மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ கார்த்திக் மகன் கவுதம்?


பொன்னியின் செல்வன் படம் கைவிடப்பட்ட பிறகு, பல்வேறு கதைகளை யோசித்து வந்தார் மணிரத்னம். இனி உல்டா பண்ண தோதான புராண, இதிகாசக் கதைகள் இல்லை என்பதால், புதிய கதையை தேர்வு செய்துள்ளாராம்.

இந்தப் புதிய படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் ஒருவர். இன்னொரு ஹீரோவாக ஆர்யா அல்லது மகேஷ்பாபுவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறுகிறார்கள்.

ஆனால் ஏற்கெனவே ஆர்யாவிடமும் ஒரு கதையை சொல்லி உள்ளாராம் மணிரத்னம். இந்தப் படத்தில் ஆர்யா மட்டும்தான் ஹீரோ. இவற்றில் எந்தப் படத்தை முதலில் எடுப்பார்?

“மணி தெளிவானவர். எந்தப் படத்துக்கு எளிதாக பைனான்ஸ் கிடைக்கிறதோ அந்தப் படம்தான் அவர் விருப்பமாக இருக்கும்,” என்கிறார் கோடம்பாக்க புள்ளி ஒருவர்.

 

திறமை இருந்தாதான் தாக்குப் பிடிக்க முடியும்! - காஜல் அனுபவம்


வெறும் கவர்ச்சி – அழகை மட்டும் வைத்துக் கொண்டு சினிமாவில் காலத்தை ஓட்ட முடியாது. திறமைதான் முக்கியம், என்று தத்துவமழை பொழிகிறார் நடிகை காஜல் அகர்வால்.

பொம்மலாட்டத்தில் அறிமுகமாகி, மகதீராவில் உச்சத்துக்குப் போன நடிகை காஜல், மீண்டும் தமிழில் மாற்றான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தனது அனுபவங்கள் குறித்து அவர் இப்படிச் சொல்கிறார்:

குறுகிய காலம்தான் என்றாலும், அதற்குள் சினிமாவில் நிறைய கற்றுக்கொண்டேன். நடிகைகளுக்குள் போட்டி உள்ளது. இது ஆரோக்கியான போட்டியாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான் யார் மீதும் பொறாமைப்பட்டதில்லை.

உழைப்பைத்தான் நம்புகிறேன். சினிமாவில் நேரம்தான் முக்கியம். நேரம் ஒர்க் அவுட் ஆகும்போதே முடிந்தவரை சம்பாதிக்க முயற்சிக்கணும். இல்லேன்னா காணாமல் போயிடுவோம்.

சினிமாவில் அழகை வைத்து மட்டும் நிலைக்க முடியாது. திறமை இருந்தால்தான் வரவேற்பார்கள். இல்லாவிட்டால் ஓரம்கட்டி விடுவார்கள்.

நான் யாரையும் காதலிக்கவில்லை. கல்லூரி நாட்களில் நிறைய காதல் கடிதங்கள் வந்துள்ளன. பள்ளி, கல்லூரியில் வரும் காதல் உண்மையானது அல்ல. ஒரு ஈர்ப்புதான். அதனால்தான் நான் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை,” என்றார்.

 

நாக சைதன்யாவுக்கு யோகா மட்டும்தான் கற்றுக் கொடுத்தேன்!- அனுஷ்கா


நாக சைதன்யாவுடன் திருமணம் என்று வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை அனுஷ்கா.

தமிழ் – தெலுங்குப் பட உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவருக்கும் நாகார்ஜூனாவுக்கும் நெருக்கம் என்று முதலில் பரபரப்பைக் கிளப்பின ஆந்திர பத்திரிகைகள்.

பின்னர் சில காலம் கழித்து அனுஷ்காவுக்கும் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் என்று கூறிவந்தனர்.

இந்த வாரம், இருவருக்கும் நிச்சயதார்த்தமே முடிந்துவிட்டதாகவும், இதனை நாகார்ஜூனாவும் அவர் மனைவி அமலாவும் நடத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர்.

செய்தி வெளியாகி நான்கு தினங்கள் அமைதி காத்த அனுஷ்கா, இப்போது முதல் முறையாக வாய்திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், “நானும் நாக சைதன்யாவும் காதலிக்கவில்லை. எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வந்த செய்தியில் உண்மையுமில்லை. நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நான் நடித்துள்ளேன். அப்போது நாக சைதன்யா அறிமுகம் ஆனார்.

அவருக்கு என்னை விட குறைவான வயது. நான் யோகா டீச்சர் என்பதால் நாக சைதன்யா என்னிடம் வந்து யோகா கற்றுக் கொண்டார். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை.

தற்போது படப் பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். வெளி நாட்டில் இருப்பவருடன் எனக்கு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும்?, என்றார்.

