மனோரமா உடல்நிலை முன்னேற்றம்: தொடர்ந்து செயற்கை சுவாசம்

தலையில் இருந்த ரத்தக் கட்டி அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகை மனோரமாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.

குளியலறையில் வழுக்கி விழுந்த மனோரமாவுக்கு தலையில் அடிபட்டதில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதையடு்தது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தக் கசிவை அகற்றும் அறுவை சிகிச்சை நேற்று நடந்தது. வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு மனோரமாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. டியூப் மூலம் தான் உணவும் செல்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
 
ஜீவாவை வைத்து புதுப்படம் தயாரிக்கும் 'டாக்டர் ராமதாஸ்' - தமிழ்க்குமரன்!

மருத்துவத் துறையில் பிரபலமாகத் திகழ்பவர் டாக்டர் வி ராமதாஸ். இப்போது சினிமா எடுக்க வந்துள்ளார். பல்வேறு துறைகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வரும் இவர், கடந்த 2006 ல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிகு பிரவசி பாரதிய விருதினை அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடமிருந்து பெற்றவர்.

இப்போது திரைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், தரமான படங்களை தயாரிக்கும் நோக்கோடு கோலிவுட்டுக்கு வந்துள்ளார். ஜிகேஎம் தமிழ்க் குமரனோடு இணைந்து இவர் தயாரிக்கும் புதிய படத்தை வாமனன் படத்தை இயக்கிய அகமது இயக்குகிறார்.

ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்த படம் செஷல்ஸ், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இன்னும் பெயரிடப்படவில்லை.

கவுதம் மேனன் படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த படத்தில் நடிக்கிறார் ஜீவா. தந்தை மகன் உறவு, நட்பு, இளமை, காதல் ஆகிய அம்சங்களை கொண்ட திரைப்படமாக இது உருவாகும் என்கிறார் இயக்குனர் அகமது.

படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதால், உடனடியாக கால்ஷீட் கொடுத்துவிட்டதாக நாயகன் ஜீவா தெரிவித்தார்.
 
சிம்பு தாளத்திற்கு ஆடவில்லை: ரிச்சா

ஜீவா படத்தில் நடிக்க வேண்டாம் என்று சிம்பு என்னிடம் கூறவில்லை. நான் எப்பொழுதும் சுயமாக முடிவு எடுப்பவள் என்று நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.

நடிகை ரிச்சா சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவாவின் புதிய படத்தில் நடிக்க ரிச்சா முதலில் சம்மதித்ததாகவும், பிறகு சிம்பு சொன்னதால் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வந்தது.

சிம்பு-ஜீவா மோதல் தமிழகமே அறிந்தது. கோ படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர் அவரை மாற்றி விட்டு ஜீவா நடித்தார். அதிலிருந்து இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. சிம்பு ஏதாவது சொல்ல பதிலுக்கு ஜீவா ஏதாவது சொல்ல என்று அவர்களின் வார்த்தை விளையாட்டு முடிவின்றிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா படத்தில நடிக்க வேண்டாம் என்று ரிச்சாவிடம் சிம்பு தெரிவித்ததாக செய்தி வந்தது.

இது குறித்து ரிச்சா கூறியதாவது,

ஜீவா ஜோடியாக நடிக்குமாறு யாருமே என்னைக் கேட்கவில்லை. அப்படி இருக்கையில் ஜீவாவுடன் நடிக்கக் கூடாது என்று சிம்பு கூறியதாக செய்தி வந்தது. அது வெறும் வதந்தி தான். என் படம் தொடர்பான விஷயங்களில் யாரும் தலையிடுவதில்லை என்றார்.

இதற்கிடையே, நான் எப்பங்க ரிச்சாகிட்ட ஜீவா கூட நடிக்கக் கூடாதுன்னு சொன்னேன் என்று சிம்புவும் தெரிவித்துள்ளார்.

எங்கு 'வம்பு' என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வம்பு வலுத்து வருவது மட்டும் தெரிகிறது!
 
