பிரபுதேவாவுக்காக அல்லு அர்ஜுனை டீலில்விட்ட ஸ்ருதி ஹாசன்

Shruti Says No Allu Arjun   

பிரபு தேவாவின் இந்தி ரீமேக் படத்தில் நடிப்பதற்காக ஸ்ருதி ஹாசனின் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லிவிட்டார்.

தெலுங்கில் பிரபு தேவா இயக்கிய முதல் படம் ‘நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா'. இந்த படம் தமிழில் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற பெயரி்ல் வெளியானது. இந்த 2 மொழிகளிலுமே த்ரிஷா தான் நாயகி. இந்நிலையில் பாலிவுட்டில் ரீமேக் மன்னன் என்று பெயரெடுத்துள்ள பிரபுதேவா ‘நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா' படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்.

இதில் த்ரிஷாவுக்கு பதில் ஸ்ருதி ஹாசனை நாயகியாக்கிவி்ட்டார். இந்தியில் வாய்ப்பு தேடிய ஸ்ருதிக்கு நல்ல படம் கிடைத்துவி்ட்டது. இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் அல்லு அர்ஜுனை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்க ஸ்ருதியை கேட்டுள்ளனர். ஆனால் பிரபுதேவா படத்தில் நடிப்பதால் அவர் தெலுங்கு படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இதற்கிடையே இந்தியிலும் தன்னையே பிரபுதேவா நாயகியாக்குவார் என்று நம்பியிருந்த த்ரிஷாவுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.

 

உணர்ச்சியே இல்லாத மரக்கட்டை சன்னி லியோன்.. 'ஜிஸ்ம்' பார்த்தவர்கள் வெறுப்பு!

Sunny Leone Lets Down Exploitative Jism 2   

மும்பை: பெரும் பரபரப்பாக பேசப்பட்ட ஜிஸ்ம் 2 படம் ஊத்திக் கொண்டு விட்டதாம். அப்படத்தை பெரும் தோல்விப் படமாக்கிய பெருமை நாயகியாக நடித்த கனடா நாட்டு ஆபாசப் பட நடிகை சன்னி லியோனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று ரசிகர்களும், திரைப்பட விமர்சகர்களும் கூறுகிறார்கள்.

பிபாஷா பாசுவின் நடிப்பில் வெளியான ஜிஸ்ம் படத்தின் நிழலைக் கூட இந்தப் படம் தொட முடியாது என்றும் இந்தித் திரை ரசிகர்கள் கூறுகிறார்கள். படத்தைப் பார்த்து விட்டு வெளியே வருகிறவர்கள் எல்லாம் கொலை வெறியுடன் வருவதைப் பார்த்து பாலிவுட்டே பயந்து போயிருக்கிறதாம். அந்த அளவுக்கு படம் படு குப்பையாக இருக்கிறதாம்.

பூஜா பட்டின் குடும்ப் படம்தான் இந்த ஜிஸ்ம் 2. இப்படத்தில் சன்னி லியோன் நாயகியாக, படு கவர்ச்சிகரமாக நடித்திருப்பதாக படம் தயாரிப்பில் இருந்தே ஏற்றி ஏற்றி செய்திகளை வெளியிட்டு வந்தனர். சன்னி போல வருமா என்று புகழார மாலையாக பேசி வந்தார்கள். படத்தின் தயாரிப்பாளரான டினோ மரியா ஒரு படி மேலே போய் பிபாஷாவை விட சன்னி எவ்வளவோ பெட்டர் என்றெல்லாம் புரூடா விட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் படத்தை இன்று ஊற்றி மூடி விட்டார் சன்னி. படம் முழுக்க குப்பைத்தனமாக இருக்கிறதாம். வசனங்கள் படு காமெடியாக இருக்கிறது. காட்சிகளில் நேர்த்தி இல்லை. நடிகர்களிடம் ஒரு விறுவிறுப்பான நடிப்பு இல்லை. கதை புரியவில்லை. கோமாளித்தனமாக படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளனர். சன்னி லியோனின் மார்பை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் போல இருக்கிறது என்று கூறுகிறார்கள் திரைப்பட விமர்சகர்கள். ரசிகர்களும் கூட படத்தைப் பார்த்து கடுப்பாகியுள்ளனராம்.

சன்னி லியோனுக்கு நடிக்கவே தெரியவில்லை. உடலைக் காட்டுகிற அக்கறையைக் கூட அவர் நடிப்புக்குத் தரவில்லை. மார்பை மட்டும் காட்டினால் போதுமா, நடிப்பையும் கூட சேர்த்துத் தர வேண்டாமா என்று விமர்சிக்கிறார்கள். கவர்ச்சிக் காட்சிகளிலும் கூட உணர்ச்சிகரமாக அவர் நடிக்கவில்லை என்று கூறும் ரசிகர்கள் படம் டோட்டல் வேஸ்ட் என்கிறார்கள்.

