ரஜினி குணமடைந்ததால் விருது கொண்டாட்டங்கள் ஆரம்பம்! - தனுஷ்


ரஜினி பூரணமாகக் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்துவிட்டதால், தனக்கு தேசிய விருது பெற்றதற்கான் கொண்டாட்டங்களை இனி ஆரம்பிக்கப்போவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

ரஜினி உடல்நலக் குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அவரது மருமகன் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆடுகளம் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

ஆனாலும், இந்த சந்தோஷத்தை தனுஷ் கொண்டாடவில்லை. தனக்குக் கிடைத்த விருதினை ரஜினிக்கு சமர்ப்பிப்பதாகவும், அவர் நலம் பெற்ற எழுந்துவந்த பிறகே, விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடுவேன் என்றும் தனுஷ் கூறியிருந்தார்.

சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ரஜினி, கிடுகிடுவென தனது பழைய உடல் நிலையை அடைந்துவிட்டார். இப்போது பூரண ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் ஆகி, தனி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து, தனக்கு தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களை ஆரம்பிக்கப் போவதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

இன்று அவர் ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், "சூப்பர் ஸ்டார் பூரண நலத்துடன் நேற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். இனி தேசிய விருதுக் கொண்டாட்டங்கள் ஆரம்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினி : சிங்கப்பூரில் சில வாரங்கள் ஓய்வு எடுக்க முடிவு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினி : சிங்கப்பூரில் சில வாரங்கள் ஓய்வு எடுக்க முடிவு!

6/15/2011 3:36:12 PM

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர்  ரஜினிகாந்த் இன்று  டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் ஆனாலும், சிங்கப்பூரில் சில வாரங்கள் ஓய்வு எடுப்பார் என்றும், அடுத்த மாதம் சென்னை திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜூலை இரண்டாவது வாரம் சென்னை திரும்புகிறார். இதற்கிடையே, ரஜினியை வரவேற்க இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.

சில மாதங்களுக்கு முன், 'ராணா' பட ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ரஜினிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு வீடு திரும்பினார். சில நாட்களில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற, கடந்த மாதம் 27ம் தேதி சென்றார் ரஜினி. அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த தற்போது பூரண குணமடைந்து விட்டார்.

டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் சூப்பர் ஸ்டார் உடல்நலம் தேறியுள்ளார்.

ரசிகர்களை எப்போது சந்திக்கிறார் ரஜினி?

இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின், ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேச ரஜினி ஆர்வமாக இருகப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், விரைவில் அவர் ரசிகர்களை நேரடியாக சந்தித்து, அவர்களின்(ரசிகர்களின்) அன்பிற்கு நன்றி தெரிவிப்பார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

நடிகர் நாகார்ஜுனாவின் மகனை மணக்கிறார் அனுஷ்கா : நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் நாகார்ஜுனாவின் மகனை மணக்கிறார் அனுஷ்கா : நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு?

6/15/2011 2:11:42 PM

நடிகை அனுஷ்கா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும்   நடிகருமான நாக சைதன்யாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  இருவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு படவுலகின் முன்னணி கதாநாயகியான அனுஷ்கா, காதல் வலையில் விழுந்துள்ளார் இது பற்றி அவர் கூறும்போது ÔÔநான் காதலிப்பது உண்மைதான். அவர் யாரென்று சொன்னால் பலரின் புருவங்கள் உயரலாம் என்பதால் அவரது பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை. அவரும் என்னை காதலித்து வருகிறார். தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படங்கள் முடிவடைவதற்கு இன்னும் 2 ஆண்டுகளாகும். அதன் பின்னர் எங்கள் திருமணம் நடைபெறும்'' என்றார். காதலிப்பது உண்மை தான் என்று வெளிப்படையாக அனுஷ்கா ஒப்புக் கொண்டதும், தெலுங்கு படவுலகில் பலர் தங்கள் யூகங்களை வெளியிட்டனர். பெரும்பாலோர் Ôவானம்Õ பட  இயக்குநர் கிரிஷ் தான் அந்த காதலன் என்றனர். ஆனால் நாகர்ஜுனாவின் வாரிசான நாக சைதன்யாவைதான் அவர் காதலித்து வருகிறார் என்பதும், அவர்கள் இருவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் ரகசிய திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் தொடர்பாக இருவரும் சேர்ந்து அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தமிழ் சினிமா ஆடியோ விழா: சல்மான்கான் - விஜய் பங்கேற்பு!