விஜய்யுடன் ஒரே நாளில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சி! - ஹன்சிகா

முதல் முறை வெற்றியை ருசித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி, வேலாயுதம் படம் மூலம்!

ஹன்ஸிகா ஏதோ இப்போதுதான் ப்ரஷ்ஷாக பீல்டுக்கு வந்தது போலத் தெரிந்தாலும், உண்மையில் அவர் 5 ஆண்டுகள் 'பழைய' நடிகை!

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், கன்னடத்தில் புனித் ராஜ்குமார், இந்தியில் ஹிமேஷ் ரேஷம்மியா என ஒரு பெரிய ரவுண்ட் அடித்து எதிலும் ஜெயிக்க முடியாமல், தமிழுக்கு வந்தார். இவரது தள தள தோற்றத்தில் தோல்விகளை மறந்து போன தமிழ் சினிமாக்காரர்கள், உடனே வாய்ப்புகளை தந்தனர்.

முதல் படம் தனுஷுடன், அடுத்த படம் ஜெயம் ரவியுடன். இரண்டுமே தோல்விகள்தான். அதைத் தொடர்ந்து வந்ததுதான் வேலாயுதம்.

இதிலும் அவருக்கு பெரிய வேடம் என்று சொல்ல முடியாது. முக்கிய வேடத்தை ஜெனிலியா செய்தாலும், ரசிகர்களை தூண்டில் போட்டு இழுக்கும் கவர்ச்சி நாயகியாக வந்தார் ஹன்சிகா. இந்த கவர்ச்சி ஒளிவெள்ளத்தில் ஜெனிலியா மங்கிப் போனார்.

இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஹன்ஸிகா புராணம்தான். அம்மணியின் தாராளம், தயாரிப்பாளர்களிடம் அனுசரணையாகப் போவது, சம்பளத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் என நிறைய புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த வெற்றிப்படம் வந்த பிறகு இது தொடருமா என்பது வேறு விஷயம்.

வேலாயுதம் தந்த சந்தோஷத்தில் மிதக்கும் ஹன்ஸிகா, இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவே இல்லையாம்.

ஏன்?

"நான் என் படத்தை பெரிய திரையில் பார்க்கவே மாட்டேன். இதுவரை நான் நடித்த எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்க மாட்ட்ன். வேலாயுதம் படத்தையும் பார்ப்பதாக இல்லை. நான் மிகப் பெரிய விமர்சகர். என்னைப் பார்த்து நானே கோபப்படும்படி ஆகிவிட்டால்... அதான்.

ஆனால் என் அம்மா, நண்பர்கள் பார்த்துவிட்டு ஓஹோ என்று பாராட்டினார்கள்.

இந்தப்படத்தின் விமர்சனங்களைப் படித்துவருகிறேன் (ஜெயிச்சாதான் படிப்பீக போல!). என்னை இந்த அளவு திறமையாக பயன்படுத்திய ஜெயம் ராஜா, விஜய்க்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

ஆக்சுவலா, முதல்நாள் ஸ்பாட்டுக்குப் போகும்வரை எனக்கு ராஜா, விஜய் இருவரையுமே தெரியாது. ஆனால் ஒரே நாள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சி எனக்கும் விஜய்க்கும். நாங்க நல்ல பிரண்ட்ஸாயிட்டோம்," என்கிறார் ஹன்ஸிகா.

அடுத்து உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிம்புவுடன் வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார் ஹன்ஸிகா. இவை இரண்டுமே நிச்சயம் வெற்றிப் படங்கள் என்கிறார் உறுதியாக.

ஓ... இப்பவே கோடீஸ்வர நடிகைகள் லிஸ்டுக்கு வந்தாச்சா!
 
கமலா தியேட்டரும் ஏழாம் அறிவும் வேலாயுதமும்!

