நடிகைக்கே ஓவர் கவனிப்பு... கண்டு கொள்ளப்படாததால் புலம்பி வரும் "ரவுடியும், சகாக்களும்"!

சென்னை : பிரபல நடிகரின் தயாரிப்பில் உருவாகி வரும் தாதா படத்தில் முன்னணி நாயகி ஒருவர் நடித்து வருகிறார்.

நாயகனாக நடித்து வருபவரும் முன்னணி நடிகர் தான் என்றாலும், நடிகை அவருக்கும் சீனியர். எனவே, படப்பிடிப்பு தளத்தில் நடிகரை விட நடிகைக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதாம்.

நாயகிக்கு மட்டுமின்றி அவருடன் உடன் வருபவர்களுக்கும் ராஜ உபச்சாரம் நடக்கிறதாம். ஆனால், இதற்கு மாறாக நடிகரின் உடன் வருபவர்களைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம்.

‘காபி குடிச்சீங்களா சார்... டீ குடிச்சீங்களா சார்..?' என அவர்கள் பண்ணும் அலப்பறைகளைப் பார்த்து, நடிகரின் சகாக்கள் நடிகரிடம் முறையிட்டுள்ளனர். எளிமை மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் தரும் அந்த நடிகர், ‘இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்' என சகாக்களுக்கு ஆறுதல் கூறினாராம்.

மேலும், இந்த விவகாரம் தயாரிப்பு நடிகரின் காதுகளுக்கு சென்று, அவர் மனது புண்படாதபடி பார்த்துக் கொண்டாராம்.

என்னமோ போடா மாதவா....!

 

கூட்டத்தில் சிக்கிய நடிகர்: யாரோ பிடித்து இழுத்ததில் இரண்டாக கிழிந்த காது மடல்

கான்பூர்: கான்பூரில் பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் கடுக்கனை யாரோ பிடித்து இழுக்கையில் அவரது காது மடல் இரண்டாக பிய்ந்துவிட்டது.

ரசிகர் பிடித்து இழுத்ததில் இரண்டாக கிழிந்த நடிகரின் காது மடல்

பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூர் ஏக்தா கபூரின் க்யா கூல் ஹைன் ஹம் 3 என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். வழக்கம் போல் ஏக்தா கபூரின் இந்த படத்திலும் அவரது சகோதரர் துஷார் கபூர் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கான்பூர் நகரில் நடைபெற்றது. படப்பிடிப்பு நடப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர்.

இதை பார்த்த சக்தி கபூர் ரசிகர்களை சந்திக்க சென்றார். கூட்டத்தில் நின்று கொண்டிருந்த யாரோ சக்தி கபூரின் காதில் இருந்த கடுக்கனை பிடுங்கி எடுத்துவிட்டார். இதில் நடிகரின் காது மடல் இரண்டாக கிழிந்துவிட்டது. கடுக்கனும் திருடு போனது.

இதையடுத்து படக்குழுவினர் சக்தி கபூரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிகிச்சைக்குப் பிறகு சக்தி கபூர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கூட்டத்தில் இருந்த யாரோ என் காதை பிடித்து இழுத்ததில் காது மடல் இரண்டாக கிழிந்துவிட்டது. எனக்கு ஆதரவாக இருந்த படக்குழுவினருக்கு நன்றி என்றார்.

 

‘வானவில் வாழ்க்கை’ கெஸான்ட்ரா... தமிழில் பாடி நடிக்கும் புது நாயகி!

கல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையாமாகக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை'.

நடிப்பவர்களே பாடி பாடல்களுக்கு இசை வாசித்து வெளிவரும் இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் கெஸான்ட்ரா.

‘வானவில் வாழ்க்கை’ கெஸான்ட்ரா... தமிழில் பாடி நடிக்கும் புது நாயகி!

பாடகி நடிகையென தனது சினிமா பயணத்தை தொடங்கியிருக்கும் கெஸான்ட்ரா, தனது முதல் பட அனுபவத்தை இப்படிச் சொல்கிறார்... "வானவில் வாழ்க்கை படத்தில் என் கதாப்பாத்திரத்தின் பெயர் ‘வினிதா'. ஒரு பாடகி.

