பேஸ்புக் ஜோதியில் கலந்தார் 'உலகநாயகன்'!

Kamal Joins Facebook
சமூக இணையதளங்கள் அதிக அளவு இளைஞர்களை ஈர்த்து வருவதால், தானும் அந்த கூட்டத்தில் ஒருவராக மாறியுள்ளார், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முதல் ஆதரவுக் குரல் தரும் 'இளைஞரான' கமல் ஹாஸன்!

இதன் முதல் படியாக, பேஸ்புக்கில் தனி பக்கம் தொடங்கியுள்ளார் அவர்.

இதுகுறித்து அவர் கூறிகையில், "இன்றைய இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கவும், சினிமா உலகினருடன் கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளவும் வசதியாக இருப்பதால், நானும் பேஸ்புக்கில் இணைய முடிவெடுத்துள்ளேன். நிறைய இளைஞர்கள் இதில் உள்ளனர். குறிப்பாக எனது ரசிகர்கள் கணிசமாக உள்ளனர். திரையுலகின் புதிய போக்குகள் குறித்து இதில் அப்டேட் செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

அதேநேரம் எனது மய்யம் இதழ் மூலமும் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளேன். பேஸ்புக் என்பதை ஒரு கூடுதல் வசதியாகத்தான் பார்க்கிறேன். எனக்கு மய்யம்தான் பிரதான ஊடகம்," என்றார்.

கமல்ஹாஸனின் பேஸ்புக் பக்கம்...



Close
 
 

முதலில் ஷூட்டிங்... அப்புறம்தான் ஹனிமூன்! - சினேகா முடிவு

Sneha Back Work   
போன வாரம்தான் சினேகா - பிரசன்னா திருமணம் நடந்தது. கோலிவுட்டில் கிட்டத்தட்ட ஒரு வார காலம் இவர்கள் கல்யாணச் செய்திதான்.

ஆனால் திருமணம் முடிந்த பிறகும் தனியாக இருக்க வேண்டிய நிலை பிரசன்னாவுக்கு. திருமணத்துக்கு முன்பே ஒப்புக் கொண்ட படமான ஹரிதாஸில் நடிக்கப் போய்விட்டார் சினேகா.

இரவு பகலாக ஷூட்டிங் (இந்தப் படத்தில் நடிக்கப் போனதால்தான் கோச்சடையானைக் கூட இழந்தார் சினேகா!).

8 வயது சிறுவனை தீயவர்களிடமிருந்து ஒரு தந்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மையமாகக்கொண்ட படம் இது. சினேகாவுக்கு லைப்டைம் ரோல் எனும் அளவுக்கு சிறப்பான வேடமாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் ஹனிமூன் என்று சினேகாவும் பிரசன்னாவும் முடிவு செய்துள்ளார்களாம்.

திருமணத்துக்குப் பிறகும், நிறைய பேர் சினேகாவுக்கு கதை சொல்ல வருகிறார்களாம். அவர்களிடம் ஒரு மூன்று மாதம் கழித்து கேட்கிறேனே! என்று கூறி அனுப்புகிறாராம் சினேகா!

ஹரிதாஸுக்குப் பிறகு, தன் கணவரை மட்டும் கவனித்துக் கொள்ளப் போகிறாரா... அல்லது கலைச் சேவையை தொடரப் போகிறாரா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?
Close
 
 

மைதானத்தில் 'குப் குப்'... ஷாருக்கானுக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Shahrukh Khan Summoned Jaipur Court For Smoking   
ஷாரூக்கானுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. இந்த ஆண்டு அவரது கொல்கத்தா அணி வெற்றிகளைக் குவித்தாலும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி மதிப்பிழந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் மும்பை வான்கடே மைதானத்தில் குடித்துவிட்டு தகராறு செய்தார் என்ற குற்றச்சாட்டில் 5 ஆண்டு தடைக்குள்ளான அவர், இப்போது பொது இடத்தில் புகைப் பிடித்த குற்றத்தில் சிக்கியுள்ளார்.

ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஐபிஎல் போட்டியின்போது ஷாருக்கான் புகைப்பிடித்தது விடியோவில் பதிவானது. தொலைக்காட்சிகளிலும் அது வெளியானது.

இதுகுறித்து ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஆனந்த் சிங் என்பவர் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பாக அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று ஷாருக்கானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணை மே 26-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அது தெரிந்தும் ஷாரூக்கான் புகைப் பிடித்துள்ளது, அவரது சமூக அக்கறையின்மையைக் காட்டுகிறது என விமர்சனம் கிளம்பியுள்ளது.
Close
 
 

முழுக்க முழுக்க தமிழில் பேசி அசத்திய 'பாலய்யா'!

Balakrishna Unveils Varuvaan Thalaivan Poster
வருவான் தலைவன் (தெலுங்கில் 'உ கொடுத்தாரா உலிக்கி படத்தாரா') என்ற படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடந்தது. நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி பிரசன்னா, மஞ்சு மனோஜ் நடித்து தயாரித்து, புதியவர் சேகர் ராஜா இயக்கும் பிரமாண்டமான படம் இது.

இயக்குநர் பி வாசு, தயாரிப்பாளர் டி ராமாராவ், நடிகை பிரபா, நடிகர் சிம்பு என பலரும் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில்.

இந்த நிகழ்ச்சிக்காகவே ஹைதராபாதிலிருந்து வந்திருந்தார் 'நட சிம்மம்' என ரசிகர்களால் அழைக்கப்படும் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா. சென்னையில் சினிமா நிகழ்ச்சியொன்றில் அவரைப் பார்ப்பது இதுதான் முதல் முறை (நமக்கு!).

படத்தின் பிரதான ஹீரோவான அவரை, போஸ்டரை அறிமுகப்படுத்தி பேச அழைத்தனர்.

என் அன்பு பத்திரிகை சோதரர்களே, என்று தமிழில் ஆரம்பித்தவர், கடைசியில் நன்றி வணக்கம் சொல்லி முடிக்கும் வரை தமிழிலேயே பேசி அசத்தினார்.

சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்தவரென்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டவர் பாலகிருஷ்ணா. நான்கு வார்த்தைகள் சம்பிரதாயத்துக்கு தமிழில் பேசி, அப்படியே தெலுங்குக்குத் தாவினாலும் அவரை யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால் மொழி தொடர்பான சென்டிமென்டை நன்குப் புரிந்தவரான அவர், தன் பேச்சு முழுவதும் தமிழில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

தனது பேச்சில், தனக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்ந்து, தன் தந்தை சென்னையை நேசித்ததையெல்லாம் சொன்னார். "எங்கப்பா குடிச்சது, குளிச்சதெல்லாம் தமிழ்நாட்டுத் தண்ணிதான். இந்த சென்னைதான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தது. அப்படிப்பட்ட பூமிக்கு நாம என்ன நன்றி செய்வது... என்ன செய்தால்தான் ஈடாகும்.... அதனால்தான் எங்கப்பா தெலுங்கு கங்கை பெயரில் தண்ணீர் கொடுக்க உத்தரவிட்டார்," என்றார்.

பேசி முடித்து இருக்கையில் அமர்ந்தவரை, ஒரு நிருபர், தெலுங்கில் ரெண்டு வரி பேசுங்க என்றதும், மீண்டும் மேடைக்கு வந்து ஒரு நிமிடம் தெலுங்கில் பேசி கலகலப்பூட்டினார் பாலகிருஷ்ணா.