இப்போதெல்லாம் மும்பையில் இருப்பதை விட சென்னை-ஹைதராபாத்-பெங்களூர் என தென்னிந்திய நகரங்களில்தான் அதிகம் காணப்படுகிறார் நடிகர் சல்மான்கான்.

கடந்த வாரம் முழுவதும் சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட்டுக்காக தென்னிந்தியாவில் முகாமிட்டிருந்த சல்மான், இன்று சென்னை வருகிறார்.

பிரபல வில்லன் நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்சி விஜயன் தனது மகன் சபரீஸை மார்க்கண்டேயன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அமைந்தகரையில் உள்ள பி.வி.ஆர். மல்டிப்ளெக்ஸில் மாலை 6 மணிக்கு நடக்கிறது. இப்பட விழாவில் சல்மான்கான் பங்கேற்கிறார். இதற்காக தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

விழாவில் பங்கேற்று விட்டு இரவே மும்பை திரும்புகிறார். அவருடன் நடிகர் விஜய், நடிகை ஸ்ரேயா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து பெப்சி விஜயன் கூறுகையில், “சல்மான்கான் எனது நீண்ட நாள் நண்பர். அவரது பெரும்பாலான படங்களுக்கு நான்தான் ஸ்டன்ட் மாஸ்டர். சண்டை காட்சிகள் சிறப்பாக வர வேண்டும் என்பதில் அவர் அதிக அக்கறை காட்டுவார். என் மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்வது பற்றியும் அப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை நடத்துவது பற்றியும் அவரிடம் சொன்னேன். நேரில் வந்து வாழ்த்துவதாகக் கூறி வருகிறார்…”, என்றார்.

 

வியன்னாவில் வித்தகன் படப்பிடிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வியன்னாவில் வித்தகன் படப்பிடிப்பு

6/15/2011 12:52:37 PM

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிக்கும் படம் 'வித்தகன்'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் பார்த்திபன். அவர் ஜோடியாக பூர்ணா. வில்லனாக மிலிந்த் சோமன் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்த நிலையில் இப்போது வியன்னாவில் பாடல் காட்சியை படமாக்கி விட்டு திரும்பியுள்ளனர். இதுபற்றி பட யூனிட்டில் விசாரித்தபோது கூறியதாவது: படம் ஏற்கனவே முழுவதும் முடிவடைந்த நிலையில் பாடல் காட்சிகள் மட்டும் பாக்கியிருந்தது. அதற்காக, பார்த்திபன், பூர்ணா உட்பட பட யூனிட் வியன்னா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்குச் சென்று வந்துள்ளது. அங்கு இதுவரை தமிழ்ப் படங்களின் ஷூட்டிங் நடக்கவில்லை. புதுமையான லொகேஷன்களில் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. இதோடு படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது எடிட்டிங் பணி நடந்து வருகிறது. அடுத்த மாத இறுதி அல்லது ஆகஸ்டில் படம் ரிலீஸ் ஆகும்.

 

விருது வாங்க ஆசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விருது வாங்க ஆசை

6/15/2011 12:51:10 PM

'ஒரு படத்திலாவது விருது வாங்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறேன்' என அஞ்சலி கூறினார். இதுபற்றி அவர் கூறும்போது, ''கருங்காலி', 'மகாராஜா', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த சில கேரக்டர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஒரு படத்திலாவது விருது வாங்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறேன். அதற்காக, நடிப்புக்கு சவால் விடும் கேரக்டர்களைத் தேடி நடிக்கிறேன். எனது ஆசை நிறைவேறிய பிறகு பிற மொழி படங்களில் நடிப்பேன்' என்றார்.