இதில் நான் பாடியுள்ள ‘சூப்பர் கேர்ள்' பாடல் அனைவரையும் கவரும். இப்பாடலுக்கு பிறகு எனது நண்பர்கள் அனைவரும் என்னை ‘சூப்பர் கேர்ள்' என்றே அழைக்கிறார்கள்.

இப்படத்தின் மூலம் தமிழ் நன்றாகக் கற்றுகொண்டேன். நடிப்பு, ஆட்டம் என நான் அனைத்தையும் கற்றுகொள்ளும் இடமாய் இருந்தது.

இந்த வாய்ப்பை அளித்த ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ஓசினா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும் எனது நன்றிகள்.

பாடுவதுதான் எனக்கு மிக பிடித்தமான விஷயம், நல்ல கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன்," எனக் மென் குரலில் கொஞ்சும் தமிழில் கூறி முடித்தார் கெஸான்ட்ரா.

 

குரு அல்ல சிஷ்யன் படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடும் விக்ரம்

சென்னை: சீயான் விக்ரம் முதன்முறையாக நயன்தாராவுடன் ஜோடி சேர உள்ளார்.

விக்ரம் தற்போது விஜய் மில்டனின் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா தனக்கு டப்பிங் பேச உள்ளார்.

குரு அல்ல சிஷ்யன் படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடும் விக்ரம்

மில்டனின் படத்தை முடித்த பிறகு விக்ரம் கௌதம் மேனன் படத்தில் நடிக்க உள்ளார். விக்ரம், கௌதம் மேனன் சேர்ந்து பணியாற்றுவது இது தான் முதல் முறை ஆகும். இந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் முருகதாஸின் சிஷ்யன் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளாராம். விக்ரம், நயன்தாரா ஜோடி சேர்வது இதுவே முதல் முறை ஆகும். ஐ படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல கோலிவுட்டும் அசந்து போயுள்ளது.

நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் அவர் விக்ரமுடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபல படத் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு மரணம்... நடிகர் வெங்கடேஷின் தந்தை!

ஹைதராபாத்: பிரபல தமிழ், தெலுங்குப் படத் தயாரிப்பாளரும் நடிகர் வெங்கடேஷின் தந்தையுமான டி ராமாநாயுடு இன்று ஹைதராபாதில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.

அவர் உடல் நலக் குறைவால் நீண்ட காலம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார்.

ஆந்திராவின் கரம்சேடுவில் பிறந்த டக்குபதி ராமாநாயுடு எனும் டி ராமாநாயுடு தெலுங்கு சினிமாவின் மிகவும் செல்வாக்கு மிக்க தயாரிப்பாளராகத் திகழ்ந்தார்.

பிரபல படத் தயாரிப்பாளர் டி ராமாநாயுடு மரணம்... நடிகர் வெங்கடேஷின் தந்தை!

திரைப்படத் துறைக்கு வரும் முன் மிகவும் சாதாரண கூலித் தொழிலாளியாக பல வேலைகள் பார்த்தவர் ராமாநாயுடு.

சினிமா மீதான ஈடுபாடு காரணமாக ஒரு திரைப்பட ஏஜென்சி மூலம் இந்தத் தொழிலுக்கு வந்தார். மறைந்த அக்கினேனி நாகேஸ்வரராவின் படப்பிடிப்புகளுக்கு வசதிகள் செய்து தரும் நிர்வாகியாக சில காலம் இருந்தார். அப்போதுதான் திரைப்பிரபலங்கள் பலரும் அறிமுகமாகினர்.

இதனைத் தொடர்ந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை அவர் ஆரம்பித்தார்.

1964-ல் ராமுடு பீமுடு எனும் படத்தை முதலில் தயாரித்தார். பாக்ஸ் ஆபீசில் மிகப் பெரிய வெற்றிைப் பெற்ற படம் இது. தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தார்.

தமிழில் வசந்த மாளிகை, ரஜினியின் தனிக்காட்டு ராஜா போன்ற பெரும் வெற்றிப் படங்களை தனது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி, ஆங்கிலம் என பல மொழிகளில் படம் தயாரித்த தென்னக தயாரிப்பாளர் இவர்தான்.

