நவராத்திரி கொண்டாடும் விஜய் டிவி

Vijay Tv Special Show Manjal Kungumam

இயல், இசை, நாடகம் முக்கலைகளும் இணைந்ததுதான் நவராத்திரி. நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக விஜய் டிவி மஞ்சள் குங்குமம் என்ற சிறப்பு நிகழ்ச்சியை காலை 7மணிக்கு ஒளிபரப்பிவருகிறது.

இரண்டாம் நாளான இன்றைய நிகழ்ச்சியில் நவராத்திரி பிறந்த கதையை அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னார் ரேவதி சங்கரன்.

விஐபி வீட்டுக் கொலுவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ரத்னா அவர்களின் வீட்டு கொலுவை இன்றைக்கு ஒளிபரப்பினார்கள். ‘பார்த்தன் பார்வையில் பரந்தாமன்' என்ற கருவை மையமாக வைத்து ரத்னா கொலு அமைத்திருந்தார். கீதோபதேசத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த அந்த கொலு பெரிதும் கவர்ந்தது.

இதனையடுத்து திருவண்ணாமலை கோவிலை மையமாக வைத்து கொலு அமைந்திருந்தார் ரத்னா. அண்ணாமலையார் ஆலயம், மலை, கிரிவலப்பாதை, அஷ்ட லிங்கங்கள், மகான்களின் ஆசிமரங்கள், திருவண்ணாமலை பேருந்துநிலையம் என தத்ரூபாமாக அமைந்திருந்தது கொலு பிரியர்களை பெரிதும் கவர்ந்தது.

கொலுவின் வைப்பதன் முக்கிய அம்சமே நம் வீட்டிற்கு உறவினர்களையும், நண்பர்களையும் வரவழைத்து அவர்களுக்கு பிரசாதமும், பரிசும் கொடுத்து வாழ்த்துவதுதான்.

புரட்டாசி மாதத்தில் மழைக்காலம் என்பதால் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நோய் நொடி தாக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற புரதச்சத்து நிறைந்த உணவு நைவேத்தியமாக படைக்கப்பட்டு பின்னர் அது பிரசாதமாக வழங்கப்படுகிறது. நம் முன்னோர்கள் கொண்டாடிய பண்டிகைகள் அனைத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற சிறப்பான நிகழ்ச்சியை காலை நேரத்தில் விஜய் டிவி ஒளிபரப்புவது பயனுள்ள வகையில் இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.

 

தெலுங்கு ரசிகர்களுக்கும் இசைவிருந்து படைக்கும் இசைஞானி!

Meastro S Live Concert At Hyderabad

ஹைதராபாத்: தனது தெலுங்கு ரசிகர்களுக்காக ஹைதராபாதில் கச்சேரி நடத்துகிறார் இசைஞானி இளையராஜா.

குண்டல்லோ கோதாவரி படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

தெலுங்கு சினிமா இசையில் இளையராஜாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சிரஞ்சீவி உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் அதிக படங்களுக்கு இசை இளையராஜாதான். மோகன் பாபு படங்களிலும் இளையராஜாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. தனிப்பட்ட முறையில் ராஜாவும் நீண்ட காலம் நட்பு பாராட்டி வருபவர் மோகன் பாபு.

குண்டல்லோ கோதாவரி படத்தைத் தயாரிப்பவர் மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாதில் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியுடன் இளையராஜா கச்சேரியும் நடக்கிறது. குண்டல்லோ கோதாவரி படப் பாடல்களுடன், தனது புகழ்பெற்ற மற்ற பாடல்களையும் இசைக்கவிருக்கிறார் இளையராஜா.

2011-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான, ஆந்திர அரசின் உயரிய நந்தி விருதை 'ஸ்ரீராமராஜ்யம்' படத்துக்காக சமீபத்தில் பெற்றார் இசைஞானி. அதிகமுறை நந்தி விருது பெற்றவர் இளையராஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லை

