காஞ்சனா 2 பாடல் அருவருப்பின் உச்சம்! - இயக்குநர் வேலு பிரபாகரன்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள காஞ்சனா 2 படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் மிக ஆபாசமாக உள்ளதாகக் கூறி, கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் வேலு பிரபாகரன்.

இந்தப் பாடல் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியுள்ளதாவது:

Velu Prabhakaran condemned Kanchana 2 song

"பாட்டு கேட்டேன்.. குழி காய்ந்து கிடக்குது வாய்யா... மொட்டை பையன் கெட்ட பையன்...அருவருப்பின் உச்சம்.

பாடலாக எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் எழுதலாம், டான்ஸ் மூவ்மென்டாக உடலுறவு அசைவுகளையும் செய்யலாம். அதை சென்சாரும் விட்டுவிடும்... மக்களும் குடும்பத்தோடு பார்த்து ரசிப்பார்கள். சமூக பொறுப்பு என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தால் எதையாவது செய்து பணம் சேர்க்கலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள கவிஞர் சினேகனும், தன் பங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பாடலை எழுதியிருப்பவர் விவேகா ஆகும். இதைக் குறிப்பிட்டுள்ள சினேகன், "விவேகாவுக்கு இது வழக்கமான ஒன்றுதான்" என்றும் தெரிவித்துள்ளார்.

 

அகலக்கால் வைத்து அகப்பட்டுக்கொண்ட ஆஸ்கார் ரவி.. சொத்துகள் பறிமுதல்!!

'என்ன காரணத்துக்காகவும் தனது புகைப்படம் பத்திரிகைகளில் வந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இதற்காகவே தனது சொந்தப்பட விழாக்களில் கூட அவர் தலைகாட்டுவதில்லை.

ஆனால் காலத்தின் கோலம் பாருங்கள். இன்று அவரது சில சொத்துக்களை வங்கிகள் ஏலம் போடும் விளம்பரத்தில் அவர் படம் தினசரிகளில் வெளியாகியிருக்கும் அவலம் நிகழ்ந்திருக்கிறது.

Aascar Ravichandiran's properties come to bank auction

ஆரமபத்தில் சில கோடி பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்து வந்த ஆஸ்கார் ரவி, அன்னியன், தசாவதாரம் படங்களை 30 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து மெகா பட்ஜெட்டில் தயாரித்தார்.

அடுத்து, ஐ படத்தை 75 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார். அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல படங்களையும் தயாரித்து வந்தார்.

அதாவது சுமார் 100 கோடி ரூபாயை ஒரே நேரத்தில் படத்தயாரிப்பில் முதலீடு செய்தார் ஆஸ்கார் ரவி.

இப்படி அகலக்கால் வைத்ததுதான் ஆஸ்கார் ரவிக்கு ஆபத்தாகிவிட்டது.

சில வருடங்களுக்கு முன்புவரை சாதாரண விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிக்கு ஏது இவ்வளவு பணம் என திரையுலகினர் பொறாமையில் பொசுங்கிப் போயினர்.

திமுக ஆட்சி இருந்தபோது... சன் டிவியின் பினாமிதான் ஆஸ்கார் ரவி என்று சொல்லப்பட்டது.

அதிமுக ஆட்சி மாறியதும்...சசிகலாவின் பினாமி என்றனர்.

உண்மையில் ஆஸ்கார் ரவி, ஐடிபிஐ, ஐஓபி போன்ற வங்கிகளில்தான் பல கோடி கடன்களை வாங்கி படங்களைத் தயாரித்திருக்கிறார். குறிப்பாக ஐ படத்துக்காக மட்டுமே சுமார் 80 கோடிக்கு மேல் கடன் வாங்கி இருக்கிறார்.

ஐ படத்தின் பேரில் பல கோடி கடன் பெற்ற ஆஸ்கார் ரவி, கடனை அடைக்காமலே சாமர்த்தியமாக படத்தை வெளியிட்டார். இது தொடர்பாக ஐஓபி வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஐஓபி வங்கியில் வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 97 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாதினால், சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது ஐஓபி வங்கி.

ஐ படத்தின் வசூல்தான் அமோகம்.. அதுக்கும் மேல என்று சொல்லிக் கொண்டிருந்தாரே ஆஸ்கர் ரவி... அதில் இந்த கடனை கட்ட வேண்டியதுதானே!

