ஆங்கில இலக்கியம் படிக்க கேரளாவில் கல்லூரி தேடும் லட்சுமி மேனன்!

ஒரு வழியாக ப்ளஸ் டூவில் 72 சதவீத மதிப்பெண்களுடன் தேறிவிட்ட நடிகை லட்சுமி மேனன், அடுத்து கல்லூரியில் சேரத் தயாராகி வருகிறார்.

லட்சுமிக்கு இலக்கியம் படிக்க ஆசையாம். எனவே கேரளாவில் உள்ள நல்ல கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேரப் போகிறாராம். இப்போதைக்கு மூன்று கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ள அவர், அவற்றில் ஏதாவது ஒன்றில் சேரப் போவதாகக் கூறியுள்ளார்.

Lakshmi Menon to join English literature

படித்துக் கொண்டே தொடர்ந்து நடிக்கும் தனது திட்டத்தை முன்கூட்டிய கூறி கல்லூரியில் இடம் கேட்டுள்ளாராம். அவர் விருப்பப்படி படிக்க கொச்சியில் உள்ள கல்லூரி நிர்வாகம் ஒன்றும் அனுமதி அளித்துள்ளது. .

ஏன் ஆங்கில இலக்கியம்?

"பொதுவா எனக்கு ஃபிக்ஷன்ஸ் ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமில்லாம சினிமாவுக்காக நிறைய டைம் ஒதுக்கவேண்டியிருக்கு. அதனாலயும் ஆங்கில இலக்கியம் செலக்ட் செய்திருக்கேன் என்றும் சொல்லலாம்," என்கிறார் லட்சுமி மேனன்.

 

சிரஞ்சீவியோட நடிக்கணுமா.. அப்ப 3 கோடி கொடுங்க!- அலற வைத்த நயன்தாரா

சிரஞ்சீவியின் 150 வது படத்தில் நடிக்க ரூ 3 கோடியை சம்பளமாகக் கேட்டு அதிர வைத்துள்ளார் நயன்தாரா.

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாராதான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அவர்தான் இப்போது டாப்பில் உள்ளார்.

தமிழில் ஏற்கெனவே சிம்புவுடன் நடிக்க ரூ 3 கோடி வரை நயன்தாரா கேட்க, 2.50 கோடிக்கு இறுதியாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

Nayanthara demands huge salary for Chiranjeevi's new movie

தெலுங்கில் அரசியலிருந்து மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ள சிரஞ்சீவி, தனது 150 படத்தில் நடிக்கிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அழைத்துள்ளனர். வாய்ப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய நயன், தனக்கு சம்பளமாக ரூ 3 கோடி தரவேண்டும் என்றும், அதைக் குறைத்துக் கொள்ள முடியாது என்றும் கறாராகக் கூறிவிட்டாராம்.

இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், நயன்தாராவையே நடிக்க வைக்கலாமா, த்ரிஷா, காஜல் போன்ற வேறு நாயகிகளை அணுகலாமா என யோசித்து வருகிறாராம்.

 

எட்டு ஆண்டுகளாக தனுஷுடன் தொடரும் வெற்றி மாறனின் கூட்டணி!

வெற்றி மாறன் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் அவர் இயக்கியவை இரண்டே இரண்டு படங்கள்தான்.

ஒன்று பொல்லாதவன். அடுத்து, ஆடுகளம். இரண்டிலும் தனுஷ்தான் ஹீரோ.

Dhanush - Vetri Maaran's ally enters into 8th year!

ஆடுகளம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அவரது புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. விசாரணை படத்தை இப்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தனுஷுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இதற்கு அடுத்து அவர் இயக்கப் போகும் படம் வட சென்னை. இதிலும் தனுஷ்தான் ஹீரோ.

இந்த வட சென்னை இன்று நேற்று அறிவிக்கப்பட்டதல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம். ஆனால் தொடங்க இத்தனை காலமாகியிருக்கிறது.

இந்தப் படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட தனுஷ், வட சென்னை படத்தின் கதை 'பொல்லாதவன்' படத்தின் போதே முடிவானது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். 2016ல் படம் வெளியாகவிருக்கிறதாம்.