College does not have any contact with us

ஊட்டியில் மெரிட் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரி உள்ளது. கல்லூரியில் பி.இ, பி.டெக்,  எம்.பி.ஏ, போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. கல்லூரியின் இயக்குனராக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்தின் மனைவி வந்தனா உள்ளார். வந்தனா தந்தை சாரங்கபாணி கல்லூரி டீனாகவும், தாய் ஷாலினி இயக்குனராகவும் உள்ளனர். கல்லூரியில் கடந் தாண்டு படிப்பை முடித்தவர்கள் பணிக்கு சென்றுள்ளனர். சிலர் மேற்படிப்பு படிக்க சென்றுள்ளனர். ஆனால் அனைத்து கல்வி  நிறுவனங்களும் 'நீங்கள் அங்கீகாரம் பெறாத கல்லூரியில் படித்துள்ளீர்கள். சான்றிதழ் செல்லாது' என தெரிவித்துள்ளன. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அண்ணா பல்கலைகழகத்துக்கு சென்று சான்றிதழ்களை காட்டியுள்ளனர். நாங்கள் அங்கீகாரம் தரவில்லை என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரியை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஊட்டி ஜி1 போலீசார் நேற்று கல்லூரி டீன் சாரங்கபாணி, இயக்குனர்கள் ஷாலினி, வந்தனா, கல்லூரி முதல்வர் அசோக்குமார், சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் அசோக் சிவகுமார் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், 'நடிகர் ஸ்ரீகாந்துக்கும் இக்கல்லூரிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்திய பின் தேவைப்படும்பட்சத்தில் மேலும் புதிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும்' என்றனர். ஸ்ரீகாந்த் கூறுகையில், "எனக்கும், மனைவிக்கும் கல்லூரியுடன் எந்த தொடர்பும் இல்லை. மாமியார் ஷாலினிக்காக எனது பெயர் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படுகிறது" என்றார்.
 

விரைவில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்

Captain to launch his son soon

கேப்டன் விஜயகாந்த் முழுவேலையாக அரசியல் புகுந்துவிட்டார். இனி சினிமாவில் நடிப்பது சந்தேகம் தான். இதனையடுத்து, அவரது மகன் ஷண்முக பாண்டியனை விரைவில் அறிமுகம் செய்யகிறார் விஜயகாந்த். பல நாட்களாக இந்த பேச்சு கோலிவுட் பக்கம் கசிந்தது. தற்போது இந்த செய்தி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. சமீபத்தில் ஒரு புதுமுக கதை கேட்ட கேப்டன் விஜயகாந்த், ஓகே என்று சொல்லிவிட்டாராம். மேலும் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் கேப்டன். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

 

கண்டிப்பா தீபாவளிக்கு "கும்கி" ரிலீஸ்

No delay for Kumki

'மைனா' ஹிட்டுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கி உள்ள படம் 'கும்கி'. பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து உள்ளனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளது. இமான் இசை. யுகபாரதி பாடல்கள். சுகுமார் ஒளிப்பதிவு. இதன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு பிறகு படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு. இதனையடுத்து இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. ஆனால், துப்பாக்கி, போடா போடி போன்ற படங்கள் வெளியாகுவதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையை இயக்குனர் பிரபு சாலமனும், தயாரிப்பாளர் லிங்குசாமியும் மறுத்துள்ளனர். திட்டமிட்டபடி தீபாவளியன்று கும்கி ரிலீஸ் ஆகும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
 

சசிகுமார் இயக்கத்தில் சூர்யா

Sasikumar ready to direct suriya

சசிகுமார் இயக்கும் படத்தில் அடுத்த ஆண்டு நடிக்க உள்ளார் சூர்யா. சிங்கம் 2 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இதற்கிடையே வெங்கட் பிரபு சூர்யாவிடம் ஒரு கதையை சொன்னார். ஆனால் அந்த கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தனது படத்துக்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் சசிகுமார். சுந்தரபாண்டியன் படத்துக்கு பின் சசிகுமார் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதை மற்றொரு இயக்குனர் இயக்குகிறார். இதில் நடித்தபடியே தனது படத்துக்கான கதை விவாதத்திலும் சசிகுமார் ஈடுபடுகிறார்.