பின்னர் தன்னைச் சூழ்ந்துகொண்ட நிருபர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக நீண்ட நேரம் பேட்டியளித்தார். உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியவர்களை, நோ பிராப்ளம்... வாங்க பிரதர் என்று தோள்மீது கைபோட்டு போஸ் கொடுத்துவிட்டு, அனைவருக்கும் தவறாமல் வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பினார் 'பாலய்யா'!
Close
 
 

சந்தானத்தை பார்த்தாலே சிரிப்பை அடக்க முடியல: ஹன்சிகா

He Calls Me Angelina Jolie
நகைச்சுவை நடிகர் சந்தானத்தை பார்த்தாலே ஹன்சிகாவால் சிரிப்பை அடிக்க முடியவில்லையாம்.

ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு ஹன்சிகா கோலிவுட்டின் பிசியான நடிகையாகிவிட்டார். சேட்டை, சிங்கம் 2, வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் வாலு, சேட்டை, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் காமெடி நடிகர் சந்தானமும் நடிக்கிறார். அவர்கள் இருவரும் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் ஏற்கனவே ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் குறித்து ஹன்சிகா கூறுகையில்,

நான் நடிக்கும் கிட்டத்தட்ட னைத்து படங்களிலும் சந்தானமும் நடிக்கிறார். வேட்டை மன்னன் படத்தில் இதுவரை சந்தானத்துடன் எனக்கு எந்த காட்சியும் இல்லை. ஆனால் இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட ஷூட்டிங்கி்ல் இருக்கலாம். சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேச மாட்டார். ஆனால் அவரைப் பார்த்தாலே எனக்கு சிரிப்பு வரும். அவர் என்னை ஏஞ்சலினா ஜூலி என்று தான் அழைப்பார்.

அவர் அதற்கான காரணத்தை கூறியபிறகு எனது சிரிப்பை அடக்க கொஞ்ச நேரம் ஆகிறது என்றார்.

உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றதாகக் கூறப்படுவது உண்மையில்லை என்று அவர் தெரிவி்ததார். அப்படின்னா ஹன்சிகா கொழுக், மொழுக்காகத் தான் இருப்பார்.

ஹன்சிகா சீரியஸா நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கும்போது அங்கு சந்தானம் இல்லாம பார்த்துக்கோங்க...
Close
 
 

நடிகர் சங்கத் தேர்தல்... ராதாரவிக்கு எதிராக குமரிமுத்து போட்டி!

Kumari Muthu Contest Against Radha Ravi Nadigar Sangam
நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் ராதாரவியை எதிர்த்து களமிறங்கப் போவதாக காமெடி நடிகர் குமரிமுத்து கூறினார்.

நடிகர் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள்.

இதில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக சிரிப்பு நடிகர் குமரிமுத்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிகர் சங்க தேர்தலில் நான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். நடிகர் சங்கத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். ராதாரவிக்கு போட்டியாகவோ அவரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலோ நான் நிற்கவில்லை.

ராதாரவி எனக்கு சகோதரர் போன்றவர். அவரது தந்தையான நடிகவேல் எம்.ஆர்.ராதா எனக்கு மானசீக குரு. திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் புரட்சி ஏற்படுத்தியவர் எம்.ஆர்.ராதா. பெரியார் சொல்லும் கருத்துக்களை அப்படியே மேடையில் பேசி மக்களிடம் கொண்டு சென்றவர். அவரது மகன் ராதாரவி எனது மரியாதைக்கு உரியவர்.

நடிகர்-நடிகைகளுக்கு நிறைய உதவிகள் செய்ய என்னிடம் திட்டம் உள்ளது. நடிகர் சங்கத்தின் மூலம்தான் அதை நிறைவேற்ற முடியும். எனவேதான் களத்தில் இறங்கியுள்ளேன். வெற்றி பெறுவேனா, தோல்வி அடைவேனா என்பது முக்கியம் அல்ல. எந்த முடிவு வந்தாலும் ஏற்பேன். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிச்சயம் வாபஸ் பெறமாட்டேன்," என்றார் குமரிமுத்து.

