சிறந்த தமிழ்ப் படத்திற்கு விருது: அமெரிக்க தமிழ் அமைப்பு ஃபெட்னா அறிவிப்பு

சான் ஓசே(யு.எஸ்): வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை (FeTNA) யின் சார்பில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான புதிய விருது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

தமிழர் வாழ்வியல், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படத்துக்கு இந்த ஆண்டு நடைபெறும் ஃபெட்னா தமிழ் விழாவில் விருது வழங்கப்படும்.

சிலிக்கான் வேலியில் ஃபெட்னா 2015 தமிழ் விழா

அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் ஃபெட்னா வின் 28 வது தமிழ் விழா சிலிக்கான் வேலியின் சான் ஓசே நகரில் ஜூலை 2ம் தேதி முதல் நடைபெறுகிறது. மிசிசிபி நதிக்கு மேற்கே உள்ள அமெரிக்க நிலப்பரப்பை, க்ளார்க் - லூயிஸ் இரட்டையர்கள் நதியை தாண்டிய இடமான செயிண்ட் லூயிஸ் நகரிலிருந்து தான் கண்டுடெடுத்தார்கள். அமெரிக்க வரலாற்றில் 'West Exploration' என்ற பெருமை பெற்ற நகரம் செயிண்ட் லூயிஸ் ஆகும். இது வரையிலும் மிசிசிபி நதிக்கு கிழக்குப் பகுதி நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த ஃபெட்னா தமிழ் விழாக்கள் கடந்த ஆண்டு செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. அங்கிருந்து அடுத்த இடமாக மேற்கு கரையோர சான் ஓசே நகருக்கு சென்றிருப்பது ஃபெட்னா வரலாற்றிலும் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

சிறந்த தமிழ்ப் படத்திற்கு விருது: அமெரிக்க தமிழ் அமைப்பு ஃபெட்னா அறிவிப்பு

மூவாயிரம் தமிழர்கள் சங்கமம்

கம்ப்யூட்டர் துறையில் கொடிகட்டி பறக்கும் பெரும்பாலான அமெரிக்கத் தமிழர்கள் சிலிக்கான் வேலி பகுதியில் வசித்து வருகிறார்கள். பேரவையும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும் இணைந்து தமிழ் விழாவை நடத்துகிறார்கள். இசைப் பேரறிஞர் வீ.ப.கா சுந்தரம் நூற்றாண்டு விழா மற்றும் பாபநாசம் சிவன் 125 ஆண்டு விழாவாக கொண்டாடப் படுகிறது. சான் ஓசே சிட்டி நேஷனல் சிவிக் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இந்த விழாவில் சுமார் மூவாயிரம் தமிழர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

தொழில் முனைவோர் கருத்தரங்கம்

ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு பெயர் பெற்ற சிலிக்கான்வேலியில், புதிய தொழில்கள் நிறுவி வெற்றி பெற்ற தமிழர்கள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. வெவ்வேறு துறை சார்ந்த பல்வேறு சாதனையாளர்கள், புதிதாக தொழில்கள் தொடங்க விரும்புபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இது அமையும். ஏராளமான தொழில் அதிபர்கள், வல்லுனர்கள் கலந்து கொள்கிறார்கள். முந்தைய ஆண்டுகளை விட, இந்த கருத்தரங்கத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

அனைத்து தரப்பினருக்கும் போட்டிகள்

குழந்தைகளுக்கான வட அமெரிக்கக் குறள் தேனீப் போட்டி, கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி, புகைப்படப் போட்டி உட்பட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறும்படப் போட்டியும் உண்டு. இளம் எழுத்தாளர் விருதும் வழங்கப்பட உள்ளது.