சசிகுமார் இயக்கும் படத்தில் அவர் நடிக்கவில்லையாம். இதில் ஹீரோவாக சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது. சமீபத்தில் சூர்யாவை சந்தித்து சசிகுமார் பேசியிருக்கிறார். அப்போது அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் இருவரும் சேர்ந்து பணியாற்றுவது குறித்து பேசியுள்ளனர். தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலே சூர்யா நடித்து வருகிறார். அதிலிருந்து மாற்றமாக, பாலா பணியிலான ஒரு படத்தில் நடிக்க அவர் விரும்பினார். அதே நேரம் அந்த படத்தை 6 மாதங்களுக்குள் முடிக்கும் இயக்குனர் தேவை என்றும் சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தாராம். இதையடுத்துதான் சூர்யா-சசிகுமார் மீட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது.
 

மீண்டும் தெலுங்கு ரீமேக்கில் விஜய்?

Cameraman Ganga Tho Rambabu

'வேலாயுதம்' படத்திற்கு பிறகு இளைய தளபதி விஜய் மீண்டும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கயிருக்கதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பூரி ஜெகநாத் இயக்கத்தில், பவன் கல்யாண் நடித்த 'Cameraman Ganga Tho Rambabu' தெலுங்கு படம் நாளை ரிலீஸ் ஆகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் வெற்றி பெற்றால் இளைய தளபதி விஜய் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தயாராக இருப்பதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. 'துப்பாக்கி' படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கயிருக்கிறார்.
 

அதிகரிக்கும் நட்புக்காக டிரெண்ட்

Increasing Trend for guest role

ராஜேஷ். எம் இயக்கிய 'சிவா மனசுல சக்தி' படத்தில் ஆர்யா, நட்புக்காக நடித்தார். இந்த படத்தில் நட்புக்காக நடித்த ஆர்யா, ராஜேஷின் அடுத்த படமான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஹீரோவாக நடித்தார். இதில் ஜீவா கெஸ்ட் ரோலில் நடித்தார். ராஜேஷ் இயக்கிய, 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சினேகா, ஆர்யா, ஆண்ட்ரியா கெஸ்ட் ரோலில் நடித்தனர். கார்த்தி நடித்த 'சகுனி'யில் அனுஷ்கா, சில காட்சிகளில் நடித்தார்.

'வாலு' படத்தில் ஜெய்யும், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் அஜீத்தும் சில காட்சிகளில் நடித்து வருகின்றனர். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் 'இசை' படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'மத கஜ ராஜா' படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏற்கனவே 'மாயக்கண்ணாடி', 'காதல் சொல்ல வந்தேன்', 'வ', 'கழுகு' படங்களிலும் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது வினய் ஹீரவோக நடிக்கும் 'ஒன்பதில் குரு' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஜீவா ஒப்புக் கொணடுள்ளார்.
 

பிரம்மாண்ட டிரெய்லர் ரிலீஸ்

Grand Trailer Release

'ஆதிபகவான்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை கனடாவில் நடத்திய அமீர் படத்தின் அடுத்த டிரெய்லர்களை சென்னையில் பிரம்மாண்டமாக வெளியிடு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழ் சினிமாவில் முக்கிய இரு தலைகளை அழைத்து டிரெய்லர் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

 

தயாரிப்பாளர் சந்திரசேகரன் மோசடி வழக்கு.. முன்ஜாமீன் கேட்கும் செல்வராகவன்

Director Selva Seeks Anticipatory Bail In Salem

சென்னை: பிரபல இயக்குநர் செல்வராகவன் மீது தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் மீண்டும் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார் செல்வராகவன்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வராகவன் தாக்கல் செய்த மனுவில், "சரவணா கிரியேஷன்ஸ் என்ற சினிமா கம்பெனியின் உரிமையாளர் சேலம் ஏ.சந்திரசேகரன். இவர் காசிமேடு என்ற படத்தை தயாரிக்க விரும்பினார். இதற்கு கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பணிகளை நான் செய்துகொடுக்க வேண்டும் என்று 27.10.04 அன்று என்னுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இதற்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்டேன். ரூ.90 லட்சம் முன்பணம் கொடுத்தார். ஆனால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதுபற்றி எனக்கு கடிதம் எழுதி முன்பணத்தை திருப்பிக்கேட்டார். எனவே 27.9.05, 13.7.06, 10.4.07 ஆகிய தேதிகளில் அந்த பணத்தை மூன்று தவணைகளாகத் திருப்பிக்கொடுத்தேன்.

