சென்னை: ஐ படத்தில் வரும் கூன் விழுந்த கதாபாத்திரத்திற்காக டப்பிங் பேசி விக்ரமின் தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள படம் ஐ. இந்த படத்தில் கூன் விழுந்த கதாபாத்திரத்திலும் விக்ரம் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்காக முரட்டுத்தனமான குரலில் டப்பிங் பேசிய விக்ரமின் தொண்டையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விக்ரமோ மும்பைக்கும், ஹைதராபாத்துக்குமாக பறந்து கொண்டிருக்கிறார்.
அதாவது மும்பையில் ஐ படத்தின் இந்தி டப்பிங் மற்றும் ஹைதராபாத்தில் தெலுங்கு டப்பிங் பேசி வருகிறார் விக்ரம். சிகிச்சை பெறாமல் அவர் டப்பிங் பேசி மேலும் குரலை கெடுத்துக் கொண்டுள்ளார்.
ஐ படத்திற்காக விக்ரம் உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ படத்தை அடுத்து விக்ரம் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.
விக்ரம், சமந்தா ஜோடி சேர்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.