எமி ஜாக்சனும் இன்னிசை விருந்தும்

ஐ படப் புகழ் எமி ஜாக்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். பென்னட் அண்ட் பேண்ட் குழுவினருடன் பின்னணிப் பாடகர் ஹரிசரண், ஆலப் ராஜு, ரோஷிணி, பூஜா, ப்ரகதி ஆகியோர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது. பாகிரதி இயக்கத்தில் கலிஃபோர்னியா நாடகக் கலைஞர்களின் பங்கேற்பில் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. கவிஞர் சுமதிஸ்ரீ, தமிழிசை முனைவர் சௌம்யா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர ராஜன், முனைவர் மார்கரெட் பாஸ்டின், தி.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், விஐடி வேந்தர் விஸ்வநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், பேராசிரியர் அப்துல்காதர், எழுத்தாளர் பூமணி, கல்யாண மாலை மோகன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்

முதன் முறையாக தமிழ்த் திரைப்படத்திற்கு விருது

அமெரிக்கத் தமிழர்களின் வாழ்க்கையில் தமிழ் சினிமா முக்கிய அங்கம் வகிக்கிறது என்றால் மிகையல்ல. 60 - 70ம் ஆண்டுகளின் காலக்கட்டங்களில், பல்கலைக்கழக வளாகங்களிலோ அல்லது தனி அரங்குகளிலோ திரைப்படங்கள் திரையிடும் போது தான் தமிழர்களை ஒன்றாக காண முடிந்தது. பல முன்னோடித் தமிழ்ச் சங்கங்கள் உருவாவதற்கு, அந்த காலக்கட்ட தமிழ்த் திரைப்படங்கள் பேருதவி புரிந்துள்ளன.

தற்போது அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும், பெரு நகரங்கள் சிறு நகரங்கள் என தமிழர்கள் வசிக்கும் இடமெல்லாம், வியாழக்கிழமையே தமிழ்ப் படங்கள் சிறப்புக் காட்சிகளுடன் வெளியாகின்றன.

அமெரிக்கத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கு இந்த ஆண்டு பேரவை விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.

அமெரிக்கத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு

தமிழர் வாழ்வியலை வெளிக்காட்டும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மொழியைச் சிதைக்காமல், சமூக சூழலைப் பற்றிய சிறந்த திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் பேரவைக் குழு தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களிலிருந்து, அமெரிக்கத் தமிழர்களின் பெரும்பான்மையான வாக்குகள் பெறும் திரைப்படத்திற்கு விருது வழங்கப்படும். சிறந்த இயக்குனருக்கும் விருது உண்டு.

முந்தய பேரவை விழாக்களில் கலந்து கொண்டவர்கள் மற்றும் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்பவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.

நோ டபுள் மீனிங் டயலாக்

வேறு மொழிப் படங்களின் மறு ஆக்கம், தழுவல், இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசக் காட்சிகள் இல்லாத படங்கள் மட்டுமே பரீசிலிக்கப்படும். எந்த ஒரு சமூகத்தையோ, படிக்காதவர்களையோ, கிராமவாசிகளையோ, மாற்றுத் திறனாளிகளையோ அல்லது ஆங்கிலம் பேசத்தெரியாதவர்களையோ அவதூறாகவோ, கேலியாகவோ சித்திரிக்காமல் இருக்க வேண்டும். பெண்களை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டும் சித்தரிக்காமல் இருக்க வேண்டும்.

-இர தினகர்

 

மீண்டும் களமிறங்கியது லஹரி மியூசிக்.. 'மசாலா படம்' இசை உரிமையை வாங்கியது!

எண்பதுகளின் இறுதியிலும், தொன்னூறுகளிலும் பிஸியான இசை வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்த லஹரி மியூசிக் நிறுவனம், ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்தில் குதித்துள்ளது.

பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.

மீண்டும் களமிறங்கியது லஹரி மியூசிக்.. 'மசாலா படம்' இசை உரிமையை வாங்கியது!

இதுகுறித்து லஹரி நிறுவன இயக்குநர் சந்துரு மனோகரன் கூறுகையில், "ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்' ஆடியோ உரிமையைப் பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின் இசை நன்றாக வந்துள்ளது. படத்தின் டிரைலர், டீசர் ஆகியவை பார்த்தேன், இந்த இளம் கூட்டணியின் தயாரிப்பு மிகவும் திருப்தி அளிக்கிறது.

