அனுமதியில்லாமல் என் பாடல்களை பயன்படுத்தினால்... இளையராஜா எச்சரிக்கை

சென்னை: முறையான அனுமதி இல்லாமல் தனது படப் பாடல்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று ஆடியோ நிறுவனங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ஐந்து ஆடியோ நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரந்த இளையராஜா, அதில் அந்த நிறுவனங்களுக்கு எதிராக தடை உத்தரவு பெற்றார். இருப்பினும் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தடைய மீறி இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது எச்சரிக்கை அறிக்கை ஒன்றை இளையராஜா விடுத்துள்ளார்.

Ilayaraja warns audio houses of action against violation

அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சில ஆடியோ நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் மூலம் தெரிந்து கொண்டோம்.

அதன் அடிப்படையில் டி.ஜி.பி. மற்றும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு நீதிமன்றத்தின் உத்தரவையும், உத்தரவை மதிக்காத இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மற்ற எல்லா கடைகளிலும் எளிதாக கிடைக்கின்ற திருட்டு ஆடியோ, வீடியோ சி.டி.களின் விற்பனையை தடுக்க கோரியும் புகார் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளோம். எப்.எம். ரேடியோவில் ஒலிபரப்பும் நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எனது பெயரை என்னுடைய எழுத்துப்பூர்வ அனுமதி கடிதம் இல்லாமல் யாரும் பயன்படுத்த கூடாது என்பதை இதன் மூலம் தெரியபடுத்துகிறோம்.

என்னுடைய பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். அவர்களிடம் உரிய இழப்பீடும் நீதிமன்றம் மூலமாக பெறப்படும் என்று இளையராஜா கூறியுள்ளார்.

 

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரியை விரும்புகிறார்கள்.. ஜேன் போண்டா

லாஸ் ஏஞ்செல்ஸ்: பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள் அதை மறக்கவும் அதில் இருந்து மீண்டு வரவும் பிளாஸ்டிக் சர்ஜரிகளை அதிகமாக விரும்புகிறார்கள் என்று ஹாலிவுட்டின் மூத்த நடிகை ஜேன் போண்டா கூறியுள்ளார்.

77 வயதான ஜேன், சர்ஜரியை அதிகமாக விரும்புகிறவர்கள் தங்கள் கடந்த காலத்தை மறக்கவே இதை செய்து கொள்கிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.

Sexually abused women often take surgery too far: Jane Fonda

30 சதவீத பெண்கள் தங்கள் இளம்வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுகிறார்கள். பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுபவர்களை ஒரு தொற்றுநோயாளி போல பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் அது தொற்றுநோய் அல்ல என்பதை உணர வேண்டும்.

இந்த அறுவை சிகிச்சையானது பெண்களின் முகத்தை மாற்றிக் கொடுக்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் வலிகளை யாரும் உணர்வதில்லை என்று கூறியுள்ளார் ஜேன்.

 

நம்பர் நடிகையின் கேரளா வீட்டுக்கு சென்ற 2 காதலர்கள்

சென்னை: நம்பர் நடிகையின் கேரளா வீட்டுக்கு சென்ற இருவரில் ஒருவர் தற்போது கிசுகிசுக்கப்படும் அந்த இளம் இயக்குனராம்.

நம்பர் நடிகை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நடிக்க வந்தார். முதலில் விரல் நடிகரை காதலித்து பிரிந்தார். அவரை பிரிந்த பிறகு ரப்பர் பாடி நடிகர்/இயக்குனர்/டான்ஸ் மாஸ்டருடன் காதல் வயப்பட்டார். திருமணம் வரைக்கும் சென்ற அந்த காதல் முறிந்தது.

Only two men visit number actress's house in Kerala

அதன் பிறகு பாஸாகாத நடிகருக்கும், நம்பர் நடிகைக்கும் காதல் என்று சில காலம் கிசுகிசுக்கப்பட்டு அது அடங்கியது. இந்நிலையில் நடிகை தற்போது நடித்து வரும் படத்தின் இளம் இயக்குனருக்கும் அவருக்கும் காதல் என்று முதலில் செய்தி வெளியானது. பின்னர் அவர்கள் இருவரும் கேரளாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பேச்சு கிளம்பியது.

ரகசிய திருமணம் செய்யவில்லை, அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர். நடிகையின் வாழ்வில் வந்த காதலர்களில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே கேரளாவில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்களாம்.

அதில் ஒருவர் ரப்பர் பாடி மற்றொருவர் இளம் இயக்குனராம். தற்போது பரவிய திருமண செய்தி படத்திற்கு விளம்பரம் தேடச் செய்தது என்று வேறு கூறப்படுகிறது.

 

மீண்டும் முத்தத்தைக் கையில் எடுத்த கமல்.... தூங்காவனம் "பர்ஸ்ட் கிக்" ரிலீஸ்!

சென்னை :தூங்கா வனம் படத்தின் முதல் பார்வை போஸ்டர்களை ஹைதராபாத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதில் ஒரு போஸ்டரில் கமல்ஹாசன், நாயகிக்கு உதட்டு முத்தம் கொடுப்பது போல உள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதால் அங்கு உள்ள தெலுங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கள்முன்னிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் கமல்.