13 மொழிகளில் 150 படங்களுக்கு மேல் இவர் தயாரித்துள்ளார். இந்த பெரும் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இவரது திரையுலக பங்களிப்புக்காக இந்திய அரசு 2009-ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்தது. பின்னர் 2012-ம் ஆண்டு பத்மபூஷன் விருதினையும் அளித்து கவுரவப்படுத்தியது.

 

இந்த வருடத்தின் கேவலமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. டைரக்டர் பிரபுதேவா... இது மும்பை கூத்து!

மும்பை: பாலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு மட்டும் விருது வழங்காமல் மோசமான நடிப்பினை வெளிப்படுத்தியவர்களையும் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி வருகின்றது ஒரு அமைப்பு.

அந்த விருதின் பெயர் "கோல்டன் கேலா". பர்மா என்பவர் இதை துவங்கினார். கடந்த சில வருடங்களாகவே இந்த விருதுகளை அவர் வழங்கி வருகிறார். நடிகர், நடிகைகள் ஜாலிக்காக இந்த விருதை நேரில் சென்று வாங்குகிறார்கள்.

இந்த வருடத்தின் கேவலமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. டைரக்டர் பிரபுதேவா... இது மும்பை கூத்து!

கடந்த வருடத்தில் மோசமாக நடித்த நடிகர், நடிகைகளுக்காக விருது வழங்கும் விழா டெல்லியில் அடுத்த மாதம் நடக்கிறது.

மிகவும் மோசமாக நடித்த நடிகை விருது சோனாக்சி சின்ஹாவுக்கு வழங்கப்படுகிறது.

தமிழில் ரஜினியுடன் "லிங்கா" படத்தில் நடிக்கவே தெரியாமல் மோசமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகவும், இந்தியில் ஆக்‌ஷன் ஜாக்சன், ஹாலிடே படங்களில் மோசமாக நடித்ததற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

என்டர்டெய்ன்மென்ட் இந்தி படத்தில் மோசமாக நடித்ததற்காக நடிகை தமன்னாவுக்கு மோசமான நடிகை விருது வழங்கப்படுகிறது. இந்தியில் ஆக்‌ஷன் ஜாக்சன் படத்தை எடுத்த பிரபுதேவாவுக்கு கடந்த வருடத்தின் மோசமான டைரக்டர் விருது வழங்கப்படுகிறது.

ராணிமுகர்ஜி, கத்ரினா கைப் போன்றோரும் சல்மான்கான், சயீப் அலிகான் போன்றோரும் மோசமான நடிகை, நடிகர் விருதுகளை பெறுகிறார்கள். மேலும், ஜாலிக்காக வழங்கப்படும் இந்த விருதுகளை தயக்கம் இல்லாமல் நேரில் போய் வாங்கவும் இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

சினிமாக்காரன் சாலை- 8: தொடர்ந்து குளித்துக்கொண்டே இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி!

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

‘நம்ம ஹன்சிகா மாதிரி இருக்கு?'

‘டேய் ‘ராஜபார்வை' நல்லாப்பாருடா. அது ஹன்சிகா மோத்வானியே தாண்டா"

‘டேய் குளிக்குதுடா'

‘ஆமாடா குளிக்குது... அதுக்கென்ன?'

‘நல்லா செக் பண்ணிட்டியா. எல்லாம் மேட்ச் ஆவுதா?'

‘ஐ..தோடா இவரு நேர்ல கொண்டு வந்து நிறுத்துனாதான் நம்புவார் போல?'

‘அப்ப ஹன்சிகாவேதான்ற?'

‘அடி செருப்பால...ஓடிப்போ அப்பால. இனிமே ஒனக்கு எந்த லிங்க்கும் அனுப்பல'.

-மேற்படி உரையாடல் குறித்து ஒன்றுமே சொல்ல வேண்டியதில்லை. வாட்ஸ் அப்பில் இருக்கும் எல்லோரும் ‘அதை' அறிவார்கள்.

சினிமாக்காரன் சாலை- 8: தொடர்ந்து குளித்துக்கொண்டே இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி!

'அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் 'WHATSAAP' ல் போட்டுடைக்கும்...