லஹரி மியுசிக் தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் லஹரி மியுசிக் ஆடியோ உரிமைகளை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மசாலா படம்' மூலம் தமிழ் இசையுலகில் மீண்டும் வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

 

கொம்பன் பிரச்சினை.. கிருஷ்ணசாமி மீது வழக்கு போட்டிருக்கிறேன்! - ஞானவேல் ராஜா

கொம்பன் படத்துக்கு பிரச்சினை ஏற்படுத்திய புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன், என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

கார்த்தி- லட்சுமிமேனன் நடித்த கொம்பன் படம் ஏக பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. புதிய தமிழகம் கட்சி இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என வழக்குத் தொடர்ந்தது.

கொம்பன் பிரச்சினை.. கிருஷ்ணசாமி மீது வழக்கு போட்டிருக்கிறேன்! - ஞானவேல் ராஜா

ஆனால் வழக்கு தள்ளுபடி ஆனது. படம் வெளியான 5-ம் நாள் பெரும் வெற்றி பெற்றதாகக் கூறி, செய்தியாளர்களைச் சந்தித்தனர் படக்குழுவினர்.

இந்தப் படத்துக்கு வந்த பிரச்சினைகள் குறித்து ஞானவேல் ராஜா கூறுகையில், "கொம்பன் படப் பிரச்சினையில் நான் மட்டுமல்ல, எங்கள் படக்குழுவினரே 30 நாட்கள் படாத பாடு பட்டோம். குறித்த தேதியில் படம் வருமா என்கிற குழப்பமும் கலக்கமும் எங்களுக்கு இருந்தது.

'கொம்பன்' படத்துக்கு பிரச்சினை வந்த போது நான் 3 பேரிடம் போனேன் . தெய்வத்திடம் போய் முறையிட்டேன். என் அப்பாவிடம் போய் அழுதேன். யாருமற்ற நிலையில் மூன்றாவதாக பத்திரிகை, ஊடகங்கள் உங்களிடம்தான் வந்தேன். சென்சார் செய்யப் பட்ட படத்துக்கு இப்படி ஒரு பிரச்சினை என்ற போது உங்களிடம் வந்தேன். ஆதரவு தந்தீர்கள்.

இது வரை இல்லாத அளவுக்கு இவ்வளவு விரைவில் திரையுலகினர் ஒன்று சேர்ந்து 'கொம்பன்'படத்துக்கு ஆதரவு அளித்தார்கள். திரையுலகினர் இதை என் தனிப்பட்ட ஒருவனின் பிரச்சினையாகப் பார்க்கவில்லை. எதிர்காலத்தில் யாரும் இப்படி பாதிக்கப்படக் கூடாது. என்பதில் உறுதியாக போராட வேண்டியதை உணர்ந்திருக்கிறார்கள்.

படம் வெளியானபிறகு வழக்கமான வசூலைவிட மதுரை வட்டாரங்களில்இப்போது இருமடங்கு வசூலாகி வருகிறது.

எந்தெந்த ஊர்களில் பிரச்சினை பதற்றம் என்று கூறப்பட்டதோ அங்குதான் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சந்தோஷமாகப் படம் பார்க்க வருகிறார்கள்.

வழக்கு

இந்தப் பிரச்சினை தொடர்பாக கிருஷ்ணசாமி ஐயா மீது வழக்கு போட்டிருக்கிறேன். இதனால் படத்துக்கு எந்தெந்த வகையிலெல்லாம் இழப்பு என்று கணக்கிட்டு கேட்கப்பட்டிருக்கிறது.., " என்றார்.

 

விஷால் வெளியிட்ட 'வில் அம்பு'!

ஒரு பக்கம் விஷாலை வைத்து பாயும் புலியை இயக்கிக் கொண்டிருக்கும் சுசீந்திரன், அடுத்து ஒரு படத்தையும் தயாரித்துக் கொண்டுள்ளார்.

