கிறித்துவர்களை புண்படுத்தினேனா - சர்ச்சையில் சிக்கிய கவிஞர் வைரமுத்து விளக்கம்

Christian Movements Condemns Vairamuthu

சென்னை: நீர்ப்பறவை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் பாடல் களேபரத்தை உருவாக்கியிருக்கிறது.

இந்தப் படத்தில், 'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்'' என்று வைரமுத்து எழுதியிருப்பதுதான் சர்ச்சைக்குரியதாகியிருக்கிறது. இதனால் கிறித்துவ அமைப்பினர் சிலர் வைரமுத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் வைரமுத்து வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வைரமுத்து, யாருடைய மனதையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அந்த பாடல் எழுதப்பட்டது. அந்த வரிகள் கதாபாத்திரத்தின் குரல். கிறித்துவ மதத்தை மேம்படுத்தும் விதமாய் அந்த வார்த்தைகளை பாடலில் பயன்படுத்தியிருக்கிறேனேயொழிய கொச்சைப்படுத்தும் விதத்தில் எழுதவில்லை என்று கூறியிருக்கிறார்.

கவிஞருக்கு எழுதுறது வார்த்தையா கிடைக்கலை?

 

மாற்றான் - சினிமா விமர்சனம்

-எஸ். ஷங்கர்

நடிப்பு: சூர்யா, காஜல் அகர்வால், சச்சின் கடேகர், தாரா

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: சௌந்தர்

பிஆர்ஓ: ஜான்சன்

தயாரிப்பு: ஏஜிஎஸ் இன்டர்நேஷனல்

இயக்கம்: கேவி ஆனந்த்

ஆபரேஷன் சக்ஸஸ்... பேஷன்ட் அவுட் என்பார்களே... அந்த வழக்குச் சொல்லுக்கு சரியான உதாரணம் மாற்றான்.

maatran movie review   
Close
 
ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற கஷ்டமான சமாச்சாரத்தை அநாயாசமாக செய்து காட்டிய சூர்யாவுக்கு, முழுப் பலனும் கிடைக்காமல் செய்வது படத்தின் சொதப்பலான கதையும், அதைவிட படு சொதப்பலான திரைக்கதையும்!

இந்தப் படத்தின் கதையை எங்கு தொடங்கி, எங்கு முடிப்படி என்பதில் ஏக சிக்கல் இருப்பதால், அந்த கஷ்டத்தை நீங்கள் தியேட்டருக்குப் போய் அனுபவித்துக் கொள்ளுங்கள். இருந்தாலும் விமர்சன சடங்குக்காக ஒரு அவுட்லைன்!

ஒட்டிப் பிறந்த பணக்கார பையன்கள் சூர்யா... அவர்களின் விஞ்ஞானத் தந்தை சச்சின் கடேகர். மகா கொடிய விஞ்ஞானி. தன் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காத கோபத்தில், ஏதோ அரைகுறை பால்பவுடர் கண்டுபிடிக்கிறாராம். அது ஏக வெற்றி பெறுகிறது. ஆனால் அதில் தலைமுறைகளை அழிக்கும் கொடிய ஸ்டீராய்டு கலக்கப்படுவது மகன்களுக்குத் தெரிய, அப்பாவுக்கு எதிராக, இரட்டையரில் ஒருவர் களமிறங்கி உயிரைவிட, அடுத்து இரட்டையர்கள் பிரிக்கப்டுகிறார்கள். அடுத்து ஒற்றை சூர்யா அவரது அப்பாவை எதிர்த்து எப்படி அந்த பால்பவுடர் உற்பத்தியை தடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ் (ஒரளவு அவுட்லைன் வந்துடுச்சா!).

இல்லாத கதைக்கு ஏன் இத்தனை பில்டப் கொடுக்கிறார்கள், கேவி ஆனந்த் - சுபா போன்றவர்கள்? என்ற கேள்விதான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மனதுக்குள் வந்துபோனது.