 

அசின், நயன்தாராவின் நடிப்பை பின் பற்றமாட்டேன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அசின், நயன்தாராவின் நடிப்பை பின் பற்றமாட்டேன்!

6/17/2011 12:08:17 PM

மலையாளத்தில் தயாரான பாடிகார்ட் படம் தமிழில் காவலன் என்ற பெயரில் ரிமேக் ஆனது. மலையாளத்தில் நயன்தாராவும், தமிழில் அசினும் நாயகிகளாக நடித்தனர். இப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. வெங்கடேஷ், திரிஷா ஜோடியாக நடிக்கின்றனர். இதில் நடிப்பது குறித்து திரிஷா கூறியதாவது:- பாடிகார்ட் படத்தின் கதை அற்புதமானது. உணர்வு பூர்வமான காதலை உள்ளடக்கியது. இதில் எனது கேரக்டர் ரொம்ப பிடித்துள்ளது. ரொம்ப ஈடுபாட்டோடு நடித்து வருகிறேன். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளோம். கல்லூரி சீன்கள் முடிந்து விட்டது. ஒரு வாரம் ஓய்வு கிடைத்ததால் சென்னை வந்துள்ளேன். நயன்தாரா, அசின் ஆகியோர் மலையாளம், தமிழில் ஏற்கனவே இப்படத்தில் நடித்துள்ளனர். இருவரில் யார் நடிப்பு உயர்வானது என்று சொல்ல முடியாது. இரண்டு பேருமே சிறந்த நடிகைகள், ஆனால் நான் அவர்கள் நடிப்பை பின் பற்றமாட்டேன். இவ்வாறு திரிஷா கூறினார்.




 

"பில்லா 2" படத்தில் ஆர்.டி.ராஜசேகர்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘பில்லா 2′ படத்தில் ஆர்.டி.ராஜசேகர்!

6/17/2011 11:50:38 AM

பில்லா இரண்டாம் பாகத்தில் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பில்லா படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவும் முக்கிய காரணமாக இருந்தது. எந்த சுவாரஸியமும் இல்லாத திரைக்கதையை தனது அபாராமான ஒளிப்பதிவின் மூலம் ஆஹா போட வைத்திருந்தார் நீரவ்ஷா. பில்லா இரண்டாம் பாகத்தில் விஷ்ணுவர்தன், யுவன் ஷங்கர் ராஜா, நீரவ்ஷா என பில்லா டீமே பணிபு‌ரிவதாக இருந்தது. சில காரணங்களால் படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து விஷ்ணுவர்தன் நீக்கப்பட்டார். என்றாலும் நீரவ்ஷாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் பில்லா 2-வில் தொடர்வார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நீரவ்ஷாவுக்குப் பதில் ஆர்.டி.ராஜசேகரை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். சக்‌ரி படத்தை இயக்குகிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா என்பதில் மட்டும் இதுவரை மாற்றமில்லை.

 

மலையூர் மம்பட்டியான் படத்தில் சிம்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மலையூர் மம்பட்டியான் படத்தில் சிம்பு!

6/17/2011 11:42:13 AM

தியாகராஜனின் ஹிட் படமான மலையூர் மம்பட்டியானை அதே பெய‌ரில் ‌‌ரீமேக் செய்கிறார்கள். இயக்குவது தியாகராஜன், நடிப்பது அவரது மகன் பிரஷாந்த். தமன் இசையமைக்கிறார். மம்பட்டியானில் ச‌ரிதா நடித்த வேடத்தில் மீரா ஜாஸ்மினும், ஜெயமாலினி நடித்த வேடத்தில் மூமைத்கானும் நடித்து வருகிறார்கள். வாரம் ஒரு படத்துக்கு பின்னணி பாடல் பாடுகிறார் சிம்பு. அப்படியேவிட்டால் தொழில்முறை பாடகர்களை தோற்கடித்துவிடுவார். சமீபத்தில் இவர் பாடியது மலையூர் மம்பட்டியான் படத்துக்காக. மம்பட்டியானில் இடம் பெற்ற சில சூப்பர்ஹிட் பாடல்களை அப்படியே ‌ரீமிக்ஸ் செய்துள்ளனர். அதில் ஒன்று, “காட்டு வழி போற பெண்ணே” பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.

 

மங்காத்தா... ஆட்டம் காப்பியா ஒரிஜினலா?


ஒரிஜினல் திரைக்கதை எழுதுவதைவிட எங்கிருந்தாவது சுட்டு எடுப்பதில் கில்லாடி வெங்கட்பிரபு. இதை நாம் சொல்லவில்லை... சரேஜா படம் வெளியானபோது அவரே சொன்னதுதான்.

