'சீனியர்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அவர் கூறியதாவது: தமிழ் சினிமா மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இப்போது தமிழில் நடிக்கவில்லை என்றாலும் எனது கவனமும், ஆர்வமும் தமிழ் மீதுதான் இருக்கிறது. கொஞ்சம் திறமை காட்டினால் கூட தமிழ் ரசிகர்கள் தூக்கி வைத்துக்கொண்டாடுவார்கள். அதனால்தான் ஒவ்வொரு மலையாள நடிகைகளுக்கும் தமிழ்ப் படங்கள் மீது ஆர்வம் இருக்கிறது. எல்லோரையும் ஆதரிக்கும் தமிழ் சினிமா என்னை கைவிடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது 'சீனியர்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். அதற்கு பிறகு முக்கியமான படத்தில் நடிக்கிறேன். படத்திற்கு பெயர் வைக்கவில்லை. கேரளாவில் உள்ள மலபார் பகுதியில் வாழும் 'டெம்ப்யம்' என்ற இன மக்கள் கோவில்களில் நடனம் ஆடுபவர்கள். இந்த இனத்துப் பெண்ணாக நடிக்கிறேன்.


Source: Dinakaran
 

கிசு கிசு -பாலிசியை கைவிடும் ஹீரோ

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

பாலிசியை கைவிடும் ஹீரோ

1/19/2011 4:59:36 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

கோலிவுட்ல நிரந்தர இடம் பிடிக்கணும்னு சரத்தான மலையாள இசைக்கு ஆசையாம்… ஆசையாம்… ஏற்கனவே ஜூன் மாசம் பேர்ல வந்த படத்துல அடிச்ச மியூசிக், தேறல. நீண்ட நாளுக்கு பிறகு  சித்தார்த்த நடிகர் நடிக்கிற ஒன் எய்ட்டி படத்துல மியூசிக் பண்றாரு. இதுல வாய்ப்பு கிடைக்க அந்த நடிகரோட நட்புதான் காரணமாம்… காரணமாம்…

ஒரு நேரத்துல ஒரு படம்ங்கிற பாலிசி வச்சிருந்தாரு பிரகாச ஹீரோ. அதை கைவிட முடிவு பண்ணியிருக¢கிறாராம்… பண்ணியிருக்கிறாராம்… ஒரே நேரத்துல மூணு படத்துல நடிக்கவும் பிளான் போட்டிருக்கிறாராம்… போட்டிருக்கிறாராம்…

முருக இயக்குனரு தயாரிக்கிற பட ஷூட்டிங் இன்னும் தொடங்கல. படத்துல நடிக்கிறவங்ககிட்ட, கதை, கேரக்டர் பற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது. நேரத்துக்கு ஷூட்டிங் வரணும் என்பது உள்பட நிறைய நிபந்தனைகளை போட்டிருக்காங்களாம்… போட்டிருக்காங்களாம்… எல்லாத்தையும் ஒப்பந்தமா எழுதியும் வாங்கியிருக்காங்களாம்… வாங்கியிருக்காங்களாம்…


Source: Dinakaran
 

வசனம் இல்லாத கிளைமாக்ஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வசனம் இல்லாத கிளைமாக்ஸ்

1/19/2011 6:02:32 PM

'நந்தி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அரைமணி நேரம் வசனம் இருக்காது என்றார் இயக்குனர் தமிழ்வாணன். அகில், சனுஷா நடிக்கும் படம் 'நந்தி'. இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது. படம் பற்றி இயக்குனர் தமிழ்வாணன் கூறியதாவது: ஒரு கிராமத்தை நந்தி மாதிரி சுமந்து நிற்கிறான் ஒருவன். அவனைத்தாண்டி அந்த ஊருக்குள் யாரும் எதுவும் செய்ய முடியாது. அந்த நேரத்தில் ஹீரோவுக்கு அங்கு செல்ல வேண்டிய கட்டாயம். செல்கிறான். அங்கு காதல் வயப்படுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இசை அமைப்பாளர் பரத்வாஜ், 25 நாட்கள் பின்னணி இசை அமைத்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் அரை மணி நேரம் வசனமே இருக்காது. வெறும் பின்னணி இசை மட்டும்தான். 'ரேனிகுண்டா' படத்தில் சனுஷா, வாய்பேச முடியாதவராக நடித்திருப்பார். அதற்கு நேர் மாறாக இந்த படத்தில் அவரது கேரக்டர் அமைந்துள்ளது. லொட லொட என்று பேசிக்கொண்டிருக்கும் கேரக்டர். அவரே டப்பிங் பேசியுள்ளார். அகிலுக்கு இது முக்கியமான படமாக இருக்கும். இவ்வாறு தமிழ்வாணன் கூறினார்.


Source: Dinakaran
 

காமெடி படம் நடிப்பது கஷ்டம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காமெடி படம் நடிப்பது கஷ்டம்!

1/19/2011 6:05:59 PM

ஸ்ரீபாலாஜி இயக்கும் படம், 'குள்ளநரிக் கூட்டம்'. விஷ்ணு, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்கிறார்கள். படம் பற்றி விஷ்ணு கூறியதாவது:
இது காமெடி படம். காமெடி கேரக்டரில் நடிக்கிறேன். 'பலே பாண்டியா' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தாலும் இதில் முழுநீள காமெடியனாக நடித்துள்ளேன். ரொமான்டிக் காமெடி. மதுரை கதை. 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் நடித்த பெரும்பாலானவர்கள் இதில் நடிக்கின்றனர். எல்லாருமே அதே டீம் என்பதால் ஷூட்டிங் ஜாலியாக இருக்கிறது. காமெடி கேரக்டரில் நடிப்பது கஷ்டம்தான். நாம் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும். இதில் திருப்தியாக செய்திருக்கிறேன். எழுபது சதவிகித படம் முடிந்துவிட்டது. இவ்வாறு விஷ்ணு கூறினார்.


Source: Dinakaran