கமலா திரையரங்கில் ஏழாம் அறிவு படம் எடுக்கப்பட்டு அங்கே, வேலாயுதம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானதை, அந்த தியேட்டர் நிர்வாகம் மறுத்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஏழாம் அறிவு படம் வெளியானது. அதற்கு போட்டி என்று சொல்லும் வகையில் விஜய் நடித்த வேலாயுதம் வெளியானது.

இந்த நிலையில் ஏழாம் அறிவு படத்தை கமலா தியேட்டரில் எடுத்துவிட்டு, வேலாயுதம் திரையிடப்பட்டதாகவும், இதனால் விஜய் ரசிகர்கள் மொட்டை போட்டு காவடி தூக்கி ஊர்வலம் நடத்தி அதைக் கொண்டாடியதாகவும் செய்தி வெளியானது.

இதை மறுத்து கமலா தியேட்டர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "எங்கள் கமலா திரையரங்கில் 7ஆம் அறிவு படம் முதல் வாரத்தின் 2 திரையரங்கில் திரையிட ஒப்பந்தம் செய்திருந்தோம். 3-ம் வாரத்தில் இருந்து “ஒப்பந்தப்படி ஸ்கிரீன் 1-ல் 7 ஆம் அறிவும், ஸ்கிரீன் 2-ல் வேலாயுதம் திரையிடப்படமும் திரையிடப்பட்டு 2 படங்களும் எங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டு உள்ளது,

இலங்கையில் வசனங்கள் நீக்கம்

இதற்கிடையே, ஏழாம் அறிவு படத்தில் தமிழருக்கு ஆதரவாக வரும் வசனங்களை நீக்கிவிட்டு இலங்கையில் படம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் தமிழன் தோற்றதற்கு காரணம் சில நாடுகளின் கூட்டு சதிதான் என்பன போன்ற வசனங்கள் இடம்பெற்று உள்ளன. ஒருத்தனை ஒன்பது நாடுகளஷ் சேர்ந்து தாக்குவது வீரமா என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. இதற்கு இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியது. அங்கு இப்படத்தை வெளியிட அனுமதி மறுத்து மறு தணிக்கைக்கு அனுப்பினர்.

சிங்களர்களுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்த வசனங்களை நீக்கிய பிறகே படத்தை இலங்கையில் வெளியிட அனுமதித்தனர்.
 
டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் எந்திரனுக்கு விருது!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 24 வது சர்வதேச திரைப்பட விழாவில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் - தி ரோபோ படத்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Winds of Asia-Middle East என்ற பிரிவில் இந்த விருதினை எந்திரன் பெற்றுள்ளது. எந்திரனுடன் தி மிர்ரர் நெவர் லைஸ், சுனாமி ஆகிய படங்களும் இந்தப் பிரிவில் விருது வென்றன.

அதே நேரம், இந்த விழாவில் இரு தினங்கள் எந்திரன் திரையிடப்பட்டது. அந்த இரு தினங்களுமே எந்திரனுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து, தியேட்டர் ஹவுஸ் புல்லாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானைப் பொறுத்தவரை ரஜினிதான் அங்கும் சூப்பர் ஸ்டார். அவர்கள் முத்துவின் சூப்பர் ஸ்டார் என்றே அவரை அழைக்கிறார்கள். அந்த அளவு பரிச்சயமானவர் ரஜினி.

ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசு!

இந்த விழாவில் 12 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒரு பிரிவுதான் மத்திய கிழக்கு ஆசிய சினிமாவுக்கான Winds of Asia-Middle East சிறப்பு விருது. இதில் விருது வென்ற படத்துக்கு ரூ 5 லட்சம் பரிசும் ஷீல்டும் வழங்கப்படும். எந்திரனுக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டது.

இந்த விழா கடந்த அக்டோபர் 23 முதல் 30 வரை டோக்கியோ நகரில் நடந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 127 படங்கள் திரையிடப்பட்டன. யுனி ஜப்பான், ஜப்பான் நாட்டு தொழில் - வர்த்தகத் துறை மற்றும் டோக்கியோ மெட்ரோபாலிடன் அரசு இணைந்து இந்த விழாவை நடத்தின.
 
