ஐபிஎல் சூதாட்டம்... சிக்கும் 6 முன்னணி தமிழ் நடிகைகள்!

Top Actresses Ipl Spot Fixing

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல தமிழ் நடிகைகளுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எனவே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புகார்களும் சதிகளும் சூதாட்ட மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன.

சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள்.

அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, "நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்," என்றார்.

கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று போட்டிகளை பார்த்து ரசித்த நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுடன் சுற்றிய நடிகைகள் யார் யார் என்று போலீசார் விசாரித்து ஒரு லிஸ்ட் தயாரித்துள்ளார்கள்.

இதில் சில முன்னணி தமிழ் நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் விளம்பர தூதுவர்களாக நடிகைகள்தான் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்துக்கு வந்து விசில் போட்ட சில நடிகைகள் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வாங்கியுள்ளனர். அவர்களுக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாக உள்ள 6 நடிகைகள் இந்த விசாரணை வளையத்தில் வருகின்றனர். விரைவில் அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

 

கேவி ஆனந்த் டார்கெட் வச்சது ரஜினிக்கு.. வாய்ப்பு வந்ததோ தனுஷை இயக்குவதற்கு!

ரஜினியை இயக்குவார், ஆர்யாவை இயக்குவார், மீண்டும் சூர்யாவுடன் கைகோர்ப்பார் என்றெல்லாம் பேசப்பட்ட கேவி ஆனந்த் அடுத்து இயக்கப் போவது தனுஷை!

'கோச்சடையானு'க்குப் பிறகு ரஜினி நடிக்கும் ஆக்ஷன் படத்தை கே வி ஆனந்த் இயக்குவார் என்றும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டார்கள் என்றும் பேசி வந்தனர்.

ஆனால் இதுகுறித்து ரஜினி எதுவும் சொல்லவில்லை. இதற்கிடையில் ஏஜிஎஸ் நிறுவனமே, இந்த ஆண்டு மிகப் பெரிய படம் ஒன்றைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. இது ரஜினி படமாகத்தான் இருக்கும் என்று கூறப்பட்டது.

kv anand direct dhanush
ஆனால் இப்போது கே.வி.ஆனந்த், அடுத்ததாக தனுஷ் நடிக்க இருக்கும் படத்தினை இயக்குவார் என்றும் அதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வழக்கமாக கே.வி. ஆனந்த் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார். ஆனால் இந்தப் படத்தில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

தனுஷின் மரியான், ராஞ்ஜ்ஹனா படங்களுக்குப் பிறகு இந்தப் புதிய படம் தொடங்கும் என்று தெரிகிறது.

 

விளம்பரத்தை தொடர்ந்து மலையாள படத்தில் இருந்தும் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்

திருவனந்தபுரம்: ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிறை சென்றதால் ஸ்ரீசாந்த்தின் விளம்பர வாய்ப்பைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கைக்கும் முற்றுப் புள்ளி விழுந்துள்ளது. மலையாள சினிமாவில் ஸ்ரீசாந்த் கவுரவ வேடத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற மலையாள திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

portion malayalam film acted sreesanth to be removed

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவுக்கு வரும்போது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை சுற்றித்தான் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளது. இதில் இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக கவுரவ வேடத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார். சூதாட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்ரீசாந்த் இந்தியாவின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர். அவர் எனது நல்ல நண்பர்களுள் ஒருவர். எனவே, எனது படத்தில் அவரை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தேன். தற்போது, வரும் செய்திகளை கருத்தில் கொண்டு அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம்.

இந்த படத்தில் லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் அப்பாஸ் ஹசன் கதாநாயகனாகவும், அர்ச்சனா கவி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கேரள அரசின் லாட்டரி விளம்பரத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த் இப்போது சினிமாவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் சிறை சென்றதோடு சினிமா, விளம்பர வாய்ப்பையும் இழந்து தவிக்கிறார் ஸ்ரீசாந்த்.

 

இந்தியில் முதல் முறையாகப் பாடிய ரஜினி!

Rajini Sings Hindi Kochadaiyaan

சூப்பர் ஸ்டார் ரஜினி தன் கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார் என்பது ரொம்ப பழைய செய்தி.

இதோ... ஒரு புதிய செய்தி. கோச்சடையானின் இந்திப் பதிப்புக்காக தன் சொந்தக் குரலில் ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார் ரஜினி. இந்தப் பாடலை இர்ஷத் கமில் என்பவர் எழுத, நேற்று பதிவு செய்தார் ரஹ்மான்.

பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார்.

ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை. தமிழில் மன்னன் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்த ரஜினி, இப்போது கோச்சடையானுக்காக ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்போது இரண்டாவது பகுதிக்கான டப்பிங் நடக்கிறது.

ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தெரிகிறது.

 

ஜில்லா படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய மோகன் லால்!

Mohan Lal Celebrates His Birthday Jilla Shooting

மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் தனது 53வது பிறந்த நாளை விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பில் கொண்டாடினார்.

மலையாளத்தில் கடந்த 33 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும்.

மஞ்ஜில் விரிஞ்ச பூக்களில் பூர்ணிமாவுடன் ஜோடியாக நடித்தவர், 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஜில்லா படத்தில் அதே பூர்ணிமாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

மோகன்லால் மலையாளியாக இருந்தாலும், அவர் குடியிருப்பது பெரும்பாலும் சென்னையில்தான். அவரது மகன் படித்ததும் சென்னையில்தான்.

தமிழில் இருவர், பாப்கார்ன், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நேசன் இயக்கும் ஜில்லா படப்பிடிப்பு இப்போது சாலக்குடியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மோகன்லால் தனது பிறந்த நாளை ‘கேக்' வெட்டி கொண்டாடினார். அவருக்கு பூர்ணிமா பாக்யராஜ், இயக்குநர் நேசன் உள்ளிட்ட படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

சஞ்சய் தத், இனி கைதி எண் 16656!

Sanjay Dutt Is Prisoner Number 1665

புனே: எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்துக்கு கைதி எண் 16656 ஒதுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத், மும்பை தடா நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி சரண் அடைந்தார்.

பின்னர் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து நேற்று புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.

சஞ்சய்தத் தனது தண்டனைக் காலத்தில் ஒன்றரை ஆண்டுகளை இதே எரவாடா சிறையில்தான் அனுபவித்து, ஜாமீனில் விடுதலையானார். எனவே அவர் மீதம் உள்ள மூன்றரை ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டும்.

எரவாடா சிறையில் ஏற்கனவே 2 முறை விசாரணை கைதியாக சஞ்சய் தத் இருந்துள்ளார். எனினும், தண்டனை கைதியாக தற்போது இந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சஞ்சய் தத்திற்கு சீருடையும் '16656' என்ற கைதி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முறை சிறைக்குள் அவர் தச்சுவேலை செய்தார். தற்போது கடினமாக கூலி வேலை வழங்கப்படும் என தெரிகிறது.

அவரது குடும்பத்தாரிடம் இருந்து மாத அலவன்சாக ரூ.1500 பெற்று சிறை கேண்டீனில் இருந்து அவருக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

மாதமொரு முறை 20 நிமிடங்களுக்கு மட்டும் பார்வையாளர்களைச் சந்திக்க சஞ்சய் தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கைதி எண் 16656... சஞ்சய் தத் வெளியில் வந்ததும் இதுகூட அவர் படத்துக்கு தலைப்பாகலாம்!

 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஜினிகாந்த் விளையாடினால்...

When Rajinikanth Plays Csk

சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளையாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு கர்ப்பனை காமெடி இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பற்றி பல ஜோக்குகள் இணையதளங்களில் உள்ளன. ரஜினிகாந்த் இங்கிருந்து கொண்டே பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதியை ப்ளூடூத் மூலம் கொன்றார். நியூட்டன் மீது விழுந்த ஆப்பிளை எறிந்ததே ரஜினி தான் என்று பல்வேறு ஜோக்குகள் உலா வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஜினிகாந்த் விளையாடினால் எப்படி இருக்கும் என்று புதிய ஜோக் ஒன்று இணையதளங்களில் உலா வருகிறது.

சென்னை அணி வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்படுகிறதாம். ஆனால் ஒரு பந்து தான் பாக்கி உள்ளதாம். பந்தை ரஜினி எதிர்கொள்கிறாராம். அனைவரும் டென்ஷனாக இருக்க பந்தை ரஜினி அடித்தவுடன் அது 4 துண்டுகளாக உடைகிறதாம். 4 துண்டுகளுமே சிக்ஸருக்கு போகிறதாம். ஒரே பந்தில் 24 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டதாம்.

அது யாரைய்யா கெய்ல், ரஜினி மாதிரி அடிக்க முடியுமா?