எம்ஜியாரின் ‘அடிமைப்பெண்' படத்துக்காக 1969-ல் கவிஞர் அமரர் வாலி எழுதிய பாடல். அதில் அடியேனின் இணைப்பு ஒரே ஒரு வெளங்காத வார்த்தைதான்.

46 வருடங்களுக்கு முன் இப்படி எழுதிய வாலி எப்படிப்பட்ட தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும். வயசான காலத்திலும் கூட வாலி கொஞ்சம் கிளுகிளுப்பான ஆளுதான் என்றாலும், த்ரிஷாக்களும் ஹன்சிகா மோத்வானிகளும் பாத்ரூமில் குளிப்பதை சில கயவர்கள் படம் பிடித்து இணையங்களில் பரப்புவார்கள் என்று அன்றே அவருக்கு எப்படித் தெரிந்தது?'

சினிமாக்காரன் சாலை- 8: தொடர்ந்து குளித்துக்கொண்டே இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி!

சரி காலம் எப்போதும் குழப்பத்தின் கோலம் என்று முடிவெடுத்து விட்டு வந்த காரியத்தில் இறங்கி விடலாம்.

செய்திப் பரிமாற்றத்தின் இன்னொரு புதிய வடிவமான வாட்ஆப்பில் இப்படி நடிகைகளின் அந்தரங்க படங்கள் தொடர்ந்து பரப்பப்படும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் அந்த நிறுவனத்தினர் இதற்கு 'ஹாட்ஸ் அப்' என்றே பெயர் வைத்திருப்பார்கள்.

'தொட்டு விடாதே ஷாக் அடிக்கும்' என்று சொல்லுகிற அளவுக்கு, சமீப தினங்களில் அவ்வளவு சூடாக இருக்கிறது இந்த வாட்ஸ் அப். ஒரு குழு அமைத்துக்கொண்டு எங்கிருந்தாவது நடிகைகளின் அந்தரங்க வீடியோக்களைப் பிடித்து 'செத்துச் செத்து விளையாடுவமா சேகரு' மாதிரி ஷேர் பண்ணி ஷேர் பண்ணி விளையாடுகிறார்கள். நவீன சரோஜாதேவி புத்தகங்கள் இந்த வாட்ஸ் ஆப் குரூப்கள்!

சினிமாக்காரன் சாலை- 8: தொடர்ந்து குளித்துக்கொண்டே இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி!

சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த த்ரிஷாவின் நிர்வாண குளியல் காட்சிகளுக்கு அப்புறம், சமீபமாக மிக அதிக அளவில் நடிகைகளின் அந்தரங்கப் படங்கள் வெளியாகின்றன. ‘தென்மேற்குப் பருவக்காற்று' நாயகி வசுந்தரா தாஸின் செல்ஃபிகள் சில தினங்களுக்கு வடகிழக்கு, தென்கிழக்கு என்று எல்லா திசைகளிலும் நடமாடின. அடுத்து திவ்யஸ்ரீ, லட்சுமி மேனன்களின் படங்கள், வீடியோக்கள் என்று சொல்லப்பட்ட சில படங்கள் வந்தன. லட்சுமி மேனன் வீடியோவுக்கு பின்னணியில் ஒரு கதை கூட பரவியது!

லேட்டஸ்டாக இரு தினங்களுக்கு முன்பு ஒரு ஹோட்டல் பாத்ரூமில் குளிக்க ஆரம்பித்த ஹன்சிகா மோத்வானி, இன்னும் குளியலை முடிக்காமல் தொடர்ந்து வாட்ஸ் ஆப்களில் லட்சக்கணக்கான முறை குளித்துக் கொண்டே இருக்கிறார்.

இந்த வகையான படங்கள் வெளியானதும், அது அந்த நடிகையேதானா என்பது மாதிரி ஒரு விவாதம் நடக்கும். 'செல்ஃப் பப்ளிசிடி பண்ணிக்கிறாங்க. அப்பத்தானே அவங்க மார்க்கட் சூடிபிடிக்கும்?' என்ற கமெண்ட்கள் பறக்கும். குறிப்பிட்ட நடிகை சில தினங்களுக்கு தலைமறைவாகிவிட்டு ‘அவள் நானில்லை' என்பது போல் வீக்காக ஒரு விளக்கம் கொடுப்பார். யாரும் ஏனோ சைபர் கிரைம்களில் புகார் கொடுப்பதில்லை.