படத்தின் நாயகன் ஒரு தீவிரவாதி. அவனிடம் உள்ள சில முக்கிய ரகசியங்களைக் கைப்பற்ற இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் முயலுகிறார்கள். அதற்காக ஆபாசப் பட நடிகையான சன்னி லியோனை அணுகுகிறார்கள். சன்னியும், அந்தத் தீவிரவாதியும் முன்னாள் காதலர்கள். ஆனால் நாட்டுக்காக மீண்டும் தீவிரவாதியுடன் பழகி ரகசியங்களைக் கவர்ந்து வருமாறு கேட்கிறார்களாம் உளவுத்துறை அதிகாரிகள்.இப்படிப் போகிறது படத்தின் கதை.

ஜிஸ்ம் 2 சன்னி லியோனுக்கு பாலிவுட்டில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறி வந்தார்கள். ஆனால் பேசாமல் இவர் ஆபாசப் படங்களிலேயே தொடர்ந்து நடிக்கலாம் என்று கூறுவது போல அமைந்துள்ளது இப்படம்...

 

விஜயுடன் ஜோடி சேரத் துடிக்கும் ஆன்ட்ரியா

Andrea Wants Pair With Vijay   

நடிகை ஆன்ட்ரியாவுக்கு விஜய் படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.

பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் பிரபலமானவர் ஆன்ட்ரியா ஜெரிமியா. நடிகையாக மட்டுமின்றி தன்னை ஒரு பாடகியாகவும் நிலை நிறுத்தியுள்ளார். கமல் ஹாசனுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று முன்னணி நடிகைகள் எல்லாம் ஏங்க அந்த வாய்ப்பு ஆன்ட்ரியா வீட்டு வாசலுக்கே வந்தது. இதையடுத்து அவர் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே அவர் கமலின் மன்மதன் அம்பு படத்தில் நாயகன் அறிமுகமாகும் பாடலை பாடியுள்ளார். இந்நிலையில் விஜயின் துப்பாக்கி படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு பாடலை பாட அழைத்துள்ளனர். ஆன்ட்ரியாவும் சென்று பாட்டை பாடிக் கொடுத்துவிட்டு, விஜயுடன் நடிக்கை ஒரு வாய்ப்பு கொடுங்களேன் என்று வாய்விட்டே கேட்டுவிட்டராம்.

இப்படித் தான் லக்ஷ்மி ராய் இயக்குனர் விஜயிடம் நடிகர் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார். அதற்கு அவரும் தான் விஜயை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கை வைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஆன்ட்ரியாவுக்கு அப்படி யாரும் வாக்கு கொடுத்தது போன்று தெரியவில்லை.

 

கமல் கையைப் பிடித்து ஹாலிவுட் போகும் சூர்யா

Suriya Debut Hollywood

கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள சூர்யா அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறராம்.

நடிகர் சூர்யா கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப கெட்டப்பை மாற்றி வரும் கமல் ஹாசன் போன்று சூரியாவும் கதைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வார். அவர் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து நடித்த மாற்றான் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அடுத்ததாக சிங்கம் 2, துப்பறியும் ஆனந்தம் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இத்தனை நாட்களாக கோலிவுட்டை கலக்கிய சூர்யா ஹாலிவுட்டுக்குப் போகிறார். உலக நாயகன் கமல் ஹாசன் ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் தான் நடிக்கும் படத்தில் நடிக்குமாறு சூர்யாவை கேட்டுள்ளாராம். கமல் அழைத்து சூர்யா மறுக்கவா போகிறார்.

அப்படி என்றால் கமல், சூர்யா ஆகிய இருவரையும் ஒன்றாகவே ஹாலிவுட் படத்தில் பார்க்கலாம்.

 

இவர்தான் போஜ்பூரியின் சன்னி லியோனாம்..!

B Grade Monalisa Set Rock Bhojpuri Movies   

மும்பை: போஜ்பூரி சினிமாவின் சன்னி லியோன் என்ற அடைமொழியுடன் நடிகை மோனலிசா அந்த சினிமாவில் படு களேபரமாக அறிமுகமாகிறார்.

ஏகப்பட்ட ஆபாசப் படங்களில் நடித்த நடிகைதான் மோனலிசா. இப்போது அவர் போஜ்பூரி படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

ஏக் பார் பிர் மைனே பியார் கியா என்ற படத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம் மோனலிசா. படம் முழுக்க மோனலிசாவின் படுக்கை அறைக் காட்சிகளும் பிறகவர்ச்சிக் காட்சிகளும் இறைந்து கிடக்கின்றனவாம். தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் டபுள் மடங்காக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.

விரைவில் இப்படம் உ.பி. மற்றும் பீகாரில் வெளியாகப் போகிறது. இப்படம் குறித்த பேச்சுதான் தற்போது இந்த மாநிலங்களில் படு சூடாக உள்ளது. வித்யா பாலனை மிஞ்சி விடுவார் மோனலிசா என்றும், அடுத்த சன்னி லியோன் இவர்தான் என்றும் பேச்சாக இருக்கிறது.

ஆனால் இந்தப் படம் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் சாயல் கிடையாது என்றும் ஒரிஜினல் படம் என்றும் படத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், மோனலிசா இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக கவர்ச்சிகரமாக நடித்துள்ளதாகவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

படம் வெளியான பின்னர் மோனலிசா அலை போஜ்பூரி திரையுலகத்தை கலக்கப் போவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்..!