இப்படத்தில் ‘வழக்கு எண் 18/9' படப்புகழ் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிருதி, சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு ‘வில் அம்பு' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

விஷால் வெளியிட்ட 'வில் அம்பு'!

ரமேஷ் சுப்ரமணியம் இதனை இயக்குகிறார். நவீன் இசையமைக்க மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டார் ஃபிலிம் லேன்ட், நல்லுசாமி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சுசீந்தின் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

ஒரே ஏரியாவில் வசிக்கும் பணக்கார இளைஞன் ஒருவனுக்கும், மிடில் கிளாஸ் இளைஞன் ஒருவனுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்கள்தான் படத்தின் கதைக் களம். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் வில் அம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் வெளியிட்டார்.

 

வா பேயே வா... காஞ்சனா 2க்கு எகிறுது எதிர்ப்பார்ப்பு!

தமிழகம் முழுவதும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய படமாக 'காஞ்சனா 2' பார்க்கப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் படம் 'காஞ்சனா 2'. டாப்ஸி, நித்யா மேனன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

வா பேயே வா... காஞ்சனா 2க்கு எகிறுது எதிர்ப்பார்ப்பு!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

படம் முழுவதுமாக முடிந்துவிட்டது. இந்த வாரம் சென்சார் செய்யப்பட்டு, ஏப்ரல் 17ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, விநியோகஸ்தர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பெரிய நடிகர்கள் படத்துக்கு வழங்கப்படும் முன்பண அடிப்படையில் இப்படத்தை வாங்க முன்வந்திருக்கிறார்கள்.

ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் படம்தான் இப்படி விற்பனையாகும். எனவே லாரன்ஸ் தரப்பு ரொம்பவே மகிழ்ச்சியடைந்திருக்கிறது.

 

5 நாளில் 21 கோடி வசூல்... கொம்பன் இயக்குநருக்கு இன்னோவா பரிசளித்த ஞானவேல் ராஜா!

கொம்பன் படம் பெரிய வெற்றியைப் பெற்றதால், அப்படத்தின் இயக்குநர் முத்தையாவுக்கு இன்னோவா காரைப் பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

பல்வேறு பிரச்னைகளை கடந்து திரைக்கு வந்த ‘கொம்பன்' நல்ல வசூலுடன் தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கின்றது.

5 நாளில் 21 கோடி வசூல்... கொம்பன் இயக்குநருக்கு இன்னோவா பரிசளித்த ஞானவேல் ராஜா!

குறிப்பாக கொம்பன் படமாக்கப்பட்ட இராமநாதபுரம், மாவட்டத்தில் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 21 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம் இந்தப் படம்.

கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெற்றுத் தரும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டத்தில். எனவே, படத்தின் வசூல் விநியோகஸ்தர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் எம்.முத்தையாவிற்கு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

தன்னை மட்டுமின்றி ரசிகர்களையும் திருப்தி செய்த இயக்குனருக்கு தான் அளிக்கும் ஒரு சிறு பரிசுதான் இந்த இன்னோவா கார், என்றும் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

 

சென்சாரானது காஞ்சனா 2... யுஏ சான்றுடன் வெளியாகிறது!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள 'காஞ்சனா 2' படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஏப்ரல் 17ம் தேதி படம் வெளியாகிறது

'காஞ்சனா 2' படத்தில் டாப்ஸி, நித்யா மேனன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

சென்சாரானது காஞ்சனா 2... யுஏ சான்றுடன் வெளியாகிறது!

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் சிறுவர்கள் பெற்றோருடன் பார்க்க வேண்டும் எனும் வகையில் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கினர்.

சென்சார் முடிந்துவிட்டதால் படம் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகிறது. இதை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர் இன்று.

 

சன் டிவியில் தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விவேக் என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பப்பட்ட தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை பார்த்துவிட்டு, ஆச்சி மனோரமாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் நடிகர் விவேக்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாலையில், காலத்தால் அழியாத காப்பியமான, தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதை நடிகர் விவேக் பார்த்து ரசித்துள்ளார்.