ஷாருக்கானுக்கு வயது 46: தூக்கத்தில் கொண்டாட்டம்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சற்று வித்தியாசமாக தூங்கிக் கொண்டே பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது சூப்பர்ஹீரோ படமான ரா ஒன் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக ஆடி, ஓடித் திரிந்து கலைத்துவிட்டார். அதனால் தனது பிறந்தநாளை சற்று வித்தியாசமாக தூங்கிக் கொண்டே கொண்டாடுகிறார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

வீட்டுக்கு வந்தால் என் வீட்டு வாசலில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற பலர் காத்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதில் எனக்கு கண்ணீரே வந்துவி்ட்டது. தூங்கப் போகிறேன். நீண்ட நேரம் தூங்கப் போகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வயதான மாதிரி ஃபீலிங்கே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஷாருக்கானின் ரா ஒன் படம் வசூலில் புதிய சாதனைகள் படைத்துள்ளதால் அவர் குஷியாக உள்ளார். சூப்பர் ஹீரோவாக நடிக்க என் வயது உகந்ததில்லை என்று தெரிந்தும் முயற்சித்து தான் பார்க்கலாமே என்று நடித்தேன். தற்போது படம் நன்றாக ஓடுவதால் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கூறினார்.
 
இளையராஜா மனைவி மறைவுக்கு கவர்னர் இரங்கல்

சென்னை: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவாவின் மறைவுக்கு தமிழக கவர்னர் ரோசையா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் மனைவி ஜீவா, திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வர் கருணாநிதி, பாரதிராஜா உள்ளிட்ட அரசியல், திரையுலக, சமூக அமைப்புகளைச் சேர்ந்த பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஜீவாவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், "உங்கள் மனைவி ஜீவாவின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதற்காக உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதுடன், உங்கள் மனைவியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஜீவாவின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க இளையராஜாவுக்கு நெருக்கமான திரையுலகினர் பண்ணைப்புரம் சென்றுள்ளனர்.
 
நடிகை வைஷ்ணவி தற்கொலைக்கு காரணமான டிவி நடிகர் தேவ் ஆனந்த் சிறையில் அடைப்பு!

சென்னை: இளம் நடிகை வைஷ்ணவியை காதலித்து, பின்னர் தாக்கி தற்கொலைக்கு தூண்டிய டிவி நடிகர் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சென்னை அண்ணாநகரில் வசித்த இளம் நடிகை வைஷ்ணவி. இவர் தீனா, பாபா உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவருக்கும் டி.வி. நடிகர் தேவ் ஆனந்த்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. தேவ் ஆனந்த் திருமணமானவர். இருந்தபோதிலும் அவர் வைஸ்ணவியை காதலித்தார்.

தனக்கு 2-வது மனைவியாக இருக்கும்படி அவர் வைஷ்ணவியிடம் தொடர்ந்து வற்புறுத்தினாராம்.

கடந்த 2006-ம் ஆண்டு வைஷ்ணவியை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய தேவ் ஆனந்த் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் காயம் அடைந்த வைஷ்ணவி நடந்த சம்பவங்களை அழுது கொண்டே வீட்டில் வந்து கூறியுள்ளார்.

2 நாட்கள் கழித்து வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவி, மன உளைச்சலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். வைஷ்ணவி தற்கொலை (174-ஐ.பி.சி.) செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து, அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

தேவ் ஆனந்தின் தொல்லை தாங்காமல்தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக, சென்னை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேது மாதவன் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பை கேட்டதும் தேவ் ஆனந்த் கண்ணீர் விட்டு அழுதார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேவ்ஆனந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
தமிழின் முதல் சூப்பர் சூப்பர் ஸ்டாருக்கு நடந்த ஒரு பரிதாப நினைவஞ்சலி!

தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை மிக்க தியாகராஜ பாகவதர் (உண்மையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அன்றைக்கு அவர் பெயருக்கு முன் யாரும் போடவில்லை. பின்னாளில் சினிமா ஆய்வாளர்கள் அப்படி அழைக்கின்றனர்!) நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வெறும் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மக்களை தனது இனிய குரல் மற்றும் நடிப்பால் மயக்கியவர் தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என்றும் பாகவதர் என்றும் அன்றைய நாட்களில் அவரை மக்கள் அழைத்து மகிழ்ந்தனர்.

திருச்சி பாலக்கரைதான் அவரது சொந்த ஊர். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், நல்ல இசைஞானம், கணீர் குரல் வளம் அவருக்கு. எனவே பவளக் கொடி என்ற படத்தின் மூலம் கடந்த 1934-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அசோக்குமார், ராஜமுக்தி உள்பட 14 படங்களில் நடித்து பிரபலமானார்.

அன்றைக்கு பாகவதர் மேலிருந்து அபரிமிதமான ஈர்ப்பு, நாடகத்தைத் தவிர மாற்று பொழுதுபோக்கே இல்லாத சூழல் காரணமாக அவரது ஹரிதாஸ் படம் 3 வருடங்கள் சென்னையில் ஓடி சாதனைப் படைத்தது.

சந்திரமுகி படம் வரும் வரை, தமிழில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை பாகவதர் படத்துக்கே இருந்தது.

ஆனால் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்குப் பிறகு, புகழ் வெளிச்சம் மங்கிய நிலையில் பாகவதர் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார். ஆனால் வறுமையிலும் பெருமையை காத்தார். கம்பீரத்தை இழக்காத வாழ்க்கை வாழ்ந்தார். தன்னைத் தேடி வந்த வாய்ப்புகள், பண உதவிகளை மறுத்துவிட்டார்.

1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி உடல் நலிந்து சென்னை பொது மருத்துவமனையில் இறந்தார். திருச்சிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க இறுதி ஊர்வலம் நடந்தது. திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

இப்போதும் ஒரு சாமானிய மனிதனின் கவனிக்கப்படாத சமாதியாகவே பாகவதர் அடக்கம் செய்யப்பட்ட இடம் காட்சி தருகிறது.

மூன்றே பேர்...

இந்நிலையில், தியாகராஜ பாகவதரின், 53வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவஞ்சலிக்கு தமிழ் சினிமாவிலிருந்து மட்டுமல்ல, அக்கம்பக்கத்திலிருந்தும் கூட யாரும் வரவில்லை.

தியாகராஜ பாகவதரின் சின்னம்மா சம்பூரணத்தம்மாளின் மகள் ஆனந்தலட்சுமி, அவரது கணவர் தெட்சிணாமூர்த்தி, இவர்களது மகன் தனபால் ஆகிய மூவர் மட்டுமே பாகவதர் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த நேற்று வந்தனர்.

1948ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ராஜமுத்தி சினிமாவில் இடம் பெற்ற, "மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ' என்ற பாடலை உரக்கப் பாடி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவில் ஒரு பெரும் மன்னரின் கம்பீரத்தோடு ஆட்சி செலுத்திய முதல் சூப்பர் ஸ்டார் பாகவதரின் நினைவு நாளை அனுசரிக்கவும் நேரமின்றி திரையுலகம் பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த வருத்தம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாத குடும்பத்தினர், அவரவர் பணி அவரவருக்கு... யாரையும் குற்றம் சொல்வது சரியல்ல என்று கூறி தங்கள் அஞ்சலியை முடித்துச் சென்றனர்!

மேன் மக்களல்லவா!
 
விஜய் அம்மாவுக்கு ஜெயலலிதா தந்த புதிய பதவி!

சென்னை: நடிகர் விஜய்யின் அம்மாவும் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரனின் மனைவியுமான ஷோபாவுக்கு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு இசைப் பள்ளிகளின் கலை இயல் அறிவுரைஞராக ஷோபா சந்திரசேகரனை நியமித்துள்ளார் ஜெயலலிதா.

கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் திருச்சி, நெல்லை, திருவாரூர், காஞ்சிபுரம், சேலம், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், பெரம்பலூர், தூத்துக்குடி, கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, சீர்காழி, ஈரோடு மற்றும் ராமநாதபுரத்தில் இயங்கும் 17 அரசு இசைப்பள்ளிகளுக்கும் இனி ஷோபா சந்திரசோகரன் அறிவுரைஞராக செயல்படுவார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தப் பதவியை அளித்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஷோபா சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணியாற்றியது விஜய்யின் மக்கள் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பண்ணைப்புரம் தோட்டத்தில் இளையராஜாவின் மனைவி ஜீவா உடல் அடக்கம்

தேனி: இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவாவின் உடல் இன்று அவரது பாட்டியும், இளையராஜாவின் தாயாருமான சின்னத்தாயின் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், மலையாளத் திரையுலகினர் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு அகால மரணமடைந்தார். இதனால் திரையுலகினர் பெரும் சோகமடைந்தனர். நேற்று இளையராஜாவின் வீட்டில் குவிந்த திரையுலகினரும், அரசியல் பிரமுகர்களும் ஜீவாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பிற்பகலுக்கு மேல் ஜீவாவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. நேற்று நள்ளிரவைத் தாண்டி பண்ணைப்புரத்திற்கு உடல் வந்து சேர்ந்தது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று காலை உடல் அடக்கம் நடைபெற்றது. பண்ணைப்புரம் அருகே உள்ள லோயல் கேம்ப்பில் உள்ள தோட்டத்தில், இளையராஜாவின் தாயார் சின்னத்தாயின் சமாதிக்கு அருகே ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், மலையாள நடிகைகள் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு ஜீவா உடலுக்கு அஞ்சலி செலுத்தி இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இளையராஜாவின் சிறு பிராயத்து நண்பரான பாரதிராஜவும் உடன் இருந்தார். இளையராஜா குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் எனபலரும் கலந்து கொண்டனர். பின்னர் ஜீவாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இளையராஜாவின் சகோதரி மகள்தான் ஜீவா. ராஜாவுக்கும், ஜீவாவுக்கும் 1970ம் ஆண்டு திருமணம் நடந்தது. இளையராஜாவின் இசைப் பயணத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர் ஜீவா. சாகாவரம் படைத்த பல பாடல்களை இளையராஜா சுதந்திரமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக, குடும்பப் பொறுப்புகளை முழுமையாக ஏற்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர் ஜீவா.

இந்த நிலையில் ஜீவாவின் திடீர் மரணம் அவரது பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரணி ஆகியோரை நிலை குலைய வைத்துள்ளது. மூன்றும் பேரும் தாயாரின் மரணத்தைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர். அதேபோல இளையராஜாவும் பெரும் துக்கத்தில் உள்ளார். இருப்பினும் துக்கத்தை அடக்கிக் கொண்டு அவர் நேற்று முழுவதும் தனது மனைவியின் உடல் அருகிலேயே இருந்தார்.
 
நடிகை வைஷ்ணவி தற்கொலைக்கு காரணமான டிவி நடிகர் தேவ் ஆனந்த் சிறையில் அடைப்பு!

சென்னை: இளம் நடிகை வைஷ்ணவியை காதலித்து, பின்னர் தாக்கி தற்கொலைக்கு தூண்டிய டிவி நடிகர் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சென்னை அண்ணாநகரில் வசித்த இளம் நடிகை வைஷ்ணவி. இவர் தீனா, பாபா உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவருக்கும் டி.வி. நடிகர் தேவ் ஆனந்த்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. தேவ் ஆனந்த் திருமணமானவர். இருந்தபோதிலும் அவர் வைஸ்ணவியை காதலித்தார்.