அஜீத்தை வைத்து அவர் இப்போது இயக்கியுள்ள மங்காத்தா எந்த ஹாலிவுட் அல்லது வேறு மொழிப் படத்திலிருந்து சுடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான பதிலை சிலர் ஏற்கனவே எழுதியும் விட்டார்கள். இந்தியில் மேட்ச் பிக்ஸிங் பற்றி வெளியான ஜான்னெட் படத்தின் உல்டாதான் மங்காத்தா என்ற தகவல் பரபரப்பாக உலா வர, பதறிப் போன மங்காத்தா டீம் மறுப்பறிக்கையாக விட்டுக் கொண்டுள்ளது.

எந்த செய்தி வந்தாலும் அலட்டிக் கொள்ளாத மாதிரி காட்டிக் கொள்ளும் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் இப்போது மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வந்தா தெரிஞ்சிடப் போகுது... ஆட்டம் ஒரிஜினா, அப்பட்ட காப்பியா என்று!
 

காமராஜர் பிறந்த நாளில் வரும் 'முதல்வர் மஹாத்மா'!


மகாத்மா காந்தி இம்மண்ணுலகிலிருந்து மறைந்த பிறகுதான் சமூக - அரசியலில் அவரது தாக்கம் பல்வேறு பரிமாணங்களில் அலசப்பட்டு வருகிறது.

காந்திய நடைமுறை இன்றைய உலகுக்கு எந்த அளவு சாத்தியம் என சினிமாக்கள் வழி சொல்லி வருகிறார்கள். இந்தப் பார்வையுடன் வந்த 'முன்னாபாய்' வரிசைப் படங்கள் மக்களின் மனங்களைத் தொட்டு, வசூலையும் குவித்தது நினைவிருக்கலாம்.

இப்போது தமிழிலும் மகாத்மா காந்தியின் தாக்கம் குறித்து திரைப்படம் ஒன்று உருவாகிறது. அதுதான் முதல்வர் மகாத்மா.

காமராஜ எனும் அற்புத திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் அ.பாலகிருஷ்ணன்தான் இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார்.

மகாத்மாவின் உண்மையான சீடராக வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜுலை 15-ந் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

இந்தப் படம் குறித்து இயக்கநர் அ பாலகிருஷ்ணன் பேசுகையில், "இந்திய நாட்டின் சுதந்திரம் மட்டுமே காந்தியின் கனவல்ல. உலக நாடுகளுக்கெல்லாம் முன் மாதிரியாக இந்தியா திகழ வேண்டும் என்பதே அவருடைய மாபெரும் கனவாக இருந்தது.

ஆனால், அவரது கனவை நிராசையாக்கிவிட்டு, தவறான திசையில் வெகுதூரம் சென்றுவிட்டது, இந்தியா. அதிகாரத்தில் உள்ளோரிடம் அறவுணர்வும், தார்மீக நெறிகளும் இல்லாது போய்விட்டது.

மகாத்மா மீண்டும் வந்தால்...

இந்த நிலை கண்டு காந்தியின் ஆன்மா கலங்குவதுதான் படத்தின் கருப்பொருளாக்கப்பட்டு இருக்கிறது. இறைவனிடம் அனுமதி பெற்று மீண்டும் மஹாத்மா இந்த மண்ணுக்கு வந்தால்...? இந்த கற்பனைதான் மனதை நெகிவ வைக்கும் காட்சிகளாக வந்துள்ளன.

காந்தி மீண்டும் பூமிக்கு வந்தபின், நாட்டின் அரசியல் மற்றும் பண்பாட்டுத்தளத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? என்பது பற்றி இந்த படம் பேசுகிறது.

அனுபம்கெர்

இதில், முக்கிய பாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அனுபம்கெர் நடித்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறும்போது, 'அரசியல் கொந்தளிப்பான இன்றைய காலகட்டத்தில், இந்த படம் தமிழக மக்களை மட்டுமல்ல, இந்தியாவில் அனைத்து மக்களிடமும் சென்றடைய வேண்டும்'' என்றார்.

பாராட்டிய இளையராஜா

'முதல்வர் மஹாத்மா' படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் இந்தியிலும் தயாரிக்கப்பட்டுள்ளதால், பிரபல வட இந்திய இசைக் கலைஞர்களையும் பின்னணி இசை சேர்ப்பில் இணைத்துக்கொண்டார், இளையராஜா. இந்த படத்துக்கு ஆத்மார்த்தமாக இசையமைத்த அவர், 'இது இன்னொரு கட்டத்துக்கு போகிற படம்' என்று பாராட்டினார்.

படத்தில் காந்தியாக நடித்திருப்பவர் கனகராஜ். மகாத்மாவின் தோற்றத்துக்கு வெகு பொருத்தமாக சிறப்பாக நடித்துள்ளார்,'' என்றார்.
 

இயக்குநர் திருமலை வீட்டில் பெண்ணை கட்டிப் போட்டு நகை கொள்ளை!