முதல் பாதியில் அந்தப் பாடலுடன், ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பார்ப்பதில் ஆர்வம் குறைந்து, கொஞ்சம் சங்கடம் வர ஆரம்பிக்கிறது. போகப்போக அது ஒருவித ஒவ்வாமை மாதிரியான உணர்வை தோற்றுவித்துவிடுகிறது.

அதிலும் அந்த தீம் பார்க் சண்டை... கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். முடிந்தபிறகு, யாராவது ஒரு சாரிடான் வாங்கிக் கொடுத்து உதவுங்களேன் என்று கத்த வைத்துவிடுகிறது.

ஹீரோயினை அழகாகக் காட்டிய வரை ஓகே. ஆனால் அம்மணிக்கு ஒரு துபாஷி வேலைதான் படத்தில். தமிழ் - ஆங்கிலம் - ரஷ்யன் என பேசிக் கொண்டே இருக்கிறார். சூர்யாவுடனான அவரது காதலும் ரொம்பவே மெக்கானிக்கலாகத் தெரிகிறது.

கதையில் லாஜிக் ஓட்டைகள் ஒன்றிரண்டல்ல... அத்தனை கொடிய பால்பவுடரை தயாரிப்பதன் நோக்கம் என்ன... தீவணத்தின் மூலம் கலந்து கொடுக்கப்படும் ஸ்டீராய்ட் அதிக பாலை பசுக்களிடமிருந்து கறக்க வேண்டுமானால் உதவலாம். ஆனால் மார்க்கெட்டில் பால்பவுடர் பிரபலமடைய... அத்தனைபேர் வாங்கி நுகர வேறு ஏதாவது காரணம் வேண்டும் அல்லவா?

Maatran Movie Review

யுக்ரைனை நேரடியாக குறிப்பிட முடியாமல், உக்வேனியா உக்வேனியா என படம் முழுக்க படுத்துகிறார்கள். படம் முடிந்து வெளியில் வந்ததும், உக்வேனியா எங்கிருக்கிறது என ஜனங்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டே போகிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவுதான். ஒருவேளை ஏகப்ட்ட மைனஸ்களுக்கு மத்தியில் இந்த ப்ளஸ் இருந்ததால் பெரிதாகத் தெரிகிறது போலிருக்கிறது. குறிப்பாக அந்த நார்வே லொகேஷன்களை காமிராவுக்குள் சிறைப்டுத்திய விதம்.. வாவ்!

ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் ஒரு முறை ட்ரினிட்டியில் இசை படிக்கப் போகலாம். அல்லது ரஹ்மான் மாதிரி ஓரிரு ஆண்டுகள் இசை விடுமுறை அறிவித்துவிடலாம். சரக்கு மகா மட்டம்... அதைவிட பின்னணி இசை... ஆக்ஷன் காட்சியில், நான்கைந்து ட்ரம்ஸ் செட்டுகளை உருட்டிவிடுவது மாதிரி ஒரு சவுண்ட்... கொடுமை!

ஒன்று முழுமையாக காப்பியடித்து, அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு படத்தை வெளியிடலாம். அல்லது முழுசாக சொந்த சரக்கை கடைவிரிக்கலாம். இப்படி அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என எடுத்தாண்டால் இப்படித்தான் இருக்கும் கேவி ஆனந்த்.

அதிலும் அந்த க்ளாமாக்ஸில் சூர்யாவைப் பார்த்து, கடேகர் பேசும் வசனங்கள், மகா மட்டம். சூர்யா எதற்காக அல்லது எப்படி இந்த மாதிரி கேவலமான காட்சியமைப்புக்கு ஒப்புக் கொண்டார் என்பது ஆச்சர்யம்தான்!

ஆங்... இந்தப் படத்தில் குறை சொல்ல முடியாத ஒருவர்... ஹீரோ சூர்யா. ஆள் பார்க்க செம ஸ்மார்ட். அசல் இரட்டையர்களாக தோன்ற ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டியிருக்கும் மெனக்கெடல் அசாத்தியமானது. இந்த உழைப்பும் மெனக்கெடலும் வீணாய்ப் போனதில் வருத்தம்தான்!