Thoongavanam first look poster released today

முதல் லுக் வித்தியாசமாக இருக்கிறது. ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் என இரு வித கலவையை இந்த போஸ்டர்களில் வெளிப்படுத்தியுள்ளார் கமல். ஒரு போஸ்டரில் நாயகிக்கு மிக நெருக்கமாக நின்று முகத்துடன் முகம் பொருத்தி முத்தம் பதிப்பது போல காட்சி உள்ளது.

Thoongavanam first look poster released today

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் எடுத்தாலும் உத்தம வில்லன் படத்திற்குப் பின்னர் தூங்காவனத்தை கையில் எடுத்துள்ளார்.

Thoongavanam first look poster released today

தமிழில் தூங்கா வனம், தெலுங்கில் சீகட்டி ராஜ்ஜியம் என பெயரிட்டப்பட்டு உள்ள இந்தப் படத்தில் த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் இன்று தொடங்கும் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது. படத்தை கமலின் நீண்ட நாள் உதவியாளரான ராஜேஷ் இயக்க இருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

 

இளைய தளபதி விஜய்க்காக கொள்கையை தளர்த்திய குஷ்பு

சென்னை: ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்புக்கு செல்வது இல்லை என்ற தனது கொள்கையை குஷ்பு இளையதளபதி விஜய்க்காக தளர்த்தியுள்ளார்.

குஷ்பு நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கோலிவுட்டன் வெற்றி ஹீரோயினாக பல காலம் வலம் வந்தவர். என்ன ஆனாலும் சரி ஞாயிற்றுக்கிழமை நடிக்கக் கூடாது என்பது குஷ்புவின் கொள்கை. ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து ஓய்வு எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் அவர் தனது கொள்கையை விஜய்க்காக தளர்த்தியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுயிருப்பதாவது,

என்னிடம் உள்ள புகைப்படங்களில் இருந்து நான் எதை கண்டுபிடித்துள்ளேன் பாருங்கள்... நான் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது இல்லை. ஆனால் இது பிரபுதேவா மற்றும் விஜய்க்காக வேலை பார்த்தது என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் ஒரு ட்வீட்டில் விஜய் பற்றி கூறுகையில்,

மேலும் ஒரு புகைப்படம்... என்ன ஒரு ஸ்டைலான டான்சர் அவர்...அவர் ஆடுவதும் பாடுவதும் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

அவருக்குப் பதில் இவர்.. டிவி சீரியல் பாணியில் மாறிய வட சென்னை ஹீரோ!

சென்னை : சிம்பு நடிக்க இருந்த வடசென்னை படத்தில் அவருக்கு பதிலாக நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். நேற்று இந்த செய்தியை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் தனுஷ்.

இயக்குனர் வெற்றிமாறன் சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் சிம்புவை வைத்து வடசென்னை படத்தை ஆரம்பிப்பதாக இருந்தார், அறிவிப்போடு படம் நின்றுவிட்டது. தற்போது விசாரணை படத்தை எடுத்து முடித்த வெற்றிமாறன் கிடப்பில் கிடந்த வடசென்னையை எடுத்து தூசு தட்டி மீண்டும் படம் பிடிக்க வேண்டும் என்று களத்தில் குதித்துள்ளார்.

Dhanush's Upcoming Movie Vada Chennai Movie Cast And Crew

ஆனால் ஹீரோவை மாற்றி விட்டார். சிம்புவுக்குப் பதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சிம்புவுக்கு நேரம் ரொம்ப நன்றாக வேலை செய்கிறது போல, தொடர்ச்சியாக பிரச்சினைகள் வந்து எடுத்த படத்தை வெளியிடவும் முடியாமல் புதிய படங்களில் நடிக்கவும் முடியாமல், மனிதர் என்னவோ தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

தனுஷ் ட்விட்டர்ல செய்தி சொன்னதெல்லாம் சரிதான். ஆனா ஒன்னு மட்டும் புரியல பொல்லாதவன் பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்த போதே இந்தப் படத்தோட கதைய வெற்றிமாறன் சொன்னதா ஒரு அடிஷனல் மெசேஜ் ஒன்ன இலவச இணைப்பா போட்டிருக்காரு.

படத்தில் தனுஷுக்கு ஜோடி போடுகிறார் சமந்தா. 2016ல் படம் ரிலீஸாகுமாம். விரைவில் பிற விவரத்தைச் சொல்கிறாராம் தனுஷ்.

 

கேன்ஸில் விருதை அள்ளிய இந்திய படம்!

பாரிஸ்: உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக எல்லோராலும் கொண்டாடப்படும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விருது விழாவில் விமர்சகர்கள் விருதைத் தட்டிச் சென்றுள்ளது இந்தியத் திரைப்படமான மாஸான் .