இந்த இரு நடிகர்களில் ராதாரவி அதிமுககாரர். குமரிமுத்து பரம்பரை திமுககாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

மங்களகரமான குத்தாட்டத்துடன் மறுபடியும் ஒரு காதல்!

Sanjana Singh Sizzling Item Numbemrarupadiyum Orukathal   
இரண்டு நாயகிகள், ஒரு செமையான குத்துப் பாட்டு என களேபரமாக உருவாகி வருகிறது மறுபடியம் ஒரு காதல்.

மலையாளத்து அனிருத்தை நாயகனாக்கி இப்படத்தை எடுக்கிறார்கள். லண்டனிலிருந்து ஜோஷனா ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக வாணி கிஷோர் இருக்கிறார். கூடவே சஞ்சனா சிங்கும் இருக்கிறார்.

இத்தனை பேரை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்... என்னென்னவோ செய்யலாமே.. இரு நாயகிகளுக்கும் வெயிட்டான ரோலாம். சஞ்சனா சிங்குக்கு அமர்க்களமான குத்துப் பாட்டை கையில் கொடுத்து ஆட விட்டுள்ளனர். அவரது ஆட்டம் பேசப்படுமாம்.

பிறகு, ஜோஷ்னா நடிப்புக்கு புதியவரல்ல. இவரது தாயார் சரோஜா அந்தக் காலத்து நாயகியாவார். வடைமாலை என்ற படத்தில் இவர்தான் நாயகியாம். இந்தப் படத்தை இயக்கியவர் யார் தெரியுமா, வாலிபக் கவி வாலிதான்.

படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் வடிவேலு நடித்துள்ளாராம். அப்படியானால் இந்தப் படம் தயாரிப்பிலேயே எத்தனை காலமாக இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இருந்தாலும் அனைவரும் ரசிக்கும் வகையில், வித்தியாசமான கதையுடன், கலவையுடன் படம் இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குநர்.

நம்புவோம்!
Close
 
 

தாண்டவத்திற்காக அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து குதித்த ஏமி ஜாக்சன்!

Amy Jackson Does Sky Diving Thaandavam
தாண்டவம் படத்திற்காக நடிகை ஏமி ஜாக்சன் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாராசூட் மூலம் குதி்ததுள்ளார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, ஏமி ஜாக்சன், லக்ஷ்மி ராய் நடிக்கும் படம் தாண்டவம். அந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கு தான் படமாக்கப்படுகின்றன.

இந்த படத்தில் ஏமி ஜாக்சன் தான் ஒரு அழகு ராணி மட்டுமல்ல ஆக்ஷன் ராணியும் கூட என்பதை நிரூபித்துள்ளார். அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் ஒரு கைதேர்ந்த ஸ்கைடவர் என்று கூறப்படுகிறது.

தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த காட்சி அமைந்ததால் ரசித்து நடித்துள்ளார். இது தவிர அவர் மேலும் பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏமியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்க நீங்கள் இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால் படம் அப்பொழுது தான் ரிலீஸாகிறது.
Close
 
 

காக்டெய்லுக்காக பிகினியில் வரும் தீபிகா படுகோனே

Deepika Padukone Dons The Bikini Again   
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சைப் அலி கானின் காக்டெய்ல் படத்தில் சிவப்பு நிற பிகினியில் வருகிறார்.

பாலிவுட் நடிகர் சைப் அலி கான் தயாரித்து நடிக்கும் படம் காக்டெய்ல். முக்கோண காதல் கதையான இந்த படத்தில் தீபிகா படுகோனே, டயானா பென்ட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதி்ல் தீபிகா சிவப்பு நிற பிகினி அணிந்து கடற்கரையில் படுத்திருப்பது போன்ற காட்சி உள்ளது. இந்த படத்தில் பிகினியில் வருவதோடு மட்டுமல்லாமல் சைப் அலி கானுடன் படுக்கையறைக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

ஏற்கனவே நரம்பாக இருக்கும் தீபிகா இந்த படத்தில் இன்னும் ஒல்லியாகக் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்+ காமெடி படமான காக்டெய்லை ஹோமி் அதாஜானியா இயக்குகிறார். சைபும், தீபிகாவும் ஏற்கனவே லவ் ஆஜ் கல் மற்றும் ஆரக்ஷான் ஆகிய படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி திரைக்கு வருகிறது.
Close
 
 

வலது கையில் 'பேட்', இடது கையில்... கலங்கடிக்கும் ரோஸ்லின்!