ஒரு படத்தின் வெற்றிக்கு நான்தான் காரணம் என எந்த ஹீரோவாவது சொன்னால் தலையில் தட்ட வேண்டும் என்று சொன்ன கேவி ஆனந்துக்குதான் நியாயமாக குட்டு வைக்க வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, தாங்கிப் பிடிக்கும் ஒற்றை விஷயம் சூர்யா...

சூர்யாவுக்காக மட்டும் பார்க்கலாம்!

 

நவம்பர் 7-ம் தேதி விஸ்வரூபம் இசை வெளியீடு!!

கமல் ஹாஸனின் இயக்கம், நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.

vishwaroopam music on nov 7th   
Close
 
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

கமல்ஹாஸன்-ஆன்ட்ரியா-பூஜாகுமார் நடிக்க, சங்கர் எஷான்லாய் இசையமைத்துள்ள படம் விஸ்வரூபம்.

இந்தப் படத்தை பல வாரங்களுக்கு முன்பே கமல்ஹாஸன் முடித்துவிட்டாலும், அதுபற்றி வெளியில் எதுவும் பேசாமல் மவுனம் காத்தார். குறிப்பாக எப்போது ரிலீஸ்... தீபாவளிக்கா, பொங்கலுக்கா என்பதில் குழப்பம் நிலவியது.

இந்த நிலையில் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்புதான் படத்தின் பாடல்களை வெளியிடவிருக்கிறார். நவம்பர் 13-ம் தேதி தீபாவளி. ஆனால் 7-ம் தேதி பாடல் வெளியீட்டு விழாவை வைத்துள்ளார் கமல்.

எனவே டிசம்பரில் படம் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

 

நோ ப்ரா டே... - இது பூனம் பாண்'டே'

பூனம் பாண்டே இன்னும் செய்யாதது ஒன்றே ஒன்றுதான்... அது அவரது அம்மண பட ரிலீஸ். மற்றபடி எல்லாவித போஸ்களிலும் படம் காட்டிவிட்டார்.

its no bra day poonam pandey   
Close
 
இன்று அக்டோபர் 13-ம் தேதி இன்னும் ஒரு படி மேலேபோய், பிரா போடாத தினம் கொண்டாடி இருக்கிறார்.

டைட்டாக பிரா போடுவது கஷ்டமாக இருக்கிறதாம். அதனால் முன்னழகுக்கு இன்று முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும், பெண்கள் இந்த ஒரு நாள் மட்டும் பிரா போடாத தினமாக கொண்டாட வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறார்.

இந்த நாளுக்கு அவர் நோ பிரா டே என பெயர் வைத்து, ப்ராபோடாமல் சும்மா ஒப்புக்கு ஒரு சிவப்புத் துணியை சுற்றிக் கொண்டிருக்கும் தனது படத்தையும் வெளியிட்டு சூடேற்றியிருக்கிறார்.

அவரது இந்த அறிவிப்பை மற்ற பெண்கள் ஏற்பார்களோ இல்லையோ... ஆண்கள் அடங்காத ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டு, கமெண்ட் மழை பொழிந்து வருகிறார்கள்.

ஒரு படத்தில் சார்லியும் விஜய்யும் பிறந்தமேனிக் குளியலுக்கு விளக்கம் கொடுப்பது மாதிரி இருக்கில்லே!

 

நடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா!

Arjun Daughter Make Her Debut

நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை.

பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம்.

எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம்.

அர்ஜூனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம்.

"என்ன நினைப்பாரோ என்ற சந்தேகத்துடன்தான் அர்ஜுனிடம் போய் கேட்டேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா தவிர பொருத்தமான ஒருவர் கிடைப்பது கஷ்டம்," என்கிறார் ஹீரோ விஷால்.

விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு மீது ரொம்பவே ஆர்வமாம்.

 

அடுத்து இசைப் புயலின் முறை... சென்னையை இசை மழையில் நனைக்க வருகிறார்!