அப்புறம் அடுத்த நடிகை, படுத்த காட்சி, அடுத்த குளியல், எடுத்த செல்ஃபி, அடுத்த வாட்ஸ் ஆப். மறுப்பு விளக்கம்.

சினிமாக்காரன் சாலை- 8: தொடர்ந்து குளித்துக்கொண்டே இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி!

சில தினங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் குறிப்பிட்ட நடிகையின் செல்ஃபி ஆபாசப் படங்களை வெளியிட்டு பரபரப்பான விற்பனையைப் பார்த்தார்கள். மறுநாள் இணையங்களில் அந்தப் பத்திரிகை முதலாளிக்கு கடுமையான கண்டனங்கள். தன் சொந்த மகளின் செல்ஃபி படங்கள் கிடைத்தால் இப்படி அட்டையில் வெளியிடுவாரா? என்ற தலைப்பில் சில கட்டுரைகள் வேறு.

நடிகைளுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்க வேண்டியதில்லை என்பது என் அபிப்ராயம். நடிகைகள் குறித்து ஒரு சின்ன கிசுகிசு கிடைத்தாலே ஈரைப் பேணாக்கி பேனைப் பெருமாளாக்கி பழகிக் கொண்டவை மீடியாக்கள். அப்படிப்பட்டவர்களிடம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

நடிகைகளாகிய நீங்களும் மனிதர்கள்தான். யாரை வேண்டுமானாலும் காதலியுங்கள். கலவி கொள்ளுங்கள். ஆனால் அதை என்ன '......த்துக்கு' செல்போனில் படம் பிடிக்கிறீர்கள்?

வசுந்தரா தாஸ் சங்கதிக்கு வருவோம். அவருடன் அந்தரங்கமாக செல்ஃபியில் இருந்தவர் அவருடனேயே சுற்றிக் கொண்டிருந்த ஒரு திரைத்துறை நபர்தான். வசுந்தரா அவரைக் கழட்டி விட்டவுடன்தான் அவர் இவரைப் பழிவாங்கும் நோக்கில் அந்த அந்தரங்களை வெளியிட்டார் என்கிறார்கள். சினிமாவில் உறவுகளின் சக்தி எவ்வளவு வீக்கானது என்பதை அறியாத மக்கா வசுந்தரா? அப்படியெனில் அந்த தண்டனைக்கு தகுதியானவர்தானே அவர்?

இந்த ஹன்சிகாவையே எடுத்துக்கொள்ளுங்கள். ‘ஏம்மா குளிக்கிறதை கொஞ்சம் நிறுத்துறயா?' இவருக்கு, தான் எந்த ஹோட்டலில் குளித்தோம் என்பது தெரியாதா? பாத்ரூம் கதவு துவாரத்தில் ஒளிப்பதிவு செய்த நபரைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன? சைபர் கிரைமுக்கு கிளம்பிப்போய் புகார் கொடுத்து, அட்லீஸ்ட் அடுத்து வேறு எவருக்கும் இது நிகழாத வண்ணம் காக்க முடியுமே? இதை எந்த நடிகையுமே செய்வதில்லியே ஏன்? ஏன்?? ஏன்???

ஏனோ இந்தப் பெரும் கேள்வி பதிலளிக்கப்படாமல் நீண்டகாலமாய் நிர்வாணமாய் நின்றுகொண்டே இருக்கிறது.

பின் குறிப்பு: கட்டுரையாளரிடம் ரூ 500 மதிப்புள்ள சோப்பு டப்பா சைஸிலுள்ள அரதப் பழசான செல்போன்தான் இருக்கிறது. அதில் வாட்ஸ் ஆப் வசதிகள் இல்லை. எனவே த்ரிஷா, ஹன்சிகா குளிக்கும் லிங்க் அனுப்பக் கோரி மெயில்கள் அனுப்ப வேண்டாம்.

THINK twice before asking LINK!

(தொடர்வேன்....)

 

ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடுகிறார்களா "லிங்கா விநியோகஸ்தர்கள்"?