இந்த நிலையில் 2010-ம் ஆண்டு சிட்டி சிவில் கோர்ட்டில் என்மீது வழக்கு தாக்கல் செய்து, எனது அடுத்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு தடை விதிக்கும்படி கோரியிருந்தார். அந்த வழக்கில், ரூ.90 லட்சத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதை சந்திரசேகரன் ஒப்புக்கொண்டிருந்தார்.

மேலும், ரூ.1.10 கோடி பணத்தை சந்திரசேகருக்கு நான் `செட்டில்'' செய்யும்வரை, ஆயிரத்தில் ஒருவன் படத்தை வெளியிடமாட்டேன் என்று அதன் தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் 2006-ம் ஆண்டு வாய்மொழியாக ஒப்பந்தம் செய்திருந்ததாக வழக்கில் கூறியிருந்தார். இது தவறான ஒன்று. பின்னர் அந்த சிவில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் என் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் சந்திரசேகரன் மனு கொடுத்தார். இதுசம்பந்தமாக போலீசுக்கு உத்தரவிடும்படி மாஜிஸ்திரேட்டு கோட்டிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் புகாரில் சிவில் பிரச்சினை இருப்பதாக கூறி, புகாரை ரத்து செய்துவிட்டதாக போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த அறிக்கையை மாஜிஸ்திரேட்டு ஏற்க மறுத்துவிட்டார். மீண்டும் விசாரணை நடத்தும்படி அவர் உத்தரவிட்டார். சந்திரசேகரின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி நான் தாக்கல் செய்த வழக்கு விசாரணை, உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த பிரச்சினை தொடர்பாக மத்தியஸ்தம் மையத்தில் கடந்த மாதம் 10-ந் தேதி ஆஜராகி பேசினோம். மத்தியஸ்தர் முன்னிலையில் ரூ.10 லட்சத்தை சந்திரசேகரனிடம் கொடுத்தேன். அப்படி என்றாலும் சந்திரசேகரன் தனது புகாரை திரும்பப்பெறவில்லை.

இந்த வழக்கில் கொலை மிரட்டல் குற்றச்சாட்டும் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது. என்னை வேண்டுமென்றே தொந்தரவு செய்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்படுவேன் என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரித்தார். மனு மீதான விசாரணையை நவம்பர் 1-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

 

100 ஆண்டு காணும் இந்திய சினிமா.. சாதனையாளர்களுக்கு ரஜினி வாழ்த்து!

சென்னை: 100 ஆண்டு காணும் இந்திய சினிமாவில் சாதனைப் படைத்த கலைஞர்களை கவுரவிக்கும் விழாவில் பங்கேற்று வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajini wishes legends at ficci
Close
 
வர்த்தக ஊடக மேம்பாட்டுக்காக, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) 2 நாள் மாநாடு, சென்னையில் நேற்று காலை தொடங்கியது. இந்திய சினிமாவின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு `பிக்கி' அமைப்பின் ஊடக பிரிவு தலைவர் நடிகர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார்.

லார்ட் ஆப் தி ரிங்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களைத் தயாரித்த பேரி ஆஸ்போர்ன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ரஜினிகாந்த் வாழ்த்து

இந்திய சினிமாவில் நீண்ட கால சேவை செய்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இயக்குநர்கள் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு, ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், நடிகர்கள் மது, கிரிஷ் கர்னாட், நடிகைகள் ஷீலா, ஜெயந்தி, சுகுமாரி ஆகியோருக்கு சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி.

இந்தி நடிகர் திலீப்குமாருக்கான விருதை கமல்ஹாசன் மும்பைக்கு நேரில் சென்று, அவரிடம் வழங்கினார்.

சாதனையாளருக்கான விருதை பெற்றுக்கொண்ட இயக்குநர் கே.பாலசந்தர் பேசுகையில், "தமிழ் சினிமாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு, கமல்ஹாசன்," என்றார்.

 

'களி திண்ண' வைத்த லொள்ளு தாதா!

Mansoor Ali Khan Releases His Movie Audio Style   

மூட நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக் கொண்டு எதையாவது பரபரப்பாக செய்வது லொள்ளு தாதா மன்சூரலிகான் வழக்கம்.

பூனையை குறுக்கே விடுவது, விதவை பெண்களை தாலி எடுத்து கொடுக்க செய்வது என ஏறுக்கு மாறாக தனது பட விழாக்களில் செய்து காட்டி விளம்பரம் தேடிக் கொள்வார்.