ஆண்டு இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்... வடகிழக்குப் பருவமழை வருமா வராதா என்ற நிலை... ஆனால் வேறொரு மழை இடி மின்னலுடன் பொழியத் தயாராகிறது. அது ஏ ஆர் ரஹ்மானின் இசை விழா!

இந்த ஆண்டின் இறுதியில் சென்னையில் மிகப் பிரமாண்டமாக இசை நிகழ்ச்சி ஒன்றை தலைநகர் சென்னையில் நடத்தவிருக்கிறார் ரஹ்மான்.

a r rahman s live concert
Close
 
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைச் செய்வது... யெஸ்... ஜெயா டிவிதான். கடந்த ஆண்டு இறுதியில் இளையராஜாவை வைத்து என்றென்றும் ராஜா என்று கச்சேரி நடத்தியவர்கள், இந்த ஆண்டு ரஹ்மானை வைத்து நடத்துகிறார்கள்.

தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இடம் அதே நேரு உள்விளையாட்டு அரங்கம்தான்.

கடந்த ஆண்டிலிருந்து 'இசை விடுமுறையில்' இருந்தார் ஏ ஆர் ரஹ்மான். எனவே அவர் இசையில் புதிய ஆல்பங்கள் எதுவும் தமிழில் வரவில்லை. இது ரஹ்மானின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

அதற்கு வட்டியும் முதலுமாக புதிய தமிழ்ப் படங்களுக்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்தார் ரஹ்மான். அந்த ஐந்தில் முதலில் வரவிருப்பது ரஜினியின் கோச்சடையான்.

இப்போது கோச்சடையானுக்கும் முன்பாகவே இசை விருந்து படைக்க வருகிறார் இசைப்புயல்...

இனிய வரவு!

 

பாலகிருஷ்ணாவை வயசானவர் என்று கமெண்ட் அடித்தேனா? - காஜல் விளக்கம்

Am Not Commented Anything On Bala Krishna Says Kajal   

பாலகிருஷ்ணாவை வயசான ஹீரோ என்று கூறி நடிக்க மறுத்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் அழைப்பு வந்ததாம். ஆனால் அவர் வயதானவர் என்பதால் காஜல் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தான் இப்படி கூறவே இல்லை என்று காஜல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "பொதுவாக கிசுகிசுக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் இந்த செய்தி விஷமத்தனமானது.

தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளேன். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வயதானவர் என்பதால் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்ததாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. என்னிடம் கால்ஷீட் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்காலத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்," என்றார்.

தமிழில் காஜல் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் பெரிய படம் துப்பாக்கி.

 

நினைத்தது யாரோ.. புதுமுகங்களை வைத்து விக்ரமன் புதிய படம்

Vikraman Direct Movie With New Face

தொன்னூறுகளில் தனக்கென தனி பாணியுடன் படமெடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்ற 'லலலலா...' புகழ் விக்ரமன், சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.

ஏற்கெனவே இளமை நாட்கள் என்ற தலைப்பில் படமெடுத்து வருவதாகக் கூறியிருந்தார்

இப்போது நினைத்தது யாரோ என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கும் வேலைகளில் தீவிரமாக உள்ளார்.

இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைக்கப் போகிறார் விக்ரமன். இதற்காக புதுமுகங்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், தேர்ந்தெடுத்த புதுமுகங்களுக்கு பயிற்சியளித்து பின்னரே படப்பிடிப்புக்குக் கிளம்பப் போகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் இரண்டு புதிய பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்துகிறார். இவர்கள் அநேகமாக அவரது பேஸ்புக் நண்பர்களாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

நல்ல பாடல்கள், இனிய இசை, உண்மையான காதல்... இதுதான் நினைத்தது யாரோ படம் என்கிறார் விக்ரமன்.

 

8 டு 8... அஜீத் போட்ட ஆபத்தான ஃபைட்டு!