அந்த படத்தில் சகலகலா வல்லியாக வரும் மனோரமாவின் நடிப்பை பார்த்துவிட்டு வியந்து போனார் விவேக். இதையடுத்து ஆச்சி நியாபகம் வரவே, கிளம்பிவிட்டார் மனோரமா வீட்டுக்கு. அங்கு சென்று மனோரமாவிடம் ஆசி பெற்றுள்ளார்.

இந்த படத்தை தனது டிவிட்டர் தளத்தில் விவேக் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

விமான டிக்கெட்டில் ஆட்டோகிராப்.. ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி!

ரஜினியுடன் ஒரு முறையாவது படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காதா என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அவரை மொய்த்துக் கொண்டு, கிடைத்த வாய்ப்பைத் தவற விடாமல் படமெடுத்து கைகுலுக்கி தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

நேற்று மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பினார் ரஜினி.

விமான டிக்கெட்டில் ஆட்டோகிராப்.. ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி!

அப்போது ஸ்ரீனிவாஸ் என்ற ரசிகர் விமான நிலையத்தில் ரஜினியை பார்த்ததும் மிகுந்த உற்சாகத்துடன் அவரிடம் சென்று, 'தலைவா... உங்க ஆட்டோகிராப் வேண்டும்' என்று நின்றார். ஆனால் எதில் ஆட்டோகிராப் வாங்குவது என்று தெரியவில்லை அவருக்கு. உடனே தன் கைவசமிருந்த விமான டிக்கெட்டை நீட்டி, 'இதிலேயே போடுகள் தலைவா' என்றார்.

ரஜினியும், ரசிகரின் ஆசையை நிறைவேற்ற அந்த பயண டிக்கெட்டில் 'காட் ப்ளஸ்' என எழுதி கையெழுத்தை போட்டுள்ளார். இது அந்த ரசிகருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

விமான டிக்கெட்டில் ஆட்டோகிராப்.. ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஜினி!

சமூக இணையதளங்களில் ரஜினி கையெழுத்து போட்ட டிக்கெட்டும், ரஜினி விமான நிலையிலிருந்து வெளியே வரும் புகைப்படங்களும்தான் இன்று பரபரவென உலா வருகின்றன.

 

லண்டனில் சிம்பொனி இசைக் குழுவுடன் இளையராஜா!

ருத்ரமாதேவி படத்தின் இசைச் சேர்ப்புப் பணிக்காக லண்டன் சென்றுள்ள இளையராஜா அங்குள்ள சிம்பொனி இசைக் குழுவை வைத்து படத்துக்கு இசையமைத்தார்.

குணசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி படம் அடுத்த மாதம் தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை ராம நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

லண்டனில் சிம்பொனி இசைக் குழுவுடன் இளையராஜா!

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

லண்டனில் சிம்பொனி இசைக் குழுவுடன் இளையராஜா!

இப்போது படத்துக்கு பின்னணி இசைக் கோர்க்கும் பணியில் உள்ளார் இளையராஜா. இதற்காக கடந்த வாரம் லண்டன் புறப்பட்டுச் சென்ற இளையராஜா, அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில் அதற்கான பணிகளைச் செய்து வருகிறார்.

லண்டனில் சிம்பொனி இசைக் குழுவுடன் இளையராஜா!

புகழ்பெற்ற சிம்பொனி இசைக் குழுவை வைத்து இந்தப் படத்துக்காக இசைக் கோர்வைகளை உருவாக்கி வருகிறார்.

டைட்டானிக், ஸ்பைடர்மேன், பேட்மேன் உள்ளிட்ட படங்களுக்கு இந்த ஸ்டுடியோவில் வைத்துதான் இசைச் சேர்ப்புப் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

உத்தம வில்லனுக்கு சென்சாரில் க்ளீன் யு.. பிரச்சினையில்லாமல் வெளியாகுமா?

