மலையாள நடிகையான ஆசினை ரஜினி ஜோடியாக்க கூடாது. மீறி செய்தால் படப்பிடிப்புகளில் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி மிரட்டியுள்ளது. ரஜினி வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளது. ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், 'கோச்சடையான்'. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அசின் நடிக்கலாம் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. மேலும் அசினிடம் சவுந்தர்யா பேசி வருவதாகவும், கிட்டதட்ட இந்த பேச்சு முடிந்துவிட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக மலையாள நடிகையான அசின் நடிக்க கூடாது என இந்து மக்கள் கட்சியின் போர் கொடியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் யாரை ஹீரேரியனாக போடலாம் என பெரிய டிஸ்கஷனே நடந்து வருகிறது.