முன்அனுமதியோடே நடந்ததாம் அஜித் பட ஷூட்டிங்... யாரும் கைதாகவில்லையாம்!

சென்னை: முன் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக அஜித் - கவுதம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படக்குழுவினர் சிலர் கைதானதாக வெளியான தகவல் உண்மையில்லை எனக் கூறப்படுகிறது.

கவுதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது.

முன்அனுமதியோடே நடந்ததாம் அஜித் பட ஷூட்டிங்... யாரும் கைதாகவில்லையாம்!

இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பு காரணமாக அப்பகுதி மக்களின் தூக்கம் பாதிக்கப்பட்டதாக நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் தந்ததாகவும், இதனால், முறையாக அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக தயாரிப்பு மேலாளர், அவரின் உதவியாளர் மற்றும் லைட் பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின.

ஆனால், அச்செய்திகளில் உண்மையில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக முன் அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்தப் பட்டதாகவும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும், இதுவரை யாரும் தங்கள் மீது புகார் அளிக்கவில்லை, போலீசாரும் யாரையும் கைதும் செய்யவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஊதா கலரு ரிப்பன் ரொம்பவே தெளிவு தான்!

சென்னை: ஊதா கலரு ரிப்பன் நடிகை ரொம்பே தெளிவாக உள்ளார்.

வாலிபர் சங்க படத்திற்கு பிறகு ஊதா கலரு ரிப்பன் நடிகைக்கு மவுசு அதிகரித்துவிட்டது. வளர்ந்து வரும் பல நடிகைகள் பல்வேறு கன்டிஷன்கள் போடுகின்றனர். ஆனால் ஊதா கலரு ரிப்பனோ பெரிய இயக்குனரின் படம் என்றால் எந்தவித கன்டிஷனும் போடாமல் நடிக்க ஒப்புக் கொள்கிறார். இதனாலேயே இந்த நடிகையை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால் ஹீரோக்கள் மட்டும் ஆஜானபாகுவாய் இருந்தால் அந்த படத்தில் நடிக்க மறுக்கிறாராம். ஹீரோ இப்படி ஆஜானபாகுவாய் இருந்தால் அவர் பக்கத்தில் நான் நின்றால் காணாமல் போய்விடுவேன். அதனால் வாலிபர் சங்க தலைவர் போன்று உடல்வாகுள்ள நடிகர்களுடனேயே நடிக்க விரும்புகிறேன் என்கிறாராம்.

அதே சமயம் லீடர் மற்றும் சிங்கத்துடன் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளாராம். அந்த இருவருக்கும் தான் பொருத்தமான ஜோடியாக இருப்பேன் என்று ஒரு பிட்டை போட்டுள்ளாராம்.