கமல் ஹாசன், பூஜா குமார் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'உத்தம வில்லன்' என்கிற படத்தைத் தயாரித்துள்ளார் கமல் ஹாஸன். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படம் நேற்று சென்சார் ஆனது.

எந்த இடத்திலும் கட் கொடுக்காமல் க்ளீன் யு சான்றிதழ் வழங்கினர் சென்சார் அதிகாரிகள். வருகிற மே 1-ம் தேதி உத்தம வில்லன் வெளியாகிறது என்பதை நேற்றே தெரிவித்திருந்தோம்.

உத்தம வில்லனுக்கு சென்சாரில் க்ளீன் யு.. பிரச்சினையில்லாமல் வெளியாகுமா?

இந்தப் படத்தில் கமலுடன் இயக்குநர்கள் கே பாலச்சந்தர், கே விஸ்வநாத் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பூஜா குமார், ஆன்ட்ரியா ஜோடியாக நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அதே நேரம் படத்துக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

டாலர் தேசம்... உலகமயமாக்கலின் பாதிப்பைச் சொல்ல வரும் படம்!

உலகமயமாக்கலின் பாதிப்பைச் சொல்லும் நோக்கில் தமிழில் முதல் முறையாக ஒரு படம் வருகிறது. அதுதான் டாலர் தேசம்.

‘இக்னைட் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

டாலர் தேசம்... உலகமயமாக்கலின் பாதிப்பைச் சொல்ல வரும் படம்!

‘பருத்தி வீரன்', ‘யோகி' படங்களில் இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய முத்து கோபால், இப்படத்தின் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

இந்தப் படம் மூலம் பிரசாத் வி.குமார் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவிடம் பணியாற்றியவர். பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்', ‘ஆயிரத்தில் ஒருவன்', ‘மயக்கம் என்ன' போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அருண் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

படம் குறித்து முத்து கோபால் கூறுகையில், "அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது ‘டாலர் தேசம்'. பொருளாதார படிநிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள மனிதர்களும், அவர்களின் பல்வேறு முகங்களும், வெகுஜன மக்கள் அறிந்திராத அவர்களின் அன்பும், வன்மமும், காதலும், வாழ்க்கையும் இந்தக் கதையின் முதுகெலும்பாக இருக்கும்.

சமூகத்தோடு இணைந்து பின்னப்பட்டுள்ள இக்கதையை, தொய்வின்றி நகர்த்திச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் புதுமுகங்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருக்கிறோம். இக்கதை அனைத்து ரசிகர்களையும் கவரும் என நம்புகிறேன். விரைவில் திரைக்கு வருகிறது டாலர் தேசம்," என்றார்.

 

மணிரத்னம் புதிய படத்துக்கு சிக்கல்... தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

சென்னை: கடல் படத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்கும்வரை ஓ காதல் கண்மணியை வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர் மன்னன் புகார் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கும் ‘ஓ காதல் கண்மணி' படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர் மன்னன் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில், " மணிரத்னம் இதற்கு முன் இயக்கி வெளியிட்ட கடல் படத்தின் விநியோக உரிமையை வாங்கியதன் மூலம் நான் பலகோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளேன். அதற்காக வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கட்டக்கூட முடியாமல் இருக்கிறேன்.

மணிரத்னம் புதிய படத்துக்கு சிக்கல்... தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

மனிதாபிமான அடிப்படையில் தற்போது பெரிய நிறுவனங்கள் படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் அதற்கு நஷ்டஈடு வழங்கி வருகின்றனர்.

எனவே தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு தற்போது வெளியாகவுள்ள 'ஓ காதல் கண்மணி' பட வெளியீட்டுக்கு முன், மணிரத்னத்திடமிருந்து எனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவரை ஓ காதல் கண்மணியை வெளியிடக்கூடாது என்றும் கோருகிறேன்," என்று கூறியுள்ளார்.

துல்ஹர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ‘ஒ காதல் கண்மணி'யை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.