சென்னை: சென்னையில் நேற்று பட்டப்பகலில் சினிமா இயக்குநர் திருமலை வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து அவரது உறவுக்காரப் பெண்ணை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

தி நகர், அகம்புறம் போன்ற படங்களை இயக்கியவர் திருமலை. தற்போது காசே தான் கடவுளடா என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படம் வெளிவர உள்ளது.

திருமலைக்கு நேற்று திருமண நாள். இதையொட்டி அவர் தனது மனைவி நதியா மற்றும் குழந்தையோடு ஏலகிரிக்குப் போய் விட்டார். அங்கு அவர் தனது திருமண நாளை கொண்டாடினார். சென்னையில் அவரது வீட்டில் அவரது அக்கா மகள் பூர்ணிமா தனியாக இருந்தார்.

‘கரண்ட்’ போன நேரத்தில் புகுந்த களவாணிகள்

நேற்று பிற்பகல் 2 மணியளவில் சாலிக்கிராமம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. திருமலை வீட்டிலும் மின்சாரம் இல்லை. இதனால் அவரது அக்கா மகள் பூர்ணிமா காற்றுக்காக கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வாசலில் இருந்து உள்ளார்.

அப்போது மர்ம ஆசாமிகள் இருவர் திடீரென்று வீட்டுக்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி பூர்ணிமாவை வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். சத்தம் போடக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். பின்னர் அவரது வாயில் துணியை திணித்து சமையல் அறைக்குள் அவரை தள்ளி கை கால்களை கட்டிப்போட்டு உள்ளனர். பின்னர் சமையல் அறை கதவை பூட்டியிருக்கிறார்கள். சமையல் அறை முழுவதும் சமையல் கியாசையும் திறந்து விட்டு உள்ளனர். சத்தம் போட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவோம் என்றும் பயமுறுத்தியுள்ளனர்.

பின்னர் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு மர்ம ஆசாமிகள் இருவரும் தப்பி ஓடி விட்டனர். மாலை 4 மணியளவில் டைரக்டர் திருமலையின் உறவினர் பாஸ்கரன் தற்செயலாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தான் கொள்ளை நடந்த விஷயம் தெரிந்தது. பூர்ணிமாவின் கை, கால் கட்டுகளை அவர் அவிழ்த்து விட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார். இணை போலீஸ் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் சம்பவ நடந்த வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து இயக்குநர் திருமலைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் நேற்றிரவு ஏலகிரி மலையில் இருந்து வீடு திரும்பினார். 25 சவரன் நகை வரை கொள்ளை போய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ளனர்.

‘நல்லவேளை, கொஞ்சமாத்தான் திருடு போயிருக்கு’

கொள்ளை சம்பவம் குறித்து இயக்குநர் திருமலை கூறுகையில், “திருட வந்தவர்கள் இரண்டுபேர். தமிழில்தான் பேசி இருக்காங்க. நல்ல வேளையாக வீட்டில் பெரிய அளவில் நகைகள் எதுவும் வைக்கவில்லை. வங்கி லாக்கரில் நகைகளை வைத்துள்ளேன். வீட்டில் கொஞ்சமாத்தான் வைத்திருந்தோம். அந்த நகைகளைத்தான் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று உள்ளனர்.

எங்கள் வீடு உள்ள பகுதிகளில் அடிக்கடி இது போல் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

 

ஆபாச மெயில் அனுப்பியவனை சும்மா விடக் கூடாது-கொதிக்கும் நிலா!


என்னைப் பின் தொடர்ந்து, என்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆபாசமாக மெயில் அனுப்பி என்னை டார்ச்சர் செய்தவனை சும்மா விடக் கூடாது. தண்டித்தே ஆக வேண்டும். இவனால் என்னால் வெளியில் கூட போக முடியவில்லை என்று கொதித்துக் கூறுகிறார் நடிகை நிலா.

மீரா சோப்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட நிலாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அமாவாசை ஆகி விட்டதால் டெல்லியிலேயே செட்டில் ஆகி விட்டார். இந்த நிலையில் அவருக்கு ஆபாச இமெயில்கள் தொடர்ந்து வரவே டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நிலா கூறுகையில்,

இந்த ஆபாச இமெயில்களால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனக்குத் தெரிந்தவர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

என்னால் வெளியில் போகவே முடியவில்லை. வீட்டோடு முடங்கிப் போய் அழுதபடி இருந்தேன்.

அனுப்பியது யார் என்பது எனக்குத் தெரியும். என் மீது பற்று கொண்டிருப்பதால் இவ்வாறு அனுப்பி விட்டதாக நான் கருதி அமைதியாக இருந்தேன். ஆனால் தொடர்ந்து இந்த ஆபாச மெயில்கள் வந்ததால்தான் போலீஸாரை அணுகினேன்.

இந்த நபரை சும்மா விடக் கூடாது. பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார் நிலா.