 

எங்கிட்ட மோதாதே, பேரை தேடிய நாட்கள்... ஈராஸின் சிக்கன பட்ஜெட் படங்கள்!

ரஜினி, கமல் என டாப் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு குறிவைத்து வாங்கி வெளியிட்டு வந்த ஈராஸ் நிறுவனம், இப்போது ஒரு புதிய முடிவுக்கு வந்துள்ளது.

தமிழில் அடுத்து இரு புதிய படங்களை நேரடியாக தயாரிக்கிறது. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படங்களை புதியவர்கள் இயக்குகிறார்கள்.

இந்த இரு படங்களில் ஒன்றிற்கு ‘பேரை தேடிய நாட்கள்' என்று பெயரிட்டுள்ளனர். ரொமான்டிக் படமாக உருவாகும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Eros announces two nw movies in Tamil

இப்படத்தை ஆபிரகாம் பிரபு என்பவர் இயக்குகிறார். இவர் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யாகவராயினும் நா காக்க' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

மேலும், மற்றொரு படத்திற்கு ‘எங்கிட்ட மோதாதே' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆக்ஷன் கதையாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நட்டி நடராஜ், ராஜாஜி, விஜயமுருகன், ராதாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ராமு செல்லப்பா என்ற புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இவர் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா', ‘மயக்கம் என்ன' ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விரைவில் இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் தங்களின் சந்தையை இன்னும் விரிவாக்கம் செய்யவே இந்த மாதிரி நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக ஈராஸ் தெரிவித்துள்ளது.

 

அங்கே என்னதான் நடக்குது? மாசு என்கிற மாசிலாமணியாக மாறியது மாஸ்

சென்னை என்னதான் நடக்குது ஒன்னும் புரியல உங்களுக்கு எதாவது தெரிஞ்சா சொல்றிங்களா அதாவது நம்ம சூர்யா நடிச்சு இன்னும் 2 நாள்ல ரிலிஸ் ஆகப் போற மாஸ் படம் இப்போ மூணாவது முறையா பேர் மாறியிருக்கு, சாரி மாத்தியிருக்காங்க.

நாலு நாளைக்கு முன்னால வரைக்கும் எல்லாம் ஒழுங்கா தான் போய்ட்டு இருந்தது எல்லாம் இந்த சென்சார் போர்டால வந்தது படத்தில நிறைய வன்முறையைக் கையாண்டிருக்கோம் நமக்கு எப்படியும் யூ சர்டிபிகேட் கிடைக்காதுன்னு நெனைச்சு சென்சாருக்கு அனுப்பிச்சா யாரும் எதிர்பார்க்காத வகையில படத்துக்கு யூ சர்டிபிகேட் கொடுத்துட்டாங்க.

Surya Movie “Mass” title changed suddenly.

என்னது நம்ம படத்துக்கு யூ சர்டிபிகேட்டான்னு ஆனந்தஅதிர்ச்சியடைஞ்ச வெங்கட்பிரபு அப்படியே வரிவிலக்கும்கிடைச்சா நல்லதுன்னு பேரை மாத்தி மாஸ்என்கிற மாசிலாமணி அப்படின்னு வச்சு கேள்வி கேட்ட எல்லோரையும் டைட்டில் ல்ல என்ன பாஸ் இருக்கு போய் படத்த பாருங்கன்னு சொன்னாரு.

இப்போ என்னடான்னா திரும்பவும் படத்தோட பேர வெற்றிகரமா மாத்தி மாசு என்கிற மாசிலாமணி அப்படின்னு வச்சிருக்காங்க ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே இது படத்துக்கு கிடைச்ச நல்ல பப்ளிசிட்டியா மாறிடுச்சு இப்போ, ஏன் வெங்கட் பிரபு சார் இன்னும் முழுசா ரெண்டு நாள் இருக்கு சும்மாத் தானே இருக்கோம்னு மறுபடியும் படத்தோட பேர மாத்தி எதுவும் விளையாடப் போறீங்களா, எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க.

வெங்கட் பிரபு சார் இன்னும் எத்தனை தடவை தான் படத்தோட பேர மாத்துவிங்க முடியல...