Rozlyn Khan Bares Butt Ipl   
திறமையைக் காட்டி அசத்தி விட்டுப் போகும் பெண்களுக்கு மத்தியில் 'அதை, இதை' காட்டி விட்டுப் போகும் பெண்களின் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

பூனம் பாண்டேதான் இந்த அவிழ்ப்பு புரட்சிக்கு திலகமிட்டு தொடங்கி வைத்தவர். இப்போது அவரது பாணியில் ஏகப்பட்ட பேர் கவர்ச்சியில் கரைபுரண்டோடத் தொடங்கியுள்ளனர்.

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் ஒட்டுத் துணியில்லாமல் ஓடுவேனாக்கும் என்று கூறி உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் பூனம். ஆனால் பப்ளிக்காக அதைச் செய்ய முடியாமல் போனதால் உடனடியாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியும், பேஸ்புக் மூலமும், டிவிட்டர் மூலமும் தனது கவர்ச்சியை களேபரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார் பூனம்.

அதேபோல பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவை தனது கவர்ச்சியால் தள்ளாட வைத்துக் கொண்டிருக்கும் வீணா மாலிக், ஒரு பத்திரிகைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து பயமுறுத்தினார்.

இந்த நிலையில் தற்போது ரோஸ்லின் கான் தன் பங்குக்கு கவர்ச்சியைக் கொட்ட ஆரம்பித்துள்ளார். ஐபிஎல்லுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரோஸ்லின் சமீபத்தில் படு கவர்ச்சிகரமான செயல்களில் ஈடுபட்டு வியர்க்க வைத்தார். இப்போது அவரது ஹாட்டான புகைப்படங்கள் உலா வர ஆரம்பித்துள்ளன - வழக்கம் போல நெட்டில்தான்.

அதில் ஒரு புகைப்படத்தில், கிரிக்கெட் வீரர்களைப் போல கையில் பேட், கிளவுஸ், ஷூ, பேடுடன் காட்சி தருகிறார் ரோஸ்லின். வலது கையில் பேட்டைப் பிடித்தபடி நிற்கும் அவர், இடது கையால் தனது மினி ஸ்கர்ட்டை விலக்கி தனது பின்பக்கத்தைக் காட்டுகிறார்.

அவரது இடுப்பில் ஐபிஎல் லோகோவை பொறித்துள்ளார். பின்பக்கத்தில் பை டிக்கெட் நவ் என்ற வாசகத்தையும் கூடவே போட்டு வைத்துள்ளார்.

ஏங்க இப்படி என்று ரோஸ்லினிடம் கேட்டால், ஜான் ஆப்ரகாமும், துஷார் கபூரும் இப்படி போஸ் கொடுத்தால் மக்கள் என்ன நினைப்பார்களோ அதே போலத்தான் என்னுடைய போஸையும் பார்ப்பார்கள் என்று சூப்பர் பதில் கொடுக்கிறார் ரோஸ்லின்.