ஆனால் ஆஸ்கார் ரவி மிகப்பெரிய கில்லாடி. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகையில் பாதிக்குக்கூட தேறாது. திட்டமிட்டே இந்த ஏல ஏற்பாட்டுக்கு வழிவிட்டு வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

 

'காந்தியால் செய்ய முடியாததை கமல் ஹாஸன் செய்ததாக இருக்கட்டுமே!'

உத்தம வில்லனுக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், சில மதவாத கட்சிகள் அந்தப் படத்துக்கு எதிராக தினமும் எதையாவது செய்து கொண்டுதான் உள்ளன.

இந்தப் படத்தை சில இந்து அமைப்புகளும் எதிர்க்கின்றன. இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்க்கின்றன. காரணம் ஒன்றுதான். மதம். படத்தைப் பார்க்காமலே, காதில் விழுந்த ஏதாவது ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு போராட ஆரம்பித்துவிடுகிறார்கள். கடந்த வாரம், கமல் ஹாஸனை கைது செய்ய வேண்டும் என்று கூட ஒருவர் போலீசில் புகார் தந்தார்.

I achieved what Gandhi couldn't, says Kamal

இதுகுறித்த ஒரு கேள்விக்கு கமல் ஹாஸன் அளித்துள்ள பதில் சுவாரஸ்யமானது.

அந்தக் கேள்வி: உங்கள் படத்தை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் போராடுகின்றனவே?

கமலின் பதில்: கமல் ஹாஸன் படத்தை எதிர்க்க வேண்டும் என்றால் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். காந்தியால் கூட செய்ய முடியாததை, கமல்ஹாஸன் செய்ததாக இருக்கட்டுமே!

-அதான் கமல்!!

 

இன்று மாலை பாபநாசம் ட்ரைலர் வெளியீடு

கமல் ஹாஸன் நடித்துள்ள பாபநாசம் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தம வில்லன் திரைப்படத்துக்குப் பிறகு கமல் நடித்திருக்கும் படம் பாபநாசம்.

Kamal's Pabanasam trailer to release today evening

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்'. இந்தப் படத்தை இயக்கிய அதே இயக்குநர், அதை தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

இதில் கமல்ஹாசனுடன் கௌதமி, சார்லி , கலாபவன் மணி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசைமைத்திருக்கிறார்.

பாபநாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

அதன் முதல் கட்டமாக படத்தின் டிரைலரை இன்று மாலை வெளியிடவிருப்பதாக ஆடியோ உரிமையை கைப்பற்றியிருக்கும் ‘திங்க் மியூசிக்' நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் திரைப்படம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

அத்தனைக்கும் ஆசைப்படு... இயக்குநராக மாறிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

தமிழ் சினிமாவில் இன்னுமொரு தயாரிப்பாளர் இயக்குநராக அவதாரமெடுக்கிறார். அவர் சுரேஷ் காமாட்சி.

அமைதிப் படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். பாரதி கண்ணம்மா உள்ளிட்ட வெற்றிப் படங்கள் தந்த பங்கஜ் புரொடக்ஷன்ஸில் பணியாற்றியவர். அமைதிப் படை 2 மூலம் தயாரிப்பாளராக மாறினார்.

Producer Suresh Kamatchi turns director

கங்காருவுக்குப் பிறகு, அடுத்து தயாரிக்கும் படத்தை தானே இயக்குகிறார்.

இந்தப் படத்தின் நாயகனாக முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கிறார். நாயகியாக கங்காரு படத்தில் நடித்த ப்ரியங்காவே நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சுரேஷ் காமாட்சி நடிக்கிறார்.

ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்ய, சீனிவாஸ் இசையமைக்கிறார்.

திடீரென இயக்குநராக மாறியது ஏன்? என்று கேட்டதற்கு, "நான் சினிமாவுக்கு வந்ததே இயக்குநராவதற்குத்தான். திடீரென ஆகவில்லை. கொஞ்சம் தாமதமாக என் ஆசை நிறைவேறுகிறது.

இந்தப் படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

Producer Suresh Kamatchi turns director

இந்தப் படத்தை பாலச்சந்திரன் படைப்பகம் என்ற எனது இன்னொரு நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்குகிறேன். அடுத்த வாரம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறோம்," என்றார்.

படத்துக்கு தலைப்பு: அத்தனைக்கும் ஆசைப்படு!