அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மோசடி நடந்துள்ளது என்று கூறி நீதிமன்றம் செல்ல முடிவெடுத்துள்ளனர்
இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்பது எப்படி எம்ஜிஆரைக் குறிக்குமோ, அப்படி சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியை மட்டுமே குறிக்கும் இதை அடுத்தவருக்கு பறித்துக் கொடுக்க முனைவது தவறு என்று கண்டித்தனர். குறித்த பத்திரிக்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இன்னொரு பக்கம், இந்த கருத்துக் கணிப்பே மோசடியானது என்றும், இதில் உண்மையில் வென்றவர் அஜீத்தான், ஆனால் அவரை அணுக முடியாத கோபத்தில் விஜய்க்கு இப்படி ஒரு பட்டம் தந்ததாகவும், அதற்கு விஜய்யும் உடந்தை என்றும் அஜீத் ரசிகர்கள் கொதிக்க ஆரம்பித்தனர்.
இதுகுறித்து முன்னணி நாளிதழும் செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் இந்த விஷயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிலு செய்துள்ளனர்.
சென்னையில் இன்று கூடிய அஜீத் ரசிகர்கள் (முன்னாள் மன்றப் பொறுப்பாளர்கள்), இதுகுறித்து ஆலோசனை செய்தனர். இறுதியில், நீதிமன்றத்தில் குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செயதுள்ளனர்.
சரி, இதெல்லாம் அஜீத்துக்கு தெரியுமா ரசிகர்களே..!