பூனம் பாண்டேவுக்கு வந்தாச்சு ஆபத்து...!
Close
 
 

10 நாட்களில் ரூ.52 கோடி அள்ளிய கப்பார் சி்ங்: தெலுங்கில் பாக்ஸ் ஆபீஸ் ராணியான ஸ்ருதி ஹாசன்

Pawan Kalyan Gabbar Singh Crosses Rs 50 Crore Boxoffice    | ஸ்ருதி    | பவன் கல்யாண்  
பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன் நடித்த கப்பார் சிங் திரைக்கு வந்த 10 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இது மகதீரா, தூக்குடு ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்து ஹிட்டான தபாங் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் கப்பார் சிங். சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள இந்த படம் கடந்த 11ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. முதல் வாரத்திலேயே ரூ. 42.55 கோடி வசூலாகி பாக்ஸ ஆபீஸில் புதிய சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் வார வசூல் மகதீரா, தூக்குடு ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இந்நிலையில் படம் ரிலீஸான 10 நாட்களிலேயே ரூ.52.25 கோடி வசூலாகியுள்ளது. இரண்டாவது வாரத்தில் ரூ.9.70 கோடி வசூலாகியுள்ளது. இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் வசூல் ரூ.65 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்காத பவன் கல்யாணுக்கு இந்த படம் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. தெலுங்கில் ஸ்ருதி ஹாசன் நடித்த முதல் 2 படங்கள் ஓடாத நிலையில் கப்பார் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் டோலிவுட்டில் ஸ்ருதியின் மவுசு கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்ருதியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டுள்ளது.
Close
 
 

'தல' படத்தில் அரவிந்த்சாமி!

Arvind Swamy Join Ajith Kumar
தல அஜீத் குமாரை வைத்து விஷ்ணுவர்தன் எடுக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறாராம்.

அஜீத் குமார் அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் தான் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தில் புதிதாக இரு நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை அரவிந்த்சாமியும், பிரித்விராஜும் தான்.

மணிரத்னத்தால் திரையுலகிற்கு வந்த அரவிந்த்சாமி பிசினஸில் பிசியாகி படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள் அல்லவா. அதற்கேற்ப படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்துள்ளார்.

மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். இந்நிலையில் தான் அவருக்கு விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 30ம் தேதி மும்பையில் துவங்குகிறது.
Close
 
 

‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’: அண்ணாச்சியின் ஜாலி லூட்டி

Adhithya Tv Program Sollunganne Sollunga
ஆதித்யா டிவி-யில் ஞாயிறுக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சி செம ஜாலி என்று ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமே இமான் அண்ணாச்சியின் பேச்சும், நேயர்களிடையே அவருடைய அணுகுமுறையும்தான்.

ஊர் ஊராக சென்று மக்கள் கூடியிருக்கும் இடங்களில் மைக் பிடித்து ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை கேட்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம். எந்த ஒரு நிகழ்ச்சியிலுமே நேயர்களின் பங்களிப்பு இருந்தால் அது நிச்சயம் வெற்றி பெரும் என்பதற்கு ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ ஒரு உதாரணம்.

மக்கள் கூட்டத்தில் திடீரென்று மைக் நீட்டிய அண்ணாச்சி ‘டார்ச் இருக்குல்ல டார்ச் அதை எப்டி சொல்லுவீங்க? என்று ஒரு கேள்வியைப் போட்டார். அதற்கு பதிலளித்தவர்கள் பெரும்பாலும் ‘ எங்க வீட்ல டார்ச்சுன்னுதான் சொல்லுங்க என்றனர். அதற்கு நக்கல் சிரிப்பு சிரித்தவாறே அண்ணாச்சி கூறுவதுதான் ஹைலைட்.

‘ஏ பாத்தியாளா இவங்க வீட்ல டார்ச்சை டார்ச்சுனுதான் சொல்லுவாங்களாம்’ என்று கூறும் போதே சிரிப்பு களை கட்டுகிறது. இதேபோல் ஒவ்வொரு வாரமும் புழக்கத்தில் உள்ள ஆங்கில வார்த்தையை எடுத்துக்கொண்டு அதற்கு சரியான வார்த்தையை கேட்கிறார் அண்ணாச்சி. ரசித்து ருசிக்க வேண்டிய நிகழ்ச்சி பாருங்களேன். தமிழ்வார்த்தைகளை நாமும் தெரிந்து கொள்ளலாம்.
Close