தனக்கு 2-வது மனைவியாக இருக்கும்படி அவர் வைஷ்ணவியிடம் தொடர்ந்து வற்புறுத்தினாராம்.

கடந்த 2006-ம் ஆண்டு வைஷ்ணவியை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய தேவ் ஆனந்த் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் காயம் அடைந்த வைஷ்ணவி நடந்த சம்பவங்களை அழுது கொண்டே வீட்டில் வந்து கூறியுள்ளார்.

2 நாட்கள் கழித்து வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவி, மன உளைச்சலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். வைஷ்ணவி தற்கொலை (174-ஐ.பி.சி.) செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து, அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

தேவ் ஆனந்தின் தொல்லை தாங்காமல்தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக, சென்னை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேது மாதவன் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பை கேட்டதும் தேவ் ஆனந்த் கண்ணீர் விட்டு அழுதார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேவ்ஆனந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினி! - தெலுங்கு இணையதளம்

இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இந்த வாக்குப் பதிவை ஒரு தெலுங்கு இணையதளம் நடத்தியுள்ளது.

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சூட்டப்பட்டவர் ஒரே ஒருவர்தான். அவர் ரஜினிகாந்த்!

இன்றைக்கு இந்தி, மலையாளம், கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களை சூப்பர் ஸ்டார் என விளித்துக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட இப்போது சூப்பர் ஸ்டார் என்பது சினிமாவின் உச்ச அந்தஸ்தைக் குறிக்கும் பதவி போலாகிவிட்டது.

இந்த நிலையில் இந்திய சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து ஆன்லைனில் ஒரு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் உள்ள ரஜினிகாந்த், பாலிவுட்டின் அமிதாப் பச்சன், அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான், கமல்ஹாஸன் உள்பட 9 முதல்நிலை நடிகர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 66 சதவீத வாக்குகளை பெற்று இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துள்ளார்.

மற்ற நடிகர்கள் இவருக்கு அருகில்கூட வரமுடியவில்லை. ஷாருகான் 11 சதவீத வாக்குகளையும், கமல்ஹாசன் 9 சதவீத வாக்குகளையும், அமீர்கான் 5 சதவீத வாக்குகளையும், சல்மான்கான் 4 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்திய ரசிகர்களால் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படும் அமிதாப்பச்சானுக்கு 3 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வேலாயுதம் பட பேனர்களை கிழித்து பெங்களூரில் கன்னட அமைப்பு போராட்டம்

பெங்களூர்: கர்நாடக மாநிலம் உதயமான ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களைத் திரையிடுவதை எதிர்த்து பெங்களூரில் நேற்று கன்னட ரட்சண வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். வேலாயுதம் படம் திரையிடப்பட்ட தியேட்டரை முற்றுகையிட்டு பேனர்களைக் கிழித்ததால் அங்கு படம் நிறுத்தப்பட்டது.

பெங்களூரில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் விஜய் நடித்துள்ள வேலாயுதம் படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று கர்நாடகத்தில் அந்த மாநிலம் உருவான நாள் ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து அங்கு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேலாயுதம் திரையிடப்பட்டிருந்த ராதாகிருஷ்ணா என்ற தியேட்டருக்கு 100க்கும் மேற்பட்ட கன்னட ரட்சண வேதிகே என்ற அமைப்பினர் வந்தனர். தியேட்டரை முற்றுகையிட்ட அவர்கள் பட பேனர்களை கிழித்தெறிந்தனர்.

இன்று ராஜ்யோத்சவா தினம். இந்த நாளில் கன்னடப் படங்களை மட்டுமே திரையிட வேண்டும். இன்றுமட்டுமல்ல இன்னும் ஒரு மாதத்திற்கு கன்னடப் படங்களை மட்டுமே திரையிட வேண்டும் என்று அவர்கள் மிரட்டினர். இதையடுத்து படக் காட்சியை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் படம் பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழ்ப் படம் திரையிடப்படுவதை தடுத்து நிறுத்தி கன்னட அமைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.