 

சீனாவில் நான்கு நாட்களில் 40 கோடி வசூலித்த பிகே

மும்பை: அமீர்கான் நடித்து ஹிந்தியில் வெளிவந்த பிகே படம் இந்திய அளவில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிகளவு வசூலித்த படமாக திகழ்கிறது. கடவுள் இருக்கிறாரா அப்படி என்றால் அவரை எங்கு காணலாம் அவருக்கு ஏன் காசு கொடுக்க வேண்டும் போன்ற சாட்டையடிக் கேள்விகளை எழுப்பிய பிகே இதற்கு எழுந்த எதிர்ப்புகளை வைத்தே இந்தியாவில் நல்ல கல்லாவைக் கட்டியது.

வேற்றுக் கிரகவாசியாக அமீர் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார், இவருக்கு உதவி செய்யும் பெண்ணாக அனுஷ்கா ஷர்மா நடித்து இருந்தார். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் கடந்த மே மாதம் 22 ம் தேதி சீனாவில் வெளியாகியது.

'PK' ('Peekay') China Box-Office Collection: Aamir Khan Starrer Collects 40.48 Crore in 4 Days

வெளியான நான்கு நாட்களுக்குள்ளேயே சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது, அமீர்கானின் படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே இந்தியாவை விட சீனாவில் இந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியிடப் பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை அதிகம் வசூலித்த இந்தியப் படங்களின் வரிசையில் அமீர்கானின் பிகே, தூம் 3 மற்றும் 3 இடியட்ஸ் படங்கள் உள்ளது குறிப்பிடத் தக்கது.

அடுத்து ஒரு சீனப் படத்தில நேரடியா நடிங்க அமீர் சார்...

 

தமிழ் சினிமாவில் தொடரும் ஆண் பேய்களின் வெற்றிகள்

சென்னை: காலம்காலமாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பெண் பேய்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர் நமது கதாநாயகர்கள் ஆமாம் இந்த ஆண்டு வெளிவந்த மூன்று பேய் படங்களுமே தற்போது வெற்றி பெற்று விட்டன.

இவற்றில் குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம் என்னவெனில் மூன்று பேய் படங்களுமே ஆண் பேய்களை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டவை டார்லிங் காஞ்சனா 2 மற்றும் டிமாண்டி காலனி ஆகிய மூன்று படங்களுமே மிகப் பெரிய வெற்றியைருசித்து உள்ளது.

3rd  devil hit of the year demonte colony

தமிழ் சினிமாவில காலம் காலமா வர்ற ஒரு விஷயம் பேய் படம்னா அது ஒரு பெண்ணா தான் இருக்கும் தன்னைக் கொன்னவங்களத் தேடித்தேடி அது பழிவாங்கும் பெரும்பாலும் கதாநாயகனோட அம்மா மற்றும் அவங்கள சேர்ந்தவங்க நம்ம ஹீரோயின கொன்னுடுவாங்க ஹீரோவோட மனச மாத்தி அவர இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வச்சிடுவாங்க.

இதையெல்லாம் மாத்தி இப்போ ஹீரோ பேயா வர ஆரம்பிச்சிடாரு இந்த வருசத்துல வந்த 3 பேய் படங்களுமே நல்ல வெற்றியைத் தேடித் தந்ததா விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சொல்லி இருக்காங்க.

டார்லிங் வெளிவந்தப்ப ஐ மற்றும் ஆம்பள படங்களோட போட்டி போட்டு வெற்றி பெற்றது காஞ்சனா 2 மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணியோட போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது, டிமாண்டி காலனி வெளியானப்ப எந்த பெரிய படங்களும்இல்ல ஆனா தன்னோட வெளிவந்த அத்தன படங்கள விடவும் வசூலில் போட்டியிட்டு முன்னணியில் உள்ளது.

இன்னும் 2 நாள்ல நம்ம சூர்யா படம் மாசு என்கிற மாசிலாமணி வெளியாகுது..பார்க்கலாம் வசூல்ல சாதனை படைக்குதான்னு..