 

அஜீத்தை வைத்து படம் பண்ணல: லிங்குசாமி

I M Not Directing Ajith Lingusamy

இயக்குனர் லிங்குசாமி அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் ஜீ. அஜீத், த்ரிஷா நடித்த இந்த படத்தை இயக்கியவர் லிங்குசாமி. அந்த படத்திற்கு பிறகு அஜீத்தும், லிங்குசாமியும் இணையவே இல்லை. இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து அஜீத்தை வைத்து லிங்குசாமி படம் எடுக்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சாகக் கிடந்தது.

சரி, லிங்குசாமியிடமே இதைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டதற்கு, அவர் கூறுகையில்,

ஜி படத்தில் நடித்த காலத்தை விட அஜீத் தற்போது பெரிய ஸ்டாராகிவிட்டார். அவரை நான் இயக்கினால் அவரது ஸ்டார் அந்தஸ்தை மனதில் வைத்தே திரைக்கதை எழுத வேண்டும். அவரை வைத்து நான் படம் பண்ணவில்லை என்றார்.

ஆக இப்போதைக்கு அஜீத்தை வைத்து படம் எடுக்கும் ஐடியா லிங்குசாமிக்கு இல்லை. லிங்குசாமி சூர்யாவை வைத்து படம் எடுப்பதில் பிசியாக இருக்கிறார்.

 

காரை மோதி இன்ஸ்பெக்டரை படுகாயப்படுத்திய நடிகர் சுரேஷ் கைது

Actor Arrested Injuring 4 An Accident
சென்னை: சென்னையில் நடந்த சாலை விபத்தில் இன்ஸ்பெக்டரும், மேலும் மூ்வரும் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக தேனி மாவட்டம் என்ற படத்தில் நடித்தவரான நடிகர் சுரேஷ் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஈவேரா சாலையில், கீழ்ப்பாக்கம் பகுதியில் ஒரு கார் இன்று காலை 8 மணியளவில் வேகமாக வந்தது. அப்போது திடீரென அது தாறுமாறாக ஓடி சாலையில் போய்க் கொண்டிருந்த ஒரு பைக்கில் மோதியது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற இன்ஸ்பெக்டர் ஆனந்தன் கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவருடன் அமர்ந்து வந்த நண்பர் கோவர்த்தனும் காயமடைந்தார்.

பைக்கில் மோதி விபத்துக்குள்ளான கார் சாலையில் போய்க் கொண்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர்கள் பிரபுதாஸ், முனிவேலு ஆகியோர் காயமடைந்தனர்.

இதனால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். காரை ஓட்டி வந்தவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நடிகர் சுரேஷ் என்பதும், தேனி மாவட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்றும் தெரிய வந்தது. அவர் சில டிவி தொடர்களிலும் நடித்து வருகிறாராம்.

சுரேஷைக் கைது செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 

முரட்டுக் குதிரையாக மாறி மிரட்டும் லேடி காகா!


Lady Gaga Shows Off Her Wildest Transformation
நியூயார்க்: லேடி காகா புதிய அவதாரம் எடுத்துள்ளார். யுனிகார்ன் எனப்படும் ஒற்றைக் கொம்பு கொண்ட கற்பனைக் குதிரை போல போஸ் கொடுத்து டிவிட்டரிலும் அதைப் போட்டுள்ளார்.

அமெரிக்க பாடகியான லேடி காகா அவ்வப்போது ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தியபடி இருப்பவர். இப்போது புதிதாக யுனிகார்ன் போஸ் கொடுத்து பயமுறுத்தியுள்ளார்.

இந்த அதிரடி புகைப்படங்களை டிவிட்டரிலும் போட்டுள்ளார். இதில் ஒரு படத்தில், நான்கு கால்கள் கொண்ட யுனிகார்ன் நிற்பது போல லேடி காகா போஸ் கொடுத்துள்ளார். மேலாடை அணியவில்லை. வெற்று மார்புகளுடன் காட்சி தருகிறார். தனது இரு கைகளையும் வைத்து மார்புகளை மறைத்தபடி நிற்கிறார். தலையில் செயற்கைக் கொம்பு வைத்துள்ளார். மிரட்டலான மேக்கப்பில் பிரமிக்க வைக்கிறது லேடி காகாவின் போஸ். உண்மையில் காகாவின் ஒரு ரசிகர்தான் பழைய படத்தை வைத்து இந்த போஸை உருவாக்கி காகாவுக்கும் இதை அனுப்பி வைத்துள்ளார்.

இன்னொரு படத்தில் கருப்பு நிற தோல் உடையில் காணப்படுகிறார் காகா.

இதேபோல இன்னொரு புகைப்படத்தையும் காகா வெளியிட்டுள்ளார். அதில் அவரது கையில் ஆர்ட்பாப் என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அதைக் காட்டியபடி காட்சி தருகிறார். இந்த ஆர்ட்பாப் என்பது அவரது புதிய இசை ஆல்பமாகும்.