 

போராளி தனிமனிதனின் கதை: சசிகுமார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போராளி தனிமனிதனின் கதை: சசிகுமார்

6/15/2011 12:51:57 PM

தனிமனிதனின் போராட்டத்தைச் சொல்லும் படமாக, 'போராளி' உருவாகிறது என்று சசிகுமார் கூறினார். சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படம் 'போராளி'. இதில் 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதி, வசுந்தரா, நிவேதா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மேலும் அல்லரி நரேஷ், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கிறார்கள். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் சி. பாபு இசை அமைக்கிறார். சென்னை குரோம்பேட்டையில் செட் அமைத்து இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் பற்றி சசிகுமார் கூறியதாவது:

இது புரட்சிகர கதை இல்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்துக்காகப் போராட வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் 'போராளி' என்ற தலைப்பு வைத்துள்ளோம். இதன் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்லரி நரேஷை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறோம். மூன்று ஹீரோயின்கள் தேவையா என்கிறார்கள். இந்த கதைக்கு தேவையாக இருந்தது. அதனால் தேர்வு செய்தோம். இதில் நடிக்கும் நிவேதா மலையாளத்தில் நடித்து வருகிறார். இவரை, குழந்தை நட்சத்திரமாக, தான் இயக்கிய டி.வி தொடரில் அறிமுகப்படுத்தியவர் சமுத்திரக்கனி. அவரே இப்போது நிவேதாவை தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக்குகிறார். படத்தின் கதைப்படி முதல்பாதி வரை அதிக தலைமுடியுடன் வருவேன். இரண்டாம் பாதியில் கதை நகரத்துக்கு வந்ததும் வேறு கெட்டப்பில் வருவேன். அதற்காக அதிகமாக வளர்த்த முடியை, இப்போது வெட்டிவிட்டேன். முதல்கட்ட படப்பிடிப்பு தேனியில் நடந்தது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இவ்வாறு சசிகுமார் கூறினார்.

 

ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

6/15/2011 12:27:46 PM

சென்னை: சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினிகாந்த், மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி 'ராணா' தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், 'ரஜினி நலமாக உள்ளார். டிஸ்சார்ஜ் ஆவது குறித்து உறுதியாகத் தெரியவில்லை' என்றார். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும் இதையே சொன்னார். ரஜினி விரைவில் டிஸ்சார்ஜ் ஆனதும், சிங்கப்பூரில் சில வாரங்கள் ஓய்வு எடுப்பார் என்றும், அடுத்த மாதம் சென்னை திரும்புவார் எனவும் திரும்பியதும், 'ராணா' படத்தில் நடிப்பது பற்றி அறிவிப்பார் என்றும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.




 

அனுஷ்கா - நாக சைதன்யா நிச்சயதார்த்தம்... அதிர்ச்சியில் கோடம்பாக்கம்!!


நம்புவதா வேண்டாமா என குழப்பத்திலும் பரபரப்பிலும் திணறிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். காரணம்... தென்னிந்தியாவை தனது இடுப்பு மடிப்பில் சுருட்டி வைத்திருக்கும் கவர்ச்சி நாயகி அனுஷ்கா ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற செய்'தீ'தான்!

இவரைக் கல்யாணம் முடித்திருப்பவர் அக்கட பூமியின் காதல் மன்னனான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை!!

காதும் காதும் வைத்தமாதிரி, ஆனால் நாகார்ஜூன் - அமலா முன்னிலையில் நடந்துள்ளது இந்தத் நிச்சயதார்த்தம்.

மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த செய்தியை கோலிவுட்டின் பிரபல இளம் ஹீரோதான் டமாரம் அடித்து பறைசாற்றி வருகிறாராம். இவர் அம்மணியுடன் சமீபத்தில் ஆட்டம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அமலா, ரஜினியுடன் தொடர்ந்து நடித்து டாப் கியரில் போய்க்கொண்டிருந்த போதுதான், திடுதிப்பென்று நாகார்ஜூனாவை திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.

அதே மாதிரி அனுஷ்கா முன்னணி நடிகையாக இருக்கும் போதே அவரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார் நாகார்ஜூனா - அமலா மகன் நாக சைதன்யா... திருமணத்தையாவது வெளியில் சொல்வார்களா?
 

அதிமுக பிரமுகர் மீது புகார் கொடுத்ததால் சோனாவை விசாரிக்கும் போலீஸ்!!


