சென்னை: சின்னத் திரையில் அறிமுகமாகி வெள்ளித் திரையிலும் நடித்த கல்யாணி என்கிற பூர்ணிதாவுக்கு திருமணம் முடிவாகியிருப்பதை ஏற்கனவே சொல்லியிருந்தோம். தற்போது டிசம்பர் 12-ம் தேதி திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கல்யாணி, சினிமாவில் ‘அள்ளித்தந்த வானம்' படத்தில் அறிமுகமானார். ‘ஸ்ரீ', ‘ரமணா', ‘ஜெயம்' உள்ளிட்ட பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
பின்னர், ‘மறந்தேன் மெய்மறந்தேன்' என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கல்யாணி என்ற தனது பெயரை பூர்ணிதா என மாற்றிக் கொண்டார். தொடர்ந்து 'பிரதி ஞாயிறு 9.30 to 10.00', ‘இன்பா', ‘இளம்புயல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
சின்னத்திரையில் இப்போதும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவருக்கும் மும்பையைச் சேர்ந்த டாக்டர் ரோஹித்துக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.
வருகிற டிசம்பர் 12-ந் தேதி கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 15-ல் பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.