Ajith S Hard Work Stunned The Unit

கிட்டத்தட்ட ஒரு புதிய நடிகர் எப்படியெல்லாம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பெரும் முயற்சிகள் எடுப்பாரோ... அதற்கு இணையாக உழைக்கிறார் அஜீத்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஎம் ரத்னம் தயாரிக்கும் அடுத்த படத்துக்காக மாலை 8 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை நான் ஸ்டாப்பாக ஒரு சண்டைக் காட்சியில் நடித்து அனைவரையும் அசத்தியுள்ளார் மனிதர்.

அதுவும் சாதாரணமாக அல்ல.. தலைகீழாக தொங்கியபடி போட வேண்டிய சண்டை அது. கரணம் தப்பினால் மரணம்... ஏகப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்துள்ள அஜீத்துக்கு இந்த ரிஸ்க் வேண்டாம் என இயக்குநர் விஷ்ணுவர்தன் எவ்வளவோ கூறியும், 'டூப் மட்டும் வேண்டாம்... நானே பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி தலைகீழாகத் தொங்கியுள்ளார்.

நடு நடுவே சின்ன கேப் விட்டதோடு சரியாம். இரவு முழுக்க தூங்காமல் இந்த சண்டைக் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார்.

தான் நடித்த காட்சிகளை காலையில் போட்டுப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்ட அஜீத்... "கஷ்டப்பட்டாதான் இந்த சந்தோஷம் கிடைக்கும்," என்றாராம்!

 

சைப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

CBI files chargesheet against Saif

கடந்த பிப்ரவரி 22ம் தேதி இரவு நடிகர் சைப் அலிகான், அவருடைய காதலியும் வருங்கால மனைவியுமான நடிகை கரீனா கபூர் மற்றும் சிலர் நண்பர்கள் தாஜ் ஓட்டலில் உள்ள வசாபி ரெஸ்டாரண் டில் சாப்பிட்டனர். அவர்களுக்கு பக்கத்து டேபிளில் வெளிநாடு வாழ் இந்தியரான இக்பால் சர்மா தனது குடும்பத்துடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, சைப் அலிகானும் நண்பர்களும் சத்தம் போட்டு பேசினர். இது இக்பால் சர்மாவுக்கு இடையூறாக இருந்ததால், மெதுவாக பேசும்படி சைப் அலிகானிடம் கேட்டு கொண் டார். இது சைப் அலிகானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இக்பால் சர்மாவுடன் வாக்குவாதம் செய்த அவர், திடீரென அவரை தாக்கினார். இது பற்றி கொலாபா போலீசில் இக்பால் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அன்றிரவே சைப் அலிகானை போலீசார் கைது செய்தனர். மறுநாள் காலை  ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் நடந்து 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சைப் அலிகானுக்கு எதிராக நீதிமன்றத்தில் நேற்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சைப் அலிகான், அவருடைய நண்பர்களிடம்  வாக்குமூலம் பெற தாமதமானதால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக போலீசார் கூறினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், வழக்கு விசாரணையில் சைப் அலிகான் கட்டாயம் ஆஜராக வேண்டும்.
 