 

இனிமே ஒன்லி ஹீரோ.. நட்புக்காக மட்டுமே காமெடி!- சந்தானம் புது முடிவு

இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்றும், நெருங்கிய நண்பர்களின் படங்களில் மட்டுமே காமெடி பண்ணுவது என்றும் நடிகர் சந்தானம் முடிவெடுத்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் இன்றைக்கு முதல் நிலை காமெடியனாக உள்ளவர் சந்தானம். ஆனால் இவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டதால், காமெடி பண்ணுவதைக் குறைத்து வருகிறார்.

Santhanam's new decision

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களுக்குப் பிறகு இனிமே இப்படித்தான் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

Santhanam's new decision

இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ள சந்தானம், நெருங்கிய நண்பர்களான உதயநிதி, ஆர்யா போன்றவர்கள் கேட்டால் மட்டும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பது என முடிவு செய்துள்ளாராம்.

 

'ரஜினி யாருக்குக் கால்ஷீட் தர வேண்டும் என நிர்பந்திக்க இவர்கள் யார்?'

தமிழ் சினிமா இதுவரை பார்க்காத சில காட்சிகள், அருவருப்பான பேரங்களை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஒரு படம் வெளியாகி பெரும் லாபம் குவிக்கும்போது, அதை முழுவதுமாக அனுபவிப்பவர்கள் அதைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையிட்ட தியேட்டர்காரர்கள்தான். அட, இடையில் வரும் மீடியேட்டர்களுக்குக் கூட நல்ல லாபம். அப்போதெல்லாம் அந்த வெற்றிக்குக் காரணமான படத்தின் நாயகனுக்கோ அல்லது இயக்குநருக்கோ லாபத்தில் யாரும் பங்கு தருவதில்லை. கேட்டால் 'இது யாவாரம்.. லாப நட்டம் சகஜம்' எனத் தத்துவம் பேசுவார்கள்.

A blackmail trade in Tamil cinema business

ஆனால் அதே படம், குறிப்பாக ரஜினி படம் சரியாகப் போகவில்லை என்றால், உடனே நஷ்டத்தை திருப்பிக் கொடுங்கள் என ரஜினியை நெருக்குகிறார்கள். இப்போது, அந்த 'வியாபார எத்திக்ஸ்' எங்கே போனதென்று தெரியவில்லை. எரியும் வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற கொடூர புத்தி.

'உலகில் எந்த நாட்டு சினிமாவிலும் படத்தின் நஷ்டத்தை அதில் நடித்த ஹீரோ ஈடுகட்டியதாக கட்டுக் கதைகள் கூடக் கிடையாது. ஆனால் பாபா படத்துக்காக முதன் முதலில் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்தவர் ரஜினி. இத்தனைக்கும் அப்போது யாருமே அவரிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதி காத்தார்கள். ஆனால் நஷ்டம் என்ற முணுமுணுப்பு காதில் விழுந்ததால் அந்த நஷ்ட ஈட்டை முன்வைந்து கொடுத்தார் ரஜினி.

அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இப்போது லிங்காவுக்கு ப்ளாக் மெயிலை விட மோசமான முறையில் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அநாகரீகத்தின் உச்சம் மட்டுமல்ல, மிக மோசடியானது," என்கிறார் அனுபவசாலி விநியோகஸ்தர் ஒருவர். ரஜினி படங்கள் மூலம் பல கோடிகள் லாபம் பார்த்தவர் இவர்.

எல்லாவற்றையும் விட கொடுமை, இப்படி கேவலமான முறையில் நஷ்ட ஈடு கேட்டவர்களுக்கும் ரூ 12.50 கோடி வரை நஷ்ட ஈட்டுத் தொகை கொடுத்துள்ளார் ரஜினி. அந்தத் தொகையை ஒழுங்காகப் பிரித்துக் கொள்ளக் கூட முடியாத இவர்கள், இப்போது மீண்டும் நஷ்டஈட்டுப் புராணத்தை ஆரம்பித்துள்ளனர்.

பேராசை என்ற கொடிய வியாதிக்கு மருந்துமில்லை.. தீர்வுமில்லை. லிங்கா விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரின் பேராசை இன்று தமிழ் சினிமாவையே கேவலமாக்கிக் கொண்டிருக்கிறது.