India's Masaan wins FIPRESCI award at Cannes 2015

68 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதை வாங்கிய ஒரே இந்தியப் படமான மாஸானை இயக்கிய நீரஜ் கெய்வான் என்பவர் இயக்கிய முதல் படம் இது. தனது முதல் படத்திற்கே அங்கீகாரம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நீரஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

நான்கு சிறிய நகரங்களுக்கு இடையேயான பயணத்தை கதையாகக் கொண்ட இந்தப் படத்தில் விக்கி கவுசால், ரிச்சா சந்தான் மற்றும் ஸ்வேதா திரிபாசு ஆகியோர் நடித்துள்ளனர்.

பார்வையாளர்களின் பலத்த கரகோசங்களுக்கு இடையே விமர்சன விருதை (எப்.ஐ.பி.ஆர்.இ.எஸ்.சி.) வென்றுள்ள இந்த படம் படத்தை எடுத்தவர்களுக்கும் அதில் நடித்தவர்களுக்கும் அடுத்தடுத்த சிறந்த படங்களை எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

 

"அடுத்த எம்.ஜி.ஆர். ஆவாரா ரஜினி முருகன்"... வம்பிழுக்கும் வருண் மணியன்!

சென்னை: ரஜினி முருகன் படம் அடுத்த MGR ஆகுமா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கொளுத்திப் போட்டு கோடம்பாக்கமே சூடாகிக் கிடக்க சில்லென்று குன்னூரில் சென்று குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் வருண் மணியன்.

விஷால் நடித்த மதகஜராஜா படத்தின் சுருக்கமே MGR அந்தப் படம் இன்னும் வெளிவராமல் பெட்டிக்குள்ளே முடங்கிக் கிடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமியை தனது ட்விட்டர் பக்கத்தில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும் வருண் மணியன், மீண்டும் அவரை வாரியுள்ளார்.

மஞ்சப் பையுடன் வந்தவர் மஞ்சப் பையுடன் திரும்பிப் போகப் போகிறார் என்று சில நாட்களுக்கு முன்னால் கிண்டல் அடித்தவர், இப்போது சற்று காட்டமாக ரஜினிமுருகன் படம் ரிலீஸ் ஆகாது என்று கூறியிருக்கிறார்.

Trisha’s ex-boy friend to stop rajini murugan release

தமிழ் சினிமாவின் முன்னணி பைனான்சியாரான வருண் மணியன் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பணம் கொடுத்து அது திரும்ப வராததால் லிங்குசாமி தயாரித்த உத்தமவில்லன் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் பெரிய பிரச்சினையை உண்டாக்கியவர்.

தற்போது ரஜினி முருகன் வாயிலாக மீண்டும் லிங்குசாமிக்கு பிரச்சினையை உண்டாக்க ரூம் போட்டு யோசித்து வருகிறார் போலும்.

ஏற்கனவே கோர்ட்டில் லிங்குசாமியின் தயாரிப்பில் உருவான உத்தமவில்லன் மற்றும் ரஜினி முருகன் படங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேஸ் போட்டிருக்கும் வருண் சொன்னது போல முதல் படத்திற்கு தடையை உண்டாக்கி சொன்னதை செய்து காட்டி டென்ஷன் கொடுத்தார்.

அடுத்து ரஜினிமுருகனை வெளியிட முடியாமல் செய்ய எவ்வளவு தடைகளை உண்டாக்க போகிறாரோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

த்ரிஷாவை மறக்க முடியாமல் அந்த கோபத்தை இப்படி எல்லோரிடமும் காட்டி வருகிறாரோ வருண்!

 

சல்மான் தங்கையின் திருமண ரிசப்ஷன்.. விழாக் கோலத்தில் மாண்டி!

மும்பை: ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. தனது அன்பு சகோதரி அர்பிதாவின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இங்கு தனது குடும்பத்துடன் வரவிருப்பதால் இந்த ஏற்பாடாம்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் நடந்த இந்தத் திருமணத்திற்கு இப்போது ஏழு மாதங்கள் கழித்து ரிசப்ஷன் வைக்கக் காரணம் சல்மான் கோர்ட்,கேஸ் என்று அலைந்ததுதான். இப்போது வழக்கில் இருந்து சல்மான் வெளியே வந்துள்ளதால் அதைக் கொண்டாடும் வகையில் இந்த விழாவை நடத்துகிறார்கள்.

Salman Khan to attend sister's reception in Himachal Pradesh

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுக்ராமின் பேரன் ஆயுஷ் சர்மா தான் சல்மானின் மச்சினர். ஆயுசின் அப்பா தற்போதைய ஹிமாச்சலப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சராக இருக்கிறார். எனவே விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.

தனது பரபரப்பான வேலைகளுக்கு நடுவே அன்பு தங்கையை காண பறந்தோடி வரும் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனி ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறார் அர்பிதாவின் மாமனார்.

பல அரசியல் பிரபலங்களும், நட்சத்திரங்களும் கலந்து கொள்ள இருப்பதால் ஏற்பாடுகள் பலமாகவும், பெரிதாகவும் நடைபெற்று வருகின்றன. சுமார் 20000 நபர்கள் வரை கலந்து கொள்ள இருக்கும் இந்த விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் உள்ளூரின் புகழ் பெற்ற இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.