அவர் இப்போது உருவாக்கி வரும் 'லொள்ளு தாதா பராக் பராக்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை கிராமத்து கலாசாரப்படி புதுமையாக நடத்தினார்.

விழாவுக்கு வந்த அனைவருக்கும் களி, கேழ்வரகு கூழ் கொடுத்து வரவேற்றார்.

மீன் குவியலைப் போல் 'லொள்ளு தாதா பராக் பராக்' படத்தின் ஆடியோ சி.டி.க்களை ரோட்டில் குவித்துப் போட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்தார்.

 

காட்சிகளை கட் செய்யாமல் திரையிடுங்கள்

Do not cut scenes

மாற்றான் படத்தில் ஒரு சில காட்சிகள் போரடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே மாற்றான் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் நிறைய வந்து கொண்டியிருக்கின்றன. திரைக்கதையில் சொதப்பல், லாஜிக் மிஸ்சிங் என ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். விமர்சனங்கள் எதிர்மறையாக இருந்தாலும், படத்துக்கு வெகு சிறப்பான ஓபனிங் கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வெளியான மூன்று தினங்களில் மட்டும் ரூ 19 கோடியை மாற்றான் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 'மாற்றான்' படத்தை சில காட்சிகளை திரையரங்கு உரிமையாளர்கள் கட் செய்து திரையிடுவதாக, இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார். குறிப்பாக சூர்யா உடைப்பது போன்ற காட்சி மாற்றான் படத்திலேயே ஒரு சிறந்த காட்சி என்றும், அதை கட் செய்வது திரையிடுவது சூர்யாவின் உழைப்பிற்கு கிடைத்த ஏமாற்றம் என்றும் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு கட் செய்யாமல் திரையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தென்னிந்திய சினிமாவில் ஒற்றுமை இல்லை

Kamal, Rajini at FICCI MEBC 2012 Honoring Legends

இந்திய சினிமா 100-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் மீடியா மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் தொடர்பான 2 நாள் கருத்தரங்கு, சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்ட லில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கில், டிலாய்ட் நாலெட்ஜ் ரிப்போர்ட் என்ற புத்தகத்தை ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் பேரி ஆஸ்போர்ன், நடிகர் கமலஹாசன், டிலாய்ட் இந்தியா நிறுவன இயக்குனர் சந்தீப் பிஸ்வாஸ் வெளியிட்டனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி, அனிமேஷன், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, டப்பிங், இசை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நவீன தொழில் புரட்சி குறித்து பல அரிய தகவல்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பயிலரங்குகள், சிறப்பு வகுப்புகள், திரைக்கதையாக்க வகுப்புகள், டிஜிட்டல் திரைப்பட உருவாக்கம், டிஜிட்டல் ஒலி நுட்பம் உள்ளிட்ட திரைப்பட துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்த கருத்து பதிவுகள் இடம் பெற்றுள்ளன. அப்போது நடிகர் கமலஹாசன் அளித்த பேட்டி:

கூல்டிரிங்ஸ் தயாரிப்பவர்கள் தங்கள் பொருட்களின் விலையை அவர் களே நிர்ணயிக்கின்றனர். அதேபோல, சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடம் வழங்க வேண்டும். சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை விட உணவு பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்களிடம் ஒற்றுமை உள்ளது. ஒரே படத்தில் 3 பேரும் இணைந்து நடிக்கின்றனர். ஆனால், தென்னிந்திய சினிமாவில் அந்த அளவுக்கு ஒற்றுமை இல்லை. நம் வீட்டில் சாமி படம் வைத்துள்ளோம். நாம் அணியும் சட்டை பாக்கெட்டிலும் சாமி படத்தை வைத்துள்ளோம். இருந்தாலும் சாமி கும்பிட கோயிலுக்கு செல்கிறோம். அதேபோல், தியேட்டர்களுக்கு சென்று சினிமாவை பொதுமக்கள் பார்க்க வேண்டும்.