லிங்கா விவகாரத்தை பக்கா அரசியலாக்கிவிட்டார்கள், அதன் விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்.

லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்பதாகக் கூறிக் கொண்டு, படம் வெளியான முதல் வாரமே படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். அடுத்த சில தினங்களில் சீமான், வேல் முருகன் போன்ற அரசியல்வாதிகளை அழைத்து உண்ணாவிரதமிருந்தார்கள்.

அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் செவழித்து பிரஸ் மீட்டுகள் நடத்தி வரும் இவர்கள் இப்போது, ரஜினி குடியிருக்கும் ஏரியாவிலிருந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோர, சில 'லெட்டர் பேட்' கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட ஆரம்பித்துள்ளன.

ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடுகிறார்களா

இந்த நிலையில்தான் லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற பொதுத் தலைப்பை பயன்படுத்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு போஸ்டர் அடித்துள்ளனர் (பெரும்பாலான லிங்கா விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் யாரும் இவர்களின் போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

அதில்தான் இந்த குழுவின் நோக்கம், பின்னணி எல்லாமே அம்பலமாகியுள்ளது. இது லிங்கா நஷ்டஈடு கேட்கும் போராட்டம் அல்ல. மாறாக ரஜினிக்கு எதிரானது என்று பலரும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த போஸ்டரில் 'சினிமாவுக்குள் அரசியல் நுழையக்கூடாது என்பார்களாம்.. ஆனால் இவர்கள் மட்டும் குறிப்பிட்ட கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பார்களாம்... இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது, என்று சொன்னவருக்கு ஸ்ரீரங்கத்து அரங்கநாதரே உங்களை அங்கீகரித்துவிட்டார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை...' என்று போகிறது அந்த போஸ்டர் வாசகங்கள்.

ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடுகிறார்களா

அதாவது ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டிவிடுகிறார்களாம்!

ஆக இவையெல்லாம் தெள்ளத் தெளிவாக ரஜினியின் செல்வாக்குக்கு எதிரான செயலாகவே பார்க்கப்படுகிறது.

'இவர்கள் வர்த்தகம் செய்தது வேந்தர் மூவீஸ், ஈராஸ் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷுடன். ஆனால் அங்கெல்லாம் போகவில்லை. அவர்களின் முகவரி தெரியவில்லையா இவர்களுக்கு? ரஜினியை அவமதிப்பதுதான் இவர்கள் நோக்கம். அவரது சினிமா மற்றும் அரசியல் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக முடக்க சிலர் செய்யும் சதியின் முகங்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் முன் இப்போது அம்பலப்பட்டு விட்டார்கள்' என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

யார் இந்த சிங்கார வேலன்?

விதம் விதமாக, ரகம் ரகமாக போராட்ட நோட்டீஸ் போட்டு வரும் இந்த குழுவின் தலைவராக செயல்படும் சிங்காரவேலனின் பின்னணி கதைகள் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

இன்று ரஜினிக்கு எதிராக, மக்களின் முதல்வருக்கு நோட்டீஸ் அடித்த இதே சிங்காரவேலன், சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மக்கள் முதல்வரை கடுமையாகச் சாடி அளித்த பழைய பேட்டிகளை எடுத்து வெளியிட்டுள்ளன மீடியாக்கள்.

குறிப்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அளித்த பேட்டியில், "தளபதியே அடுத்த முதல்வர். உலகமெங்கும் குடும்ப ஆதிக்கம் ஓங்கியிருக்கும் போது திமுகவை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்? அம்மையார் ஆட்சியில் அவருக்கு எவ்வித ரத்த பந்தங்களும் இல்லாதவர்கள் மண்டலவாரியாக ஆளுமை செலுத்தினார்களே, அதற்கு என்ன பெயர் என்று அகராதியில் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று 'மக்கள் முதல்வர்' ஜெயலலிதா குறித்து ஏக வசனத்தில் பேசியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, இந்த சிங்கார வேலன் முன்பு திமுக சார்பில் போட்டியிட முயன்று, அங்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றவர். அந்த தேர்தலில் தன்னிடம் மொத்தமே ரூ 3 லட்சம்தான் ரொக்க, சொத்து மதிப்பு என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் லிங்காவை ரூ 8 கோடிக்கு வாங்கியதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். இதுபற்றியும் பல கேள்விகளை மீடியா எழுப்பி வருகிறது. வருமான வரித்துறைக்கும் புகார்கள் அனுப்பி வருகின்றனர் சிங்காரவேலனுக்கு எதிர்த்தரப்பினர்.