பொதுவாக, யார் மீது தரப்பட்டுள்ளதோ அவரை முதலில் அழைத்து விசாரிப்பதுதான் போலீஸ் நடைமுறை. பின்னர்தான் புகார் கொடுத்தவரிடம் விளக்கம் கேட்பார்கள்.

ஆனால் கவர்ச்சி நடிகை சோனா விஷயத்தில் நடப்பது வேறு. காரணம் அவர் புகார் கொடுத்திருப்பது அதிமுக பிரமுகர் மீது! விளைவு, புகார் கொடுத்த சோனாவையே மடக்கி மடக்கி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் புறநகர் போலீஸார்.

அதிமுக பிரமுகரான ராமலிங்கத்துக்கு சொந்தமான கட்டடத்தில் வைத்து தனது மரத் தொழிற்சாலையை நடத்தி வந்தார் நடிகை சோனா. இதற்கு ரூ 7 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.

இப்போது தனது நிறுவனத்தை போரூருக்கு இடம்மாற்றியுள்ளார். இதற்காக முறைப்படி வீட்டு உரிமையாளரான ராமலிங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வாடகை பாக்கியைக் கழித்துக் கொண்ட பிறகு ரூ 4 லட்சம் வரை சோனாவுக்கு ராமலிங்கம் தர வேண்டி வந்தது.

ஆனால் கட்டட பராமரிப்பு செலவு என்று கூறி, முழுத் தொகையையும் அவர் தரமறுத்துவிட்டார். இதற்காகத்தான் சோனா புகார் தந்துள்ளார். ஆரம்பத்தில் இவரது புகாரை போலீஸார் ஏற்கவே மறுத்துவிட்டது தனிக்கதை!

உடனே அவர் கமிஷனர் அலுவலகம் போக, அங்கே, இது புற நகர் லிமிட்டில் வருவதால் அங்கே போய் புகார் கொடுங்கள் என அனுப்பிவிட்டனர்.

"நடிகைதானே... என்ன செய்துவிட முடியும் அவரால்' என்ற ராமலிங்கத்தின் நினைப்பும், ஆளும் கட்சி பிரமுகர் என்ற மிதப்பும் சோனாவை இப்படி வைக்கிறது. இதில் வேறு வில்லங்கங்களும் உள்ளன. அவை இனிமேல்தான் வெளிவரும்," என்கிறார்கள் திரையுலகினர்.

ஆட்சிக்கு வந்து முழுசாக மூன்றுவாரங்கள்தான் ஆகின்றன...அதற்குள் அடிப்பொடிகள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்களா!
 

நடிகை கனகா Vs ஆவி அமுதா வழக்கு தள்ளி வைப்பு!


சென்னை: சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பைக் கிளப்பிய நடிகை கனகா - ஆவி அமுதா வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் ஆவி அமுதா. இவர், இறந்தவர்களின் ஆவியுடன், சம்பந்தப்பட்ட உறவினர்கள் பேசுவதாகக் கூறி, அதற்கென மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தனது தாயார் தேவிகாவின் ஆவியுடன் பேசுவதற்காக ஆவிஅமுதாவை நடிகை கனகா தொடர்பு கொண்டுள்ளார். அப்போது இருவரும் நெருங்கிப் பழகினர்.

இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் முத்துக்குமார் என்பவருக்கும், கனகாவுக்கும் ரகசிய திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் முத்துக்குமார், கனகாவை விட்டு மாயமாகிவிட்டார்.

ஆவிஅமுதாதான் முத்துக்குமாரை தன்னிடமிருந்து பிரித்துவிட்டதாக கனகா குற்றம் சாட்டினார்.

தனது மீது அவதூறு செய்தியை பரப்பி, பெயருக்கு களங்கம் விளைவித்த கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் ஆவிஅமுதா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை நேற்று நடந்தது. கனகா மற்றும் ஆவிஅமுதா இருவரும் நேற்று சைதை நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 27ம்தேதிக்கு தள்ளி வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
 

டிஸ்சார்ஜ் ஆனார்: ஜூலை முதல் வாரத்தில் சென்னை திரும்பும் ரஜினி!


சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ரஜினிகாந்த், நேற்று மாலை டிஸ்சார்ஜ் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும், தொடர்ச்சியான செக்கப்புகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்காக தொடர்ந்து சிங்கப்பூரிலேயே ஒரு நவீன அபார்ட்மெண்டில் தங்கியிருப்பார். இந்த அபார்ட்மெண்ட் மிகுந்த பாதுகாப்பு மற்றும் சகல வசதிகளும் கொண்டதாக இருக்கும்.

ஜூலை முதல்வாரம் வரை இங்கே தங்கியிருக்கும் ரஜினி, இரண்டாவது வாரம் நாடு திரும்புகிறார்.

பாதுகாப்பு மற்றும் தனிமை கருதி இந்த விஷயத்தை வெளியிடாமல் உள்ளனர் ரஜினி குடும்பத்தினர்.

இதற்கிடையே, ரஜினியை வரவேற்க இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டனர் அவரது அனைத்து மாவட்ட ரசிகர்களும்.

திரையுலகம் காணாத வகையில் ஒரு மெகா வரவேற்பை விமான நிலையத்திலேயே அளிக்கலாம் என நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகினரும் முடிவு செய்துள்ளனர்.

 

குட்டி பத்மினியின் மோசடி வழக்கு: ரம்யா கிருஷ்ணனுக்கு நோட்டீஸ்!


சென்னை: நடிகை குட்டி பத்மினி தொடர்ந்த மோசடி வழக்கில், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரிக்கு வாரண்டு பிறப்பித்து எழும்பூர் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வைஷ்ணவீஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் நடிகை குட்டி பத்மினி தாக்கல் செய்த வழக்கில், “நான் 2008-ம் ஆண்டு `கலசம்’ என்ற பெயரில் கதை எழுதினேன். இந்த கதைக்குள்ள முழு காப்பீட்டு உரிமை எனக்கு உள்ளது. காப்பீட்டு உரிமைக்காக 2008-ம் ஆண்டு டிசம்பரில் நான் விண்ணப்பித்தேன். கலசம் தலைப்பில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட கதைக்கும் நான் காப்பீட்டு உரிமை கேட்டு விண்ணப்பித்தேன்.

இந்த நிலையில் கலசம் என்ற தலைப்பில் தயாரிக்கப்படும் டி.வி. தொடரில், நான் எழுத்தாக்கப் பிரிவில் தலைமை வகித்து, அதற்கான சம்பளத்தை நான் பெறுவது தொடர்பாக, ஆர்.டி.வி.ஸ்டார்லைட் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரியும் பங்குதாரருமான வினயா கிருஷ்ணன் மற்றும் எனக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் ரம்யா கிருஷ்ணனும் வினயா கிருஷ்ணனும் அந்த ஒப்பந்தத்தை சரிவர பின்பற்றவில்லை. இதனால் அவர்களுக்கு நான் நோட்டீஸ் அனுப்பினேன். இதனால் ஒப்பந்தத்தில் இருந்து நான் நீக்கப்பட்டேன். இந்த விவகாரம் பற்றி உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்தேன். இந்த விஷயத்தில் தென்இந்திய டி.வி. தொடர் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டதன் விளைவாக 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டோம்.

நம்பிக்கை மோசடி

புதிய ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, அவர்களின் மேல் நம்பிக்கை வைத்து உயர்நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒப்பந்தத்துக்கு முரணாக அவர்கள் செயல்பட்டு, தெலுங்கு மொழியில் கலசம் டி.வி. தொடரை ஒளிபரப்பினர். அதில் எனது பெயரை டைட்டிலில் போடவில்லை. சம்பளமும் தரவில்லை. இதனால் எனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. வேண்டுமென்றே அவர்கள் இந்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர்.

இது என்னை ஏமாற்றும் நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் இவர்கள் காப்பீட்டு உரிமைச் சட்டப் பிரிவு 63 மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 406 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றுதல்) ரம்யா கிருஷ்ணன் மற்றும் வினயா கிருஷ்ணனை தண்டிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆஜராகாத ரம்யா கிருஷ்ணன்

இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு கீதாராணி விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணைக்கு ரம்யா கிருஷ்ணன் மற்றும் வினயா கிருஷ்ணன் ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக கடந்த 9-ந் தேதி மாஜிஸ்திரேட்டு வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்த வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று 2 பேரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.