ரஜினி என்ற பெரும் கலைஞனை இந்த நஷ்ட ஈடு என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டு மிரட்டப் பார்க்கிறார்கள்.

லிங்காவில் உண்மையிலேயே நஷ்டம் ஏற்பட்டிருந்தால், அடுத்த ரஜினி படம் வெளியாகும்போது, அதை வாங்கி விநியோகித்து லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம் என்றுதானே உண்மையான விநியோகஸ்தர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் இந்த ப்ளாக்மெயில் கோஷ்டி என்ன கேட்கிறது பாருங்கள்... 'ரஜினி இன்னாருக்குதான் படம் செய்ய வேண்டும்... அந்தப் படத்துக்கு நாங்களும் பங்குதாரர்களாவோம்.. நஷ்டத்தைச் சரி கட்டிக் கொள்வோம். இல்லாவிட்டால், இன்னொரு பதினைந்து கோடி ரூபாய் அவர் தரவேண்டும்'!

வழிப்பறி, பகல் கொள்ளை போன்ற வார்த்தைகளையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறது இந்த 'லிங்கா நஷ்ட ஈடு' என்ற வார்த்தை!

'ரஜினி யாருக்கு கால்ஷீட் தர வேண்டும், யார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் நிர்பந்திக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதுவும் எழுத்துப் பூர்வ ஒப்பந்தமே இல்லாத நிலையில், அவரை நேரில் கூடப் பார்த்திராத இந்த கூட்டம் அவருக்கு நெருக்கடி தருவது சட்டவிரோதமல்லவா... ரஜினி நினைத்தால் இந்த கூட்டம் மொத்தமும் கம்பி எண்ண வேண்டி வரும். ஆனால் அவர் என்றைக்குமே அந்த தீவிர நடவடிக்கையை எடுக்க நினைப்பதில்லை.. அவரது கருணை மனசை காசாக்கப் பார்க்கிறார்கள்," என்கிறார் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் ஒருவர்.

இத்தனைக்கும் லிங்கா பிரச்சினை முடிந்துவிட்டது.. இனி எந்தப் பிரச்சினையும் செய்ய மாட்டோம் என்று ஒப்பந்தம் போட்டு, அதை கலைப்புலி தாணு கையால் பெற்றுக் கொண்டு, போட்டோவுக்கும் போஸ் கொடுத்த சிங்காரவேலன் என்ற நபர், மீண்டும் மீண்டும் இந்த லிங்கா பிரச்சினையைக் கிளப்புவது திட்டமிட்ட திருட்டுத்தனம் என்கிறார்கள் அவருடன் இருக்கும் சக விநியோகஸ்தர்களில் சிலர்.

தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஃபெப்சி என வலுவான அமைப்புகளைக் கொண்ட தமிழ் சினிமா, இந்த மாதிரி ப்ளாக்மெயில் வர்த்தகத்தை எப்படி மவுனமாக வேடிக்கைப் பார்க்கிறது? என அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு இப்போது சாட்டையை கையிலெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த மோசடி வர்த்தகத்துக்கு அவர் காலத்திலாவது முடிவு வருமா.. பார்க்கலாம்!

 

கங்காரு பட மோசடி: சிங்காரவேலனிடம் ரூ 4.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் சுரேஷ் காமாட்சி!

கடந்த ஆறு மாதங்களாக ரஜினி மற்றும் லிங்காவின் பெயரைப் பயன்படுத்தி ஏகத்துக்கும் பப்ளிசிட்டி பார்த்துவிட்ட சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர் மீது அடுத்தடுத்து மோசடிப் புகார்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

லிங்கா படத்துக்காக கலைப்புலி தாணு மூலம் நஷ்ட ஈடு என்ற பெயரில் கணிசமான தொகையைப் பெற்றுக் கொண்ட சிங்கார வேலன், இப்போது அதே தாணுவுக்கு எதிராகப் பேச ஆரம்பித்துள்ளார். லிங்கா பிரச்சினை முடிந்துவிட்டதாக முன்பு பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டு தாணுவுடன் அவர் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத் தளங்களில் உலாவர ஆரம்பித்துள்ளது.