சிங்கார வேலன் மீதுள்ள வழக்குகள், அவர் மீது சென்னை மேயர் சைதை துரைசாமி அளித்த புகார்கள், எஸ் ஆர் எம் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருடனான மோதல் மற்றும் சமரச கதைகள் போன்றவையும் வெளியாகியுள்ளன.

இப்படி லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் தனக்கு எதிராக நடத்தப்படும் விஷயங்களை ரஜினிக்கு தெரிந்திருக்கிறதா... அவர் நிலைப்பாடு என்ன?

அதுகுறித்து அடுத்த செய்தியில் பார்க்கலாம்!

 

இவள் வேற மாதிரி... இதழ்களை விரிக்கத் தயாராகும் பூ!

சென்னை: வாரிசு நடிகரும் அறிமுகமான படத்தில் அழகுப் பதுமையாக வந்து போனார் இந்த ரபி நடிகை. அதனைத் தொடர்ந்து சூப்பரின் மருமகன் படத்திலும் அதே போன்ற கதாபாத்திரமே.

முதல் இரண்டு படங்களிலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்ததால், நடிகைக்கு சினிமாவில் தாக்குப் பிடிப்பது சிரமம் என அவரது நலம் விரும்பிகள் அறிவுரை கூறுகிறார்களாம்.

அதனால் தற்போது நடித்து வரும் வெற்றிப் படத்தில் தனது முழு ‘திறமை'யையும் காட்டி விடும் முடிவில் இருக்கிறாராம் நடிகை. மேலும், புதிய படங்களுக்காக அணுகும் தயாரிப்பாளர்களிடமும் நான் "ரெடி".. நீங்களும் ரெடியா இருந்துக்கோங்க என்று கூறி வருகிறாராம்.

கூடுதல் கவர்ச்சியாக நடிக்க வேண்டுமானால், கூடுதல் சம்பளம் கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், மிகப் பெரிய சலுகையாக, அதே சம்பளத்தில் கவர்ச்சி மழை பொழிகிறேன் எனக் கூறினால், தயாரிப்பாளர்களுக்கு கசக்கவா செய்யும். ஸ்வீட் எடு கொண்டாடலாம் என்று அவர்களும் குஷியாகி விட்டார்களாம்.

நடிகையின் இந்த முடிவிற்குப் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு சந்தோஷம் தான்...!

 

பலான பட செட்டில் இருந்து அழகிய ஜட்டிகளை திருடிய நடிகை

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே படத்தில் நடிக்கையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கவர்ச்சிகரமான ஜட்டிகளை திருடியதாக நாயகி டக்கோட்டா ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இ.எல்.ஜேம்ஸ் எழுதிய ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே என்கிற பாலுணர்வை தூண்டும் நாவல் அமோகமாக விற்பனையானது. இதையடுத்து அந்த நாவலைத் தழுவி அதே பெயரில் ஹாலிவுட்காரர்கள் ஒரு படத்தை எடுத்து அதை காதலர் தினத்தையொட்டி ரிலீஸ் செய்தனர். அது பலான படம் என்பதால் அதை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலான பட செட்டில் இருந்து அழகிய ஜட்டிகளை திருடிய நடிகை

இந்நிலையில் படத்தின் நாயகி டக்கோட்டா ஜான்சன் கூறுகையில்,

படப்பிடிப்பு தளத்தில் இருந்து செக்சியான ஜட்டிகளை திருடினேன். அவை அணிய மிகவும் வசதியாக இருந்தது. அதனால் ஆசைப்பட்டு எடுத்துக் கொண்டேன். பிரபலம் ஆன பிறகு பிரச்சனையாக உள்ளது.

நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை பின்தொடர்வது வித்தியாசமாக உள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது எனக்கு துணையாக இருந்த இயக்குனர் சாம் டெய்லர் ஜான்சனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.