ஒரு நாளில் நடக்கும் கதையில் பார்வதி

The story of a day in the Parvati

ஒரே நாளில் நடக்கும் கதையில் நடிக்கிறார் 'பூ பட நாயகி பார்வதி. மலையாளத்தில் 'டிராபிக் என்ற பெயரில் வந்த படம் தமிழில் 'சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் தயாராகிறது. இது பற்றி இயக்குனர் ஷஹீத் காதர் கூறியதாவது: மனிதர்கள் தங்கள் வாழ்வில் தங்களுக்கே தெரியாமல் சில நேரம் தவறுகள் செய்வதுண்டு. அதை எண்ணி வருந்துபவர்களுக்கு மறுபடியும் அதை திருத்திக்கொள்ள இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து அதன் முடிவு அமையும். இப்படியொரு கதை அமைப்புடன் உருவாகிறது சென்னையில் ஒரு நாள். இதயம் உள்பட உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஒருவரின் கதை. நிஜத்தில் நடந்த ஒரு சம்பவமே இப்படம். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராதிகா, சேரன், பிரசன்னா, பார்வதி, மல்லிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மூளை செயலிழந்த ஒருவரின் இதயத்தை மற்றொருவருக்கு பொருத்துவதற்காக டிராபிக் நிறைந்த சாலையில் 11 நிமிடத்துக்குள் கொண்டு செல்ல வேண்டும். அது சாத்தியமாகிறதா என்பதை பரபரப்பாக காட்சிகள் உணர்த்தும். இதில் நடித்திருக்கும் அனைவருமே மலையாளத்தில் இப்படத்தை பார்த்து தங்களுக்கு இப்படியொரு கதாபாத்திரம் கிடைக்காதா என்று எண்ணியவர்கள். அந்த உணர்வு ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பிரதிபலித்திருக்கிறது. ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்திருக்கின்றனர். இவ்வாறு ஷஹீத் காதர் கூறினார்.
 

நாடகங்களில் நடிக்கும் அஜீத் ஜோடி

In Drama, starring opposite Ajith

அஜீத் ஜோடியாக நடித்த ஹீரோயின், நாடகங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 'காதல் மன்னன் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தவர் மானு. இவர் தற்போது படங்களில் நடிப்பதைவிட்டு விட்டு மேடை நாடகங்களை சொந்தமாக தயாரித்து நடிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: 'பீஷ்மா தி கிராண்ட்சர் நாடகத்தை கடந்த ஆண்டு நடத்தினேன். இந்த நாடகத்தை டைரக்டர் கே.பாலசந்தர், ரஜினி நேரில் வந்து பார்த்து ரசித்தனர். இதையடுத்து 'சகுனி என்ற நாடகம் நடத்த உள்ளேன். பிறகு 'ஸ்திரி என்ற நாடகம் நடத்துகிறேன். இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள 'சகுனியில் நான் நடிக்க உள்ளேன். சிங்கப்பூரில் உள்ள பிரபல நாடக குழுவினரும் இதில் பங்கேற்கிறார்கள். பாலசந்தர், விவேக் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் பலர் இந்நாடகத்துக்கு வரவுள்ளனர். நேரம் கிடைத்தால் தானும் வருவதாக தெரிவித்திருக்கிறார் ரஜினி. இந்த நாடகம் மூலம் வரும் நிதி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு மானு கூறினார்.
 

சென்னையிலிருந்து வெளியேறுகிறார் சிம்ரன்

Simran Exiting Chennai

வருடக்கணக்கில் காத்திருந்தும் பட வாய்ப்புகள் வராததால் மும்பையில் செட்டிலாக முடிவு செய்துள்ளார் சிம்ரன். கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் சிம்ரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தீபக் பகா என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகு மும்பையில் கணவருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் கோலிவுட் படங்களில் நடிக்கும் எண்ணத்துடன் சென்னையில் குடியேறினார். வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை ஆகிய படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க அழைத்தபோது மறுத்துவிட்டார். ஹீரோயின் வேடத்தில் அல்லது ஹீரோயினுக்கு இணையான வேடத்தில் நடிக்கவே விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் வாய்ப்புகள் வராததால் விரக்தி அடைந்தார். இனி ஹீரோயின் வாய்ப்புக்கு காத்திருப்பது வீண் என்று சிம்ரன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் மும்பை சென்று செட்டிலாக உள்ளாராம் சிம்ரன்.
 