திருட்டு விசிடியை ஒழிக்க, ஒடுக்க படம் வெளியாகும்போது டிவிடி தயாரித்து கொடுக்கும் யோ சனை உள்ளது. தமிழ் சினிமாவில் ரசனையில்லை என்று குறை சொல்ல முடியாது. தென் இந்தியாவில் தான் 65 சதவீத படங்கள் உருவாகின்றன. உலகிலே யே மிக பெரிய சினிமா துறை தென் இந்தியாவில் தான் உள்ளது.  இவ்வாறு கமலஹாசன் கூறினார்.
 

சயீப்-கரீனா பதிவு திருமணம் செய்தனர்

Saif-Kareena wedding

கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் சயீப் அலிகானும் (42) கரீனா கபூரும் (32) தங்கள் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நேற்று பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

மறைந்த இந்திய கிரிக்கெட் வீரரும், பட்டோடி நவாப்புமான மன்சூர் அலிகான் - நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சயீப் அலிகான். இந்தி நடிகர் ரன்தீர் கபூரின் மகளும், மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்கபூரின் பேத்தியும்தான் கரீனா கபூர். பாலிவுட் பிரபல நட்சத்திரங்களாக சயீப் அலிகானும், கரீனாவும் கடந்த 2007ல் இருந்து காதலித்து வந்தனர். கடந்த மார்ச்சில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதை அதிகாரபூர்மாக அறிவித்தனர். இவர்களின் திருமணத்தையொட்டி சங்கீத் எனும் சடங்கு நிகழ்ச்சி கடந்¢த ஞாயிற்றுக்கிழமை பாந்த்ராவில் உள்ள கரீனாவின் வீட்டில் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு தாஜ்மஹால் ஓட்டலில் விருந்து நிகழ்ச்சியும், மெகந்தி நிகழ்ச்சியும் நடந்தன. இதைத் தொடர்ந்து, சயீப் அலிகானும் கரீனா கபூரும் நேற்று பிற்பகலில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பாந்த்ராவில் உள்ள சயீப் அலிகான் இல்லத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமண பதிவேட்டில் மணமகள் சார்பில் கரீனாவின் தந்தை ரன்தீர் கபூரும், தாய் பபீதாவும் சாட்சி கையெழுத்திட்டனர். மணமகன் சார்பில் அவருடைய தாய் ஷர்மிளா தாகூர் கையெழுத்து போட்டார்.
 

செல்வராகவன் முன் ஜாமீன் கோரி மனு

Selvaraghavan's bail petition

திரைப்பட இயக்குனர் செல்வராகவன் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திரைப்பட இயக்குனர் செல்வராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக் கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு: 'காசிமேடு' படம் இயக்க எனக்கு தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் ரூ.2 கோடி சம்பளம் தருவதாக பேசினார். இதற்கு முன் பணமாக ^90 லட்சம் கொடுத்தார். பின்னர் படம் எடுக்க முடியவில்லை. இதனால் அதற்காக நான் வாங்கிய சம்பளத்தை சந்திரசேகரிடம் கொடுத்துவிட்டேன். இருந்தாலும் என்னிடம் பணம் கேட்டு என் மீது சந்திரசேகர் பொய்யாக போலீசில் புகார் கொடுத்தார். இதனால் நான் சமரச மையம் சென்று ரூ.10 லட்சத்தை கொடுத்து விட்டேன்.

அப்படி இருந்தும் என் மீது மீண்டும் புகார் கொடுத்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் என்னை கைது செய்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு முன் ஜாமீன் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி அக்பர்அலி, விசாரணையை வரும் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை மனுதாரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
 

அடுத்த படம் ரெடி

Ready to shoot his next film as hero, producer turned actor

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு, அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமான படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. இந்த படம் வெற்றிக்கு பிறகு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இந்நிலையில் 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கிய பிரபாகரனுக்கு தனது அடுத்த படத்துக்கு கால்ஷிட் கொடுத்துள்ளார். படத்தில் நடிக்கயிருக்கும் நடிகை மற்றும் நடிகர்களின் பெயர் விரைவில் வெளியாகும். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கயிருக்கிறது.
 