Cheating allegations on Singaravelan

லிங்காவுக்குப் பிறகு இந்த சிங்காரவேலன் வெளியிட்ட படம் கங்காரு. இந்தப் படத்தை 150 அரங்குகளில் வெளியிடுவதாக உறுதியளித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் உரிமை பெற்றிருக்கிறார்.

ஆனால் சொன்னபடி அத்தனை அரங்குகளில் படத்தை வெளியிடவில்லையாம். சென்னையில் சத்யம் சினிமாஸுக்கு சொந்தமான அரங்குகளில் வெளியிட்டுள்ளதாக விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தார் சிங்கார வேலன். ஆனால் உண்மையில் சத்யம் சினிமாஸின் எந்த அரங்கிலுமே படம் வெளியாகவில்லையாம்.

அதேபோல முக்கிய ஏரியாவான திருச்சி - தஞ்சையில் ஒரு தியேட்டரில் கூட கங்காரு படத்தை வெளியிடவில்லையாம். 'மீடியாவில் பாஸிடிவாக விமர்சனங்கள், செய்திகள் வந்தும், என் படத்தை கொன்று விட்டார் இந்த சிங்கார வேலன்.. ஒரு பெரிய ஏரியாவில் படமே வெளியாகாமல் போவது ஒரு தயாரிப்பாளருக்கு எவ்வளவு பெரிய அவமானம்!' என்று இப்போது பலரிடமும் புலம்பி வருகிறாராம் சுரேஷ் காமாட்சி.

'லிங்கா விவகாரத்தில் கலைப்புலி தாணு எனக்கு பணம் கொடுக்காததால் திருச்சி தஞ்சையில் படம் வெளியாகவில்லை' என்று ஒரு மாதம் கழித்து இப்போது காரணம் சொல்கிறாராம்.

படத்துக்காக விளம்பரம் கொடுத்தேன் என்ற பெயரிலும் சில லட்சங்கள் பொய்க் கணக்கு காட்டியுள்ளாராம். சில இணையதளங்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு விளம்பரம் தந்ததாக பட்டியலிட்டுள்ளாராம். உண்மையில் அவற்றுக்கு இவர் விளம்பரமே தரவில்லையாம். படமே வெளியாகாத சத்யம் தியேட்டரில் பேனர் வைத்ததாகக் கூறி, பேனர் பொருத்திய செலவு என்று வேறு ஒரு தொகையைக் குறிப்பிட்டுள்ளாராம் சிங்கார வேலன்.

கங்காரு படத்துக்காக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு இதுவரை வசூல் தொகை என ஒத்தை ரூபாயைக் கூட கணக்குக் காட்டவில்லையாம்.

'லிங்கா படப் பிரச்சினையில் அத்தனை தீவிரமாக மூக்கை நுழைத்து பஞ்சாயத்து பண்ணியவர்கள் இப்போது எங்கே..?' என்று கேட்கும் சுரேஷ் காமாட்சி, தனக்கு நஷ்ட ஈடாக ரூ 4.5 கோடி வரை சிங்கார வேலன் தரவேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருக்கிறார். இதில் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றத்துக்குப் போகும் முடிவிலும் உள்ளாராம்.

இன்னும் சில தினங்களில் பிரஸ் மீட் வைத்து, தன்னை சிங்கார வேலன் எப்படியெல்லாம் மோசடி செய்தார் என்பதைச் சொல்லப் போகிறாராம் சுரேஷ் காமாட்சி!

இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் சிங்கார வேலன்?

 

சுசீந்திரன் கதையில் விஷ்ணு நடிக்கும் ‘வீர தீர சூரன்’!

ஏவிஆர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஷ்ணு நடிக்கும் புதிய படமான ‘வீர தீர சூரன்' படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்' படத்தில் சென்னைவாசியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த கேத்ரின் தெரஸா நடிக்கிறார்.

Veera Dheera Sooran to be launched tomorrow

சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயாள். என் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படத்தின் கதையை சுசீந்திரன் எழுதியுள்ளார். வேத் ஷங்கர் இசையமைக்கிறார். காமெடிக்கு சூரி களமிறங்குகிறார்.