ஆராத்யாவை பாதுகாப்பது என் கடமை- ஐஸ்வர்யா ராய்

மும்பை : ஆராத்யாவை புகைப்படம் எடுக்க மீடியாக்கள் விரும்புகின்றன. அது அவர்களின் இயல்பு. அதேபோல் அவளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் தாயான எனது கடமை என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை புகைப்படம், வீடியோ எடுப்பதற்காக பலரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் குழந்தை ஆராத்யாவை வெளியே எடுத்து வந்தாலே முகத்தை மறைத்தது போலத்தான் ஐஸ்வர்யா கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அமிதாப்பச்சன் பிறந்தநாள் விழாவில் கூட ஆராத்யா தென்படவில்லை. ஒரு முறை வெளியே கொண்டு வந்த போதும் கூட புகைப்படம் எடுக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இது குறித்து ஐஸ்வர்யாராயிடம் கேட்கப்பட்டது. ஆராத்யாவை வெளியுலகுக்குக் கொண்டு வந்து, அதனால் அவள் சிரமத்துக்குள்ளாவதை நான் விரும்பவில்லை. அவளை பாதுகாப்பது எனது கடமை என்றார். இது ஒரு சாதாரண தாயின் பாதுகாப்பு உணர்வுதான் என்றும் கூறினார்.

அவளை கவனித்துக்கொள்ள எனக்கு 24 மணிநேரமும் போதவில்லை. அவளுடன் இருக்கும் நேரத்தை நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

 

சென்னையின் ட்ராபிக் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘சென்னையில் ஒரு நாள்’!

மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்து இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கிய ட்ராபிக் படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் எனும் தலைப்பில் ரீமேக் ஆகிறது.

இந்தப் படத்தைத் தயாரிப்பவர் ராதிகா. ஹீரோ அவர் கணவர் சரத்குமார்!

chennaiyil oru naal remake traffic
Close
 
வாழ்வின் வெவ்வேறு சூழல்களில்...வெவ்வெறு விதியின் பிடியில் சிக்கியிருக்கும் மனிதர்களை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து இணைப்பதுதான் சென்னையில் ஒரு நாளின் குறிக்கோள் !

'அன்போ,வெறுப்போ,ஆசையோ,கோபமோ,துரோகமோ, துயரமோ எந்த உணர்வாயினும் முக்கியமான தருணங்களில் வெளிப்படும் நுணுக்கமான மனித உணர்வுகள் வாழ்வில் பல அதிரடியான திருப்பங்களை ஏற்படுத்தி விடும். அது போல, துயரத்தின் விளிம்பில் இருக்கும் ஒருவர் எடுக்கும் முடிவு, இன்னொருவர்க்கு வரமான வாழ்க்கையாக மாறும் அதிசயத்தை இந்த படம் உரக்கப் பேசப் போகிறது. இந்த மூலம் உடல் உறுப்பு தானம் எனும் உயர்வான விஷயம் பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் பரவப் போவது ஒரு போனஸ் !' என்கிறார் படத்தை 'ஐ' பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் ராதிகா.

இப்படத்தினை இணைந்து தயாரிப்பவர், மலையாள மூலப்படமான ட்ராபிக் படத்தை தயாரித்த லிஸ்டின்.

"விறுவிறுப்பாய் நகரும் திரைக்கதையில், சென்னை நகரின் பரபரப்பான டிராஃபிக்கும் ஒரு வித கதாபாத்திரமாகவே மாறிப் போகும். ஒரு உயிரைக் காப்பாற்றும் மனசு இந்த ஜன சந்தடியில் இருக்குமா... ரோட்டில் ஏற்படும் பல்வேறு தடைகளைத் கடந்து ஒரு உயிர் பிழைக்குமா... என கடைசி நொடி வரை படம் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். இப்படியொரு உயிரோட்டமான கதையை தமிழர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையோடுதான் களம் இறங்கியிருக்கிறோம்!" என்கிறார் லிஸ்டின்.

படத்தில் சரத்குமார், சேரன், பிரகாஷ் ராஜ், ராதிகா, பிரசன்னா, ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா, 'பூ' பார்வதி என பெரிய நட்சத்திர பட்டாளமேயுண்டு. ஒவ்வோரு கேரக்டரும் மக்கள் மனதில் நின்று, தங்கி உறவாடி மகிழ்விக்கும். அந்த அளவிற்கு பெரியதொரு சந்தோஷத்தை இப்படம் தமிழ் ரசிகர்களுக்குத் தரும் என்கிறார் பட்த்தின் இயக்குனர் ஷகித் காதர்.