தியேட்டரில் விற்கும் குளிர்பான விலையைவிட டிக்கெட் விலை அதிகமாக இருக்க வேண்டும் - கமல்ஹாஸன்

Kamal Urges Ticket Price Hike Theaters

சென்னை: தியேட்டர்களில் விற்கும் குளிர்பானங்களின் விலையைவிட டிக்கெட் விலை அதிகமாக இருக்க வேண்டும். திரைப்படத் துறையில் அந்நிய முதலீடு வேண்டும் என்று நடிகர் கமல்ஹாஸன் கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் (பிக்கி) இன்று சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் ஊடகம் மற்றும் கேளிக்கை வர்த்தக கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்திய சினிமாத் துறையின் 100 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பிக்கி டைரக்டர் ஜெனரல் டாக்டர் அரபிந்த் பிரசாத் துவக்கி வைத்தார்.

ஊடகங்கள் மற்றும் கேளிக்கை வர்த்தக கூட்டுக் குழுவின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுப் பேசினார். தொலைக்காட்சிகளின் தரவரிசை பற்றிய ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

கமல் பேசுகையில், "ஊடகம் மற்றும் கேளிக்கை துறையின் வளர்ச்சிக்கு பிக்கியின் பொழுதுபோக்கு பிரிவு, பல்வேறு கொள்கை மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறது.

இந்திய சினிமாவின் தரம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்திய சினிமாத் துறை தேசிய சினிமாவின் மையமாக திகழ்கிறது. இது பெரிய பெருமை," என்றார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "திரைப்படத்துறையில் அன்னிய முதலீடு வந்தால் அது வரவேற்கக் கூடியதுதான்.

ஆனால் அதற்கு முன்னதாக சில்லரை வணிகத்தில் அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது. பொதுமக்கள் தியேட்டர்களுக்கு சென்று எளிதாக படம் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் தியேட்டர்களில் விற்கும் குளிர்பானங்களின் விலையைவிட டிக்கெட் விலை அதிகமாக இருக்க வேண்டும்.

இதனால் திருட்டு வி.சி.டி.க்களை தடுக்க முடியும். திரைப்பட தயாரிப்புக்கு ஆகும் செலவுக்கு ஏற்ப, தியேட்டர்களில் கட்டண உயர்வும் தேவை," என்றார்.

கூட்டத்தில் பிக்கி தலைவரின் ஆலோசகர் முராரி, இயக்குனர்கள் பி.சசிக்குமார், லிங்குசாமி, அமீர், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குனர் பேரி ஆஸ்போர்ன் மற்றும் திரைப்படத்துறை மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

மனசை தொடுற கதையில் நடிக்க ஆசைப்படும் குஷ்பு

Kushboo Is Very Excited Work With Amitabh

அரசியலில் முழுநேரமாக இறங்கிவிட்டதால் சினிமாவில் நடிக்க நேரமில்லையாம் குஷ்புவிற்கு. இப்பொழுதும் நல்ல கதாபாத்திரத்திடன் தமிழ் இயக்குநர்கள் சென்றாலும் நோ சொல்லி அனுப்பிவிடுகிறார். கிட்டத்தட்ட சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் என்றே கூறலாம்.

ஆனால் சின்னத்திரையில் நடிப்பதை மட்டும் நிறுத்தமாட்டாராம் குஷ்பு காரணம் கேட்டால், 'அது வீட்டுக்கு வீடு போய் பொம்பளைங்களை டச் பண்ணுற ஏரியா. அதனால் அதை விடுற ஐடியா இல்லை' என்று தீர்மானமாக கூறியுள்ளார்.

'சின்னத்திரையின் அன்னை தெரசா' என்று ஊரே கும்பிடுகிற மாதிரியான கதாபாத்திரங்களை தேடிக் கொண்டிருக்கிறாராம். சினிமாவில் நடித்தால் பலவிதமான கேரக்டர்களை செய்ய வேண்டிய நிலைவரும், அப்பொழுது தனது அரசியல் இமேஜ் பாதிக்கும் என அவர் நினைப்பதால், சினிமாவுக்கு முழுக்கு போட இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் சின்னத்திரையில் பெண்களை கவரும் பாத்திரங்களில் நடித்து இல்லத்தரசிகளின் நெஞ்சில் இடம்பிடிக்கலாம் என்பதுதான் குஷ்புவின் இந்த ஐடியா என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். ஆனால் அமிதாப்பச்சனுடன் மேட் டாட் படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாலேயே தமிழ்பட வாய்ப்புகளை மறுப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு உலா வருகிறது. உண்மை எதுவோ குஷ்புதான் கூறவேண்டும்.