சென்னை பெசன்ட் நகரிலுள்ள அறுபடை முருகன் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

‘இது தற்செயல் என்பதா என்று தெரியவில்லை எங்களது ‘வீர தீர சூரன்' படப்பிடிப்பு அசுரர்களை துவம்சம் செய்த முருகனின் பேரருளால் துவங்கவிருக்கிறது," என்கிறார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்.

 

பேஷன் டிசைனராகும் லட்சுமி மேனன்

சென்னை: ஆத்தாடி ஒரு வழியா லட்சுமி மேனன் பாஸ் ஆகிட்டாங்க, சில நாளுக்கு முன்னால யாரோ ஒரு புண்ணியவான் லட்சுமி மேனன் பெயில்னு கொளுத்திப் போட அப்செட் ஆன லட்சுமி நேத்து ரிசல்ட் வந்தவுடனே நான் பாசாயிட்டேன் ஆத்தான்னு பேஸ்புக்ல போட்டு கொண்டாடினாங்க.

இப்போ அடுத்து அவங்க பேஷன் டிசைனர் ஆகப் போறாங்களாம் ஏன் இந்த முடிவுன்னு விசாரிச்சா வருசத்தில 100 நாள் மட்டும் காலேஜ் போனா போதுமாம் அதாவது வருசத்துக்கு மூணு மாசம் மட்டும் தான்.

Lakshmi menon likes to study in fashion design

மத்த நாள் எல்லாம் நடிக்கலாம் படிச்ச மாதிரியும் இருக்கும் நடிச்ச மாதிரியும் இருக்கும் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா, கும்கி படத்துல ஒன்பதாவது படிக்கும் போதே ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்ச லட்சுமி பெரிய அழகு இல்லாட்டியும் அடுத்த மாநிலத்துஹீரோயின் அப்படின்னு ஆதரவு கொடுத்த பக்கிங்க திடிர்னு அவர் நடிக்க வர மாட்டேன் இனிமே எனக்கு படிப்புதான் முக்கியம்னு சொன்னதும் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க.

Lakshmi menon likes to study in fashion design

மறுபடியும் அவர் நடிப்பில வெளிவந்த கொம்பன் படத்த கார்த்திக்காக பார்த்தாங்களோ இல்லையோ லட்சுமிக்காவே பாத்து படத்த ஓட வச்சாங்க இப்போ மறுபடியும் அவர் நடிப்பாரா மாட்டாரானு பட்டிமன்றம் வச்சு பதறிக் கதறுனவங்க வயித்தில பாலவார்த்திருக்கு லட்சுமியோட படிச்சிட்டே நடிப்பேன்னு சொன்ன இந்த அறிவிப்பு. லட்சுமி மேனன் பாஸா பெயிலான்னு நடந்த பட்டிமன்றம் தமிழ் நாட்டில ஜெயலலிதா முதல்வர் ஆனத விட பெரிய விஷயமா ஆகிடுச்சே.

Lakshmi menon likes to study in fashion design

ரிசல்ட்ட பாத்த லட்சுமி மேனன் அப்பாடா எப்படியோ நான் பாசாயிட்டேன்...நன்றி கடவுளேனு பாட்டுப் பாடியிருப்பாங்களோ...

 

ஹைய்யா சின்னப் பெண்ணின் கனவு பலிச்சிருச்சே...!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான அந்த சின்னபெண் சீரியலில் தங்கை கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்த உடன் தைரியமாக களமிறங்கினார்.

சின்னச் சின்ன வாய்ப்புகள் என்றாலும் சொல்லிக்கொள்ளும்படியான கதபாத்திரங்களில் மட்டுமே நடித்த அந்த நாயகிக்கு தற்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சந்தோசமாக ஒப்புக்கொண்ட நாயகிக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறதாம். ஏனெனில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவோடுதான் சின்னத்திரைக்குள் அடிஎடுத்து வைத்தாராம். அந்த நல்ல நாளுக்காக காத்திருந்தாராம்.

இப்போது தனது கனவு இத்தனை சீக்கிரம் நனவானதே என்று சந்தோசப்படும் என்று நாயகிக்கு முதல் படத்திலே டீச்சர் வேடமாம். குறைந்த படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் ஆசையாம்.

ஆசை நிறைவேறட்டும்!